.

Pages

Showing posts with label ADIRAI NEWS. Show all posts
Showing posts with label ADIRAI NEWS. Show all posts

Sunday, June 7, 2020

அதிரை நியூஸின் TOP-10 வீடியோ (வீடியோஸ் இணைப்பு)

அதிரை நியூஸ்: ஜூன் 07
அதிரை நியூஸ் இணைய ஊடகத்தின் ஒரு அங்கம் அதிரை நியூஸ் யூடியூப் சேனல். இவற்றை தொடங்கிய காலம் முதல் இன்று வரை, அதிரையின் வரலாற்று முக்கிய நிகழ்வுகள், பட்டிமன்ற நிகழ்ச்சிகள், மக்கள் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள், சாதனையாளர்கள், மருத்துவர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் பிரத்தியோக நேர்காணல் ஆகியவை காணொளி வடிவில் பதிவேற்றப்படுகிறது.

அதிரை நியூஸ் யூடியூப் சேனலில் 3,454 பேர், தங்களை நிரந்தரப் பார்வையாளர்களாகப் பதிவு செய்துகொண்டு இதில் பதிவாகும் காணொளிகளை தொடர்ந்து பார்வையிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த சேனலில் பதிவேற்றப்பட்டுள்ள காணொளிகளில் பார்வையாளர்களின் அதிக கவனத்தை ஈர்த்த முக்கிய நிகழ்வுகளின் TOP-10 காணொளிகள் கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய (07-06-2020) தேதியில், 4.83 லட்சம் பார்வையில், முதல் இடம் பிடித்துள்ள காணொளி...











Friday, April 3, 2020

1.25 கோடியை தாண்டிய பார்வையாளர்கள் ~ 'அதிரை நியூஸ்' வாசகர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி!

அதிராம்பட்டினம், ஏப்.03
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளின் அன்றாட நிகழ்வுகளை செய்திகளாக வழங்கும் சேவைக்காக தொடங்கப்பட்டது 'அதிரை நியூஸ்' இணையதள ஊடகம். செய்திகள் தயாரிப்பில் நீண்டகால அனுபவம் பெற்ற பங்களிப்பாளர்களால், உள்ளூர் நிகழ்வுகள் முதல் உலக நிகழ்வுகள் வரை நடக்கும் அன்றாடச் செய்திகள் பிரத்தியோகமாக தயாரித்து, இத்தளத்தில் பதியப்பட்டு வருகிறது.

மேலும், 'அதிரை நியூஸ்' தொடங்கிய காலம் முதல், தற்போது வரை பிரபலங்களின் தலையங்கம், பயன்தரும் மாவட்டச் செய்திகள், அறிவிப்புகள், கல்வி நிறுவனங்களில் நிகழும் செய்திகள், விளையாட்டுச் செய்திகள், உள்ளூர் சாதனையாளர்கள், புதிய தொழில் முனைவோர் ஊக்கிவிப்பு உள்ளிட்ட பல்வேறு செய்திகள் பதியப்பட்டு வருகிறது. இத்தளத்தில், பத்திரிகை துறையில் தொடர்புடையோர், எழுத்துத்துறையில் நீண்டகால அனுபவம் பெற்றவர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு சேவையாற்றி வருகின்றனர்.

உள்ளூரில் ஆர்வமுள்ள மாணவச் செய்தியாளர்கள் பலருக்கு இத்தளத்தில் பங்களிப்பாற்ற வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அவர்கள் கற்கும் கல்வி, தொழில் போன்றவை பாதிக்காதவாறு சமூக நல சிந்தனை, நல்லொழுக்கப்பயிற்சி, எழுத்துப் பயிற்சி, செய்தி திரட்டும் திறன், மொழி பெயர்ப்பு பயிற்சி போன்றவை கற்பிக்கப்படுகின்றன. இதன்மூலம், தலைசிறந்த ஒரு ஊடகவியலாளராக எதிர்காலத்தில் வலம் வருவதற்கு இவை ஒரு தொடக்கமாக அமைகின்றன.

'அதிரை நியூஸ்' இணையதளச் சேவையை பொறுத்தவரை, எவ்வித லாப ~ நோக்கமின்றி பொதுநல சேவைக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இத்தளத்தை பயன்படுத்தி விளம்பரங்கள் தேடுவதோ, அரசியல் ஆதாயத்திற்காக அல்ல. ஊடகத் துறையில் கால் பதிக்க நினைக்கும் இன்றைய இளைஞர்களுக்கு வழிகாட்டியாகவும், அவர்களின் ஊடக ஆர்வத்திற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வித்திட்டு வருகிறது.

சரி விசயத்திற்கு வருவோம்...

'அதிரை நியூஸ்' இணையதள ஊடகத்தில் அன்றாடம் பதிந்து வரும் செய்திகளை பார்வையிடும் உலகளாவிய வாசகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் இன்று (ஏப்.03) 1.25 கோடியைத் தாண்டி (1,25,02,665 views at 7.30 PM) சாதனை புரிந்துள்ளது என்பதை வாசகர்களுக்கு மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றோம்.

'அதிரை நியூஸ்' வாசகர்கள், கட்டுரையாளர்கள், பங்களிப்பாளர்கள், ஆலோசகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றி. தொடர்ந்து அளித்துவரும் ஆதரவும், ஊக்கமும் எங்களை மேலும் மெருகூட்டும். நன்றி.

~ அதிரை நியூஸ் 

Monday, March 16, 2020

'Par Excellence Media' விருது பெற்ற அதிரை நியூஸ்!

