.

Pages

Showing posts with label AYDA. Show all posts
Showing posts with label AYDA. Show all posts

Thursday, June 20, 2019

அய்டா சேவை அமைப்பின் மாதாந்திரக் கூட்டம் (படங்கள்)

அதிரை நியூஸ்: ஜூன் 20
அய்டாவின் ஜுன் மாததிற்கான மாதந்திரக் கூட்டம் வெள்ளிக்கிழமை  நடைபெற்றது. ஹாபிழ் நெய்னா முகமது இறை வசனம் ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

அதிரையின் கடந்த மாதங்களில் இறந்தவர்களின் விவரங்கள் பகிரப்பட்டு அவர்களின் மஃபிரத்துக்காக துஆ செய்யப்பட்டது.

கடந்த மாதங்களின் அய்டா அமைப்பிற்கு வந்த கோரிக்கைகளின் அடிப்படையில் வருமானமின்றி செயல்படும் உமர் பள்ளி மற்றும் மக்தூம் பள்ளி ரமலானின் தேவைக்களுக்காக உதவி  செய்யப்பட்டது.

ஏ.ஜெ பள்ளி மற்றும் அதிரை மகாதிப் இணைந்து நடத்தும் திருக்குர் ஆன் திறன் அறிதல் போட்டிக்கு அய்டா சார்பாக  வழங்கப்பட்டுள்ளதை அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளாராக அதிரை பைத்துல்மால் தலைவர் பேராசிரியர் எஸ்.பரகத் கலந்து கொண்டு சிறப்பித்து,அதிரை பைத்துல்மாலின் தொடங்கிய நிலையில் இருந்து முதல் இன்றைய நிலையை அனைவரின் முன்னிலையில் எடுத்துரைத்தார்கள்.

இதில் குறிப்பாக:
- ரமலானில் ஃபித்ரா வினியோகம்
- குர்பானி திட்டம்
- வட்டி இல்லா நகை கடன் தொகை உயர்வு
- மறைமுக நேரடி உதவிகள்
- வருமான இல்லாதவர்களுக்கான பெண்சன் திட்டம்
- சென்னையில் இருந்த பைத்துல்மாலின் கட்டிட விற்ற விபரம்
- அதேபோல் அதிரையில் இருக்கும் பைத்துல்மாலின் கட்டிட வாடகை
விவரங்கள்
- வெளிநாடு வாழ் அதிரையர்கள் அதிரை பைத்துல்மாலிற்கு ஆற்றிவரும்
 உதவிகள்
- கஜா புயலின் பைத்துல்மாலின் தலைமை பங்களிப்பு
- எதிர்கால அதிரை பைத்துல்மால் பற்றி அதிரை பைத்துல்மால் தலைவர்  பேசினார்கள்.

கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் பைத்துல்மால் சேவை அமைப்பின் செயல்பாடுகள் பற்றி எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது.  மேலும்,  அதிரை பைத்துல்மால் சார்பாக சில கோரிக்கைகள் விடுத்தார்கள்.

1.வருங்கால அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பினர் கொண்டு செல்வதற்கு நமதூர் இளைஞர்கள் முன்வர வேண்டும்.

2.வெளிநாடுகளின் வாழ்க்கையை முடித்து கொண்டு தாயகத்திற்கு வரும் நமதூர் வாசிகளின் பங்கு குறைவாக உள்ளது என்றும், கூட்டு குர்பானி திட்டங்களில் வெளிநாடு வாழ் அதிரையர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் பங்கெடுக்குமாறும் கேட்டுகொண்டார்கள்.

3. இன்றைய காலகட்டதில் ஒன்றினைந்து செயல்படவேண்டி இருப்பதால் அனைவரும் ஒற்றுமையுடன் பயணித்து ஊரின் ஒற்றுமைக்கு பாடுபட வேண்டினார்.

அய்டாவின் சார்பாக நேரடி கோரிக்கைகள்: 
1. அதிரை பைத்துல்மால் நிர்வாகத்தினர் அதிரையில் இருக்கும் அனைத்து தெரு மஹல்லா நிர்வாகிகளுடம் தொடர்பினை ஏற்படுத்தி ஒன்றினைந்து செயல்பட கேட்டுக்கொள்ளப்பட்டது.

