Showing posts with label நேர்காணல். Show all posts
Showing posts with label நேர்காணல். Show all posts
Tuesday, December 31, 2019
Saturday, February 3, 2018
'பக்கவாதமா? பயப்பட வேண்டாம்' ~ 'மூளை நரம்பியல் நிபுணர்' டாக்டர் வேணி
![]() |
| 'மூளை நரம்பியல் நிபுணர்' டாக்டர் அ. வேணி |
'பக்கவாதமா? பயப்பட வேண்டாம்' என வலியுறுத்துகிறார் திருச்சி, ராக்போர்ட் நரம்பியல் மையத்தின் மூளை நரம்பியல் நிபுணர் டாக்டர் அ. வேணி.
இதுகுறித்து மேலும் அவர் கூறியது;
காலையில் மலரும் மலர்கள் போல் நாமும் தினமும் மலர்கிறோம். வேகமாக இயங்கும் உலகத்தில் நாமும் ஓடிக்கொண்டே இருக்கின்றோம். எதை நோக்கி ஓடுகிறோம், வாழ்வின் நோக்கம் என்ன, நமது உடலின் இயல்பு என்ன, நமது உடலை எப்படி நோய்களிடம் இருந்து பேணி பாதுகாத்து, எப்படி ஆரோக்;கிய வாழ்வை நாம் வாழ வேண்டும் என்பதை சிந்திக்க மறந்து விட்டோம்.
உள்ளங்கையில் அடங்க கூடிய அலைப்பேசி மூலம் எங்கோ ஒரு மூலையில் இருப்பவர்களிடம் தொடர்பு கொள்கிறோம். இலட்சக்கணக்கான மைல் தொலைவில் உள்ள ஏவுகணையை இங்கிருந்தே இயக்குகிறோம். அறிவியல் அதிசயங்கள் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்கிறது.
நாம் வாசம் செய்யும் நம் உடலை அதிலும் நம்மை, நம் இதயத்தை மற்றும் அனைத்து பாகங்களையும் இயக்கும் நமது மூளை பற்றிய விழிப்புணர்வு நம்மில் பலருக்கு இல்லை என்றால் எத்தனை கோடி அறிவியல் அதிசயங்கள் வந்தாலும் அதனால் நமக்கு ஒரு பயனும் இல்லை என்பதை உணர்வோம் வாசகர்களே….
மூளை நரம்பியல் நிபுணரான நான் பல்வேறு மூளை நரம்பியல் சம்பந்தப்பட்ட நோயால் மக்கள் தன் உடல் இயக்கத்தை இழந்து நிற்பதை பார்க்கிறேன். சிலர் தன் வாழ்க்கையையே ஒரு நொடியில் இழந்து விடுகிறார்கள். இதில் முக்கிய நோய் பக்கவாத நோய். மக்கள் பக்கவாத நோயைக் கண்டு அச்சம் கொள்கிறார்கள். ஆனால் அதை தடுக்க என்ன செய்ய வேண்டும். அதன் அறிகுறிகள் என்ன நோய் வந்நதால் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொண்டால் தான் பக்கவாத நோயின் தாக்கத்தில் இருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும்.
மனிதன் என்பவன் உடல், உள்ளம், உணர்வு ஆகிய மூன்றின் சங்கமம். நமது மனம் நமக்கு ஆருயிர் நண்பனாகவும், உயிரை போக்கும் பகையாளியாகவும் உள்ளது. இந்த இரண்டில் எதுவாக நம் மனம் இருக்க வேண்டும் என்பதை, நாம் நம் மனதிற்கு அளிக்கும் பயிற்சியே முடிவு செய்கிறது.
வாழ்நாள் முழுவதும் நோயின்றி பல்லாண்டு வாழ்வதும், நோயுடன் மரணிப்பதும் நம் மனதின் கையில் தான் உள்ளது. நாம் நம் மனதைக் கொண்டு உடலின் ஒவ்வொரு செல்லையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். மனதை கொண்டு உடலையும், உடலைக் கொண்டு மனதின் உணர்வுகளையும் கையாண்டு, நோய் அறிகுறிகளை அறிந்து, நோய் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை மக்களின் மனதில் நிறுத்த என்னின் சிறிய முயற்சி இதோ…
மனித உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியமான பகுதி மனித மூளை தான். இங்கிருந்தே மனித உடலின் அனைத்து விதமான செயல்களுக்கும் கட்டளை இடப்படுகிறது. அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்பது போல, மனித மூளை இல்லாமல் மனிதனுடைய செயல்கள் எதுவும் நடைபெறாது. இந்த மூளையானது எந்தவித பிரச்சினைகளுமின்றி செயல்பட்டால் தான் நாம் இயல்பாக வாழ முடியும்.
நமது உடலில் உள்ள எல்லா உறுப்புகளையும் பார்க்கும்போது, நமது மூளையானது மிகவும் தனித்துவம் வாய்ந்தது. எனவே தான் கபால எலும்புக்குள் அது பத்திரமாக பாதுகாக்கப்படுகிறது. மனித மூளைகளிலேயே ஆண் மூளைக்கும், பெண் மூளைக்கும் எடை விகிதத்திலும் சரி, செயல்திறனிலும் சரி நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.
உதாரணத்திற்கு பெண் மூளையின் எடையானது 1350 கிராம் எடையிலும், ஆண் மூளையின் எடையானது 1450 கிராம் என்ற அளவிலும் இருக்கும். மூளையின் தனித்துவம் என்னவென்றால், நமது வலது மூளையானது இடது பக்க உடலையும், இடது மூளையானது வலது பக்க உடலையும் கட்டுப்படுத்துகிறது. உதாரணமாக, வலது மூளையில் எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் அது இடது பக்க கை, கால் மற்றும் முகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.
நமது மூளைக்கு இரத்தமானது இதயத்தில் இருந்து இரத்தக் குழாய்களின் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. நம் மூளையானது நன்றாக செயல்பட வேண்டுமானால், சீரான இரத்த ஓட்டம் தடையின்றி மூளைக்குச் சென்று கொண்டிருக்க வேண்டும். இந்த இரத்த ஓட்டத்தில் 3 வினாடிகளுக்கு மேல் தடை ஏற்பட்டால் மூளை அதன் பணிகளை செய்ய இயலாது போய்விடும்.
அந்தவகையில், பக்கவாத நோய் (Stroke) என்பது மூளையில் உள்ள இரத்தக் குழாய்கள் அடைப்பதாலோ அல்லது இரத்தக் குழாய்கள் வெடித்து நமது மூளைக்குள் இரத்தம் கசிவதாலோ வருகிறது (பக்கம் + வாதம் = பக்கவாதம்). ஒரு பக்க கை, கால் மற்றும் முகம் உட்பட உடலின் ஒரு பகுதி மட்டும் செயல் இழந்து போவதையே பக்கவாதம் என்கிறோம்.
இரத்தக் குழாயினுடைய அடைப்பைப் பொறுத்து தான் நோயினுடைய அறிகுறிகளும் அதனுடைய பாதிப்புகளும் இருக்கும். இரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்பினால் ஒருவருக்கு பக்கவாதம் ஏற்பட்டால், அவரை நான்கரை மணி நேரத்திற்குள் நரம்பியல் மருத்துவரிடம் அழைத்துச் சென்று சிகிச்சையளிக்க வேண்டும். அப்படி செய்தால் அந்த நபரை பக்கவாத நோயிலிருந்து ஓரளவு காக்க முடியும். மற்றபடி, இரத்தக் குழாய் வெடித்து அதன் கசிவினால் பக்கவாதம் ஏற்பட்டால், எதனால் அந்த இரத்தக் கசிவு ஏற்பட்டது என்பதனையும், அதன் காரணிகளையும் கண்டுபிடித்து அதன் பின்னர் தான் சிகிச்சையளிக்க முடியும்.
பக்கவாதம் உண்டாகவிருப்பதை ஒருசில அறிகுறிகளை வைத்து முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம். ஒரு பக்கமாக கை,கால் செயல் இழத்தல்; ஒரு பக்கமாக வாய் கோணல்; பேச முடியாமல் போதல்; பேச்சில் தடுமாற்றம்; திடீரென ஒரு பக்கமாக கை, கால்கள் உணர்ச்சி குறைதல்; ஒரு கண் பார்வை மறைத்தல், முற்றிலும் பார்க்க முடியாமல் போதல் அல்லது பார்வை இரட்டையாகத் தெரிவது; திடீரென நடையில் தள்ளாட்டம்; திடீரென விக்கல் ஏற்பட்டு சாப்பிடும் போது புரை ஏறுவது; திடீரென தலைச்சுற்றல் ஏற்பட்டு நினைவு இழத்தல் இந்த அறிகுறிகளில் எவை தென்பட்டாலும் உடனே நரம்பியல் நிபுணரை அணுகி ஆலோசனையை பெற வேண்டும்.