அதிராம்பட்டினம், மார்ச் 16
திருச்சி ஜமால் முகமது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்க அதிராம்பட்டினம் பிரிவின் தொடக்க விழா அதிராம்பட்டினம் ரிச்வே கார்டன் மினி அரங்கில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திருச்சி ஜமால் முகமது கல்லூரிச் செயலர் ஏ.கே காஜா நஜ்முதீன், 'அதிரை நியூஸ்' இணைய ஊடகத்தின் சேவையைப் பாராட்டி 'Par Excellence Media' விருதினை வழங்கி பாராட்டுத் தெரிவித்தார். விருதினை, 'அதிரை நியூஸ்' ஆசிரியர் சேக்கனா நிஜாம் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில், சமூக ஆர்வலர்கள் எம்.எஸ்.எம் ராபியா, ஏ. அப்துல் ரெஜாக், இ.வாப்பு மரைக்காயர், எம்.கஜாலி முகமது உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Monday, March 2, 2020

அதிராம்பட்டினம் சமூக ஆர்வலருக்கு சேவை விருது!

அதிராம்பட்டினம், மார்ச் 02
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் எம். நிஜாமுதீன். சமூக ஆர்வலரான இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த சமூக சேவைகளையும், பல்வேறு நற்பணிகளை செய்து வருகிறார். மேலும், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி அன்றாட நிகழ்வுகளை இணையதள ஊடகம் மற்றும் பத்திரிகை வாயிலாகக் கொண்டு சென்று  சமூகப் பணிகள் ஆற்றிவரும் இவரது சேவையைப் பாராட்டி இவரை ஊக்கப்படுத்தும் வகையில், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம், மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் பேராசிரியர் எம்.எச் ஜவாஹிருல்லாஹ், அதிரை நியூஸ் இணையதள ஊடக ஆசிரியர் சேக்கனா எம். நிஜாமுதீனுக்கு சேவை விருது வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
 

Tuesday, December 31, 2019

'உங்கள் அன்பு அறிவிப்பாளர்' B.H அப்துல் ஹமீதுடன் பிரத்தியேக நேர்காணல் (வீடியோ)

அதிரை நியூஸ்: டிச.31
சிறப்பு விருந்தினராக முதன் முறையாக அதிராம்பட்டினம் வருகை தந்த 'உங்கள் அன்பு அறிவிப்பாளர்' பி.எச் அப்துல் ஹமீது அவர்களுடன் ஒரு பிரத்தியேக நேர்காணலை 'சமூக ஆர்வலர்' ஹாஜி எம். அப்துல் ரெஜாக் அவர்கள் நடத்தினார். இணைப்பில் அதன் காணொளி...

Wednesday, July 18, 2018

ஒரு கோடியை தாண்டிய பார்வையாளர்கள் ~ 'அதிரை நியூஸ்' வாசகர்களுக்கு நன்றி!

அதிராம்பட்டினம், ஜூலை 18
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளின் அன்றாட நிகழ்வுகளை செய்திகளாக வழங்கும் சேவைக்காக தொடங்கப்பட்டது 'அதிரை நியூஸ்' இணையதள ஊடகம். செய்திகள் தயாரிப்பில் நீண்டகால அனுபவம் பெற்ற பங்களிப்பாளர்களால், உள்ளூர் நிகழ்வுகள் முதல் உலக நிகழ்வுகள் வரை நடக்கும் அன்றாடச் செய்திகள் பிரத்தியோகமாக தயாரித்து, இத்தளத்தில் பதியப்பட்டு வருகிறது.

அதன் அடுத்தக்கட்ட சேவையாக, வளைகுடா நாடுகளில் வசிக்கும் லட்சக்கணக்கான தமிழ் சொந்தங்கள் உட்பட உலகளாவிய தமிழர்கள் பயன்பெறும் வகையில், அந்தந்தப் பகுதிகளில் நிகழும் அன்றாட முக்கிய நிகழ்வுகள், அந்தந்த நாட்டு அரசுகள் வெளியிடும் முக்கிய அறிவிப்புகள், நாடுகளின் சட்டதிட்டங்கள், பல்சுவை செய்திகள், புனிதமிகு ஹஜ் குறித்து பயன்தரும் செய்திகள், உலகச் செய்திகள், சுற்றுலா, வரலாற்றுச் செய்திகள் ஆகியவற்றை, ஆங்கில இணைய தளங்களை ஆதாரமாகக்கொண்டு, அதிரை மணத்துடன் 'நம்ம ஊரானால்' தமிழ் மொழி பெயர்ப்பு செய்து பகிரப்படுகிறது. இவை, ஆயிரக்கணக்கான வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும், 'அதிரை நியூஸ்' தொடங்கிய காலம் முதல், தற்போது வரை பிரபலங்களின் தலையங்கம், பயன்தரும் மாவட்டச் செய்திகள், அறிவிப்புகள், கல்வி நிறுவனங்களில் நிகழும் செய்திகள், விளையாட்டுச் செய்திகள், உள்ளூர் சாதனையாளர்கள், புதிய தொழில் முனைவோர் ஊக்கிவிப்பு உள்ளிட்ட பல்வேறு செய்திகள் பதியப்பட்டு வருகிறது. இத்தளத்தில், பத்திரிகை துறையில் தொடர்புடையோர், எழுத்துத்துறையில் நீண்டகால அனுபவம் பெற்றவர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு சேவையாற்றி வருகின்றனர்.

உள்ளூரில் ஆர்வமுள்ள மாணவச் செய்தியாளர்கள் பலருக்கு இத்தளத்தில் பங்களிப்பாற்ற வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அவர்கள் கற்கும் கல்வி, தொழில் போன்றவை பாதிக்காதவாறு சமூக நல சிந்தனை, நல்லொழுக்கப்பயிற்சி, எழுத்துப் பயிற்சி, செய்தி திரட்டும் திறன், மொழி பெயர்ப்பு பயிற்சி போன்றவை கற்பிக்கப்படுகின்றன. இதன்மூலம், தலைசிறந்த ஒரு ஊடகவியலாளராக எதிர்காலத்தில் வலம் வருவதற்கு இவை ஒரு தொடக்கமாக அமைகின்றன.