2. பென்ஷன் தொகையை வரும் காலங்களில் மேலும் விரிவுபடுத்தாமல் தற்போதுள்ள பயனாளிகளுக்கு ரூ. 600 என்றிருப்பதை ரூ.1000 மாக உயர்த்தி வழங்க ஆவண செய்யுமாறு AYDAவின் சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டது.

3. அடுத்த வருடத்திலிருந்து அய்டா அமைப்பின் சார்பில் ஜக்காத் வசூல் செய்து அதிரை பைத்துல்மாலுக்கு அனுப்பித்தருவதாக முடிவு செய்யப்பட்டது.

புரவலர் சந்தா திட்டம் : 
அதிரை பைத்துல்மாலிற்கான‌ புரவலர் சந்தா நிதி 1000 ரூபாய் ஆண்டுக்கு என்ற திட்டத்தினை அய்டாவின் சார்பாக கொண்டுவரப்பட்டுள்ளது.  புரவலர் திட்டத்தை மற்ற பைத்துல்மாலின் கிழைகளுக்கும் அறிமுகப்படுத்தி வருடாவருடம் பைத்துல்மாலின் நிதியை அதிகப்ப‌டுத்துவது என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

அயல்நாட்டிலும், விளையாட்டு போட்டிகளை ஊக்குவிக்கும்வண்ணம் Tamil nadu Friends Football என்ற அமைப்பினை ஜித்தா வாழ் அதிரை சகோதரர்கள் உருவாக்கி முதல் கால்பந்து போட்டியை வெற்றிகரமாக நடத்தியதற்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
 

Thursday, May 9, 2019

ஜித்தாவில் அய்டா இஃப்தார் நிகழ்ச்சி (படங்கள்)

அதிரை நியூஸ்: மே 09
சவுதி அரேபியா ஜித்தா நகரில் அய்டா (AYDA) அமைப்பின் இஃப்தார் நிகழ்ச்சி புதன் கிழமை மாலை லக்கி தர்பார் உணவகத்தில் நடைபெற்றது.

இம்ரான் கிராத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நஜ்முதீன் வரவேற்றுப் பேசினார். நிகழ்சிக்கு அவ்வமைப்பின் தலைவர் ஹபீப் ரஹ்மான் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். தமிம் ஆண்டறிக்கை வாசித்தார்.

நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பின் பேரில் டாக்டர் அஜ்மல் கலந்துகொண்டு நோன்பாளிகள் எழுப்பிய மருத்துவம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசினார். அண்மையில் ஜித்தாவில் நடந்த தமிழ் பிரிமியர் கிரிக்கெட் தொடர் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அதிரை பிரண்ட்ஸ் கிரிக்கெட் (AFCC) அணி வீரர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், அய்டா அமைப்பு ஆற்றி வரும் பல்வேறு சமூக நலப்பணிகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டன.

நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஜபருல்லா தொகுத்து வழங்கினார். முடிவில் அகமது முனாஸ்கான் நன்றி கூறினார். பின்னர் நடந்த இஃப்தார் விருந்து உபசரிப்பில் அதிரை பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 
 

Thursday, August 9, 2018

12.600 லிட்டர் இரத்தம் வழங்கி சாதனை படைத்த அதிரை இளைஞருக்கு பாராட்டு (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக.09
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் ஏ. சாகுல் ஹமீது (வயது 45) சமூக ஆர்வலரான இவர் கடந்த 12 ஆண்டுகளாக, பிரசவ சிகிச்சை, மருத்துவ அறுவை சிகிச்சை, விபத்தில் படுகாயம் அடைந்தோர் போன்றோருக்கு தானாக முன்வந்து இரத்த தானம் செய்து வருகிறார். A1 Positive இவரது இரத்த வகை. இதுவரையில், 36 தடவை, மொத்தம் 12 லிட்டர் 600 மில்லி கிராம் இரத்தம் தானம் வழங்கி சாதனை படைத்துள்ளார்.

இவரது சேவையைப் பாராட்டி கடந்த 2016 ஆம் ஆண்டு அதிரை சமூக நல அறக்கட்டளை சார்பில் 'இரத்த தான சேவை விருது' வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தஞ்சையில் கடந்த 2014 ஆண்டு நடைபெற்ற இரத்ததான ஒருங்கிணைப்பாளர் முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவராக பதவியில் இருந்த டாக்டர் என்.சுப்பையன் சான்றிதழ் வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.

