.

Pages

Showing posts with label தலையங்கம். Show all posts
Showing posts with label தலையங்கம். Show all posts

Monday, November 2, 2020

அறிவு சார் அற்புத தகவல்கள் சில!

அதிரை நியூஸ்: நவ.02
நாம் சில மிருகங்கள், பறவைகள், சம்பவங்கள், பொருட்கள் பற்றி தவறான எண்ணங்களுடன் உள்ளோம். ஆனால் உண்மைகள் என்னென்ன என்று இந்த கட்டுரைகள் மூலம் காணலாம். பரபரப்பான அரசியல் சூழலில் சற்று அறிவு சார்ந்த தகவல்களை உங்களுக்குத்கொடுக்கலாம் என எண்ணுகின்றேன்.

1) பல லட்ச ஆண்டுகளுக்கு முன்பு மங்கோலியா, சீனா, மெக்ஸிகோ, ஆப்ரிக்கா, அர்ஜென்டைனா மற்றும் இந்திய துணைக் கண்டத்தில் வாழ்ந்த டைனாசர் படிமங்கள், முட்டைகள் கண்டெடுக்கப் பட்டுள்ளன என்று உங்களுக்குத் தெரியும். அவைகள் காலப் போக்கில் இயற்கை சீற்றத்தால் அழிந்து விட்டன. அந்த மிருகம் பறவையினம் என்றும் அவைகள் இறக்கை கொண்டுள்ளது என்றும் அறியப்பட்டுள்ளது. அவைகளை வைத்து பறக்கும் ‘ரோபோ பாம்ப்’ என்றும் படம் எடுத்துள்ளனர். அவைகள் சில அவதாரங்களை வாகனமாகவும் பயன் பட்டதாகவும் இலக்கிய கதைகளில் கூறப்படுகிறது உங்களுக்கு ஆச்சரியமாக தெரியவில்லையா!

2) டால்பின் என்ற மீன் தெற்காசியா, மற்றும் அமேசான்  நீர் நிலைகளில் வாழ்ந்து வருவதனை நீங்கள் அறியலாம். அவைகள் அடிக்கடி தண்ணீருக்கு மேலே துள்ளி பார்வையாளர்களை கவரும். அவைகள் ஏன் அடிக்கடி நீருக்கு மேலே வருகின்றது என்றால் அவைகள் பத்து நிமிடங்களுக்கு மேல் தண்ணீருக்குள் மூழ்கியிருக்க முடியாது. ஆனால் கரடியினத்தினைச் சார்ந்த ‘ஸ்லோத்’ என்ற மிருகம் நீருக்கு அடியில் சுவாசிக்காமல் 40 நிமிடங்கள் வரை தம் பிடிக்க முடியுமாம்.

3) தீக்கோழி தென் ஆப்பிரிக்கா, இந்தியாவில் ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் வாழுகின்றன. அவை 9 அடி வரை வளரும். அவை எதிரி மிருகங்கள் கண்டால் தலையினை மண்ணுக்குள் புதைத்து விடுவதினைப் பார்த்திருக்கின்றோம். அவற்றினைப் பற்றி ஒரு பழமொழி கூட இருக்கின்றது. 'தீக்கோழி தலையினை மண்ணுக்குள் புதைப்பதால் உலகமே இருண்டு விடுவதில்லையென்று'. ஆனால் உண்மையில் தலை முழுவதும் மண்ணுக்குள் புதைத்தால் அது மூச்சுத் திணறி இறந்து விடும். ஆகவே அவை மூச்சு விடும் அளவிற்குத் தான் தன் தலையினை மண்ணுக்குள் புதைக்குமாம்.

4) அமெரிக்காவில் அனைத்து மகளிருக்கும் ஓட்டுரிமை 1920 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இங்கிலாந்தில் மக்கள் பிரநிதிச்சட்டம் 1918 படி 21 வயதான ஆண்களுக்கும், 30 வயதான பெண்களுக்கும் ஓட்டுரிமை வழங்கப் பட்டது.1928 சட்டப்படி தான் அனைத்து 21 வயதானவர்களுக்கும் ஓட்டுரிமை வழங்கப் பட்டது. ஆனால் இந்தியாவில் பிரிட்டிஷ் அரசு 1918ம் ஆண்டு சொத்துரிமை உள்ள பெண்களுக்கு மட்டும் ஓட்டுரிமை வழங்கியது. 1950ம் ஆண்டு அரசியல் சட்டத்தில் தான் 21 வயதான ஆண், பெண் இரு பாலாருக்கும் ஓட்டுரிமை கொடுக்கப் பட்டது.

5) இது வரை நிலவில் தண்ணீர் இல்லையென்று பல விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் சொல்லியுள்ளார்கள். ஆனால் அக்டோபர் மாதம், 2020 அமெரிக்கா நாசா விண்வெளி  விஞ்ஞானிகள் நிலவில் தண்ணீர் துளிகளை கண்டறிந்தனர். அதன் படி மனிதர் வாழலாம் என்ற நம்பிக்கை வந்து விட்டதாம்.

6) விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் இருக்கும் விஞ்ஞானிகள் கூடத்திலிருந்து வெளியே வந்தால் காற்றில் பறப்பது போல பூமி ஈர்ப்பு சக்தியில்லாமல் மிதப்பது போல தோன்றுவார்கள். தற்போது அந்த விஞ்ஞானிகள் யாரும் அழுதால் கூட நீர் அவர்களின் தாடையில் ஒரு உருண்டையாக நிர்ப்பதினைக் காணலாம். ஏனென்றால் அதற்கு ஈர்ப்பு சக்தியில்லாததால் கீழே விழவில்லை!

7) உலக கால்பந்தாட்ட வீரர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் கால்களை அலங்கரிக்கும் ‘அடிடாஸ் மற்றும் பூமா’ என்ற காலணிகளுக்குச் சொந்தக் காரர்கள் ‘ஆடி மற்றும் ரூடி டேஸ்லர்’ இருவரும் அமெரிக்க சகோதரர்கள். அவர்கள் முதன் முதலில் 1929ல் இணைந்து கம்பனியின ஆரம்பித்தனர். அது எப்போது பிரபலமானது என்றால் 1936ம் ஆண்டு ஜெர்மனி தலைநகரம் பெர்லினில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் அவர்கள் கொடுத்த காலணிகளைக் கொண்டு ஒடித்தான் அமெரிக்கா தடைகளை வீரர் ‘ஜெஸ்ஸி ஓவென்’ 4 தங்கப் பதக்கங்களை பெற்றுத் தந்ததால் அவைகள் மிகவும் பிரபலியமானது. அதன் பின்பு அவர்களுக்குள் கருத்து மோதல்கள் வந்து ஆடி என்பவர் ‘அடிடாஸ்’ காலணிகளையும், ரூடி ‘பூமா’ என்ற காலணிகளையும் தயாரிக்க ஆரம்பித்தனர்.

8) உலகிலேயே ஈராக்-ஈரான் நாடுகளுக் கிடையே நடந்த 8 வருடப் போர் கேள்விப் பட்டிருக்கின்றோம், ஆனால் உலகிலேயே 38 நிமிடங்களுக்குள் நடந்த போரினை கேள்விப்பட்டிருக்கின்றோமா? 

இந்திய கடற்பகுதி மத்திய ஆப்ரிக்க நாடான ஜான்சிபார் என்ற குட்டித் தீவின் சுல்தான் இறந்து விட்டார். அவருக்குப் பின்பு 1896ல் அரியணையில் ஏறிய சுல்தான் பிரிட்டிஷ் அரசினை எதிர்த்தும், தன்னிச்சையாக ஆட்சி செய்ய ஆரம்பித்தார். அதனை எதிர்பார்க்காத பிரிட்டிஷ் அரசு தனது போர் கப்பலை அனுப்பி குண்டு மழை அந்த தீவின் மீது வீசி அந்த தீவினை 38 நிமிடங்களில் கைப்பற்றியது தான் மிக குறுகிய கால போராக கருதப் படுகிறது.

9) நியூஜிலாந்து நாட்டினை ஏன் ‘கிவிஸ்’ (Kiwis}  என்று அழைக்கின்றோம் தெரியுமா? கிவிஸ் என்றால் தமிழில் கூஸ்பெரி பழம் என்கின்றோம்.  அந்த செடிகள் சீனர்களால் வளர்க்கப் பட்டு வந்தது. அதனை நியூஜிலாந்துக்கு அன்பளிப்பாக சீனர்கள் வழங்கினர். அந்தப் பழம் நியூசிலாந்து  நாட்டினர் விரும்பி சாப்பிட ஆரம்பித்தனர். ஆகவே அந்த செடிகள் பெரும் அளவிற்கு வளர்க்கப்பட்டது. பின்பு அந்தப் பழங்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்தனர். அங்குள்ள மக்கள் அதனை பெருமளவிற்கு விரும்பினர். ஆகவே தான் அந்த நாட்டு மக்களை கிவிஸ் என்று அழைக்கின்றனர்.

10)  ஒரு இடத்தில் தீ ஏற்பட்டால் நாம் வெறும் தண்ணீரை ஊற்றினால் தீ அணைய நீண்ட நேரமாகும். ஆனால் தீயணைப்புப் படையினர் தண்ணீரை குழாய் மூலம் தண்ணீரை பீச்சியடித்தால் அணைந்து விடுகிறதே ஏன் தெரியுமா? அதன் காரணம் என்னெவென்றால் அந்த தண்ணீருடன் ‘பொட்டாசியம் பை கார்போனேட்’ என்ற வேதியப் பொருளை கலந்து தண்ணீர் அடிப்பதால் தீ சீக்கிரமே அணைந்து விடுகிறது.

11)  நீங்கள் பெரிய பாம்பு சிறிய பாம்பினை விழுங்குவதினைப் பார்த்திருப்பீர்கள். தவளைகள் பெரிய கண்களைக் கொண்டுள்ளன. அவைகள் இறையினை விழுங்கும்போது கண்களை மூடிக் கொள்ளும். அது ஏன் தெரியுமா?  தவளை இறையினைப் பிடித்ததும், அதன் கண்கள், அதன் விழிக் குழிக்குள் தள்ளும். பின்பு அந்த விழிகளை மேல் நோக்கித் தள்ளி வாயில் உள்ள உணவினை வயிற்றுக்குள் தள்ளிவிட்ட பின்பு தான் கண்ணைத் திறக்கும்.

