.

Pages

Showing posts with label SDPI. Show all posts
Showing posts with label SDPI. Show all posts

Sunday, December 6, 2020

பாபர் மசூதி இடிப்பு தினம்: அதிராம்பட்டினத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், டிச.06
பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, அதிராம்பட்டினத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு, அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஜெ சாகுல் ஹமீது தலைமை வகித்தார். அக்கட்சியின் தஞ்சை  தெற்கு  மாவட்டத்தலைவர் என். முகமது புகாரி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாநில பொச்செயலாளர் முகைதீன் அப்துல் காதர், தமிழக  வாழ்வுரிமை கட்சி மாநில இளைஞரணித் தலைவர் ஜெரோன் குமார் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில், பெண்கள் உட்பட திரளானோர் பங்கேற்று, வழிபாட்டுத்தலங்கள் சட்டம் 1991 ஐ அமல்படுத்த வேண்டும், பாபரி மசூதி இடத்தை முஸ்லிம்களிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும், பாபரி மசூதியை சட்டவிரோதமாக இடித்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை, மத்திய அரசு மற்றும் நீதித்துறையை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

இதில், அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட துணைத்தலைவர் சாகுல் ஹமீது, அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் அகமது அஸ்லம், மாவட்டச்செயலாளர்கள் முகமது ரஹீஸ், முகமது அஸ்கர், மாவட்ட பொருளாளர் இத்ரீஸ், அதிராம்பட்டினம் பேரூர் துணைச்செயலாளர் சி.அகமது உட்பட அக்கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். 


Sunday, November 8, 2020

ஏரிப்புறக்கரை ஊராட்சியில் எஸ்டிபிஐ கட்சியினர் 3 இடங்களில் கொடி ஏற்றம்!

அதிராம்பட்டினம், நவ.08
எஸ்டிபிஐ கட்சி சார்பில், ஏரிப்புறக்கரை ஊராட்சியில் 3 இடங்களில் கொடி ஏற்ற நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

நிகழ்வுக்கு, அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் எஸ். அகமது அஸ்லம் தலைமை வகித்தார். அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.ஜெ சாகுல் ஹமீது, தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் முகமது ரஹீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் இணைச் செயலாளர் சி. அகமது வரவேற்றுப் பேசினார்.

இந்நிகழ்வில், அக்கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். இதில், ஏரிப்புறக்கரை ஊராட்சி கண்டியன் கொல்லை, காந்தி நகர், மஸ்னி நகர் ஆகிய 3 இடங்களில் கட்சி கொடி ஏற்றி வைக்கப்பட்டு, கொள்கை முழக்கமிடப்பட்டது.


Saturday, October 31, 2020

அதிராம்பட்டினத்தில் எஸ்டிபிஐ கட்சியின் அரசியல் பயிலரங்க நிகழ்ச்சி (படங்கள்)

அதிராம்பட்டினம், அக்.31
எஸ்டிபிஐ கட்சியின் சார்பில், அரசியல் பயிலரங்க நிகழ்ச்சி அதிராம்பட்டினத்தில் (30-10-2020) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு, அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் எஸ்.அகமது அஸ்லம் தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினர்களாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வழக்குரைஞர் என்.சஃபியா, தஞ்சை தெற்கு மாவட்டத்தலைவர் என்.முகமது புஹாரி ஆகியோர் சிறப்புரை வழங்கினர். பின்னர், பயிலரங்கில் பங்கேற்றோர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசினர்.

பயிலரங்கில், எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து பேசப்பட்டன. கட்சி சார்பில் பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய தொகுதிகளில் நிறுத்தப்படும் வேட்பாளர்களின் வெற்றிக்காக தீவிரமாக களப்பணியாற்றுவது, அனைத்து வாக்குச்சாவடிகளுக்கு பூத் கமிட்டி நியமிப்பது என்பன உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்பட்டன. இப்பயிலரங்கில், பெண்கள் உட்பட கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்வினை, அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் இணைச்செயலாளர் சி.அகமது தொகுத்தளித்தார். நிறைவில், அக்கட்சியின் செயற்குழு உறுப்பினர் எம்.ஜர்ஜிஸ் அகமது நன்றி கூறினார்.


Wednesday, September 30, 2020

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: நீதிமன்ற தீர்ப்பைக் கண்டித்து அதிராம்பட்டினத்தில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.30
பாபர் மசூதி இடிப்பு வழக்கு தொடர்பாக நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கண்டித்தும், பாபர் மசூதி இடிப்புக்கு காரணமானவர்களை சிறையிலடைக்க கோரியும் எஸ்டிபிஐ கட்சி தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில், அதிராம்பட்டினத்தில் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, அக்கட்சியின், தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் எம்.முகமது ரஹீத் தலைமை வகித்தார். அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் எல்.முகமது அஸ்கர், பொருளாளர் எம்.இத்ரீஸ்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தஞ்சை தெற்கு மற்றும் திருவாரூர் ஒருங்கிணைந்த மாவட்டங்களின் தலைவர் ஏ.ஹாஜா அலாவுதீன், அக்கட்சியின், தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் என்.முகமது புகாரி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். அக்கட்சியின் அதிரை பேரூர் இணைச் செயலாளர் சி.அகமது  கண்டன கோஷம் எழுப்பினார்.

இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஒளரங்கசீப், சமூக ஊடக அணி மாவட்டத் தலைவர் முகமது அசாருதீன், அதிரை பேரூர் தலைவர் எஸ். அகமது அஸ்லம், மதுக்கூர் பேரூர் தலைவர் மாப்பிள்ளை தம்பி, மல்லிப்பட்டினம் தலைவர் அப்துல் பகத் உள்பட அக்கட்சியினர் திரளாக கலந்துகொண்டு நீதிமன்ற தீர்ப்பை கண்டித்தும், பாபர் மசூதி இடிப்புக்கு காரணமானவர்களை சிறையிலடைக்க கோரியும் முழக்கமிட்டனர். 

முன்னதாக, அக்கட்சியினர் அதிராம்பட்டினம் கடைத்தெரு முக்கத்தில் இருந்து கண்டன முழக்கமிட்டவாறு பேரணியாக சென்று பேருந்து நிலையம் சென்றடைந்தனர்.