மேலும், இவருடைய குருதிக்கொடை சேவையைப் பாராட்டி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை மாவட்ட ஆட்சியராக பதவியில் இருந்த பாஸ்கரன் அவர்கள், தஞ்சை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற தேசிய தன்னார்வ இரத்ததான விழாவில் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மேலும் மறைந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் இ.அகமது, பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் அப்துல் ரஹ்மான், பட்டுக்கோட்டை சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் என்.ஆர். ரெங்கராஜன் ஆகியோரிடம் பாராட்டுதலை பெற்றுள்ளார். மேலும் அதிரை லயன்ஸ் சங்கம், அதிரை ரோட்டரி சங்கம் வழங்கிய குருதிக்கொடையாளர் உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

இந்நிலையில், இவரது சேவையைப் பாராட்டி அதிரை இளைஞர்கள் மேம்பாட்டு சங்கம் (AYDA) சார்பில், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ஏ.அன்பழகன், இன்று (ஆக.09) வியாழக்கிழமை சான்றிதழ் வழங்கி பாராட்டுத் தெரிவித்தார். அருகில், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை நல மருத்துவர் டாக்டர் எஸ்.கார்த்திகேயன், அதிரை இளைஞர்கள் மேம்பாட்டு சங்கம் தகவல் தொடர்பு அலுவலர் மீராஷா, அவ்வமைப்பின், முன்னாள் நிர்வாகி ஏ. முகமது முகைதீன் ஆகியோர் உள்ளனர்.
 

Sunday, July 15, 2018

சவுதியில் AYDA அமைப்பின் மாதாந்திரக் கூட்டம் (படம்)

அதிரை நியூஸ்: ஜூலை 15
சவுதி, ஜித்தாவில் AYDA (Adirai Youth Development Association, Jeddah) சார்பில், மாதாந்திர ஆலோசனைக்கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு செங்கடல் பள்ளிவாசல் அருகில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதி பொதுநலன் சார்ந்த வைக்கப்பட்ட கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன. இதில், ஜித்தா வாழ் அதிரை பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர். 

Saturday, May 19, 2018

சவுதியில் அய்டா அமைப்பின் வருடாந்திர இஃப்தார் நிகழ்ச்சி (படங்கள்)

அதிரை நியூஸ்: மே 19
சவுதி, ஜித்தாவில் AYDA (Adirai Youth Development Association, Jeddah) நடத்திய வருடாந்திர இஃப்தார் நிகழ்வில் அதிரையை சார்ந்த நூற்று ஐம்பதுக்கு அதிகமான மக்கள் கலந்துக்கொண்டனர்.

இஃப்தார் நிகழ்ச்சியை மாணவன். அப்துல் பாசித் அப்துல் அஜீஸ் கிராத் ஓதி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு, அவ்வமைப்பின் தலைவர் ஏ.ஹபீப் ரஹ்மான் தலைமை வகித்து வரவேற்றுப் பேசினார். செயலர் பி.முனாஸ்கான் ஆண்டறிக்கை மற்றும் அமைப்பின் செயல்பாடுகள் பற்றி எடுத்துரைத்தார். சிறப்பு விருந்தினராக மருத்துவர் அஜ்மல் கலந்துகொண்டு கலந்துரையாடினார். நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஏ.ஜே தாஜுதீன் தொகுத்து வழங்கினார். முடிவில் துணைத்தலைவர் அப்துல் அஜீஸ் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில், சவுதி வாழ் அதிராம்பட்டினம் பிரமுகர்கள் 150 க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Sunday, April 15, 2018

சவுதி ஜித்தாவில் அதிரை பிரமுகருக்கு வழியனுப்பும் விழா!

அதிரை நியூஸ்: ஏப்.15
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் முகைதீன் அப்துல் காதர் ஜெய்லாணி (வயது 50). சவுதி அரேபியாவில் கடந்த 26 ஆண்டுகள்  பணியாற்றி வந்தவர், பணி ஓய்வு பெற்று தாயகம் திரும்பி உள்ளார்.