12) ஒட்டகச் சிவிங்கி ஆப்பிரிக்க நாடுகளான அங்கோலா, ஜாம்பியா நாடுகளில் அதிகமாக காணப் படும். அவைகள் ஏன் தனது நாக்கினை வெளியே தொங்கப் போட்டுக் கொண்டு வருகின்றன, ஏன் என்று தெரியுமா. முதலில் அந்த நாக்கின் நீளம் 8 அங்குலம் கொண்டது என்று காணலாம். அதன் பின்பு நாக்கு நீல நிறத்தில் இருக்கும். அந்த நாக்கு பாலைவனம், முள் காடுகளில் உள்ள வெயிலின் கதிர் வீச்சிலிருந்து பாதுகாக்கின்றது.

13) சிகரெட் பற்றவைக்கும் தீப்பட்டி கண்டு பிடிக்கும் முன்பு 'ளைட்டரை' கண்டு பிடித்து விட்டார்கள். 1823 ம் ஆண்டு ஜெர்மன் வேதியல் நிபுணர் ‘டோபனீர்’ என்பவர் தொழிற்சாலைக்கு தேவையான லைட்டரை கண்டு பிடித்தார்.  3 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிற் புரட்சிக் காரணமாக ஆங்கிலேய வேதிய நிபுணர் தொழிற்சாலைக்கு தேவைப் படும் லைட்டரினை கண்டு பிடித்து, அது இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் பரவி தீப்பெட்டி தொழிற்சாலைக்கு வழி வகுத்தது.

14) ஒருவர் மகிழ்ச்சியான குடும்ப நிகழ்ச்சிகளான பிறந்த நாள், திருமண நாள், கல்யாண நாள் போன்ற வெற்றிக்கு பின்பு இறப்பதினை கேள்விப் பட்டிருக்கின்றோம். அப்படி ஏன் நடக்கின்றது என்றால் ஒருவர் மகிழ்ச்சியான தனது வயதிற்கேற்ற உணவினை சாப்பிடாதலால் மாரடைப்பால் மரணம் ஏற்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆகவே வயதிற்கு மாறாக சாப்பிடுவதும், புணர்வதும் உடல் சுகவீனங்களுக்கு வழி வகுக்கும். ஏன் இட்லியினை போட்டிபோட்டு சாப்பிட்டு தொண்டையில் அடைத்து உயிர் போவதினை பத்திரிக்கை மூலமாக அறிந்திருப்பீர்கள். ஆகவே எதற்கும் ஒரு அளவு உள்ளது என்று விழாக்களில் மூக்குப் பிடிக்க உண்ண  வேண்டாம்.

15) நீங்கள் வாய்க்குள் ஹம்மிங் என்ற ரீங்காரம் செய்யும் ஒலி எதன் மூலம் வருகின்றது தெரியுமா? அவ்வாறு ஹம்மிங் செய்யும்போது காற்று மூக்கு வழியே வெளியேறும். நீங்கள் பரிசோதனைக்காக மூக்கினைப் பிடித்துக் கொண்டு ஹம்மிங் செய்யுங்கள் பார்க்கலாம். ஒலி வராது. ஆகவே அரை மூக்குள்ளவர்களை மூக்குறையா என்று அழைக்கின்றோம். அவர்களுக்கு ஒலி வருவது குதிரைக்கொம்பேயாகும்.

16) நமது உடலில் ஓடும் ரத்தம் சிகப்பாக இருந்தாலும், வெளியே இருந்து பார்க்கும்போது அது நீல நிறமாக காட்சியளிக்கும். அது ஏன் தெரியுமா? நமது ஒளி உடலில் உள்ள திசுக்களினை ஊடுருவி நரம்புகளில் ஓடும் ரத்தத்தினை பார்ப்பதால் ரத்தம் நீல நிறமாக காட்சியளிக்கின்றதாம்.

17) நாம் சாப்பிடும் மிளகாய் ஏன் காரமாக இருக்கின்றது என்று தெரியுமா?  மிளகாயின் தோலில் காரத் தன்மையில்லை, மாறாக மிளகாய் உள்ளே இருக்கும் நரம்பில் ஒட்டிக் கொண்டிருக்கும் விதைகளில் தான் காரம் அதிகமாக இருக்கும். நீங்கள் மிளகாயினை வெயிலில் காயவைத்து, அதனை அணில் போன்ற விலங்குகள் அல்லது புறா, காக்கை போன்ற பறவைகள் கொத்திவிட்டு வெறும் தோலினை மட்டும் அரைத்தால் காரம் இல்லாதிருப்பதினைக் காணலாம்.

