.

Pages

Showing posts with label TNTJ. Show all posts
Showing posts with label TNTJ. Show all posts

Sunday, November 8, 2020

பட்டுக்கோட்டையில் TNTJ மாவட்ட செயற்குழு கூட்டம்!

பட்டுக்கோட்டை, நவ.08
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம்  பட்டுக்கோட்டை தனியார் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, அவ்வமைப்பின், தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் கே.ராஜிக் முகமது தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வல்லம் ஜாபர் அலி முன்னிலை வகித்தார். 

இக்கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. இன்றைய சூழ்நிலையில் இளைஞர்கள் போதை பழக்கம், சினிமா, மற்றும் கலாச்சாரச் சீரழிவுகளிலும் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களை நல்வழிப்படுத்தும்  நோக்கில் நவம்பர் மாதம் 10 ம் தேதி முதல் டிசம்பர் 31 ஆம்  தேதி வரை இலக்கை நோக்கி இளைஞனே வா.! என்ற செயல்திட்டத்தை தீவிரப் பிரச்சாரமாக செய்ய இறுக்கின்றோம். அதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தரும் படி இச்செயற்குழுவின் வாயிலாக கேட்டுக் கொள்கிறோம்.

2. இஸ்லாமியர்களின்  உயிருனும் மேலான நபிகள் நாயகம் அவர்களை கேலிச்சித்திரம் வரைந்தும் , அவர்களைப் பற்றி அவதூறு கிளப்பும் விதமாகவும் சில விஷமிகள் செயல்பட்டுகின்றனர். அவர்களை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. இந்த நிலை தொடரும் பட்சத்தில் அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டப்படும் என்பதை இச்செயற்குழு தெரிவித்துக் கொள்கின்றது.

3. சமீபத்தில் இஸ்லாமியர்களைப் பற்றி தவறான முறையில் பேசிய பிரான்ஸ் நாட்டு அதிபரை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

4. தமிழகத்தில் ஏற்கனவே முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு    உள்ளது. இது போதுமானது அல்ல இதை 7 சதவீதமாக அதிகரித்து தர வேண்டுமென நாம் தொடர்ந்து வலியுறுத்தியும் பல போராட்டங்களை நடத்தியும் வந்தோம் அதை உயர்த்தி  தருவோம் என காலம் சென்ற  ஜெயலலிதா அவர்கள் ஒரு தேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பிட்டார்கள். அம்மாவின் வழியில் பயணிப்பதாக மேடைக்குமேடை முழங்கி வரும் அதிமுக அரசு உடனடியாக இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தி தரும் படி இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

5. குடியுரிமை திருத்தச் சட்டம் என்ற பெயரில் இந்நாட்டு மன்னர்களை அந்நியர்களாக சித்தரிக்கும் கொடுஞ்சட்டத்தை மத்திய அரசு சில மாதங்களுக்கு முன் கொண்டு வந்தது. அதன் பின் இந்தியாவே புரட்சிக்களமாக மாறியது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தும் வீரியமிக்க போராட்டங்களை தலைமை ஏற்று நடத்தியது. தற்போது கொரோனா முடிந்தவுடன் அது நடைமுறைப்படுத்தப் படும் என பாஜக பேசி வருகிறது. அதை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. 

6. அது நடைமுறைப்படுத்தப்பட்டால் வீரியமிக்க போரட்டங்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையேற்று நடத்தும் என இச்செயற்குழு உறுதியாகத் தெரிவித்துக் கொள்கின்றது.

இக்கூட்டத்தில், மாநில செயலாளர் தாவூத் கைஸர், மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் கோவை அப்துர் ரஹீம் உட்பட மாவட்ட நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Sunday, September 20, 2020

ஒரத்தநாட்டில் TNTJ அமைப்பினர் 33 யூனிட் இரத்தம் தானம் (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.20
கரோனா பேரிடரை முன்னிட்டு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஒரத்தநாடு கிளை சார்பில், 159-வது இரத்த தானம் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


முகாமிற்கு, அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் கே ராஜிக் முகமது தலைமை வகித்தார். மாவட்ட மருத்துவரணி செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் முன்னிலை வகித்தார்.