100 பேருக்கு பக்கவாத நோய் ஏற்பட்டால், அதில் 30 பேருக்கு பக்கவாத நோய் சரியாகிவிடும். மீதமுள்ள 30 பேருக்கு 50-90 % வரை சரியாகிவிடும். மற்றொரு 30 பேருக்கு 10-50% வரை பக்கவாத நோய் சரியாகிவிடும். மீதமுள்ள 10 பேர் பக்கவாதம் வந்த ஒரு மாதத்தில் இறந்துவிடுகின்றனர்.
இப்படியான இந்த பக்கவாத நோயை மற்ற நோய்களைப் போல பார்க்க முடியாது. பக்கவாத நோய் என்பது ஒரு தனி மனிதனை மட்டும் பாதிக்கக் கூடியது அல்ல. ஏனென்றால், பக்கவாத நோயானது பெரும்பாலும் ஆண்களையே அதிகமாக தாக்குகிறது. எனவே, குடும்பத்தின் தலைவனாக இருக்கும் ஒருவருக்கு பக்கவாதம் ஏற்படுமானால், அதுவரை அவரது உழைப்பினாலும் சம்பாதியத்தாலும் இயங்கிவந்த குடும்பத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாகும். பெரும்பாலான நடுத்தர குடும்பங்களில் இதுபோன்று ஒருவருக்கு பக்கவாதம் ஏற்பட்டால் அந்த ஒட்டுமொத்த குடும்பமுமே நிலைகுலைந்துவிடும். எனவே, இந்த பக்கவாதத்தினை தடுப்பது தான் சாலச்சிறந்தது.
இந்த பக்கவாத நோயானது எதனால் ஏற்படுகிறது? பக்கவாத நோய் வராமல் தடுப்பது எப்படி? ஒருவேளை பக்கவாத நோய் ஏற்பட்டுவிட்டால் என்ன மாதிரியான சிகிச்சை முறைகள் மற்றும் வாழ்வியல் முறைகளை கடைபிடிக்க வேண்டும்' என்றார்.
சிறப்பு நேர்காணல்:
அதிரை நியூஸ்க்காக ஏ.சாகுல்ஹமீது
Saturday, January 6, 2018
"உடல் ஆரோக்கியத்திற்கு தூக்கம் அவசியம்" ~ 'மூளை நரம்பியல் நிபுணர்' டாக்டர் வேணி
![]() |
| 'மூளை நரம்பியல் நிபுணர்' டாக்டர் அ. வேணி |
'உடல் ஆரோக்கியத்திற்கு தூக்கம் அவசியம்' என வலியுறுத்துகிறார் திருச்சி, ராக்போர்ட் நரம்பியல் மையத்தின் மூளை நரம்பியல் நிபுணர் டாக்டர் அ. வேணி.
இதுகுறித்து மேலும் அவர் கூறியது;
நாம் வாழும் இந்த பூமியானது சூரியனை சுற்றுவதோடு மட்டுமல்லாமல் தன்னைத் தானே சுற்றிக் கொண்டும் நமக்கு பகலையும் இரவையும் தருகிறது எதற்காக?
மரங்கள் இலையுதிர் காலத்தில் தன் இலைகளை விடுத்து வசந்த காலத்தில் பூ பூத்து, காய் காய்த்து இயைற்கையோடு இயைந்து வாழ்கின்றது. அனைத்து பறவைகளும் சூரியன் மறையும் போது தன் உறைவிடம் சென்று உறங்கி விடியற்காலை வேலைகளை தொடங்குகின்றன. இப்படி இயற்கையின் விதிகளை மனிதர்களைத் தவிர அனைத்து ஜீவராசிகளும் பின்பற்றுகின்றன.
ஆறு அறிவு கொண்ட மானிட வர்க்கம் தனது விஞ்ஞான வளர்ச்சியால் இரவை பகலாகவும் பகலை இரவாகவும் மாற்றி விட்டது. எந்த ஒரு கண்டுபிடிப்பிலும் பல நன்மைகள் இருந்தாலும், தீமைகளும் சில இருக்கத்தான் செய்கினறன. இப்படி மாற்றி விட்டதால் நஷ்டம் நமக்கு தான்.
தூக்கம் நமக்கு அளிக்கப்பட்ட வரபிரசாதம். தூக்கத்தை குறைத்து (5 மணி நேரங்களுக்கு குறைவாக) நாம் செய்யும் எந்த வேலையும் நம் ஆயுட்காலத்தை குறைக்கவே செய்கின்றன. இதை நம்மில் எத்தனைப் பேர் உணர்ந்திருக்கிறோம்.
தூக்கம் நமக்கு எப்படி வருகிறது? தூக்கத்தினால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன? நன்றாக தூங்காததால் ஏற்படும் ஆபத்துகள் என்ன? என்பதை உணர்ந்தால் தான் வாழ்வியல் முறைகளில் சில மாற்றங்களை செய்து நல்ல அளவான தூக்கம் கொண்டு நாம் வாழும் நாட்களில் ஆரோக்கியமான வாழ்க்கையை பெறுவதோடு மட்டுமல்லாமல் ஆயுட்காலத்தையும் அதிகப் படுத்த முடியும்.
தூக்கம் நமக்கு எப்படி வருகிறது?
உடலில் ஒவ்வொரு அணுவையும் இயக்குவது மூளைதான். நாம் பார்ப்பது, கேட்பது, நுகர்வது, சுவைப்பது மற்றும் உடலின் ஒவ்வொரு உணர்ச்சியும் மூளையை சென்றடைகிறது. நம் கண்களில் ரெட்டினா என்னும் ஒரு படலம் உள்ளது. கண்களில் பாயும் ஒளி அலையானது இப்படலத்தில் விழுந்து நரம்பு வழியாக முளையை சென்றடைகிறது. நமது கண்களுக்கு இருட்டி விட்டது என்பதை ரெட்டினா உணர்ந்த உடன் மூளையில் உள்ள ஹைப்போதலாமஸ் என்னும் பகுதிக்கு சமிஞைகளை அனுப்புகிறது. அங்கிருந்து பினியல் சுரப்பிக்கு மெலட்டோனின் என்ற நொதியை சுரப்பதற்க்கு கட்டளை இடப்படுகிறது. மெலடோனின் தான் நாம் தூங்குவதற்கான நொதியாகும். மெலடோனின் அளவு அதிகரிக்கும் போது நமக்கு நல்ல தூக்கம் வருகிறது. இப்படி தான் நாம் தினமும் உறங்கிறோம் இதில் ஒரு உண்மையை நாம் அனைவரும் உணர வேண்டும். அதாவது இருட்டை ரெட்டினா உணர்ந்தால் தான் நமக்கு உறக்கம் வரும். இரவு நேரங்களில் தொலைக்காட்சிää அலைப்பேசி, கணினி, மற்றும் மடிக்கணினி போன்றவற்றிலிருந்து வரும் வெளிச்சமானது அதிகமாக இருப்பதால் நமக்கு இவற்றை பயன்படுத்தி விட்டு படுக்கும் போது தூக்கம் உடனே வருவதில்லை.
சராசரியாக நமக்கு படுத்து 20 நிமிடங்களுக்குள் தூக்கம் வந்து விடும் அதிக வெளிச்சத்தை பார்த்துவிட்டு படுக்கும் போது தூக்கம் வருவதற்க்கு 1 மணி நேரத்திற்க்கும் மேலாகிறது. இன்னும் சிலர் தூக்கம் வரவில்லையே என தொலைக்காட்சி மற்றும் கைப்பேசியில் மூழ்கிவிடுகிறார்கள். இவ்வாறு செய்வதால் தூங்கச் செல்லும் நேரம் இரவு 12 மணிக்கு மேலாகிறது. நமது உடல் சரியாக பகல் நேரத்தில் இயங்குவதற்கு நமது மூனையானது இரவு 11 மணி முதல் விடியற்காலை 4 மணி வரை கண்டிப்பாக ஓய்வில் இருக்க வேண்டும் இந்த நேரத்தில் தான் நமது மூளையின் பிட்யூட்டரி என்னும் நாளமில்லா சுரப்பியிலிருந்து பல்வேறு நொதிகள் சுரந்து நம் உடலில் உள்ள உறுப்புகள் செவ்வனே அதன் பணியை செய்வதற்கு இந்த சுரப்பு பொருட்கள் உதவுகின்றன. நாம் இந்த நேரத்தில் கண் விழித்திருப்பதால் மூளைக்கு ஓய்வு கிடைப்பதில்லை. எனவே பகலில் உடல் சுறுசுறுப்பாக இருப்பதில்லை.