18) உலகிலேயே பெரும் பாலைவனம் என்று ஆப்பிரிக்கா நாட்டின் சகாரா பாலைவனத்தினை சொல்வோம். ஆனால் அமெரிக்கா பூலோக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆராய்ச்சியில் அண்டார்டிகா தான் பிக பிரமாண்டமான பாலைவனமாக கூறுகின்றனர். அவை பெரும்பாலும் பனிக்கட்டியால் மூடப் பட்டிருக்கும். சகாரா பாலைவனம் 85,46,960 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு. ஆனால் அண்டார்டிகா 1,42,44,934 கிலோ மீட்டர் பரப்பளவாகும்.

19) கி.பி. 60 ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த ரோம சக்கரவர்த்தி ஜூலியஸ் சீசர் ஏன் அவ்வாறு அழைக்கப் பட்டார் தெரியுமா? அவர் பிரசவத்தின் போது அவருடைய தாயாருக்கு 'சிசேரின்' என்ற அறுவை சிகிச்சை செய்து பிறந்ததால் அவருக்கு அந்த பெயர் வந்ததாம். லத்தீன் மொழியில் 'Caedae' என்பதற்கு 'cut' என்று அர்த்தமாம்.

20) 'Lady Bird' என்ற சிகப்பு நிறவண்டு வயதினை எவ்வாறு விலங்கியல் நிபுணர்கள் நிர்ணக்கின்றனர் தெரியுமா? அந்த ஓட்டின் மேல் உள்ள கரும் புள்ளிகளை எண்ணி அதன் வயதினை நிர்ணயிக்கின்றனராம்.

21) மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் அறிவுத்திறனை தட்பவெப்ப சூழலுக்குஏற்ப எப்படி கணிக்கப் படுகிறது தெரியுமா. அமெரிக்கா ஆராய்ச்சியாளர்கள் 543 மாணவிகளை ஒரு கட்டிட அறைகளிலும் , அதே அளவிலுள்ள கட்டிட அறைகளில்  அதே அளவு மாணவர்களையும் வைத்து 33.8 டிகிரி சீதோஷ்ண அளவில் மாணவிகளின் அறைகளில் ஒவ்வொன்றாக சீதோஷ்ணத்தினை அதிகப் படுத்தும்போது வினாக்களுக்கு சரியான பதில்களை சொன்னார்களாம். அதே நேரத்தில் மாணவர்கள் அறைகளில் ஒவ்வொரு டிகிரியாக குறைக்கும்போது சரியான பதில்களைச் சொன்னார்களாம். இதிலிருந்து பெண்கள் வெட்பத்தினை விரும்புவர்களாகவும், ஆண்கள் குளிரினை விரும்புகின்றவர்களாகவும் இருப்பது தெரிகின்றதல்லவா?

நீண்ட கட்டுரைகள் தந்த எனக்கு வாசகர்களுக்கு ஒரு மாற்றாக அறிவு சார்ந்த செய்திகளை தர வேண்டும் என்று நினைத்து உங்களுக்கு மேற்படி தகவல்களை தந்துள்ளேன். அவைகள் பல உங்களுக்குத் தெரிந்திருக்கும், இருந்தாலும் தெரியாதவர்கள் தெரிந்து கொள்வதிற்காக இதனை எழுதியுள்ளேன்.

உங்களுடைய விருப்பு, வெறுப்பினை என்னுடன் தொடர்பு கொள்ள கீழ்கண்ட மெயில் விலாசத்தினை தேடவும்: mdaliips@yahoo.com


டாக்டர் ஏ.பீ. முகமது அலி, பிஎச்,டி, ஐ.பீ.எஸ் (ஓய்வு)

ஓய்வுபெற்ற மூத்த காவல்துறை அதிகாரி 
எழுத்தாளர்  
சமூக ஆர்வலர்

Saturday, August 22, 2020

GO கொரோனா!

அதிரை நியூஸ்: ஆக.22
கற்காலம் முதல் தற்காலம் வரை உலகில் ஏதாவது ஒரு பெயரில் தொற்றுநோய் கிருமிகள் வந்து மக்களை தாக்கிவிட்டு போய்க் கொண்டுதான் இருக்கிறது. இது ஒன்றும் புதிதல்ல என்றே சொல்லலாம். அந்த வரிசையில் தற்போது COVID-19 என்னும் வைரஸ் உலகையே அச்சுறுத்தி ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.

இதன் தாக்கத்தால் உலகெங்கும் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டு பலரது தொழில் முடங்கி பலர் வேலை இழந்து உள்நாட்டிலேயே அகதிபோல
அடுத்த மாவட்டத்திற்க்கு கூட செல்லமுடியாமலும்  அயல்நாட்டில் வசிக்கக் கூடியவர்கள் அவசரத்தேவைக்குக் கூட சொந்த ஊர் திரும்ப முடியாமலும் வயோதிகள் நோயாளிகள் கர்ப்பினி பெண்கள் மருத்துவமனை சென்று தக்க நேரத்தில் சிகிச்சை பெற முடியாமலும் அனைத்தையும் லாக் டவுன் ஆக்கி சோகத்தில் தத்தளிக்க வைத்து விட்டது இந்தக் கண்ணுக்குத் தெரியாத கொடூரக் கொரோனா வைரஸ்.

