.

Pages

Thursday, July 3, 2014

சேக்கனா நிஜாமின் நன்றி அறிவிப்பு !

சகோதரர் சேக்கனா நிஜாம் அவர்கள் இன்று தனது முகநூலில் ( Shakkana M. Nijam ) போலிகள் ஏற்படுத்திய போலி முகநூல் மற்றும் மின்னஞ்சல் தொடர்பான செய்திக்கு போலிகளின் கீழ்த்தர செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், சேக்கனா நிஜாமுக்கு ஆறுதல் தரும்விதத்தில் கருத்துகள் பதிவு செய்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும், அலைபேசியில் அவரை அழைத்து ஆறுதல் சொன்ன மூத்த சகோதரர்களுக்கும் - நண்பர்களுக்கும், செய்தியை பிரசுரித்த அதிரையின் அனைத்து வலைத்தளங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முகநூல் வழியாக வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது :

அன்பானவர்களே !

சில போலிகள் , என் பெயரில் போலி முகவரிகள் தயாரித்து முகநூலிலும் மற்றும் அதிரை நியூசிலும் சில கருத்துக்களை என் பெயரில் வெளியிட்டு அவர்களது நெடுநாள் மன அரிப்பைத் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

என் மனதில் எழக் கூடிய கேள்விகள் என்ன காரணத்தால் என்னை இவர்கள் ஒரு எதிரியாகக் கருதுகிறார்கள் எனபதுதான்.

மக்கள் கூடும் மண்டபத்தை நான் இடித்தேனா ?
நீதி மன்றத்திலே பொய் சாட்சி சொன்னேனா ?
கற்றவர்களின் கண்ணியம் காக்க மறுத்தேனா ?
யாருடைய நிலத்தையாவது அபகரித்தேனா ?
எவருக்காவது தொப்பி போட்டு சுருட்டிக் கொண்டு வந்தேனா ?
நடு நிலை  தவறி ஊடகப்பணி செய்தேனா ?
ஊரைச் சுருட்டி உலையில் போட்டேனா ?
கவருக்குள் வைத்து கதவிடுக்கில் காசு வாங்கினேனா ?
என்ன குற்றம் செய்தேன் ?

என்மேல் இவ்வளவு கசப்புணர்வு ஒங்கக் காரணம் என்ன ? அவரவர் மனதில் ஏற்பட்டுள்ள பொறாமை என் மேல் காழ்ப்புணர்வாகத் திரும்பி இருக்கிறது என்று மட்டும்தான் நான் உணர முடியும்.

அதிரையின் அனைத்து செய்திகளையும் விருப்பு வெறுப்பின்றி வெளியிடுவதைத்தவிர நான் செய்த குற்றமென்ன ? இதுதான் குற்றமெனில் இந்தக் குற்றம் இன்னும் உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் தொடரும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர்களது இந்த இழி செயல் மூலம் அவர்கள் என்னை காயப்படுத்தி இருப்பதாக மகிழலாம். உண்மையில் அவர்கள்  என்னைக் காயப்படுத்தவில்லை. என்னை உற்சாகப்படுத்தி இருக்கிறார்கள். எனது பணியில் இன்னும் பீடு நடை போட வைத்த அந்த சேலை கட்டிய மூன்றாம் பால் இனத்தைப் பாராட்டுகிறேன்.

போலிகளின் கீழ்த்தர செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், எனக்கு ஆறுதல் தரும்விதத்திலும் கருத்துகள் பதிவு செய்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் அலைபேசியில் அழைத்து ஆறுதல் சொன்ன மூத்த எழுத்தாளர்களுக்கும் - சகோதரர்களுக்கும் - நண்பர்களுக்கும், கண்டனம் தெரிவித்து செய்தியை பிரசுரித்த அதிரையின் அனைத்து வலைத்தளங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

- சேக்கனா நிஜாம்

5 comments:

  1. இந்த இழிவான மிரட்டல் மிகவும் கன்டனத்திற்கு உரியது... சகோ. சேக்கனா நிஜாம் உங்களது சமுதாய பணிகள் நமதூருக்கு நிறைய தேவை நன்றாக தொடர என்னுடைய வாழ்த்துக்களுடன் துஆவும்...

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.
    சஹர் ரமழான் முபாரக்.

    தம்பி, அந்த நபர்கள் உங்களை மிரட்டத்தான் முடியும், மாறாக உங்களுடைய ஞானத்தையோ, திறமையையோ, எழுத்து நடையையோ, புகழையோ, நண்பர்களையோ, இன்னும் எத்தனையோ விஷயங்களையும் அம்சங்களையும் திருடமுடியாது. அந்த வகையில் பார்க்கும்போது நீங்க ஒரு பொக்கிஷம்.

    கெட்டுப்போனது கழுதேன்னு இருங்க தம்பி.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி
    தகவலுக்கும் நன்றி

    இந்த இழிவான மிரட்டல் மிகவும் கன்டனத்திற்கு உரியது... சகோ. சேக்கனா நிஜாம் உங்களது சமுதாய பணிகள் நமதூருக்கு நிறைய தேவை நன்றாக தொடர என்னுடைய வாழ்த்துக்களுடன் துஆவும்...

    இப்படிக்கு.
    ஜம் ஜம் அஸ்ரப்
    கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
    செக்கடிமோடு
    Adirampattinam.- 614701
    Thanjavur district.
     -0091 9976438566

    ReplyDelete
  4. எங்களது அதிரை நியூஸ் நிர்வாகிகளில் ஒருவரான சகோதரர் நிஜாம் அவர்கள் மனதை வேதனையடையச் செய்த அந்தக் கயவருக்கு எதிராக கைகோர்த்து எதிர்ப்புத் தெரிவித்த அனைவர்களின் கருத்தையும் படித்து இனிமேலாவது இத்தகைய கீழ்த்தரமான வேலையைச் செய்யாமல் மனம் திருந்தட்டும்.

    ReplyDelete
  5. அந்த நபர்கள் உங்களை மிரட்டத்தான் முடியும், மாறாக உங்களுடைய ஞானத்தையோ, திறமையையோ, எழுத்து நடையையோ, புகழையோ, நண்பர்களையோ, இன்னும் எத்தனையோ விஷயங்களையும் அம்சங்களையும் திருடமுடியாது. அந்த வகையில் பார்க்கும்போது நீங்க ஒரு பொக்கிஷம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.