கனவு…
தூக்கத்தில் சில பேருக்கு கனவுகள் நிறைய வருகிறது என்பர், சில பேர் கனவு எனக்கு வாழ்நாளில் வந்ததே இல்லை என்பர் இவை இரண்டுமே வியாதி அல்ல, அதை நினைத்து கவலைப்பட தேவையில்லை. நாம் உறங்கும் போது REM மற்றும் Non REM உறக்க நிலை என்று இரண்டு நிலை உள்ளது. இரண்டு நிலைகளும் 6 முதல் 8 முறை 7 மணி நேர உறக்கத்தில் வருகின்றது. சுநுஆ நிலையில் வரும் கனவுகள் நம் வாழ்க்கையில் உண்மையாக நடப்பதை போன்று உணர்கிறோம், இந்த கனவானது நமக்கு விழித்தவுடன் நினைவுக்கு வருகிறது. ழேn சுநுஆ நிலையில் வரும் கனவுகள் நம் நினைவுக்கு வருவதில்லை.
சிலருக்கு தூங்க ஆரம்பிக்கும் போது உடலின் ஒரு பகுதியோ அல்லது உடல் முழுவதுமோ தூக்கி போடும்ää இதனால் நிறைய பேர் வலிப்பு வியாதி வந்து விட்டதோää நரம்பு தளர்ச்சி வந்து விட்டதோ என்று பயப்படுகிறார்கள். இது நம் உடலில் ஏற்படும் இயல்பான ஒன்று. இப்படி தூக்கி போட்ட சிறிது நேரத்தில் நல்ல உறக்கம் வந்து விடும். இதை நினைத்து யாரும் பயம் கொள்ள தேவையில்லை.
தூக்கத்தினால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன?
1. உடல் மற்றும் மனதிற்கு நல்ல ஓய்வு கிடைக்கிறது
2. ஞாபக சக்தி நன்கு வலுப்பெருகிறது
3. நாளமில்லா சுரப்பிகள் நன்கு செயல்படுகிறது
4. இனப்பெருக்க உறுப்புகள் நன்கு வேலை செய்கிறது
5. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது
6. மூளையில் உள்ள நச்சுப் பொருட்கள் க்ளிம்ஃபாடிக் சிஸ்டம் மூலம் வெளியேற்றப் படுகிறது.
க்ளிம்ஃபாடிக் சிஸ்டம் (Glymphtic system) என்றால் என்ன?
உறக்கத்தின் போது மட்டுமே செயல்படும் க்ளிம்ஃபாடிக் சிஸ்டம் (Glymphtic system) என்னும் நச்சுப்பொருட்களை மூளையில் இருந்து வெளியேற்றும் முறை புதிதாக மனித மூளையில் கண்டுப் பிடிக்கப்பட்டுள்ளது.
நான் மருத்துவம் சேர்ந்த பொழுது நமது உடலில் உள்ள நிணநீர் சுரப்பிகள் மற்றும் நாளங்கள் நச்சுப் பொருட்களை உடலில் உள்ள அனைத்து பகுதிகளில் இருந்தும் உரிந்து எடுத்து நமது உடலைச் சுத்தப்படுத்துகின்றன. இந்த நிணநீர் சுரப்பியானது மூளையில் இல்லை என்று படித்தேன்.
ஆனால் கடந்த 2012 ஆம் ஆண்டு மூளையில் சற்றே வேறுபட்ட வடிவில் நிணநீர் நாளங்கள் உள்ளது என்றும் அதை க்ளிம்ஃபாடிக் சிஸ்டம் (Glymphtic system) என பெயரிடப்பட்டுள்ளதாகவும், இந்த முறை (System) இரவில் நாம் தூங்கும் போது மட்டுமே செயல்படும் என்றும் மைக்கென் (Miken) என்ற ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்துள்ளார். இது செய்யும் வேலைகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. நமது மூளை பகல் முழுவதும் வேலை செய்யும் போது பல்வேறு புரதப்பொருட்களையும் மற்றும் மூளையில் சேரும் தேவையற்ற கொழுப்பையும் இது அகற்றுகிறது.
இதில் முக்கியமானது பீட்டா அமைலாய்டு (β Amyloid) என்ற பெப்டைடு, இது அதிக அளவில் மூளையில் படிவதால் வரும் நோயே அல்ஸைமர்ஸ் (Alzheimer’s) என்ற ஞாபக மறதி வியாதி. உடலின் அசைவுகளை குறைத்து மனிதனை சிலையைப் போல் மாற்றும் பார்கின்ஸன்’ஸ் (Parkinson’s Disease) என்ற வியாதியும் சில பெப்டைடுகள் மூளையில் படிவதால் வருவது தான். இப்படி பல நச்சுப் பொருட்களை மூளையில் இருந்து அகற்றி கழுத்தில் உள்ள நிணநீர் சுரப்பியில் கொண்டு சேர்க்கிறது.
எவ்வளவு நேரம் உறங்க வேண்டும்?
இப்படி பல வித நன்மைகளைத் தரும் உறக்கம் அளவோடும் இருக்க வேண்டும. சராசரியாக தூக்கத்தின் அளவு வயதுக்கேற்றார் போல் மாறுபடுகிறது. பிறந்த குழந்தை 20 மணிநேரமும், பள்ளி செல்லும் குழந்தைகள் 9 மணிநேரமும், 20 வயதிற்க்கு மேற்பட்டவர்கள் 7 முதல் 8 மணிநேரமும், வயதானவர்கள் 5 முதல் 6 மணிநேரமும் உறங்கினால் போதுமானது. குறைவான உறக்கம் எவ்வாறு தீமையை ஏற்படுத்துகிறதோ அதேபோல் அதிக உறக்கமும் தீமையையே ஏற்படுத்தும். பகல் தூக்கம் மற்றும் இரவு தூக்கம் இரண்டும் சமமானது அல்ல, இரவு தூக்கமே நமது மூளைக்குச் சிறந்தது.
தூக்கமின்மையால் ஏற்படும் ஆபத்துகள் என்ன?
முறையாக தூக்கம் இல்லையென்றால் பல்வேறு விதமான நோய்கள் வருகின்றன அவற்றில் முக்கியமானது பக்கவாத நோய், மாரடைப்பு நோய், உடல் பருமன் நோய், மன அழுத்த நோய், மனப்பதற்ற நோய், உடல் வலி மற்றும் சாலை விபத்துக்கள் அதனால் ஏற்படும் எலும்பு முறிவு, மூளையில் ஏற்படும் இரத்தக் கசிவு மற்றும் உயிர் இழப்பு ஆகியவைகளாகும். இப்படி உடலுக்கு ஏற்படும் நோய்களை தவிர வேலையிலும் வேலைசெய்வதிலும் திறன் குறையும், எந்ந வேலையையும் சரிவர செய்ய இயலாது. திட்டமிடுதல் மற்றும் முடிவெடுத்தலின் திறன் ஆகியவையும் குறைகின்றன. இதனால் ஒரு நபரின் உடல் பலம் குறைவதோடு மட்டுமல்லாமல் உள்ளத்தின் அமைதியும் மற்றும் தன்னம்பிக்கையும் குறைகிறது.
பெண்கள் இரவில் 11 மணி முதல் காலை 4 மணி வரை கண்டிப்பாக உறங்க வேண்டும். அப்படி உறங்க வில்லையென்றால் நாளமில்லா சுரப்பிகளின் தலைவனான பிட்யூட்டரி சுரப்பி கருமுட்டைப் பைக்கும் கருப்பைக்கும் மற்றும் தைராய்டு சுரப்பிக்கும் சரியான சமிஞைகளை அனுப்புவது இல்லை. அதனால் மாத விடாய் சுழற்சியில் குறைபாடு ஏற்படுகிறது மற்றும் மலட்டுத்தன்மையும் ஏற்படுவதற்காண வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
இரவு உறக்கம் நமது நோய் எதிர்ப்பு திறனை அதிகப்படுத்தும். சுரியான உறக்கம் இல்லாதவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பல்வேறு கிருமிகளின் தாக்கங்கள் அதிகரித்து சதாரண சரி முதல் மூளைக்காய்ச்சல் வரை பல்வேறு தொற்று நோய்களால் அவதியுறும் அபாயங்கள் ஏற்படலாம்.
சிலர் இரவில் சரியாக உறங்காமல் பகலில் அதிக நேரம் உறங்குகிறார்கள். பகல் உறக்கமானது இரவு உறக்கத்திற்கு சமமானது அல்ல. பகலில் அதிக நேரம் உறங்குவதால் உடல் பருமன் அதிகரிக்கும் இதனாலும் பல்வேறு வியாதிகள் வருகின்றன.