'அதிரை நியூஸ்' இணையதளச் சேவையை பொறுத்தவரை, எவ்வித லாப ~ நோக்கமின்றி பொதுநல சேவைக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இத்தளத்தை பயன்படுத்தி விளம்பரங்கள் தேடுவதோ, அரசியல் ஆதாயத்திற்காக அல்ல. ஊடகத் துறையில் கால் பதிக்க நினைக்கும் இன்றைய இளைஞர்களுக்கு வழிகாட்டியாகவும், அவர்களின் ஊடக ஆர்வத்திற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வித்திட்டு வருகிறது.

சரி விசயத்திற்கு வருவோம்...
'அதிரை நியூஸ்' இணையதள ஊடகத்தில் அன்றாடம் பதிந்து வரும் செய்திகளை பார்வையிடும் உலகளாவிய வாசகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் இன்று (ஜூலை 18) ஒரு கோடியைத் தாண்டி சாதனை புரிந்துள்ளது என்பதை வாசகர்களுக்கு மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றோம்.

'அதிரை நியூஸ்' வாசகர்கள், கட்டுரையாளர்கள், பங்களிப்பாளர்கள், ஆலோசகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றி. தொடர்ந்து அளித்துவரும் ஆதரவும், ஊக்கமும் எங்களை மேலும் மெருகூட்டும். நன்றி.

~ அதிரை நியூஸ் 

Saturday, June 23, 2018

'தினமணி' ஈகைப் பெருநாள் மலரில் இடம்பிடித்த அதிரை பிரமுகரின் கட்டுரை!

அதிராம்பட்டினம், ஜூன் 23
தமிழகத்தின் பிரபல தமிழ் நாளிதழ் தினமணி சார்பில், தொடர்ந்து 4 -ஆவது ஆண்டாக ஈகைப் பெருநாள் மலர் வெளியிடப்பட்டுள்ளது. இம்மலரில், இஸ்லாமியர்கள் தங்கள் மதத்தின் பெருமைகளை எடுத்துரைப்பதோடு, பிற மதத்தினரும் இஸ்லாத்தின் பெருமைகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் அல்லாதவரும் இஸ்லாம் குறித்து தெளிவு பெறுவதற்கு இந்த மலர் உதவுகிறது.

இதில், தமிழகத்தின் பிரபலங்கள் வைகோ, பேராசிரியர் எம்.எச் ஜவாஹிருல்லாஹ், மு.மேத்தா, எம்.ஏ முஸ்தபா, டாக்டர் கே.வி.எஸ் ஹபீப் முஹம்மது, எம்.ஜி தாவூத் மியாகான், பேராசிரியர் ஜெ. ஹாஜா கனி, வீரபாண்டியன், வீ. லெட்சுமி நாராயணன், நாராயணன் திருப்பதி, கவிஞர்கள் தி.மு அப்துல் காதர், யுகபாரதி, கபிலன் வைரமுத்து, எம்.ஜி.கே நிஜாமுதீன், எஸ்.எஸ் ஷாஜஹான், மு.குலாம் முகமது, ஈரோடு தமிழன்பன், பெ.மணியரசன் உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட பிரபலங்களின் படைப்புகள் மலரில் இடம்பெற்றுள்ளன.

இதில், 'அதிரை நியூஸ்' இணையதள ஊடக ஆசிரியர் 'சேக்கனா நிஜாம்' என்கிற எம். நிஜாமுதீன் அவர்களின் கட்டுரையும் இடம்பிடித்துள்ளது. இக்கட்டுரையில், இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட வட்டி வசூலின் கொடூரம் குறித்தும், அதனால் சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றியும், தமிழகத்தில் ஏழைகளின் நிதியமாக செயல்படும் பைத்துல்மால் அமைப்பின் சேவை பற்றியும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

164 பக்கங்களைக் கொண்ட நூலின் விலை ரூ.50 மட்டுமே. இந்நூலை பிறருக்கு அன்பளிப்பு செய்ய விரும்புவோர் தாரளமாக வழங்கலாம். பிற மதத்தினர் இஸ்லாம் குறித்து அறிந்துகொள்ள மிகவும் பயன்தரும் என்பதில் ஐயமில்லை.
 
 
 

Sunday, November 19, 2017

இணையதள நடத்துனர்களுக்கு ~ முக்கிய அறிவிப்பு!

அன்புள்ள,

சமூக இணைய தளங்கள் நடத்தும் நிர்வாகிகட்கு...

நலம்.. நலமறிய ஆவல்...

வளைகுடா நாடுகளில் வசிக்கும் லட்சக்கணக்கான தமிழ் சொந்தங்கள் உட்பட உலகளாவிய தமிழர்கள் பயன்பெறும் வகையில், அந்தந்தப் பகுதிகளில் நிகழும் அன்றாட முக்கிய நிகழ்வுகள், அந்தந்த நாட்டு அரசுகள் வெளியிடும் முக்கிய அறிவிப்புகள், நாடுகளின் சட்டதிட்டங்கள், பல்சுவை செய்திகள், புனிதமிகு ஹஜ் குறித்து பயன்தரும் செய்திகள், உலகச் செய்திகள், சுற்றுலா, வரலாற்றுச் செய்திகள் ஆகியவற்றை, ஆங்கில இணைய தளங்களை ஆதாரமாகக்கொண்டு, மிகுந்த சிரமத்திற்கு மத்தியில், கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழில் மொழி பெயர்ப்பு செய்து, அவற்றை எங்களது 'அதிரை நியூஸ்' [ www.adirainews.net ] இணையதளத்தில் 'நம்ம ஊரான்' என்ற பெயரில் தினந்தோறும் வெளியீட்டு வருகிறோம். இதுவரையில், சுமார் 1300 க்கும் மேற்பட்ட 'நம்ம ஊரான்' பதிவுகள் பதியப்பட்டுள்ளன. இவைகள் அனைத்தும் எவ்வித லாப நோக்கமின்றி, பொதுநல சேவை அடிப்படையில் அதிரை நியூஸ் இணையதளத்தில் பிரத்தியோகமாக பதியப்பட்டவை.