இந்நிலையில், இவருக்கு ஜித்தா வாழ் அதிரை மக்கள் சிலரால் வழியனுப்பி வைக்கும் விதமாக சந்திப்பு நிகழ்ச்சி அல் ஜாமிஆ பார்க்கில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், இந்நாள் - முன்னாள் அய்டா நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு, தாயகம் திரும்பும் ஜெய்லாணி அவர்களின் பல்வேறு சமூகப் பணியைப் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினர்.
 
 
 

Saturday, March 10, 2018

சவுதி ஜித்தா AYDA அமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு (படங்கள்)

அதிரை நியூஸ்: மார்ச் 10
சவுதி அரேபியாவின் ஜித்தா மாநகரில் கடந்த 25 வருடமாக இயங்கிவரும் AYDAவின் (Adirai Youth Development Association) இவ்வருடத்திற்கான நிர்வாகிகள் தேர்வு வெள்ளிக்கிழமை பொதுக்கூட்டத்தில் நடைப்பெற்றது. அதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் விபரம் பின்வருமாறு.

தலைவர்:
சகோ.ஹபீப் ரஹ்மான்
த/பெ. க.மு. அப்துல் பரகத்

துணை தலைவர்:
சகோ.அப்துல் அஜீஸ்
த/பெ.ஹாஜா மொஹிதீன்

செயலாளர்:
முனாஸ்கான்
த/பெ.பகுருதீன்

துணை செயலாளர்:
தமீம் அன்சாரி
த/பெ.அஹமத் ஹாஜா

பொருளாளர்:
சகோ.அஷ்ரஃப்
த/பெ.முஹம்மத் மீராஷாஹ்

துணை பொருளாளர்:
சகோ.சாகுல்
த/பெ.ஹாஜா மொஹிதீன்

ஊடக தொடர்பு:
மீராஷாஹ்
த/பெ. ரஃபியா அஹ்மத்

Monday, February 12, 2018

சவுதி அய்டா வெள்ளி விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் விபரம்!

ஜித்தா பிப் 12,
ஜித்தா அய்டா வெள்ளிவிழாவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அதில், ஆண்கள் பகுதியில் வெற்றிபெற்றவர்கள் விபரம்:

கிராத் போட்டி:-
12 வயது முதல் 16 வயது வரை

முதல் பரிசு:             இம்ரான் தாஜுத்தீன்
இரண்டாம் பரிசு:   சுலைமான் அப்துல் ராஜிக்
மூன்றாம் பரிசு:      சுஹைப் அப்துல் அஜீஸ்

3 வயது முதல் 11 வயது வரை

முதல் பரிசு:             அப்துல் பாசித் அப்துல் அஜீஸ்
இரண்டாம் பரிசு:  அப்துல் அஜீஸ் மீராசாஹிப்
மூன்றாம் பரிசு:      சஹீர் முஹம்மது சாலிஹ்

பேச்சுப் போட்டி:-
12 வயது முதல் 16 வயது வரை

முதல் பரிசு:           இம்ரான் தாஜுத்தீன்
இரண்டாம் பரிசு: அஹமது அப்துல் ரஜ்ஜாக்
மூன்றாம் பரிசு:     அய்யூப் அப்துல் ராஜிக்

12 வயதுக்கு கீழ்

முதல் பரிசு:          தாரிக் சைஃபுதீன்
இரண்டாம் பரிசு: அப்துல் பாசித் அப்துல் அஜீஸ்
மூன்றாம் பரிசு:    முஹம்மது ராஷித் இப்ராஹீம் மற்றும் சுலைமான் அப்துல் ராஜிக்.