ஒருகாலத்தில் பெரியம்மை காலரா பேதி பன்றிக்காய்ச்சல், பறவைக் காய்ச்சல், டெங்குக் காய்ச்சல், யானைக்கால் நோய் சிக்கன் குனியா இப்படி பலவகை நோய்கள் வந்து மனித இனத்தை ஆட்டிப்படைத்தன. அந்த வகையில் தற்ப்போது கொரோனா பல மனித உயிர்களை பழிவாங்கி நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது.

இந்தக்கிருமி அயல்நாட்டின் வருகையாக காரணம் சொல்லப்பட்டாலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்களையும் வயதானவர்களையும் எளிதில் தாக்குகிறது.

இத்தகைய சூழ்நிலையில் நம் உடலின் சக்திக்குறைபாடுகளை கவனித்துக்கொள்வது மிக அவசியமாக இருக்கிறது. ஜலதோஷம் இருமல் காய்ச்சல் உடல் அசதி மூச்சுத்தினரல் சாதாரணமாக எப்போதும் மனிதர்களுக்கு இருந்தாலும் தற்போது இது கொரோனாவின் அறிகுறியாகவே சொல்லப்படுகிறது. உடல் உஷ்னத்தை கணக்கில் கொண்டு கொரோனா பாசிடீவ், நெகடீவ் சான்று கொடுத்தாலும் அது சிலருக்கு கொரோனா அல்லாது வேறு உடல் உபாதையாலும் உடல் உஷ்னத்தை அடைந்திருப்பதால் சரியாக தீர்மானிகக்க முடிவதில்லை.
தீவிர மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகே சரியாக அறியப்படுகிறது.

அடுத்து பார்ப்போமேயானால் இதுவரை கொரோனாவை நூறு சதவிகிதம் குணப்படுத்த சரியான மருந்து கண்டு பிடிக்க முடியாமல் உலக மருத்துவ மாமேதைகளே திணறிக் கொண்டிருப்பது அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகிறது.

எதுவாயினும் நாம் உண்ணும் உணவிலும், உடுத்தும் உடையிலும் நமது உடலை சுத்தமாக வைத்துக் கொள்வதிலும் சற்று அதிக கவனம் செலுத்த வேண்டும். நமது நடவடிக்கையும் பேணுதலும் சரியாக இருப்பின் எந்தக் கொரோனாவும் நம் அருகில் வராது.

இதுபோன்ற காலகட்டத்தில் அரசு சொல்லும் அறிவுரையின்படி சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் வெளியில் சென்று வீடு திரும்பும்போது அவசியம் கை, முகம் கழுவுதல் போன்றவற்றை தவறாது கடைபிடித்து நடப்பதாலும் இதிலிருந்து தப்பித்துக்கொள்ள வழிவகுக்கும்.

எதுவும் இயற்க்கைக்கு மாறாக பசுமையை அழித்து மாசுக்காற்றை பரவவிட்டு நிலத்தடியில் நீரின்றிச் செய்து நமது சுற்றுச்சூழலை மாற்றிவோமேயானால் இத்தகைய கிருமிகளின் ஆதிக்கம் வெவ்வேறு பெயர்களில் தோன்றிகொண்டே இருக்கும்.

இதனை தடுக்க அரசின் முயற்சியும் பொது மக்களின் ஒத்துழைப்பும் இயற்கையை அழிக்காமலும், சுகாதாரத்தை பேணியும் முடிந்தவரை நாம் முயற்சிப்போம். அயராது போராடிக் கொரோனாவை விரட்டுவோம். கொரோனாவை நாம் வெல்வோம்.

அதிரை மெய்சா


Thursday, July 23, 2020

ஊர் போற்றும் 'நல்லாசிரியர்' ஹாஜி எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன்!

அதிரை நியூஸ்: ஜூலை 23
கல்வியெனும் கண்ணைத் திறந்து மாணாவர்களை மாண்புடையோராய் மிளிரச்செய்யும் ஒரு அரும்பணி ஆசிரியப்பணி. ஊர் போற்றும் ஒரு நல்லாசிரியராக என்றென்றும் திகழ்ந்தவர் ஹாஜி S.K.M ஹாஜா முகைதீன் அவர்கள். இவர், தனது 80 வது வயதில் அதிராம்பட்டினத்தில் இன்று 23-07-2020 வஃபாத்தானார்.

இவர் ஒரு கல்வியாளராக மட்டும் இருந்ததில்லை. சமுக ஆர்வலராகவும், எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் என பன்முகத்திறனுடன் வலம் வந்தவர். தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதின் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பொறுப்பில் இருந்து, தனது 58 வது வயதில் பணி நிறைவு பெற்றார். கணிதப்பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருந்தாலும் தமிழ் இலக்கியம் மீது கொண்டுள்ள ஆர்வத்தால் சிறந்த சொற்பொழிவாளராகவும், எழுத்தாளராகவும் திகழ்ந்தவர். இவர் எழுதிய ‘என்றும் எதிலும் இஸ்லாம்’, கல்வி கற்போர் கடமை’ ஆகிய நூல்கள் வாசகர்களின் நன்மதிப்பை பெற்றவை.