எங்களைப் பொறுத்தவரை இத்தளத்தை பொதுநல சேவைக்காக மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். இத்தளத்தை பயன்படுத்தி விளம்பரங்கள் தேடுவதோ, அரசியல் ஆதாயத்திற்காக அல்ல.  அதிரை நியூஸ் இணையதளத்தில் பதிந்த சில நிமிடங்களிலேயே எங்களது செய்திகளை COPY - PASTE செய்து, செய்தியை யாரிடம் யார் திருடியது..என்பது தெரியாத அளவிற்கு சமூக இணையதளங்களில், அதன் நடத்துனர்களால் பகிரப்படுகிறது.

ஊடகத்துறையில் மொழிபெயர்ப்பு என்பது மிகுந்த மரியாதை தரக்கூடியது என்பது மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரின் ஏகோபித்த வரவேற்பை  பெறக்கூடியது. மொழி பெயர்ப்பு திறனை அதிகமாக வளர்த்துக்கொள்வதன் மூலம் ஊடகவியாளர்கள் கணிசமான சம்பளத்தில் ஏராளமான வேலை வாய்ப்புகளை ஊடகத்துறையில் பெற முடியும். ஆதலால், ஊடகப்பணிகளில் ஆர்வம் கொண்ட தன்னார்வல இளைஞர்கள் மொழிபெயர்ப்பில் அதிக ஆர்வம் கொள்ள வேண்டும். செய்திகளுக்காக பிறரைச் சார்ந்து இருப்பது, தங்களது சிந்தனைத் திறன் குறைந்துவிடுவதோடு மட்டுமல்லாமல், எழுத்தாற்றலும் பலகினமாகிவிடும். மேலும், தாங்கள் நடத்தி வரும் சமூக ஊடகங்கள், வாசகர்களின் நன்மதிப்பை இழந்துவிடும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

எவ்வித லாப நோக்கத்திற்காக நாங்கள் எங்களது தளத்தை நடத்தவில்லை என்பதை மீண்டும் கூறிக்கொள்கிறோம். எங்களது தளத்தில் பதியப்படும் மொழிபெயர்ப்பு செய்திகளை, தங்களது தளத்திற்காக எடுத்துப் பதிவதில் எங்களுக்கு எவ்வித ஆட்சோபனை இல்லையென்றாலும், ஊடக தர்மம், எங்களது உழைப்பு, நாங்கள் செலவிடும் நேரம் ஆகியவற்றை கருத்தில்கொண்டு, எங்களது தளத்தின் பெயர் அல்லது தளத்தின் முகவரியை அடிக்குறிப்பிட்டு பதிவதில் அப்படி என்ன சங்கடம் உங்களுக்கு ஏற்பட்டுள்ளது?

எங்கள் தளத்தில் பதியப்படும் செய்திகளை எங்களது அனுமதியின்றி, எடுத்து பதிந்துவிட்டு, எங்களது பெயரை மறைத்து வெளியிடுவது நியாமா சகோதரர்களே? இனி இதுபோன்ற தவறுகள் நடக்காது என நாங்கள் நம்புகிறோம்..

நன்றி!

Saturday, February 25, 2017

காதிர் முகைதீன் கல்லூரி விழாவில் 'அதிரை நியூஸ்' ஆசிரியர் சேவைப்பணிக்கு பாராட்டு !

அதிராம்பட்டினம், பிப்-25
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இணையதள ஊடகம் மற்றும் பத்திரிகை வாயிலாகக் கொண்டு சென்று
தான் கல்வி பயின்ற கல்லூரி வளர்ச்சிக்கு நற்பெயரை ஈட்டித்தரும் 'அதிரை நியூஸ்' இணையதள ஊடக ஆசிரியர் எம். நிஜாமுதீன் ( சேக்கனா நிஜாம் ) அவர்களுக்கு கல்லூரி சார்பில் இன்று  ( 25.02.2017 )  சனிக்கிழமை கல்லூரி அரங்கில் நடைபெற்ற மிலாது நபி விழாவில் பாராட்டுச்சான்றிதழ் மற்றும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. இவற்றை கல்லூரி முதல்வர் ஏ.எம் உதுமான் முகையதீன் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

அருகில் கல்லூரி நிர்வாக அதிகாரப்பூர்வ கையொப்பமாளர் முனைவர் ஏ. ஜலால், பேராசிரியர் முனைவர் பி. சிலார் முஹம்மது, அரபி பேராசிரியர் எம்.ஏ முஹம்மது இத்ரீஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Saturday, December 31, 2016

அசர வைக்கும் அதிரை விருந்தோம்பல்: 'தினமணி' ஆண்டு மலரில் இடம்பெற்ற படைப்பு !

அதிராம்பட்டினம், டிச-31
விருந்தோம்பலுக்கு பெயர்பெற்ற ஊர்களில் அதிராம்பட்டினமும் ஒன்று. உற்றார் - உறவினர்கள் - நண்பர்கள் படைசூழ விருந்தாளிகளிடம் சகோதரத்துவ அன்பை வெளிப்படுத்தும் விதமாக அருகிலே நின்று விருந்து உபசரிக்கப்படும் உயர்ந்த பண்பு பிறரை மெய்சிலிர்க்க வைக்கும்.

