.

Pages

Showing posts with label ரமலான் 2019. Show all posts
Showing posts with label ரமலான் 2019. Show all posts

Wednesday, June 5, 2019

ATJ சார்பில் அதிரையில் 2 இடங்களில் பெருநாள் திடல் தொழுகை (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூன் 05
ஈகைத் திருநாளாம் ரமலான் பெருநாள் பண்டிகை தமிழகத்தில் இன்று புதன்கிழமை காலை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

அதிரை தவ்ஹீத் ஜமாத் சார்பில், பெருநாள் திடல் தொழுகை, அதிரை ஈசிஆர் சாலை (என்.எம்.எஸ் ஜெஹபர் அலி மைதானத்தில்), மேலத்தெரு சானாவயல் ஆகிய 2 இடங்களில் நடைபெற்றது.

இதில், அவ்வமைப்பின் பேச்சாளர்கள் அபூ சுஹைல் மிஸ்க், தேனி அன்வர் ஆகியோர் கலந்துகொண்டு பெருநாள் குத்பா பேருரை நிகழ்த்தினர். இத்தொழுகைகளில் பெண்கள் உட்பட அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புறப் பகுதி இஸ்லாமியர்கள் பலர் கலந்துகொண்டனர்.
 



 
 

அதிரையில் வாழும் பேச இயலாத ~ காது கேளாதோர் பெருநாள் சந்திப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூன் 05
ஈகைத் திருநாளான ரமலான் பெருநாள் பண்டிகை இஸ்லாமியர்களால் தமிழகமெங்கும் புதன்கிழமை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, அதிரையில் வாழும் மாற்றுத்திறனாளிகள் பேச இயலாத - காது கேளாதோர் நல சங்க அலுவலகத்தில் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை காலை நடைபெற்றது. இதில் சங்க உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி வாழ்த்து கூறி மகிழ்ந்தனர்.

தொடக்கத்தில், நல சங்கத்தலைவர் ஹாஜா ஷெரீப், துணைத் தலைவர் சிராஜுதீன், இணைச்செயலாளர் உமர் தம்பி, பொருளாளர் மன்சூர் அகமது, முன்னாள் நிர்வாகிகள் நூருல் அமீன், ஜெஹபர் சாதிக் உள்ளிட்டோர் அனைவரையும் வரவேற்றனர். இதில் நலச் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
 
 
 
 
 

TNTJ சார்பில் அதிரையில் 3 இடங்களில் திடல் தொழுகை (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூன் 05
ஈகைத் திருநாளாம் ரமலான் பெருநாள் பண்டிகை தமிழகத்தில் இன்று புதன்கிழமை காலை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிராம்பட்டினம் கிளை-1, 2 சார்பில், பெருநாள் திடல் தொழுகை, அதிரை ஈசிஆர் சாலை பிலால் நகர் நுழைவாயில் (கிராணி மைதனாம்), மேலத்தெரு, சி.எம்.பி லேன் (ஏ.எல்.எம் பள்ளிக்கூடம் அருகில்) ஆகிய 3 இடங்களில் நடைபெற்றது.

இதில், அவ்வமைப்பின் பேச்சாளர்கள் திருச்சி அர்சத் அலி மிஸ்க், எம்.அபூ சுஹைல், திருச்சி சபீர் அலி மிஸ்க், ஆகியோர் கலந்துகொண்டு பெருநாள் குத்பா பேருரை நிகழ்த்தினர். இத்தொழுகைகளில் பெண்கள் உட்பட அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புறப் பகுதி இஸ்லாமியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

அதிராம்பட்டினத்தில் சுட்டிக்குழந்தைகளின் குதூகலப் பெருநாள் கொண்டாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூன் 05
இசுலாமியர்களின் ஈகைத் திருநாள் ரமலான் பெருநாள் பண்டிகை தமிழகமெங்கும் இன்று புதன்கிழமை காலை உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.

குழந்தைகள் நமக்கு இறைவனால் வழங்கப்பட்டுள்ள மதிப்பிட முடியாத அருட்கொடைகள். இவர்களின் மழலைப் பேச்சு முதல் அவர்கள் செய்யும் குசும்பு வரை அருகில் இருந்து மனமகிழலாம். அதுவும் பண்டிகை காலமென்றால் அவர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சி அளவில்லாதது. பெருநாள் மற்றும் விஷேச தினங்களில் குழந்தைகள் புதுப்புது டிசைன்களில் புத்தாடை உடுத்தி நகர்ப்புறங்களில் கலர்கலராக வலம் வருவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

அதிலும் சில துடிப்பான குழந்தைகளின் மழழைப்பேச்சும் தான் அணிந்து இருக்கும் உடையைப்பற்றியும், பெற்றோர்களிடத்திலிருந்தும் உறவினர்களிடத்திலிருந்தும் பெறப்பட்ட காசு பணத்தைப் பற்றியும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது ரசிக்கும்படி இருக்கும்.

எங்கள் கண்களில் தென்படாத அதிரை நியூஸ் வாசகர்களாகிய உங்கள் வீட்டுச்சுட்டிக் குழந்தைகளின் புகைப்படங்களை எங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு (editoradirainews@gmail.com) அனுப்பித்தந்தால் உடனடியாக தளத்தில் பதியப்படும்.   

பெருநாளன்று அதிரை நியூஸ் வாசகர்கள் அனுப்பி வைத்த சுவீட் பேபிகளின் கலர் ஃபுல் புகைப்படங்கள் இதோ...