விளையாட்டுப் போட்டிகள்: -

மூன்று கால் ஓட்டப்பந்தயம்:-

சுஹைப் அப்துல் அஜீஸ் &
சாஜித் முஹம்மது ஷாஃபி

அஹ்மத் அப்துல் ரஜாக் &
அம்மார் அஹமத் அஸ்லம்

எழுத்துக்களை ஒருங்கிணைத்தல்:-

சுஹைப் அப்துல் அஜீஸ் &
சாஜித் முஹம்மது ஷாஃபி

அப்துல் ரஹ்மான் ஆபிதீன் &
தன்வீர் ஜமால்

அப்துல்லாஹ் நிஜாம் &
அய்யூப் அப்துல் ராஜிக்

ஸ்ட்ரா மூலம் மிட்டாய் எடுத்து போடுதல்:-

இமாத் ஜமால்
ஸஹீர் முஹம்மத் சாலிஹ்
ஹக்கீம் மீரஷாஹிப்

பந்தை எடுத்துக் கொண்டு ஓடும் போட்டி:-

அப்துல் அஜீஸ் மீராசாஹிப்
அப்துல் ஹக்கீம் மீராசாஹிப்
அப்துல் ரஹ்மான் நிஜார்

கால்பந்து (Goal Kick):-

சாகுல் ஹமீது அணி
சாகுல் ஹமீது
அப்பாஸ்
அப்துல் ரஹ்மான்

கிரிக்கெட் (Round Game)
ஷம்சுதீன் & முனாஸ்கான் அணி
சம்சுதீன் (அல்பைக்)
முனாஸ் கான்
நெய்னா (AFCC)
ஃபயாஸ் அஹமத்
தைசீர்
 ரில்வான்

40 வயதினருகும் மேல் மற்றும் 40 வயதினருக்கும் கீழ் இடையே நடந்த வாலிபால் போட்டியில் டாக்டர் அஜ்மல் தலைமையிலான 40 வயதினருக்கு மேல் உள்ள அணி வெற்றி பெற்றது.
DR. அஜ்மல்
சாகுல் ஹமீத்
அஸ்லம் (காலா)
சஃபீக் (Huta)
சஃபீர்
அன்சாரி
சைஃபுதீன் (மதீனா)
ஹிதாயதுல்லாஹ் (TNT)

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு போட்டிகள் தனியாக நடத்தப்பட்டு, பரிசுகள் பெண்கள் குழுவின்மூலம் வழங்கப்பட்டது.

Sunday, February 11, 2018

சவுதி ஜித்தா அய்டா வெள்ளி விழா கொண்டாட்டம் ~ நேரடி ரிப்போர்ட் (படங்கள்)

ஜித்தா பிப்ரவரி 11
ஜித்தாவில் இயங்கி வரும் அதிரை அய்டா அமைப்பு தொடங்கப்பட்டு  25 வது ஆண்டை சிறப்பிக்கும் வண்ணம்  09 -02- 2018 வெள்ளிக்கிழமை அன்று ஜித்தாவில் அய்டாவின் வெள்ளி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

காலை 08 மணிக்கு நிகழ்ச்சிக்கு அனைவரும் வர தொடங்கினர்.

 நிகழ்ச்சிக்கு வந்தவர்களை அய்டாவின் தலைவர் சகோ. ஏ.ஜே.தாஜுத்தீன் வரவேற்றுப் பேசினார்.

 நிகழ்ச்சியின் அமீராக இருந்து அய்டாவின் செயலர் சகோ. சம்சுதீன் நிகழ்ச்சியினை நடத்தினார்.

நிகழ்ச்சிக்கு வந்தவர்களை, சகோ. ஹபிபுர்ரஹ்மான. சகோ.தமீம், (அல்சுஐபி)சகோ. ஜபருல்லாஹ்  பதிந்தனர்.

அய்டா பொருளாளர்கள். சகோ. அப்துல் அஜீஸ், சகோ. இப்ராகிம் ஆகியோர் நிகழ்ச்சியின் பொருளாளர்களாக இருந்தனர்.

 சிறுவன் அப்துல் பாசித் கிராத் ஓதினார்.

நிகழ்ச்சிக்கு வந்த அனைவருக்கும் சகோ. பத்ர், சகோ.  சுவைஃப் & டீம் சார்பில் காலை உணவு மற்றும் தேநீர் வழங்கப்பட்டது.

பின்பு சகோ. மீராசாஹ் ரஃபியா, சகோ.அப்துல் அஜீஸ் தலைமையில் விளையட்டுப் போட்டிகள் நடந்தன.  இவர்களுக்கு சகோ.இப்ராஹிம், சகோ ஷம்சுதீன்(அல்பைக்) உறுதுணையாக விளையாட்டுப் போட்டிகளை நடத்தினர்
.
காலை 11 மணிக்கு மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடந்தது. இதனை சகோ.ஜஃபருல்லாஹ், சகோ. சரபுதீன்(கோர்ட்டினா),சகோ. முனாஸ்கான் ஆகியோர் நடத்தினர்.