பிரபல தமிழ் நாளிதழ் 'தினமணி' ஆண்டு மலருக்காக தனது பிறந்த மண்ணின் விருந்தோம்பல் பெருமையை 'அதிரை நியூஸ்' இணையதள ஊடக ஆசிரியர் எம்.நிஜாமுதீன் ( சேக்கனா நிஜாம் ) அவர்கள் எழுதிய அழகிய படைப்பு இன்று ( 31-12-2016 ) காலை வெளியிடப்பட்டுள்ளது.
 

Monday, December 26, 2016

2016 ல் அதிரையில் நடந்த பரபரப்பு - வரவேற்பு நிகழ்வுகள்: சிறப்பு பார்வை (பகுதி 1)

அதிரை நியூஸ்: டிச-26
கடந்த வருடங்களை போல் அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதியில் நடப்பாண்டில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை நான்கு பகுதிகளாக தொகுத்து 'அதிரை நியூஸ்' வாசகர்களுக்கு வழங்க இருக்கிறோம்.

இந்த ஆண்டில் அதிரையில் நடந்த நிகழ்வுகள் ஏராளமாக இருந்தாலும், பதிவின் நீளம் கருதி குறிப்பிட்ட சில முக்கிய நிகழ்வுகளை மாத்திரம் பதிவதற்கு எடுத்துக் கொண்டுள்ளோம். இதில் ஜனவரி முதல் மார்ச் வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை பகுதி 1 எனவும், ஏப்ரல் முதல் ஜூன் வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை பகுதி 2 எனவும், ஜூலை முதல் செப்டம்பர் வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை பகுதி 3 எனவும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை பகுதி 4 என வகை படுத்தப்பட்டுள்ளது.

ஜனவரி முதல் மார்ச் வரை அதிரை நியூஸில் பதியப்பட்ட முக்கிய நிகழ்வுகள்:

Jan 26, 2016: 
மதநல்லிணக்கத்திற்காக கோட்டை அமீர் விருது:
தமிழக அரசின் சார்பில் ஆண்டு தோறும் மதநல்லிணக்கத்துக்காக 'கோட்டை அமீர்' விருது வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 2009 ஆம் ஆண்டு காலஞ்சென்ற முன்னாள் அதிரை பேரூராட்சி தலைவர் M.M.S. அப்துல் வஹாப் அவர்களுக்கு 'கோட்டை அமீர்' விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் 67 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில் அதிரை அஜ்ஜாவியத்துல் ஷாதுலியா ட்ரஸ்ட் நிர்வாக செயலாளர் M.B. அபூபக்கர் அவர்களுக்கு தமிழக அரசின் உயரிய விருதாக கருதப்படுகிற 'கோட்டை அமீர்' விருதை மறைந்த தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் வழங்கி கெளரவித்தார். இந்நிகழ்வு அதிரை மற்றும் சுற்றுப்புற பகுதி மக்களிடேயே பெரும் வரவேற்பை பெற்றது.

Jan 27,2016: 
வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கிலிருந்து முன்னாள் அதிரை சேர்மன் விடுவிப்பு:
அதிரை பேரூராட்சி தலைவராக எஸ்.ஹெச் அஸ்லம் பொறுப்பில் இருந்த போது, இவர் மீது அதிரை பேரூராட்சி துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்த பன்னீர் என்பவர் அளித்த புகாரின் பேரில் கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பர் அன்று வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு போடப்பட்டு தஞ்சை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

கடந்த 2 ஆண்டுக்கும் மேலாக நடந்து வந்த இந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதுதொடர்பாக நடத்தி முடிக்கப்பட்ட இறுதிகட்ட விசாரணையை அடுத்து கடந்த ( 27-01-2016 ) அன்று  தீர்ப்பு கூறப்பட்டது. இதில் அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போடப்பட்ட வழக்கில் இவர் நிரபராதி எனக் கூறி விடுவிக்கப்பட்டார். இந்நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Feb 7, 2016: 
அதிரையில் உலக தரத்தில் நவீன வசதியுடன் கூடிய புதிய ரெஸ்டாரெண்ட் திறப்பு:
அதிரை பட்டுக்கோட்டை சாலையில்  கடந்த பிப்-07  ந்தேதி 'ரிச் வே'  என்ற பெயரில் உலக தரத்துடன் கூடிய புதிய ரெஸ்டாரெண்ட் உதயமாகியது. தொலைக்காட்சி புகழ் செஃப் தாமோதரன் இந்த ரிச் வே ரெஸ்டாரெண்டை திறந்து வைத்தார்.  இங்கு உலகத்தரத்துடன் கூடிய அனைத்து வகையான சைவ, அசைவ உணவுகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
குளிர் சாதன வசதியுடன் 200 பேர் இருக்கைகள் கொண்ட அரங்கம், திறந்த வெளி டைனிங் ஹால் மற்றும் குளிர் சாதன டைனிங் ஹால் என அமைந்துள்ளது. பட்டுக்கோட்டை சுற்றுவட்டாரத்தில் நவீன வசதிகளுடன் கூடிய ரெஸ்டரெண்ட் இதுதான் என அப்போது பேசப்பட்டது.