நோய் வந்தவுடன் மருத்துவமணைக்கு நடையாய் நடப்பதை தவிர்க்க அளவோடு உறங்கி இயற்கையோடு இயைந்து இயல்பான வாழ்க்கை வாழ்ந்தோம் என்றால் 100 வயது வரை ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
எனவே வாசகர்களே பணம், பதவி, புகழ் பின் ஓடாமல் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளித்து, சூரியன் மறைந்ததும் நமது வேலைகளை படிப்படியாக குறைத்துக் கொண்டு 10 மணிக்குள் உறங்கச் சென்றோம் என்றால் நமது மூளை நம்மை வியாதி வராமல் பாதுகாத்துக் கொள்ளும். இரவில் விழித்தால் நோயில் படுப்போம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சிறப்பு நேர்காணல்:
அதிரை நியூஸ்க்காக ஏ.சாகுல்ஹமீது
Saturday, January 7, 2017
'கடல் தாழைகளை பாதுகாக்க வேண்டும்': காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் மாணவர் வி. பாலாஜி பேட்டி !
'கடல் தாழைகளைப் பாதுகாக்க வேண்டும்' என கடல்வாழ் உயிரி பாதுகாப்பு அமைப்பின் நிறுவன இயக்குநரும், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் மாணவருமான வி. பாலாஜி தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில்;
கடல் தாழைகள் என்று அழைக்கப்படும் கடல் தாவரங்கள் பாக் ஜலசந்தி கடல் பகுதியில் வளர்கின்றன. பதினான்கு வகை கடல் தாழைகள் இதுவரை இங்கு கண்டறியப்பட்டுள்ளன. இவை கடற்கரையிலிருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவு வரையில் வளைந்துள்ளன. தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 12,400 ஹெக்டர் அளவுக்கு கடல் தாழைகள் வளர்ந்துள்ளன. கடலுக்கு அடியில் “நெல் வயல்” போன்ற தோற்றத்தில் மிகப்பெரிய அளவில் கடல் தாழைகள் வளர்ந்துள்ளன.
இதை போன்ற பரந்த கடல் தாழைகள் நம் கடல் பகுதியில் மட்டுமே உள்ளன. தமிழத்தின் சென்னை முதல் கோடியக்கரை வரையிலும், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி கடல் பகுதிகளில் அலைகள் அதிகமாக அடித்து கொண்டே இருப்பதாலும், ஆழமான கடல் பகுதிகளாக இருப்பதாலும் அங்கு கடல் தாழைகள் வளர்வதில்லை.
பலவிதமான மீன்கள், இறால்கள், கணவாய் மீன்கள், நண்டுகள், கடல் குதிரைகள், கடல் பசுக்கள், கடல் அட்டைகள் போன்றவை கடல் தாழைகள் உள்ள இடங்களில் உற்பத்தியாகி வாழ்கின்றன.
கடல் பசுக்கள் உலக அளவில் அழியும் நிலையில் உள்ள விலங்கு பட்டியலில் வைக்கபட்டுள்ளன. கடல் பசுக்களின் முக்கிய உணவாக கடல் தாழைகள் உள்ளன.
கடலில் அலைகளின் வேகத்தையும், நீரோட்டத்தின் வேகத்தையும் கடல் தாழிகள் குறைக்கும். கடல் தாழைகளின் வேர்கள் கடல் மண்ணின் பிடிமானத்தை அதிகரிப்பதால் மண் அரிப்பு தடுக்கபட்டு கடல் கரைகள் பாதுகாக்கபடுகின்றன.
தஞ்சை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் போன்ற மாவட்டங்களை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மீனவர்களுக்கு தேவையான மீன்களை கடல் தாழைகள் உற்பத்தி செய்கின்றன.
எனவே கடல் தாழைகளை பாதுகாப்பதன் மூலம் நம் பகுதிக்கு தேவையான மீன்களை நம் கடல் பகுதியிலே பிடித்து கொள்ளலாம். கடல் பசுக்களின் உணவு ஆதாரங்களை பாதுகாக்கலாம். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த கடல் தழைகளை பாதுகாப்பது மிகவும் அவசியமாகும்' என்றார்.

Friday, August 12, 2016
ஜித்தா அய்டா சேவை அமைப்பின் தலைவர் ராஃபியா - நேர்காணல் ! [ வீடியோ ]
அதிராம்பட்டினம், ஆகஸ்ட் 12
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் ராஃபியா. சவூதி ஜித்தா நகரில் கடந்த 24 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார். 'ராஃபியா' என அனைவராலும் அழைக்கப்படும் இவர் பன்மொழி பேசும் திறன்கொண்டவர். நகைச்சுவையுடன் தன் கருத்தை அடுக்கு மொழியில் அழகாக எடுத்துரைப்பது இவரின் தனிச்சிறப்பு.
பல்வேறு சேவை அமைப்புகளில் நிர்வாகியாக தொடர்ந்து பல்வேறு சமுக சேவை ஆற்றிவருகிறார். ஜித்தா தமிழ் சங்கம் நிறுவனர். சவூதி இந்திய தூதரகத்துடன் நெருங்கிய தொடர்பு, அதிரை பைத்துல்மாலின் ஓவர்சீஸ் பிரதிநிதி, அய்டா சேவை அமைப்பின் தலைவர், மெப்கோ பொது நிதி கல்வி நிறுவனத்தின் துணைத்தலைவர் உள்ளிட்ட பொறுப்பில் உள்ளார். சமுதாய அமைப்புகளின் தலைவர்களோடு நல்ல தொடர்பில் உள்ளார்.
சரி விசயத்திற்கு வருவோம்...
அதிரை சுற்றுவட்டார பகுதியின் பல்வேறு துறைகளை சார்ந்த சாதனையாளர்கள், சேவையாளர்கள், கல்வியாளர்கள் இனங்காணப்பட்டு அவர்களின் சேவைகளை ஊக்கப்படுத்தும் விதமாக அதிரை நியூஸ் இணையதளம் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் சவூதி ஜித்தா அய்டா சேவை அமைப்பின் தலைவர் ராஃபியா அவர்களை நேரில் சந்தித்து, அய்டா ஆற்றி வரும் சமுதாயச் சேவைகள், மந்தமாக நடந்து வரும் திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை திட்டப் பணியை துரிதப்படுத்த அய்டாவின் பங்களிப்பு, இந்திய தூதரகம் மூலம் சவூதி வாழ் இந்தியர்களுக்கு ஆற்றி வரும் சேவைகள் உள்ளிட்ட கேள்விகளை முன்வைத்து அதிரை நியூஸ் சார்பில் அணுகினோம்.
கும்பகோணத்தில் நடைபெற்ற பொதுநிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள புறப்பட தயாராக இருந்தவர் நமக்காக தனது நேரத்தை ஒதுக்கி ஆர்வத்துடன் தந்த பதில் இதோ காணொளி வடிவில்....

Saturday, August 22, 2015
இன்டேன் கேஸ் பாலு அவர்களோடு அதிரை சேர்மன் நடத்திய நேர்காணல் ! [ காணொளி இணைப்பு ]
அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பட்டுக்கோட்டை சாலையில் இயங்கும் பாலு இன்டேன் காஸ் நிறுவனம் மூலம் காஸ் இணைப்பை பெற்று வீட்டு உபயோகத்திற்கு தேவைப்படும் காஸ் சிலிண்டர்களை முன்பதிவு செய்து பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் அதிரையின் தன்னார்வலர்கள் இணைந்து, பொதுநலன் சார்ந்த முக்கிய கேள்விகளை முன்வைத்து, இன்டேன் கேஸ் விநியோகஸ்தர் திரு. பாலசுப்பிரமணியன் அவர்களை, அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம், கவுன்சிலர்கள் முஹம்மது இப்ராஹீம், அபூதாகிர், சமூக ஆர்வலர் கே.எம்.ஏ ஜமால் முஹம்மது, ரெட் கிராஸ் அதிரை சேர்மன் 'மரைக்கா' இத்ரீஸ், தமிழ்மாநில காங்கிரஸ் மாவட்ட செயலாளர் அதிரை மைதீன் மற்றும் அதிரை நியூஸ் ஆசிரியர் சேக்கனா நிஜாம் ஆகியோர் அருமையான மாலைப்பொழுதில் அவரது அலுவலகத்தில் நேரடியாக சந்தித்து கலந்துரையாடினார்கள்.
கலந்துரையாடலில்...
1. சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை நேரடியாகப்பெறும் திட்டம் தமிழகத்தில் கடந்த ஜனவரி 1-ம் தேதியில் இருந்து நடைமுறையில் இருந்து வருகிறது. இதுவரையில் நேரடி மானியம் பெரும் வாய்ப்பை தவறவிட்ட நமதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி வாடிக்கையாளர்களின் விவரங்கள் ? மானியம் பெரும் வாய்ப்பை வாடிக்கையாளர்கள் மீண்டும் பெற தங்களின் நடவடிக்கைகள் ?
2. புதிதாக காஸ் இணைப்பு பெற ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் அவசியமா ?