இதில், தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை குருதி பரிமாற்ற அலுவலர் மருத்துவர் வேல்முருகன், இரத்த வங்கி ஆலோசகர் கண்ணன் உள்ளிட்டோர் அடங்கிய மருத்துவக்குழுவினர் கலந்துகொண்டு, 33 யூனிட் இரத்தத்தை டி.என்.டி.ஜே அமைப்பின் கொடையாளர்களிடமிருந்து தானமாகப் பெற்றனர்.

இந்நிகழ்வில், மாவட்ட தொண்டரணி அப்துல்லா, மாவட்ட மாணவரணி இத்ரீஸ், ஒரத்தநாடு கிளை நிர்வாகிகள் சாகுல் ஹமீது, ஆபிதீன், ஹாஜா, ஷேக் பரீத், முகமது ஃபஹது உள்ளிட்ட அவ்வமைப்பினர் பலர் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைபிடித்து கலந்துகொண்டனர். முகாம் ஏற்பாட்டினை, ஒரத்தநாடு கிளை மருத்துவ அணியினர் செய்திருந்தனர்.

Wednesday, September 2, 2020

புதுப்பட்டினத்தில் TNTJ அமைப்பினர் 34 யூனிட் இரத்தம் தானம் (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.02
கரோனா பேரிடரை முன்னிட்டு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுப்பட்டினம் கிளை சார்பில், 130-வது இரத்த தானம் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு, அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் கே ராஜிக் முகமது தலைமை வகித்தார். மாவட்ட மருத்துவரணி செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் முன்னிலை வகித்தார்.

இதில், தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை குருதி பரிமாற்ற அலுவலர் மருத்துவர் வேல்முருகன், இரத்த வங்கி ஆலோசகர் கண்ணன் உள்ளிட்டோர் அடங்கிய மருத்துவக்குழுவினர் கலந்துகொண்டு, 34 யூனிட் இரத்தத்தை டி.என்.டி.ஜே அமைப்பின் கொடையாளர்களிடமிருந்து தானமாகப் பெற்றனர்.

இந்நிகழ்வில், மாவட்ட துணைச் செயலாளர் பாவா உள்ளிட்ட அவ்வமைப்பினர் பலர் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைபிடித்து கலந்துகொண்டனர். முகாம் ஏற்பாட்டினை, புதுப்பட்டினம் கிளைத் தலைவர் ஹபீப் முகமது, துணைத்தலைவர் முகமது உசேன், துணைச் செயலாளர் சதக்கத்துல்லா, மாணவரணி சாகுல், மருத்துவரணி நபீல் மற்றும் செந்தலைப்பட்டினம் மருத்துவரணி பாரிஸ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 

Monday, August 31, 2020

பேராவூரணியில் TNTJ அமைப்பினர் 26 யூனிட் இரத்தம் தானம் (படங்கள்)

பேராவூரணி, ஆக.31
கரோனா பேரிடரை முன்னிட்டு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பேராவூரணி கிளை சார்பில், 123-வது இரத்த தானம் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு, அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் கே ராஜிக் முகமது தலைமை வகித்தார். மாவட்ட மருத்துவரணி செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் முன்னிலை வகித்தார்.

முகாமை, பேராவூரணி காவல் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார். இதில், தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை குருதி பரிமாற்ற அலுவலர் மருத்துவர் வேல்முருகன், இரத்த வங்கி ஆலோசகர் கண்ணன் உள்ளிட்டோர் அடங்கிய மருத்துவக்குழுவினர் கலந்துகொண்டு, 26 யூனிட் இரத்தத்தை டி.என்.டி.ஜே அமைப்பின் கொடையாளர்களிடமிருந்து தானமாகப் பெற்றனர்.