Feb 9, 2016: 
அதிரையில் அபூர்வ பொட்டிக்கிழங்கு விற்பனை:
அதிரையின் பிரதான மார்க்கெட்டாக கருதப்படுகிற கடைத்தெரு பெரிய மீன் மார்க்கெட் பகுதியில் அதிரை சுற்றுவட்டார கிராமப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான சில்லறை பெண் வியாபாரிகள் மார்க்கெட்டின் முகப்பு பகுதியில் வரிசையாக அமர்ந்து வியாபாரம் செய்வார்கள். இங்கு அந்தந்த காலக்கட்டங்களில் கிடைக்கும் பனங்கிழங்கு,  இலந்தப்பழம், நிலக்கடலை, சோளக்கதிர், மரவள்ளி கிழங்கு, சக்கரைவள்ளி கிழங்கு, பப்பாளி, வாழைப்பழம், கீரை, மாங்காய், மாம்பலம், நாவப்பழம், சீதாப்பழம், பலாப்பழம், கொய்யப்பபழம் உள்ளிட்டவை விற்கப்படும். மார்க்கெட்டில் மீன், இறைச்சி மற்றும் காய் கறிகள் வாங்க வரும் அன்றாட வாடிக்கையாளர்கள் இந்த பொருட்களை வீட்டிற்கு விரும்பி வாங்கிச்செல்வார்கள். இதனால் இந்த பகுதி பெரும் பரபரப்பாக காணப்படும்.

இந்நிலையில் வருஷத்தில் சில நாட்கள் மாத்திரம் அபூர்வமாக கிடைக்கும் பொட்டிக்கிழங்கு விற்பனைக்கு வந்தது. மருத்துவ குணம் வாய்ந்த பொட்டிக்கிழங்கை அதிகமானோர் வாங்கிச்சென்றனர். ஒரு சுண்டு ( ஒரு குவளை அளவு ) பொட்டிக்கிழங்கு ரூ 10 க்கு விற்பனை ஆனது. பெரும் வரவேற்பை பெற்றது.

Feb 12, 2016: 
அதிரை பேரூராட்சியில் உள்ளிருப்பு போராட்டம்
அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 17 மற்றும் 19 வது வார்டுகளின் கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக கூறி அதிரை பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கடந்த (12-02-2016) அன்று பேரூராட்சி அலுவலக உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் அதிரை பேரூராட்சி மன்ற பெண் உறுப்பினர்கள் ரபீக்கா முஹம்மது சலீம், ( 17 வது வார்டு ) செளதா அஹமது ஹாஜா ( 19 வது வார்டு  ), உம்மல் மர்ஜான் அன்சர்கான் ( 11 வது வார்டு ) ஜபுரன் ஜெமீலா ( 10 வது வார்டு  ) ஆகியோர் மன்றத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதனால் பெரும் பரபரப்பு கூடியது.

Mar 3, 2016:
அதிரை பேருந்து நிலைய வணிக கடைகள் பொது ஏலம்:
அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில், பேரூராட்சி சார்பில் கட்டப்பட்ட 24 வர்த்தக கடைகளுக்கான பொது ஏலம் இன்று காலை அதிரை காவல் நிலையம் எதிரே அமைந்துள்ள செல்லியம்மன் மண்டபத்தில் அமைதியாக நடந்தது.

அதிரை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் 20 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்போடு அதிரை பேரூராட்சி செயல் அலுவலர் முனியசாமி ஏலத்தை நடத்தினார். இதில் மொத்தம் 109 பேர் ரூ 1 லட்சம் டிடி தொகையை முன்வைப்பு தொகையாக செலுத்தி இருந்தனர். இவர்கள் அனைவருக்கும் டோக்கன் வழங்கி ஏலத்தில் கலந்துகொள்ள மண்டபத்தினுல் அனுமதிக்கப்பட்டனர்.

ஈசிஆர் சாலை பகுதியை ஒட்டிய 14 கடைகளை பிளாக் பி எனவும், பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை செல்லும் சாலையை ஒட்டிய கடைகளை பிளாக் ஏ எனவும் வகைப்படுத்தப்பட்டது. குறைந்தபட்ச மாத வாடகை தொகையாக ரூ 500 லிருந்து ஆராம்பமாகியது அதிகபட்சமாக ரூ 26,900 க்கும், குறைந்த பட்சமாக ரூ 8,100 க்கும் கடைகள் ஏலம் போனது.

மொத்தம் 24 கடைகளுக்கு ஏலம் விடப்பட்டது. இதில் ஏலம் எடுத்தவர்கள் டிடி தொகையை செலுத்தி கையொப்பமிட்டு உறுதி செய்தனர். மீதமுள்ளவர்களுக்கு அவர்கள் செலுத்திய டி.டி தொகை திரும்ப ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்வு பெரும் வரவேற்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

Mar 5, 2016:
உடல்நிலை பாதிப்படைந்த அதிரை வாலிபருக்கு வீடு கட்டி கொடுத்த அதிரையர்:
அதிரை எம்.எஸ்.எம் நகரை சேர்ந்தவர் எம். முஹம்மது புஹாரி. இவரது மகன் ஜெஹபர் சாதிக் ( வயது 30 ) இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குடும்ப வருமானத்திற்காக கடந்த 8 ஆண்டுகளாக தக்வா பள்ளி அருகே தட்டு வண்டி ஓட்டி வந்தார். கிடைத்த சொற்ப வருமானத்தில் குடும்பம் நடத்தி வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு திடீரென இவரது கால்கள் இரண்டும் செயல் இழந்து நடக்க முடியாமல் மிகவும் அவதிபட்டார். இதையடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை மேற்கொண்டார். இதுதொடர்பாக வாலிபரின் பெற்றோர் சார்பில் நிதி உதவி கோரி இருந்தனர்.

இதையடுத்து அதிரை நியூஸ் சார்பில் இதன் உண்மை நிலை ஆராயப்பட்டு, பின்னர் செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. இவற்றை பார்வையிட்ட உலகங்கிலும் உள்ள அதிரை, வெளியூர் மற்றும் வெளிநாடுவாழ் அன்பர்கள் நேரடியாகவும் வங்கி கணக்கின் வழியாகவும் நிதிஉதவி அளித்தனர்.

