.

Pages

Thursday, July 3, 2014

பள்ளி மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்கப்படுமா ?

மாணவர்கள் கல்வி கற்காமல் இடைநிற்றலை தவிர்க்க தமிழக அரசின் பள்ளி கல்வி துறை மூலமாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா நோட்டு, புத்தகங்கள், புத்தகப்பை, காலணிகள் ,சீருடைகள், மிதிவண்டிகள், மடிக்கணினி, சத்துணவு உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறது.
               
இதன் மூலம் உயர்நிலைப்பள்ளி வரையிலும் படிக்கும் மாணவர்கள் விகிதாச்சாரம் அதிகரித்து வருகிறது .குழந்தை தொழிலாளர் முறையும் குறைந்துள்ளது .அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று இலவச பஸ் பாஸ் திட்டமும் ஒன்று .இதன் காரணமாக குக்கிராமத்தில் பிறந்த மாணவரும் நகர்ப்புறங்களில் வந்து உயர்கல்வி கற்கும் வாய்ப்பு ஏற்பட்டது .
               
இந்த ஆண்டு பள்ளி திறந்த நாளிலேயே புத்தகங்கள் ,குறிப்பேடுகள் ,சீருடைகள் உள்ளிட்ட விலையில்லா பொருட்களை மாணவர்களுக்கு வழங்கியது பள்ளிக்கல்வி துறை .ஆனால் இதுவரை இலவச பஸ் பாஸ் புதிய மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை .
         
ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு லேமினேசன் செய்யப்பட்ட ஸ்மார்ட் கார்ட் வடிவிலான அடையாள அட்டையை போக்குவரத்து கழகங்கள் மூலமாக அரசு வழங்கியது .கடந்த ஆண்டில் சுமார் 25 லட்சம் மாணவர்கள் பலனடைந்ததாகவும் ,இவ்வாண்டு சுமார் 27 லட்சம் மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாவும் தகவல்கள் வெளியாகின.
            
ஆனால் இதுவரை புதிய பஸ் பாஸ் வழங்கப்படாததால் ,அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் மாணவர்கள் கட்டணம் செலுத்தி பயணம் செய்யும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.பழைய மாணவர்கள் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பஸ் பாஸை ஆகஸ்ட் வரை பயன்படுத்தி கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது .சில மாணவர்கள் புதிய பஸ் பாஸ் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பழைய பாஸை தூக்கி எறிந்தனர்.நடப்பு ஆண்டில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கும் இதுவரை வழங்கப்படாததால் கட்டணம் செலுத்தியே பயணிக்கின்றனர்.நாளொன்றுக்கு மாணவர்கள் குறைந்த பட்சம் பத்து ரூபாய் செலவழிக்கும் நிலை உள்ளது .தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரை பெரும்பாலான இடங்களில் புதிய பஸ் பாஸ் இதுவரை வழங்கப்படவில்லை என்றே தெரிகிறது.
       
இதுகுறித்து போக்குவரத்து துறை வட்டாரங்களில் விசாரித்த போது...
பழைய பாஸ் வைத்துள்ள மாணவர்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். கடந்த ஆண்டில் தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியில் மட்டும் சுமார் 5,500 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது .இவ்வாண்டு சுமார் 1,500 விண்ணப்பங்கள் மட்டுமே வரப்பெற்றுள்ளது.இதுசம்பந்தமாக பள்ளி தலைமை ஆசிரியர்கள் ,கல்வி துறை உயரதிகாரிகள் ஆகியோரை தொடர்பு கொண்டு பஸ் பாஸ் விரைவில் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றனர்.
         
கல்வி துறை வட்டாரங்களில் விசாரித்த போது...
மாணவர்களிடம் புகைப்படம் மற்றும் இதர தகவல்களை சேகரித்து தர சற்று தாமதம் ஆகின்றது.அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு விரைவில் பஸ் பாஸ் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்போம் என்றனர்.
     
அதுவரையில் பள்ளி சீருடையுடன் வரும் மாணவ,மாணவியரை இலவச பயண செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் சமூக ஆர்வலரும் ,வழக்கறிஞருமான செருவை ப.பாலசுப்பிரமணியன் .அரசு விரைவில் நல்ல முடிவு எடுக்க வேண்டும் .மாணவர்கள் ,பெற்றோர்கள் கவலை தீர்க்கப்பட வேண்டும்.

செய்தி கட்டுரை : எஸ். ஜகுபர் அலி 
பேராவூரணி.

3 comments:

  1. நண்பர் ஜெஹபர் அலியின் நியாமான தலையங்கம் !

    பள்ளி மாணவ மாணவிகளுக்கு பஸ் பாஸ் வழங்க அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.
    சஹர் ரமழான் முபாரக்.

    இதை முயன்று கிடைக்காதவர்களுக்கு பெற்று கொடுக்கலாமே. துணைக்கு யாராவது வந்தால் நான் ரெடி.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  3. இலவச பஸ் பாஸ் முதல் இடஒதிக்கீடு வரை அரசின் குளற்படி இருக்கத்தான் செய்கிறது, ஆட்சியாளர்க்கு பழிவாங்கும் நடவடிக்கைக்கு தான் நேரம் இருக்குது தவிர அதிகாரிகளின் செயல்பாடு பற்றி ஆலோசனை பண்ண நேரம் இல்லை.

    குக்கிராம மாணவனுக்கு பஸ் பாஸ் வழங்கினாலும் அரசு பஸ் நிற்கிறதா என்றால் இல்லை இதனால் பால் வண்டி வாகனத்தில் பயணித்து விபத்து தான் நடக்குது.

    வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மாணவர்கள் நிற்கும் இடத்தில் பஸ் நிற்க ஏற்பாடு செய்ய வேண்டும்,

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.