ஆசிரியப்பணியின் போது, இவர் எழுதி இயக்கிய ‘மாவீரன் அலெக்ஸாண்டர்’, ‘தீரன் திப்பு சுல்தான்’ போன்ற நாடகங்களும், பள்ளி மாணவர்களுக்கான அறிவுத்திறன் போட்டிகளும் (வினாடி-வினா) வானொலியில் ஒலிப்பரப்பாகி அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘உமறுப்புலவரின் சிந்தனைகள்’ என்ற தலைப்பில் வானொலியில் உரை நிகழ்த்திருக்கிறார். அதேபோல் வாசிப்பை நேசித்தவர்.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் இவர் எழுதிய சமூக விழிப்புணர்வு நாடங்கள் பல்வேறு மேடைகளில் அரங்கேற்றுப்பட்டுள்ளன குறிப்பாக ‘தாயகமே உனக்காக’, திறக்கட்டும் சிறைக்கதவு’, ‘புலித்தேவன்’,அட்வகேட் சுந்தரம் BA., B.L, ‘மாவீரன் அலெக்ஸாண்டர்’, ‘தீரன் திப்பு சுல்தான்’ போன்றவை குறிப்பிடதக்கது ஆகும்.

அன்னையர் அன்புக்கு ஈடிணையுண்டோ?, குடியரசைக் கொண்டாடுவோம்!
குழந்தைகளைக் கொண்டாடுவோம் ~ குழந்தைகள் தினம், என்றும் நினைவில் வாழும் 'கல்வித்தந்தை' ஹாஜி S.M.S ஷேக் ஜலாலுதீன்!, ஆசிரியர்க்கெல்லாம் ஆசிரியர்!, இந்திய விடுதலைப் போரில் இஸ்லாமியர்களின் பங்களிப்பு !, உழைப்பின்றி உயர்வில்லை!, மறைந்து வரும் மனிதநேயம் !, மகளிருக்கு மாண்பளித்த மாநபி !, தேசிய இளைஞர் தினம் ~ இளைஞர்களும்; சமூக எழுச்சியும், வாழ்வின் வெற்றி !,
என்னைச் செதுக்கிய ஆசிரியச்சிற்பிகள்', கல்வி வளர்ச்சி நாள்,
'உழைப்பாளர் தினம்', உலக மகளிர் தினம்: ஜஹானாரா பேகம் - சிறப்பு பார்வை, 'நல்லாசிரியர்' தேர்வு செய்யும் தகுதி பெற்றவர்கள் மாணவர்கள் மட்டுமே, மதச்சாயம் பூசி மறைக்கப் பட்ட வரலாறு – நூலாய்வு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் 'அதிரை நியூஸ்' இணைய ஊடகத்தில் இவர் எழுதிய கட்டுரைகள் பல்வேறு தரப்பினரை கவர்ந்தவை மட்டுமல்ல, இக்கட்டுரைகள் அனைத்தையும் தொகுத்து நூலாக வெளியிட வேண்டும் என்பது அவரது இறுதி ஆசையாக இருந்தது.

மாணவர்களின் படிப்பிலும் மட்டுமல்லாமல் அவர்களின் ஒழுக்கத்திலும் அதிகக்கவனம் செலுத்தியவர். எளிமையின் ஒரு அடையாளமாகத் திகழ்ந்தார். இளம் ஆசிரியர்களின் ஆசானாகத் திகழ்ந்தவர்.

பள்ளிகளில் நடந்து வரும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் இவரது முன்னாள் மாணவர்கள் பலர் இவரது அருமை, பெருமைகளை பேசாத நாட்களே இல்லை எனலாம். இவர் ஆற்றிய கல்வித்தொண்டு குறித்து நெஞ்சம் நெகிழும் மலரும் நினைவுகளை மாணவர்கள் மேடைகளில் பகிர்ந்து கொள்வர்.

பணி நிறைவுக்கு பின் பல்வேறு சமூகப்பணிகளில் தன்னை அர்பணித்துக்கொண்டார். குறிப்பாக, அதிரை பைத்துல்மால் சேவையகத்தில் துணைத்தலைவராக இருந்து பல்வேறு சமூகப்பணிகளை தனது இறுதி மூச்சு உள்ளவரை ஆற்றியவர். நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகப் பொருப்பாளராக இருந்து மாணவர்களின் கல்வித்தரம் உயரவும், பள்ளியின் வளர்ச்சிக்கும் பெரிதும் உறுதுணையாக இருந்தவர்.

பணி ஓய்வுக் காலத்தில் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் நடக்கும் கல்வி, விளையாட்டு, கருத்தரங்கம், பட்டிமன்றம், குடியரசு தினம், சுதந்திர தினம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தி பரிசளித்து பாராட்டியவர்.

தேசிய நல்லாசிரியர் விருது’ பெறுவதற்குரிய அனைத்து சிறப்புகளை பெற்றிருந்தும் கல்வித்துறையால் இரு முறை விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டும், விருது கை நழுவிப்போனது அவருக்கு மட்டுமல்ல நமதூருக்கே பெரும் ஏமாற்றமே!