இதில் லண்டன் வாழ் சமூக ஆர்வலரும், தொடர்ந்து வாழ்வாதார மற்றும் மருத்துவ உதவிகளை தானாக முன்வந்து உதவி வருகின்ற அதிரையின் எஸ்.ஏ இம்தியாஸ் அஹமது ரூ 11 ஆயிரம் அனுப்பி உதவினார்.

இதுதொடர்பாக அதிரை நியூஸில் கடந்த [ 30-11-2015 ] அன்று வெளியிடப்பட்ட செய்தியில் இடம்பெற்ற குடிசை வீட்டின் புகைப்படங்களை கண்டு மனம் உருகிய எஸ்.ஏ இம்தியாஸ் அஹமது வாலிபரின் குடும்பத்திற்கு ஆஸ்ப்ரோ சீட்டில் வீடு கட்டி கொடுக்க முன்வந்தார். ரூ 55 ஆயிரம் அனுப்பிவைத்தார். இதையடுத்து இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து முடிந்தது. புனரமைக்கப்பட்ட வீட்டில் வாலிபரின் குடும்பத்தினர் கடந்த மார்ச் 5 ந் தேதி குடியமர்த்தப்பட்டனர்.

புனரமைக்கப்பட்ட வீட்டின் மொத்த செலவுத்தொகை ரூ 70 ஆயிரம், மீதமுள்ள ரூ 15 ஆயிரத்தை பணியை எடுத்து செய்த வெல்டர் அப்பு, உடல் நிலை பாதிப்படைந்த வாலிபர் குடும்பத்தின் பரிதாப நிதி நிலையக் கண்டு தனது சொந்த பணத்தை கொடுத்து உதவினார். இந்நிகழ்வு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Mar 7, 2016
அரசு பொதுத்தேர்விற்காக அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா தொழுகையின் நேரம் மாற்றம்:
12 ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு தமிழகமெங்கும் கடந்த [ 04-03-2016 ] அன்று முதல் தொடங்கியது. அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் ஜும்மா தொழுகையை பின்பற்றுவதற்கு ஏதுவாக ஜும்மா பயான் சரியாக பகல் 12.45 மணிக்கு துவங்குகி தொடர்ந்து 1.30 மணிக்கு ஜூம்மா தொழுகை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இவை மிகுந்த வரவேற்பை பெற்றது.

Mar 7, 2016:
அதிரை பைத்துல்மாலில் பெண்களுக்கான சிறப்பு தையல் பயிற்சி பள்ளி துவக்கம்:
அதிரை பைத்துல்மால் கடந்த 1993 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு பல்வேறு பொதுநல சேவைகள் தொய்வின்றி செய்து வருகிறது. குறிப்பாக வட்டியில்லா நகைக் கடன் வழங்கும் திட்டம், கைவிடப்பட்ட முதியோர்கள், விதவைகள் ஆகியோருக்கான பென்ஷன் வழங்கும் திட்டம், ஏழைக்குமர்களுக்கான திருமண உதவி வழங்கும் திட்டம், வறிய மாணவ மாணவிகளுக்கான கல்வி உதவி வழங்கும் திட்டம் மற்றும் மருத்துவ உதவி சுன்னத் உதவி ஆகியன சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அதிரை பைத்துல்மாலின் மற்றுமொரு பொதுநல சேவையாக பெண்களின் சுய தொழில் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் நோக்கில் தையல் பயிற்சி அளிக்கும் திட்டத்தை 06-03-2016 முதல் தொடங்கியது. இந்நிகழ்வு பெரும் வரவேற்பை பெற்றது.

Mar 13, 2016:
அதிரையில் அஸர் முதல் இஷா வரை நடந்த ஒளிமயமான குடும்ப நிகழ்ச்சி:
தஞ்சை தெற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா - பட்டுக்கோட்டை டிவிசன் சார்பில் 'தாருல் நூர்' ( ஒளிமயமான வீடு ) சகோதரத்துவ குடும்பங்களின் சங்கம நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை அஸர் முதல் இஷா தொழுகை வரை அதிரை சாரா திருமண மகாலில் நடந்தது.
நிகழ்ச்சியில் இஸ்லாமிய மார்க்கம் தொடர்பான 50 கேள்வி - பதில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் 150 க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இதில் வெற்றி பெற்ற 10 பேர்களுக்கு விழா மேடையில் பரிசுகள் வழங்கப்பட்டது.

Tuesday, December 6, 2016

முதல்வரின் மறைவுக்கு 'அதிரை நியூஸ்' இரங்கல்!

முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் மறைவு தமிழக மக்களுக்கும், அதிமுக தொண்டர்களுக்கும் மாபெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இவரது மனவலிமை, தன்னம்பிக்கை, விடா முயற்சி ஆகியன இவரது வாழ்வில் அடுத்தடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல பெரிதும் உதவி இருக்கிறது.

அன்னாரை இழந்து வாடும் அதிமுக தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

அதிரை நியூஸ்

Wednesday, November 9, 2016

'சமூக சீர்கேட்டிற்கு காரணம் ?' தகவல் தொழில்நுட்பமா !? மாறிவரும் கலாச்சாரமா !? - சிறப்பு பட்டிமன்றம் ( வீடியோ )

'சமூக சீர்கேட்டிற்கு காரணம் ?' 
தகவல் தொழில்நுட்பமா !?                                         மாறிவரும் கலாச்சாரமா !?