பேச்சுப்போட்டியின் தலைப்பாக, 1 சதக்கத்துல் ஜாரியா நிரந்தர நன்மை, 2 சுத்தம் ஈமானில் பாதி, 3 மொபைல் இல்லாத என் வாழ்க்கை, 4 பெற்றோர்களுக்கு பிள்ளைகளின் கடமைகள், 5, நபி (ஸல்) அவர்களின் நற்பண்புகள் என்ற தலைப்பில் கலந்துகொண்டு பேசிய மாணவர்களின் பேச்சுக்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

காலை 11:45 முதல் 12:15 வரை நீச்சல்.

அதனை தொடர்ந்து ஜும்ஆ தொழுகைக்கு இடைவெளி விடப்பட்டது.  ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து  அனைவருக்கும் பகல் உணவு வழங்கப்பட்டது. உணவு விநியோகிக்கும் பொறுப்பு சகோ. ஜெய்லானி(அப்துல் காதிர்), சகோ. அஜ்வா நெய்னா, சகோ அஷ்ரப் ஆகியோர் மிகவும்  சிறப்பாக செய்தனர்.

பின்பு ஹாபிள் நெய்னா தலைமையில் மாணவர்களுக்கான கிராத் போட்டி நடந்தது. இதில் சிறப்பாக கிராத் ஓதியவர்களை பார்வையாளர்கள் உற்சாகப்படுத்தினர்.

அதனை தொடர்ந்து சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், சீனியர்களுக்கான வாலிபால் போட்டிகள் என  பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

அதனை தொடர்ந்து. அய்டாவின் முன்னாள் தலைவர் சகோ. ஆபிதீன் அய்டாவின் தோற்றம் வளர்ச்சி குறித்து விளக்கம் அளித்தார். மேலும் அய்டா ஆலோசனைக்குழு உறுப்பினர் சகோ. எம்.எஃப். அஹமது அஸ்லம் அய்டாவின் சாதனைகள் மற்றும்  எவ்வாறு செயல்படுகிறது? என்பது குறித்து விளக்கம் அளித்தார்.

மேலும் அதிரை பைத்துல்மாலிலிருந்து வந்த வாழ்த்து,  அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை அனுப்பிய வாழ்த்து,  அதிரை பைத்துல்மால் தம்மாம் கிளையிலிருந்து சகோ. ஃபத்ஹுத்தீன் அனுப்பிய வாழ்த்து மற்றும் அய்டாவின் முன்னாள் தலைவர் சகோ ரஃபியா அனுப்பிய வாழ்த்துரை ஆகியவை பகிரப்பட்டன.

மாலை சிற்றுண்டி தேநீர் வழங்கப்பட்டது.

மஃரிப் தொழுகைக்குப் பிறகு சகோ முனாஸ்கான் அய்டாவில் இளைஞர்களின் பங்களிப்பின் அவசியம் குறித்து பேசினார்.

அதனை தொடர்ந்து வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசுக்குரிய வெற்றியாளர்களின் பெயரை அய்டாவின் தலைவர் சகோ. ஏ.ஜே.தாஜுத்தீன் அறிவித்தார்.

மேலும் அய்டாவின் 25 வது ஆண்டை சிறப்பிக்கும் நினைவு பரிசினை அய்டாவின் நிர்வாகிகள் கையில் முன்னாள் நிர்வாகிகள் வழங்கினர்.

விழாவின் பரிசுப் பொருட்களுக்கு  ஸ்பான்சர்களாக சகோ. A. K. சாகுல் ஹமீது அவர்கள். மற்றும் சகோ. ஆபிதீன் அவர்கள் (கோ கோ கோலா) .
இந்நிகழ்ச்சி ஆண்கள், பெண்கள் என தனித்தனியே அமையப்பெற்ற சிறப்பு இஸ்திராஹாவில் இருபாலருக்கும், மற்றும் சிறுவர்களுக்கும் என தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சி அய்டா தலைவர் சகோ. ஏ.ஜே.தாஜுத்தீன் நன்றியுரை வழங்க  இஷா தொழுகையுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.

அய்டா வெள்ளிவிழா நிகழ்ச்சியில், ஜித்தா, மதீனா, அப்ஹா என சவுதியின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் அதிரையர்கள் குடும்பத்துடன் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

- ஜாஃபர் ஹசன்