3. காஸ் பதிவு செய்த சில நாட்களில் காஸ் நிறுவன ஊழியர்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கும் சிலிண்டருக்கு பில் தொகையை வீட கூடுதல் தொகை வசூலிப்பதாக பொதுமக்கள் மத்தியில் எழும் புகார் உள்ளிட்டவை குறித்து...
அதிரை சேர்மன் எழுப்பிய கேள்விகளுக்கு, திரு.பாலு அவர்கள் நமக்களித்த பதில் இதோ....

Thursday, February 26, 2015
திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை திட்டத்தின் தற்போதைய நிலை என்ன ? பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் அப்துல் ரஹ்மான் அவர்களுடன் சந்திப்பு ! [ காணொளி ]
முத்துப்பேட்டை - அதிரை - பட்டுக்கோட்டை - பேராவூரணி உள்ளிட்ட பகுதியை இணைக்கும் திருவாரூர் - காரைக்குடி ரயில் சேவை நிறுத்தப்பட்டு 9 வருடமாகிறது. இதற்கு பிறகு தமிழகத்தில் புதிய திட்டங்கள் போடப்பட்டு ரயில் தொடர்பு நடந்து வருகிறது.
நூறு ஆண்டுகளுக்கு பழமையான நமதூர் ரயில் சேவையை 9 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டதால் நமது பகுதி மக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி தந்துள்ளது.
இந்நிலையில் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு புதிய ரயில்கள் விடப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
பாஜ அரசு 2014ம் ஆண்டு மத்தியில் பதவியேற்றுதும் முதல் ரயில்வே பட்ஜெட்டை சதானந்த கவுடா தாக்கல் செய்தார். அப்போது தமிழகத்துக்கு 2 ரயில்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டன.
ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அனைத்து ரயில்களும் புதிய பட்ஜெட் தாக்கல் செய்வதற்குள் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அறிவித்திருந்தார்.
அதன்படி குறுகிய நாட்களில் பல ரயில்கள் இயக்கப்பட்டன. ஆனால் சென்னை - பெங்களூர் ரயில் இன்னும் இயக்கப்படவில்லை. இதுவரை ரயில்வே பட்ஜெட்டில் அறிவித்தபடி கூட புதிய ரயில்கள் விடப்படுவதில்லை.
அமைச்சர் சுரேஷ் பிரபு, தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அதில், தமிழகத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என்று தமிழக மக்கள் ஆவலுடன் உள்ளனர்.
ரயில் போக்குவரத்தையே பெரிதும் நம்பியுள்ள தமிழக மக்கள் பல்வேறு புதிய திட்டங்களையும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு உரிய நிதியும் ஒதுக்கீடு செய்யப்படும் என்று எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
முத்துப்பேட்டைக்கு வருகை வந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் அவர்களை, சமூக ஆர்வலர் 'சுனா இனா' என்கிற சுல்தான் இப்ராஹீம் அவர்கள் சந்தித்து நமதூரை இணைக்கும் திருவாரூர்- காரைக்குடி அகல ரயில் பாதை திட்டம் குறித்த விபரங்களை கேட்டார்.

நன்றி : முத்துப்பேட்டை நியூஸ்
Monday, September 22, 2014
அதிரை பேரூராட்சியின் வார்டு உறுப்பினர்களிடம் நறுக்குன்னு கேட்ட நான்கு கேள்விகள் ! [ காணொளி ]
அதிரை பேரூராட்சியின் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று பொறுப்பில் இருந்து வரும் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் இன்னும் சில மாதங்களில் நான்கு ஆண்டுகள் எட்டப்பட இருக்கிறது. இந்நிலையில் இந்த நான்கு ஆண்டுகளில் வார்டு பகுதி மக்களுக்காக இவர்கள் செய்த பணிகள் என்ன ? செய்ய வேண்டிய மீதமுள்ள பணிகள் என்னென்ன ? வார்டு பகுதி மக்கள் மற்றும் அதிரை பேரூராட்சி நிர்வாகம் ஆகியோரின் ஒத்துழைப்பு எவ்வாறு உள்ளது ? மீண்டும் போட்டியிட எண்ணமுண்டா ? உள்ளிட்ட கேள்விகளை முன்வைத்து அதிரை பேரூராட்சியின் தலைவர் - துணை தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பதிவு செய்ய எண்ணினோம்.
இவற்றை உடனடியாக செயல்படுத்தும் விதமாக சமீப நாட்களாக அதிரை நியூஸுக்காக தேனீ போல் சுறுசுறுப்பாக பல்வேறு பகுதிகளுக்கு சென்று செய்திகளை சேகரித்து நமக்கு வழங்கிகொண்டிருக்கும் 'இளம் செய்தியாளர்' நூவன்னா என்கிற நூர் முஹம்மது மற்றும் நமது ஆஸ்தான ஒளிப்பதிவாளர் அசார் ஆகியோரிடம் கூறினோம்.
உடனே களத்தில் இறங்கிய இருவரும் முதல் கட்டமாக அதிரை பேரூராட்சியின் வார்டு உறுப்பினர்கள் முஹம்மது இப்ராஹீம் ( 21 வது வார்டு ), சபுரன் ஜமீலா ( 10 வது வார்டு ), காளிதாஸ் ( 7 வது வார்டு ), உதய குமார் ( 2 வது வார்டு ), முஹம்மது செரிஃப் ( 14 வது வார்டு ), சித்ரா ( 20 வது வார்டு ) ஆகியோரை சந்தித்து நேர்காணலை நடத்தினர்.
நறுக்குன்னு கேட்ட நான்கு கேள்விகளுக்கு இதோ அவர்களின் பதில்...
குறிப்பு : மீதமுள்ளவர்களின் நேர்காணல் விரைவில் பதிவில்...

Thursday, April 3, 2014
நகர திமுகவில் புறக்கணிப்பா !? பேரூராட்சி தலைவரோடு நேர்காணல் ! [ காணொளி ]
தனது கட்சி வேட்பாளர் டிஆர் பாலுவுக்காக வாக்கு சேகரிக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுவரும் அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லமை அவரது இல்லத்தில் சந்தித்து நகர கிளை சார்பில் மேற்கொள்ளப்படும் நிகழ்வுகளில் தென்படாதது குறித்தும், வேட்பாளருக்காக மேற்கொள்ள இருக்கும் பிராசார வியூகம் என்ன ? என்பது குறித்து அவரது கருத்தை கேட்டோம்.
Monday, March 24, 2014
காங்கிரஸ் வேட்பாளர் கிருஷ்ணசாமி வாண்டையார், எம்.எல்.ஏ ரெங்கராஜன் ஆகியரோடு அதிரை நியூஸின் நேர்காணல் [ காணொளி ]
தேர்தல்களம் 2014 :
தஞ்சை பாராளுமன்ற தொகுதியின் தேர்தல் பிரச்சார பணிகள் மும்முரமாக நடைபெற்ற வருகின்றன. இதற்காக ஒவ்வொரு வேட்பாளர்களும் தங்களுக்கு ஆதரவளிக்க வேண்டி அதிரைக்கு வருகை தந்து முக்கியஸ்தர்களை சந்தித்து வருகின்றனர். கடந்த [ 12-03-2014 ] அன்று அதிமுக கட்சியின் தஞ்சை தொகுதி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள திரு கு. பரசுராமன் வருகை தந்து சமுதாய அமைப்பினரை சந்தித்து ஆதரவு கோரினார். அதை தொடர்ந்து கடந்த [ 14-03-2014 ] அன்று திமுக தஞ்சை தொகுதியின் வேட்பாளர் திரு T.R. பாலு வருகை தந்து திமுகவினர், கூட்டணி கட்சியினர், மஹல்லா நிர்வாகிகள் ஆகியோரை சந்தித்து ஆதரவு கோரினார்.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் தஞ்சை பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளராக நிறுத்துப்பட்டுள்ள திரு. கிருஷ்ணசாமி வாண்டையார் மற்றும் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. N.R. ரெங்கராஜன் MLA ஆகிய இருவரும் நேற்று இரவு 7 மணியளவில் அதிரை MMS குடும்பத்தினர், நகர காங்கிரஸ் நிர்வாகிகள் ஆகியோரை சந்திப்பதற்காக அதிரைக்கு வருகை தந்த இருவரிடமும் 'அதிரை நியூஸ்' சார்பாக சந்தித்து கீழ்க்கண்ட கேள்விகளை முன்வைத்தோம்...
கேள்விகள் :
தஞ்சை தொகுதியில் முதல் முறையாக காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கிறீர்கள், இந்த தொகுதி மக்களுக்காக என்னென்ன வாக்குறுதிகளை தந்து பிரச்சாரத்தை மேற்கொள்ள இருக்கிறீர்கள் ?
அதிரை நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகிய திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை திட்ட பணிகள் முழுதும் விரைவாக நடைபெற உங்களின் முயற்சி எவ்வாறு இருக்கும் ?
