.

Pages

Showing posts with label செந்தலைபட்டினம் செய்திகள். Show all posts
Showing posts with label செந்தலைபட்டினம் செய்திகள். Show all posts

Monday, August 24, 2020

செந்தலைபட்டினத்தில் TNTJ அமைப்பினர் 50 யூனிட் இரத்தம் தானம் (படங்கள்)

செந்தலைபட்டினம், ஆக.24
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மல்லிபட்டினம் கிளை சார்பில், 90-வது இரத்த தானம் முகாம் செந்தலைபட்டினத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு, அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் கே ராஜிக் முகமது தலைமை வகித்தார். மாவட்ட மருத்துவரணி செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் முன்னிலை வகித்தார். முகாமில், சிறப்பு அழைப்பாளராக வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராமலிங்கம், செந்தலைப்பட்டினம் ஊராட்சி மன்றத தலைவர் ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தனர்.

இதில், தஞ்சாவூர் அரசு இராசா மிராசுதார் மருத்துவமனை மருத்துவக்குழுவினர் கலந்துகொண்டு, 50 யூனிட் இரத்தத்தை டி.என்.டி.ஜே அமைப்பின் கொடையாளர்களிடமிருந்து தானமாகப் பெற்றனர்.

இந்நிகழ்வில், இதில் மாவட்ட துணைச் செயலாளர் பாவா, மாவட்ட மாணவரணி இத்ரீஸ், செந்தலைப்பட்டினம் கிளை நிர்வாகிகள் ஜகுபர் அலி, ஜமால் முகமது, ரியாஸ் அகமது, தாஜுதீன், சேட் முகமது, பைசல் கான், ஜமால் முகைதீன், சலீம், சாபீர் கான், ஜாஹீர் உசேன், சாபீத், தவாஸ் உள்ளிட்ட அவ்வமைப்பினர் பலர் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைபிடித்து கலந்துகொண்டனர். முகாம் ஏற்பாட்டினை, செந்தலைபட்டினம் கிளை மருத்துவ அணியினர் செய்திருந்தனர்.