அதிராம்பட்டினம், செப்.02
கரோனா பேரிடரை முன்னிட்டு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுப்பட்டினம் கிளை சார்பில், 130-வது இரத்த தானம் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு, அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் கே ராஜிக் முகமது தலைமை வகித்தார். மாவட்ட மருத்துவரணி செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் முன்னிலை வகித்தார்.
இதில், தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை குருதி பரிமாற்ற அலுவலர் மருத்துவர் வேல்முருகன், இரத்த வங்கி ஆலோசகர் கண்ணன் உள்ளிட்டோர் அடங்கிய மருத்துவக்குழுவினர் கலந்துகொண்டு, 34 யூனிட் இரத்தத்தை டி.என்.டி.ஜே அமைப்பின் கொடையாளர்களிடமிருந்து தானமாகப் பெற்றனர்.
இந்நிகழ்வில், மாவட்ட துணைச் செயலாளர் பாவா உள்ளிட்ட அவ்வமைப்பினர் பலர் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைபிடித்து கலந்துகொண்டனர். முகாம் ஏற்பாட்டினை, புதுப்பட்டினம் கிளைத் தலைவர் ஹபீப் முகமது, துணைத்தலைவர் முகமது உசேன், துணைச் செயலாளர் சதக்கத்துல்லா, மாணவரணி சாகுல், மருத்துவரணி நபீல் மற்றும் செந்தலைப்பட்டினம் மருத்துவரணி பாரிஸ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.