வேட்பாளர் மற்றும் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. N.R. ரெங்கராஜன் MLA ஆகியோர் கூட்டாக நமக்கு அளித்த பதில் இதோ...

Friday, March 14, 2014
திமுக வேட்பாளர் T.R. பாலுவோடு அதிரை நியூஸின் நேர்காணல் [ காணொளி ]
தஞ்சை பாராளுமன்ற தொகுதி மறு சீரமைப்புக்கு பிறகு கணிசமான அளவில் சிறுபான்மை இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள்தான் வேட்பாளர்களின் வெற்றி / தோல்விகளை நிர்ணயிக்ககூடிய மாபெரும் சக்திகளாக திகழ்வதால் கட்சிகள் பல சிறுபான்மை இனமக்கள் கணிசமாக வாழக்கூடிய பகுதியாக கருதப்படுகிற அதிரையை நோக்கி வர ஆரம்பித்துள்ளனர். கடந்த [ 12-03-2014 ] அன்று அதிமுக கட்சியின் தஞ்சை தொகுதி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள திரு கு. பரசுராமன் வருகை தந்து சமுதாய அமைப்பினரை சந்தித்து ஆதரவு கோரினார்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கட்சி தஞ்சை தொகுதியின் வேட்பாளராக திரு T.R. பாலு அவர்களை களமிறக்கி உள்ளது. திமுக நகர நிர்வாகிகள், அதிரை பேரூராட்சி தலைவர், கூட்டணி கட்சியினர், மஹல்லா நிர்வாகிகள் ஆகியோரை சந்தித்து ஆதரவு கோருவதற்காக இன்று மாலை அதிரைக்கு வருகை தந்த தஞ்சை தொகுதியின் வேட்பாளர் திரு. T.R. பாலு அவர்களை 'அதிரை நியூஸ்' சார்பாக சந்தித்து கீழ்க்கண்ட கேள்விகளை முன்வைத்தோம்...
கேள்விகள் :
தஞ்சை தொகுதியில் முதல் முறையாக திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கிறீர்கள், இந்த தொகுதி மக்களுக்காக என்னென்ன வாக்குறுதிகளை தந்து பிராச்சாரத்தை மேற்கொள்ள இருக்கிறீர்கள் ?
அதிரை நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகிய திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை திட்ட பணிகள் தொடர்ந்து தாமதமாக காரணம் என்ன என்பது குறித்து ரயில்வே நிலைக்குழுவில் பொறுப்பில் இருக்கும் உங்களின் பதில் என்ன ?
வேட்பாளரின் பதில் இதோ...
Wednesday, March 12, 2014
அதிமுக வேட்பாளர் பரசுராமன் அவர்களோடு அதிரை நியூஸின் நேர்காணல் ! [ காணொளி ]
தேர்தல் களம் - 2014 :
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தஞ்சை தொகுதியில் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் களமிறங்குவதை அடுத்து வேட்பாளர்கள் மத்தியில் இம்முறை கடுமையான போட்டி ஏற்படும் என பரவலான கருத்து நிலவி வருகிறது.
கட்சிகள் ஒவ்வொன்றும் தங்களின் வேட்பாளர்களுக்காக ஆரம்ப கட்ட பிராச்சார பணிகளை அமைதியாக மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக ஒவ்வொரு பகுதிகளுக்கு சென்று முக்கிய சமுதாய அமைப்புகளையும், ஊர் முக்கியஸ்தர்களையும் சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர்.
தஞ்சை பாராளுமன்ற தொகுதி மறு சீரமைப்புக்கு பிறகு கணிசமான அளவில் சிறுபான்மை இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள்தான் வேட்பாளர்களின் வெற்றி / தோல்விகளை நிர்ணயிக்ககூடிய மாபெரும் சக்திகளாக திகழ்வதால் கட்சிகள் பல சிறுபான்மை இனமக்கள் கணிசமாக வாழக்கூடிய பகுதியாக கருதப்படுகிற அதிரையை நோக்கி வர ஆரம்பித்துள்ளனர்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கட்சி தஞ்சை தொகுதியின் அதிமுக வேட்பாளராக திரு கு. பரசுராமன் அவர்களை களமிறக்கி உள்ளது. இன்று மாலை அதிரைக்கு வருகை தந்த தஞ்சை தொகுதியின் வேட்பாளர் திரு. பரசுராமன் அவர்களை 'அதிரை நியூஸ்' சார்பாக சந்தித்து கீழ்க்கண்ட கேள்விகளை முன்வைத்தோம்...
கேள்விகள் :
1. தஞ்சை தொகுதியின் வேட்பாளராகிய உங்களை பற்றிய சிறு அறிமுகம் ?
2. தொகுதி மக்களுக்காக என்னென்ன வாக்குறுதிகளை வழங்கி பிரச்சாரத்தை மேற்கொள்ள இருக்கிறீர்கள் ?
3. அதிரை நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கிடப்பில் போடப்பட்ட திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை திட்டம் விரைவில் நிறைவேற தங்களின் பங்கு எவ்வாறு இருக்கும் ?
4. மத்தியில், மாநிலத்தில் இஸ்லாமியர்களின் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அதிகப்படுத்தி தருவது தொடர்பான கோரிக்கை நிறைவேற நீங்கள் எடுக்கும் முயற்சி என்ன ?

Monday, March 3, 2014
குமுறும் பேரூராட்சி துப்புரவு தொழிலாளர்கள் ! நேரடி களஆய்வு !! [ காணொளி ]
அதிரையில் உள்ள 1 முதல் 21 வார்டுகளில் குமியும் குப்பை கூளங்களையும், கழிவுகளை அப்புறப்படுத்துவதிலும் மிகவும் உதவியாக திகழ்பவர்கள் துப்புரவு தொழிலாளர்களே. இவர்கள் அதிரையின் சுகாதார முன்னேற்றத்திற்கு ஆணிவேராக இருந்து வருகிறார்கள் என்றால் மிகையல்ல.
அதிரை பேரூராட்சியின் நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக ஊழியர்களாக மொத்தம் 34 பேர்கள் பணியாற்றி வருகின்றார்கள்.
வளர்ச்சியடைந்து காணப்படும் அதிரை பகுதிக்கு இந்த எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்றாலும், நகர் முழுதும் குமியும் குப்பை கூளங்களை தினமும் அப்புறப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்து வருகின்றனர் என்பதையும் மறுக்க இயலவில்லை. தினமும் அதிகாலையில் பணியை ஆரம்பிக்கும் இவர்கள் இரு குழுவினர்களாக பிரிந்து இரு வேறு பகுதிகளில் வலம்வருகின்றனர்.
இவ்வாறு அதிரையின் சுகாதார முன்னேற்றத்திற்காக பாடுபடும் இவர்களுக்கு பணியின் போது ஏற்படும் நெருக்கடிகள் என்ன ?, பொதுமக்களின் போதிய ஒத்துழைப்பு உள்ளதா ?, குப்பை கூளங்களை அல்லும்போது ஏற்படும் சங்கடங்கள் என்ன ?, பணிக்கேற்ற போதிய சம்பளம் வழங்கப்படுகிறதா ? மருத்துவ உதவி ஏதேனும் உண்டா ?, பணியின் போது பாதுகாப்பு சாதனங்கள் ஏதேனும் அணிகின்றீர்களா ? என்பது குறித்து அதிரை நியூஸ் சார்பில் நேரடியாக இரு வேறு களத்திற்கு சென்று துப்புரவு தொழிலாளர்களை சந்தித்து நேர்காணலை நடத்தினோம்...
இதோ அவர்களின் குமுறல்....

பேரூராட்சி துப்புரவு தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, பணியின் போது அணியும் சாதனங்கள் [ கைஉறை, வாய், மூக்கு ஆகியவற்றை துணியால் மூடுதல், கால் ஷூஸ் அணிதல் ] மற்றும் மருத்துவ உதவி ஆகியன குறித்து அதிரை பேரூராட்சியின் செயல் அலுவலரிடம் விளக்கம் கேட்டு தளத்தில் பதியப்படும்.
Sunday, February 9, 2014
அதிரை நியூஸிடம் மனம்திறந்த அதிரை பேரூராட்சித் தலைவர் [ காணொளி ]
அதிரை பேரூராட்சியின் செயல்பாடுகள் குறித்த தகவல்கள் பெரும்பாலானோர் வெளிப்படையாக அறிந்திராத வேளையில் இவரின் வருகைக்கு பிறகு அனைத்து பணிகளும் ஒளிவு மறைவின்றி நடைபெறுவதையும், நகர வளர்ச்சி பணிகளில் பெரும்பாலான நேரங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி அதில் ஆர்வமாக செயல்படுவதையும் இவருடைய ஆதரவாளர்கள் பெருமையுடன் கூறி வந்தது உண்மைதான் என நிருபிக்கும் விதமாக நீண்ட இடைவெளிக்கு பிறகு அவருடனான நமது நேர்காணலில் பெறப்பட்ட பதிலில் வெளிப்பட்டது.
படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் பலர் அதிரையில் வாழ்ந்து வரும் நிலையில் அவர்களுக்கு சுய தொழில் தொடங்க தேவையான இடங்கள், பேரூராட்சி மூலம் எடுத்து செய்யக்கூடிய வேலைகள் ஆகியன தொடர்பாக பேரூராட்சியின் சார்பாக ஆண்டுதோறும் விடப்படும் டெண்டர் முறை குறித்தும், பேரூராட்சியின் பேருந்து நிலைய கடைகளின் பெரும்பாலான கட்டுமானப்பணிகள் நிறைவுற்ற நிலையில் அதன் டெண்டர் நிலவரம் குறித்தும் அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்களை சந்தித்து நமது கேள்விகளை முன்வைத்தோம்.
இதோ அவருடைய பதில்...

Wednesday, December 25, 2013
அதிமுக கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் அதிரை அப்துல் அஜீஸ் அவர்களோடு ஒரு நேர்காணல் !
கடந்த 2011 ம் ஆண்டு நடந்த அதிரை பேரூர் மன்ற உள்ளாட்சித் தேர்தலில் கடும் போட்டியில் குறைந்த எண்ணிக்கையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்ட அதிமுக கட்சியின் பொதுக்குழு உறுப்பினரும், சமூக ஆர்வலருமாகிய அதிரை அப்துல் அஜீஸ் அவர்களுக்கு அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மையினர் நல பிரிவின் செயலாளராக புதிய பொறுப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பு வழங்கப்பட்டதை செய்தியாக அதிரை நியூஸ் வெளியிட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையிலிருந்து ஊர் வந்திருப்பதை அறிந்துகொண்ட நாம் காலை பொழுதில் அவரது அலுவலகத்தில் சந்தித்து நமது வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக்கொண்டு கீழ்கண்ட நமது கேள்விகளை அவரிடம் முன்வைத்தோம்.
1. அதிமுக கட்சி உங்களுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவின் செயலாளராக பொறுப்பு வழங்கியது குறித்து உங்கள் கருத்து என்ன ?
2. கட்சி வழங்கியுள்ள இந்த பொறுப்பின் மூலம் அதிரை நலன் சார்ந்த என்னென்ன பணிகளை மேற்கொள்ள இருக்கிறீர்கள் ?
3. கல்வி பயிலும் சிறுபான்மை மாணவ மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற தங்களின் பங்கீடு எவ்வகையில் இருக்கும் ?
4. இஸ்லாமியர்கள் விடுமுறை தினமாக கடைபிடித்து வரும் வெள்ளிக்கிழமை அன்று சில வேளைகளில் அரசு பொதுத்தேர்வு நடத்திவருவது தொடர்பாக உங்களின் நடவடிக்கை எவ்வாறு இருக்கும் ?
இதோ அவருடைய பதில்கள்...

Sunday, December 22, 2013
அதிரை பேரூராட்சி துணைத்தலைவர் பிச்சை அவர்களோடு ஒரு நேர்காணல் !
அதிமுகவினரும் தங்களின் முயற்சியாக அதிரை நகர மக்கள் பயனடையும் விதத்தில் குடிநீர் ஆதாரத்தை பெருக்கும் விதமாக வெண்டாக்கோட்டை ஏரியிலிருந்து மளவேணிகாடு வழியாக நமதூருக்கு கொண்டு வர முயன்று வருவதை அதிரை வலைதளங்களில் [ அதிரை போஸ்ட், அதிரை நியூஸ் ] செய்தியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டன.
இந்த செய்தியை வாசித்த வாசகர்களுக்கு அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் தெளிவற்று காணப்பட்டதால் சிலருக்கு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் உண்மை நிலவரம் குறித்து அறிந்துகொள்ள அதிரை நியூஸ் வாசகர்களும் ஆர்வமாக இருந்து வந்தனர். வாசகர்களின் ஆர்வத்தை பூர்த்தி செய்வது நமது கடமை எனக் கருதி அதிமுக நகர செயலாளரும், அதிரை பேரூராட்சி துணைத்தலைவருமாகிய திரு. பிச்சை அவர்களை அதிரை செய்திகளை வழங்கி வரும் செய்தியாளர்களோடு அவர்களின் வீட்டிற்கு சென்று விளக்கத்தை பதிவு செய்துகொண்டோம்.
செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளில் குறிப்பிடதக்க சில...
அதிரையின் வறண்ட குளங்களுக்கு நீர் ஆதாரத்தை கொண்டுவர அதிமுக சார்பாக முயற்சித்து வருவதாக செய்தி வெளியாயின. நீங்கள் செய்து வரும் இந்த பணிகள் குறித்து உங்களின் விளக்கத்தை அதிரை நகர மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்...
அதிமுகவினர் அதிரை நகர வளர்ச்சியின் திட்டபணிகளுக்கு முட்டுக்கட்டையாக இருந்து செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டிற்கு ?
பேட்டியின் போது அதிமுக நகர துணைச்செயலாளர் தமீம் அன்சாரி, பேரூராட்சியின் 3 வது வார்டு உறுப்பினர் சிவக்குமார், அதிமுக கழக முன்னோடி ஹாஜா பகுருதீன் ஆகியோர் உடனிருந்தனர்.
இனி அதிரை பேரூராட்சி துணைத்தலைவர் திரு. பிச்சை அவர்களின் நேர்காணலைக் காண்போம்...
Tuesday, October 8, 2013
அதிரை ஜாவியா நிர்வாகக் கமிட்டி செயலர் M.B. அபூபக்கர் அவர்களோடு ஒரு நேர்காணல் [ காணொளி ]
அதிரை அஜ்ஜாவியத்துல் ஷாதுலியா ட்ரஸ்ட் சார்பாக கடந்து பல ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்படுத்திவரும் புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் பெரும்பாலானோரின் வரவேற்பை பெற்று வருவதை நாம் அனைவரும் அறிந்ததே.
அதிரையில் புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் கடந்த 06-10-2013 அன்று முதல் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்ற வருகின்றன.
1. ஜாவியா குறித்த அபூர்வ தகவல்கள் ?
2. ஜாவியாவின் தற்போதைய செயல்பாடுகள் ?
3. ஏழை எளியோர்களோடு நமதூர் பொதுமக்களும் பயனுறும் வகையில் ஜாவியாவில் கட்டப்பட்டு வரும் திருமண மண்டப பணி குறித்து...
நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் அதன் நிர்வாக செயலாளராக தொடர்ந்து தேனீ போல சுறுசுறுப்பாக சேவையாற்றி வரும் அன்புச்சகோதரர் M.B. அபூபக்கர் அவர்கள்.

குறிப்பு : ஏழை எளியோர்களோடு நமதூர் பொதுமக்களும் பயனுறும் வகையில் ஜாவியாவில் கட்டப்பட்டு வரும் திருமண மண்டபபணிகள் தொடர்ந்து நடைபெற அதற்கு மேற்கொண்டு தேவைப்படும் நிதிஉதவியை மனமுவந்து செலுத்து முற்படும் அன்பர்கள் கீழ்கண்ட அதன் நிர்வாகிகளையும் அதன் வங்கி கணக்கின் வழியாகவும் தொடர்புகொண்டு உதவலாம்.
தொடர்புக்கு :
M.B. அபூபக்கர் 0091 9952123618
T.A. சேக் அலி 0091 9600120281
வங்கி கணக்கு விவரம் :
A/c Name : AZZAVIATHU SHATHULIYA TRUST
A/c No. 115 1 30506
Bank Name : DHANALAXMI BANK
Branch Name : ADIRAMPATTINAM
IFS Code : DLXB0000115
Thursday, September 19, 2013
தெருநாய்கள் குறித்த அதிரை நியூஸின் செய்திக்கு பேரூராட்சித்தலைவர் மறுப்பு [ காணொளி ]
''அதிரை பூராவும் ஒரே நாய்த் தொல்லை.. என்னமாச்சும் பண்ணுங்கப்பா.. மக்கள் புலம்பல் !!'' என்ற தலைப்பில் கடந்த 14-09-2013 அன்று அதிரையில் உலாவும் நாய்களைப்பற்றி தளத்தில் படத்துடன் செய்தியாக வெளியிட்டிருந்தோம். இதில் பேரூராட்சியின் நடவடிக்கை தேவை என்ற வேண்டுகோளையும் அதில் நாம் முன்வைத்திருந்தோம்.