இந்நிகழ்வில், மாவட்டப் பொருளாளர் அஸ்ரப், மாவட்ட துணைச் செயலாளர் பாவா உள்ளிட்ட அவ்வமைப்பினர் பலர் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைபிடித்து கலந்துகொண்டனர். முகாம் ஏற்பாட்டினை, பேராவூரணி கிளைத் தலைவர் முகமது கனி, செயலாளர் இலியாஸ், பொருளாளர் அல்லாபிச்சை, துணை தலைவர் ஷேக் அப்துல்லா, துணைச் செயலாளர் நசீர் மற்றும் கிளை மருத்துவ அணியினர் செய்திருந்தனர்.
 
 
 
 
 

Wednesday, August 26, 2020

கண்டியூரில் TNTJ அமைப்பினர் 71 யூனிட் இரத்தம் தானம் (படங்கள்)

கண்டியூர், ஆக.24
கரோனா பேரிடரை முன்னிட்டு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கண்டியூர், முகமது பந்தர், திருபந்தூர்த்தி ஆகிய கிளைகள் சார்பில், 105-வது இரத்த தானம் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு, அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் கே ராஜிக் முகமது தலைமை வகித்தார். மாவட்ட மருத்துவரணி செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் முன்னிலை வகித்தார்.

இதில், தஞ்சாவூர் அரசு இராசா மிராசுதார் மருத்துவமனை மருத்துவர் டாக்டர் ஜெயகார்த்திகா தலைமையிலான மருத்துவக்குழுவினர் கலந்துகொண்டு, 71 யூனிட் இரத்தத்தை டி.என்.டி.ஜே அமைப்பின் கொடையாளர்களிடமிருந்து தானமாகப் பெற்றனர்.

இந்நிகழ்வில், மாவட்டச் செயலாளர் வல்லம் ஜாபர், மாவட்ட துணைச் செயலாளர் அப்துல்லாஹ் உள்ளிட்ட அவ்வமைப்பினர் பலர் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைபிடித்து கலந்துகொண்டனர். முகாம் ஏற்பாட்டினை, கண்டியூர், முகமது பந்தர், திருபந்தூர்த்தி ஆகிய கிளைகளின் மருத்துவ அணியினர் செய்திருந்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Monday, August 24, 2020

செந்தலைபட்டினத்தில் TNTJ அமைப்பினர் 50 யூனிட் இரத்தம் தானம் (படங்கள்)

செந்தலைபட்டினம், ஆக.24
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மல்லிபட்டினம் கிளை சார்பில், 90-வது இரத்த தானம் முகாம் செந்தலைபட்டினத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு, அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் கே ராஜிக் முகமது தலைமை வகித்தார். மாவட்ட மருத்துவரணி செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் முன்னிலை வகித்தார். முகாமில், சிறப்பு அழைப்பாளராக வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராமலிங்கம், செந்தலைப்பட்டினம் ஊராட்சி மன்றத தலைவர் ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தனர்.

இதில், தஞ்சாவூர் அரசு இராசா மிராசுதார் மருத்துவமனை மருத்துவக்குழுவினர் கலந்துகொண்டு, 50 யூனிட் இரத்தத்தை டி.என்.டி.ஜே அமைப்பின் கொடையாளர்களிடமிருந்து தானமாகப் பெற்றனர்.

இந்நிகழ்வில், இதில் மாவட்ட துணைச் செயலாளர் பாவா, மாவட்ட மாணவரணி இத்ரீஸ், செந்தலைப்பட்டினம் கிளை நிர்வாகிகள் ஜகுபர் அலி, ஜமால் முகமது, ரியாஸ் அகமது, தாஜுதீன், சேட் முகமது, பைசல் கான், ஜமால் முகைதீன், சலீம், சாபீர் கான், ஜாஹீர் உசேன், சாபீத், தவாஸ் உள்ளிட்ட அவ்வமைப்பினர் பலர் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைபிடித்து கலந்துகொண்டனர். முகாம் ஏற்பாட்டினை, செந்தலைபட்டினம் கிளை மருத்துவ அணியினர் செய்திருந்தனர்.