என்ற இரு வேறு தலைப்புகளில் அதிரையின் பிரபல பட்டிமன்ற நகைச்சுவை பேச்சாளர்கள் இரு அணிகளாக இருந்து மோதும் சூடான விவாதங்கள். இதில் நடுவராக 'முத்தமிழ் நேசன்' கவிஞர் எம்.ஆர் முத்து அவர்களும், தகவல் தொழில்நுட்ப சாதனங்கள்தான் சமூக சீர்கேட்டிற்கான காரணம் என வலியுறுத்தி தொலைக்காட்சி பேச்சாளர் மதுக்கூர் இராமச்சந்திரன் இவரோடு இணைந்து 'நிருபர்' இல. சிவா எம்.ஏ. ஆகியோர் ஓர் அணியிலும், இல்லையில்லை மாறிவரும் கலாச்சாராம்தான் சமூக சீர்கேட்டிற்கான காரணம் என வலியுறுத்தி 'நகைச்சுவை தென்றல்' அதிரை புஹாரி இவரோடு இணைந்து 'சிந்தனை பேச்சாளர்' கவிஞர் தியாக. புருஷோத்தமன் ஆகியோர் மற்றறொரு அணியில் அங்கம் வகித்து நம்மை நகைச்சுவையூட்டி சிந்திக்க வைக்கின்றனர்.

வயிறுகுலுங்க சிரிக்க வைக்கின்ற இந்த சிறப்பு பட்டிமன்ற நிகழ்ச்சியின் காணொளியை அதிரை நியூஸ் வாசகர்களுக்கு அன்புடன் வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம்.

 
 
 
 

இது ஓர் மீள் பதிவு 
அதிரையில் 2013 ஆம் ஆண்டு நடந்த நிகழ்ச்சி

Saturday, May 7, 2016

அதிரை நியூஸின் முக்கிய அறிவிப்பு !

அன்பான அதிரை நியூஸ் வலைதளத்தின் பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் கருத்திடுபவர்களுக்கும் அதிரை நியூஸ் நிர்வாகத்தின் அன்பான வேண்டுகோளுடன் கூடிய அறிவிப்பு.

அதிரை நியூஸ் வலைத்தளத்தின் நோக்கம் அதிரை மற்றும் அதன் வட்டாரப்பகுதிகளில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை சாதி மத இன பேதமின்றி வெளியிட்டு அதிரையின் அனைத்து மக்களின் கவனத்துக்கும் சென்று சேர்க்க வேண்டுமென்பதே.

அவ்வகையில்தான் எவ்வித தவறும் நிகழ்ந்துவிடாதவகையில் இந்த வலைத்தளம் தொடங்கிய காலம் முதல் சுத்தமான மனதுடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.

அதே முறையில்தான் கருத்துச் சுதந்திரங்களுக்கு எவ்வித தடையும் போடாமல் அனைவரின் கருத்தையும் தடை இல்லாமல் பிரசுரித்தும் வருகிறோம்.

கடந்த சில நாட்களாக அதிரை நியூஸ் இணையதளம் மற்றும் முகநூலில் நாம் பதியப்படும் சில செய்திகளின் பின்னூட்டங்களில் தனி நபர் விமர்சனங்களும், நாகரிகற்ற வார்த்தைகளால் மற்றவர்களைப் புண்படுத்துவது போன்ற அம்சங்களும் அமைந்து இருப்பதை நாம் வருத்தத்துடன் உணர முடிகிறது. பின்னூட்டங்களால் பாதிக்கப்பட்டவர்கள் நம்மை தொடர்புகொண்டு வருத்தத்தை தெரியப்படுத்தி வருகின்றனர்.

அதிரை நியூஸ் தனது கண்ணியத்தை கட்டிக் காக்க நினைக்கிறது. இந்த மண்ணில் சகோதரத்துவமும் சமத்துவமும் தழைத்து வளர்ந்திருக்கிறது. அண்மைக்கால அரசியல் நடவடிக்கைகளால் சமுதாயத்தின் பிரிவினர்கள் ஒருவரை ஒருவர் வார்த்தைகளால்  தாக்கிக் கொள்வதற்கு அதிரை நியூசை ஒரு களமாகப் பயன்படுத்துவதை நிர்வாகம் அனுமதிக்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

எவராக இருந்தாலும் தங்களின் கருத்தை பண்புடனும் கண்ணியத்துடன் பதிய நினைத்தால் அவர்களை அதிரை நியூஸ் ஊக்கப்படுத்தி வரவேற்கும் என்பதை மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்கிறோம்.

என்றும் உங்களின் அன்பான சேவையில்,

அதிரை நியூஸ்

Wednesday, January 20, 2016

மாவட்ட ஆட்சியருடன் அதிரை நியூஸ் குழுவினர் சந்திப்பு !

மாவட்ட ஆட்சியர் டாக்டர் என். சுப்பையன் அவர்களை அதிரை நியூஸ் குழுவினர் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்கள். சந்திப்பில் அதிரை நியூஸ் ஆசிரியர் சேக்கனா நிஜாம், 2002 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்ட 'சமூக விழிப்புணர்வு பக்கங்கள்' நூல் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டது.

மேலும் எதிர்வரும் மே,2016 ல் அதிரை நியூஸ் சார்பில் நடத்த இருக்கின்ற மாபெரும் அதிரை நியூஸ் கல்வி மற்றும் சாதனையாளர் விருது வழங்கும் விழாவில் தலைமை ஏற்று நடத்தி தர மாவட்ட ஆட்சியரிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டது.

சந்திப்பின் போது காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மகபூப் அலி, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிரை சேர்மன் மரைக்கா இத்ரீஸ் அஹமது, சமூக ஆர்வலர்கள் அன்சாரி, எஸ்.ஏ இத்ரீஸ் அஹமது, கவுன்சிலர் முஹம்மது செரீப், நவாஸ் கான், AVM சாகுல் ஹமீது, மரைக்கா கபீர் ஆகியோர் இருந்தனர்.