அனைவரிடமும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்திய இந்த செய்தி அதிரை பேரூராட்சித் தலைவர் அஸ்லம் அவர்களிடமும் போய் சேர்ந்து இருக்கின்றன.
இதைத்தொடர்ந்து நம்மிடம்... நாய் தொடர்பாக பேரூராட்சியின் நடவடிக்கை குறித்து எங்களின் கருத்தையும் பெற்று வெளியிட்டிருக்க வேண்டும் என்ற தனது ஆதங்கத்தையும், வருத்தத்தையும் தெரியப்படுத்திவிட்டு கடந்த காலங்களில் பேரூராட்சியின் சார்பாக அதிரை தெருக்களில் உலா வந்த நாய்கள் தொடர்பாக என்னனென்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன ? என்பது குறித்து நம்மிடம் பட்டியலிட்டார்.

Wednesday, September 4, 2013
ஆசிரியர் தினத்திற்காக முன்னாள் தலைமை ஆசிரியருடன் குற்றாலத்தில் ஒரு அழகிய நேர்காணல் [ காணொளி ] !
இது ஒரு மீள்பதிவு :
சமூக மேம்பாட்டுக்கும், மாற்றத்திற்கும் வித்திடக்கூடியக் கல்வி சமூகத்தில் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றன என்றால் மிகையல்ல. இக்கல்வியை ஒரு சேவை எனக்கருதி மாணாக்கர்களுக்கு திறம்பட புகட்டுவது நமது ஆசிரியப் பெருமக்களே !
மேலும் மாணவர்களின் எதிர்காலத்தை நிர்மாணிப்பதிலும் பெரும் பங்கு வகிக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் தினமாக ‘ஆசிரியர் தினம்’ வருடந்தோறும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.
1. ஆசிரியர் தினத்தைப்பற்றி...
2. ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு கூறும் அறிவுரைகள்தான் என்ன ?
ஆகிய கேள்விகளை முன்வைத்து நமதூர் காதிர் முகைதின் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் ஹாஜி S.K.M. ஹாஜா முஹைதீன் அவர்களை கடந்த வருடம் குற்றாலம் மெயின் அருவியில் வைத்து அவர்களின் கருத்தைப் பெற்றோம்.
ஹாஜி S.K.M. ஹாஜா முஹைதீன் அவர்களைப் பற்றிய சிறுகுறிப்பு :
நமதூர் காதிர் முகைதின் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் ஹாஜி S.K.M. ஹாஜா முஹைதீன் அவர்கள் கணிதத்துறையில் பட்டம் பெற்றிருந்தாலும் தமிழ் இலக்கியத்தின் மீதுள்ள ஆர்வத்தால் சிறந்த சொற்ப்பொழிவாளராகவும், எழுத்தாளராகவும் திகழ்ந்தவர். இவர் எழுதிய ‘என்றும் எதிலும் இஸ்லாம்’, கல்வி கற்போர் கடமை’ ஆகிய நூல்கள் பிரபலமானவையாக திகழ்ந்தது.
இவரால் எழுதப்பட்ட ‘மாவீரன் அலெக்ஸாண்டர்’, ‘தீரன் திப்பு சுல்தான்’ போன்ற நாடகங்களும், பள்ளி மாணவர்களுக்கான அறிவுத்திறன் போட்டிகளும் ( வினாடி-வினா ) வானொலியில் ஒலிப்பரப்பாகியுள்ளது மேலும் ‘உமறுப் புலவரின் சிந்தனைகள்’ என்ற தலைப்பில் வானொலியில் உரை நிகழ்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் இவர் எழுதிய சமூக விழிப்புணர்வு நாடங்கள் பல்வேறு மேடைகளில் அரங்கேற்றுப்பட்டுள்ளன குறிப்பாக ‘தாயகமே உனக்காக’, திறக்கட்டும் சிறைக்கதவு’, ‘புலித்தேவன்’,அட்வகேட் சுந்தரம் BA., B.L, ‘மாவீரன் அலெக்ஸாண்டர்’, ‘தீரன் திப்பு சுல்தான்’ போன்றவைகளாகும்.
முன்னாள் தலைமை ஆசிரியர் S.K.M. ஹாஜா முகைதீன் அவர்களின் கைவண்ணத்தில் உருவான 'புலித்தேவன்' என்ற சமூக விழிப்புணர்வைத் தூண்டும் மேடை நாடகத்தில் பங்குபெற்ற மாணவனுக்கு பரிசு வழங்கி கெளரவிப்பு.
‘தேசிய நல்லாசிரியர் விருது’ பெறுவதற்குரிய அனைத்து சிறப்புகளை பெற்றிருந்தும் கல்வித்துறையால் இரு முறை விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டும், விருது கைநழுவிப்போனது அவருக்கு மட்டுமல்ல நமதூருக்கே பெரும் ஏமாற்றமே !
சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! ‘சந்திப்புகள்’ தொடரும்...

Sunday, August 18, 2013
அதிரையில் வாழும் பேச இயலாத - காது கேளாதோருடன் நெஞ்சை நெகிழவைத்த உருக்கமான சந்திப்பு [ காணொளி ]
உலகிலேயே இந்தியாவில் தான் காது கேளாதோர் - பேச இயலாதோர் அதிகம் உள்ளனர். தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் மாற்றுத்திறனாளிகள் மூன்று சதவீதம் [ 3% ] பேரில் பெரும்பாலானோர் உயர் கல்விக் கற்றவர்களாகவும், கருத்துப் பரிமாற்றத்தில் வல்லவர்களாகவும் உள்ளனர்.
மாற்றுத்திறனாளிகள் பேச இயலாத - காது கேளாதோர் நல சங்கம் கடந்த சில ஆண்டுகளாக அதிரை கடைத்தெரு பகுதியில் திறம்பட இயங்கி வருகின்றன. இச்சங்கத்தில் பெண்கள் உட்பட ஏராளமானோர் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். இவர்கள் மாதமொருமுறை கூட்டத்தை கூட்டி தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கின்றனர். சக உறுப்பினர்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுத்தும் கொள்கின்றனர். பிறருக்கு உதவிகள் பல செய்தும் வருகின்றனர்.
அதிரை நியூஸின் சார்பாக எத்தனையோ சாதனையாளர்களை நேர்காணலுக்காக நாங்கள் சந்தித்திருந்தாலும் அவர்களில் எங்களின் நெஞ்சை நெகிழச் செய்த அன்புச்சகோதரர்கள் இவர்கள் மட்டுமே என்றால் மிகையாகாது.
அதிரை நியூஸின் நேர்காணலுக்காக அவர்களின் நல சங்க அலுவலகத்தில் அருமையான தேநீர் பொழுதில் சந்தித்து உரையாடினோம். இதோ அதன் காணொளி...
டிஸ்கி :
தங்களின் குழந்தைகள் காது கேட்க வில்லையென்றாலும் பேசமுடியாமல் இருந்தாலும் அவர்களை கட்டாயம் காது கேளாதோர் பள்ளியில் ( சிறப்பு பள்ளி) மட்டுமே சேர்க்கப்படவேண்டும். ஒருங்கிணைந்த கல்வித்திட்டம் என்று சில விபரம் அறிந்த பெற்றோர்களே சாதாரண பள்ளியில் சேர்கின்றனர், பல பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு இல்லாததாலும், தங்களது குழந்தைகளின் குறைகளை வெளிப்படுத்த தயங்கியும் சாதாரண பள்ளியிலேயே சேர்க்கப்படுகின்றனர்.
சாதாரண பள்ளி ஆசிரியர்களால் இவர்களுக்கு பாடம் கற்ப்பித்து தருவது என்பது இயலாத காரியம், இவர்களுக்கு என்று சிறப்பு பள்ளி மற்றும் சிறப்பு ஆசிரியர்களால் மட்டுமே காதுகேளாத குழந்தைகளுக்கு பயிற்சிகள் கொடுக்கப்படமுடியும்,
இப்படிப்பட்ட மாற்றுதிரனாளிக்களின் நலனையும் அவர்களுக்கு சிறப்பு பயிற்சி கொடுக்கப்படவேண்டும் அவர்களின் திறன் மேன்படவேண்டும் என்பதற்காக மாநிலம் முழுவதும் அரசு சுமார் 30 பள்ளிகளுக்கும் மேல் நிறுவப்பட்டு உள்ளது. ஆனால் இப்படிப்பட்ட பள்ளிகளில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சேர்ப்பது இல்லை, மாற்றுத்திறனாளி மாணவர்களை சாதாரண பள்ளியில் சேர்ப்பதனால் அவர்களுக்குள் உள்ள பல திறமைகள் வெளிக்கொண்டு வர முடியாமல், அப்படிப்பட்ட குழந்தைகள் தனிமைப்படுத்தி விடக்கூடிய நிலை வந்து விடும். [ Thanks : Penmai ]

Subscribe to:
Posts (Atom)