ஊரின் கல்வியின் அடையாளமாகத் திகழ்ந்தவர். கடந்த 2016 ஆம் ஆண்டு 'அதிரை நியூஸ் கல்வி - மற்றும் சாதனையாளர்கள் விருது வழங்கும் விழாவை தலைமை ஏற்று நடத்தியவர்.

எல்லாம் வல்ல இறைவன் அவர்களின் பாவங்களை மன்னித்து, நல் அமல்களை ஏற்று, ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனபதியை கொடுப்பானாக. ஆமீன்.

அவர்களின் பிரிவால் வாடும் அன்னாரின் உற்றார், உறவினர், குடும்பத்தார் அனைவருக்கும் வல்ல இறைவன் பொறுமையை வழங்குவானாக!

முன்னாள் மாணவர் சேக்கனா எம். நிஜாமுதீன்
(ஆசிரியர், அதிரை நியூஸ்)

Wednesday, June 3, 2020

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்!

அதிரை நியூஸ்: ஜூன் 03
மனிதன் பண்போடு வாழ கல்வியும், கேள்வியும் அவசியம். கேள்வி என்றால் என்ன என்று நீங்கள் கேட்கலாம், பெற்றோர், பெரியோர், ஆசான்கள், நண்பர் மற்றும் அறிவு சான்றோர் கூறும் அறிவுரையாகும். அவ்வாறு அறிவுரை சொன்னால் அவர்  எல்லாம் தெரிந்தவரில்லை என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. மாறாக அறிவுரை சொல்பவர் செய்த தவறினால் படிப்பினை பெற்று அந்த தவறை நீங்கள் செய்யக்கூடாது என்று சொல்வதாக எடுத்துக் கொள்ளவேண்டும். எவ்வாறு கட்டாந்தரையான தரிசு நிலத்தினை உழுது பயிரிட்டு வளம் செழிக்கும் பூமியாக மாற்றுகின்றோமோ அதேபோன்று தான் ஒருவரை நல் வழிப் படுத்தும் அறிவுரையாகும்.

1) பரீட்சை நேரத்தில் சில மாணவர்கள் இரவு முழுவதும் கண்விழித்துப் படிப்பர். ஆனால் பரீட்சை நெருங்கும் போது அவர்களுக்கு பயத்தில் உடல் நிலை சரியாக இருக்காது. அப்படிப் பயப்படுபவர்களை வீட்டிலிருக்கும் பெற்றோர், பெரியோர், வயதில் மூத்தோர் அவர்களிடம் பக்குவமாக நீ நன்றாக படித்துள்ளாய், நீ படிப்பது தான் பரிட்சையில் வரும், உனக்கு தெரிந்ததினை எழுது, தெரியாததினைப் பற்றிக் கவலைப் படாதேயென்று தைரியமூட்டினால் நிச்சயமாக மாணவர்கள் தேர்வில் வெற்றி வாகை சூட்டுவர்.

2) ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு தனி திறமை ஒளிந்திருக்கும். அதனை பெரியோர் தான் அவர்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும். உதாரணத்திற்கு மயிலின் குரல் எரிச்சலூட்டக் கூடியதாக இருக்கும். ஆனால் அது தனது வண்ணமிகு தோகையினை விரித்து ஆடினால் மயங்காதவர் மனிதராக இருக்க முடியாது. அதேபோன்று தான் ஒரு மனிதன் ஒரு செயலில் சோடையாக இருந்தால் அவன் எந்தத் துறையில் திறமை வாய்ந்தவன் என்று அறிந்து அவனிடம் எடுத்துச் சொல்லி ஊக்கம் கொடுக்க வேண்டும்.

3) சிலருக்கு தான் செய்யும் தவறு தெரியாது. அதனை பிறர் சுட்டிக் காட்டினால் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். உதாரணத்திற்கு ஒரு கல்லூரி மாணவனுக்கு ஆங்கிலப் பாடம் மிகவும் பிடிக்கும். அப்படிப் பட்ட மாணவன் ஆங்கிலப் பரீட்சையில் குறைந்து மதிப்பெண் பெற்றிருந்தான். வீட்டில் வந்து வினாத்தாளை திருத்தியவர்களை திட்டிக் கொண்டிருந்தான். அவனுடைய அப்பா, சரி, உன்னுடைய விடைத் தாளை வாங்கிப் பார்ப்போம் என்று அதனை வங்கியும் பார்த்து பின்பு மகனிடம் சொன்னார், ஆசிரியர் சரியாகத் தான் உன்னுடைய விடைத்தாளை திருத்தியுள்ளார் என்று தந்தை சொன்னது தான் தாமதம், அந்த மகன் தந்தைமேல் கோபப் பட்டு அறைக்கதவினை சாத்திக்கொண்டான். சிறிது நேரம் சென்று அப்பா அறைக்கதவினை தட்டி,'மகனிடம் சொன்னார், 'நீ உன்னுடைய தவறினை ஒப்புக் கொண்டு இனிமேல் அந்தத்தவறினை செய்யமாட்டேன் என்று நினைக்கவேண்டும். அவ்வாறு இல்லாமல் தான் செய்தது சரிதான் மற்றவர் செய்தது சரியில்லை என்று நினைத்தால் வாழ்க்கையில் முன்னேற முடியாது' என்று சொன்னார். அன்று தந்தை சொன்ன அறிவுரை தன்னுடைய கல்லூரி வாழ்விலும், நிஜ வாழ்விலும் வழுக்கி விழவேயில்லையாம்.

4) ரஸ்கின் பாண்ட் என்ற ஆங்கில எழுத்தாளர், 'உலகில் உள்ள பல குழப்பங்களை எண்ணிக் கொண்டே போனால் அது குப்பை மேடுபோல காட்சி தந்து வாழ்க்கையில் வெற்றியடைய தடைக் கல்லாக மாறிவிடும். அப்படி உங்கள் பாதையில் வரும் குழப்பங்களை நீர்குமிழிபோல எண்ணி மறந்து வீறு நடைபோட வேண்டும்' என்று கூறியுள்ளார்.

5) ஒரு வாலிபன் தன் பெற்றோர், முன்னோர் சேர்த்து வைத்த செ ல்வத்தினை வைத்துக் கொண்டு பெருமை படக்கூடாது. மாறாக அந்த செல்வத்தினை கட்டி காப்பாத்தியும், அதனை பயனுள்ள வழியில் செலவு செய்து மட்டும் போதாது, தானும் உடல் வருத்தி உழைத்தால் தான் உயர்வு பெறமுடியும்.

6) ஒரு வியாபாரிக்கு தனது வியாபாரத்தில் லாபமும் இருக்கும், நஷ்டமும் இருக்கும். லாபாக் கணக்கில் சந்தோசப் பட்டுவிட்டு, தொழில் நலிவடையும்போது இரண்டு கால் முட்டிக்குமிடையே தலையினை கவிழ்த்துக் கொண்டு இருக்காமல், அந்த தொழிலினை தூக்கி நிறுத்த என்னென்ன வழிகள் என்று ஆய்வு செய்ய வேண்டும். வானத்தில் கும்மிருட்டில் நட்சத்திரங்கள் பிரகாசமாகி மின்னும். ஆகவே நாம் இருட்டான வானத்தினைப் பார்த்து பாடம் படிக்காமல், மின்னும் நட்சத்திரங்களை பார்த்து பாடம் படிக்க வேண்டும்.

7) இந்திய கிரிக்கட்டில் சிறந்த கேப்டனாக கருதும் விராட் கோலி சிறு வயதில் டெல்லி கிரிக்கட் அகடாமியில் சேர அவருடைய தந்தை பலரை பார்த்திருக்கின்றார். ஆனால் அவர்கள் எல்லாம் அவருடைய உருவத்தினைப் பார்த்து சந்தர்ப்பம் அளிக்கவில்லையாம். அப்போது அவருடைய அப்பா சொன்னாராம் நீ மற்றவர்கள் விளையாடுவதைப் பார்த்து பயிற்சி எடு பிற்காலத்தில் சிறந்த கிரிக்கெட் வீரராகலாம் என்றாராம். அப்பா செய்த முயற்சி கண்டு பெருமைப் பட்ட விராட் கோலி நாம் ஊர் மெச்ச விளையாடவேண்டும் என்று முடிவெடுத்தாராம். இன்று அவரை உலகமே பாராட்டுகிறது.

8) ஒரு சிலர் தனது தொழிலில் முன்னேற முடியவில்லையென்று குடும்பப் பொறுப்பினை விட்டுவிட்டு சந்நியாசம் போகிறேன் என்று ஒவ்வொரு வணக்கஸ்தலத்திற்கும் போய் காலம் கழிப்பர்  அப்படிப் பட்டவர்களுக்கு, 'ஆங்கிலேய பதினெட்டாம் நூற்றாண்டு கவிஞர் லார்ட் பைரோன், 'read the bible and mind your purse' (அதாவது நீங்கள் மத புத்தகங்கள் படியுங்கள், ஆனால் உங்கள் பையில் காசும் இருக்கின்றதா என்று பார்த்துக் கொள்ளுங்கள்) என்ற அருமையான அறிவுரை வழங்கியுள்ளார்.

9) தானம் செய்வதால் உங்களது செல்வம் குறைந்து விடுவதில்லை. அதேபோன்று பிறருக்கு உதவி செய்து விட்டு அதனை தண்டோரா போட்டுச் சொல்லும் பழக்கம் கூடாது. அதற்கான பிரதிபலனையும் எதிர்பார்க்கக் கூடாது.

10) உங்கள் முகம் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பதைத்தான் எல்லோரும் எதிர்பார்ப்பார்கள். Harry Potter என்ற ஆங்கில நாவலை எழுதிய ஜே.கே.ரவ்லிங், 'வாழ்க்கையில் வழுக்கி விழாதவர் எவருமிலர். ஆனால் தோல்வியின் படிப்பினை தெரிந்துகொண்டால் நீங்கள் முன்பைவிட வலிமையானவர் ஆவீர்' என்று கூறியுள்ளார்.

11) ஆங்கிலேய எழுத்தாளரும், நன்கொடையாளரும், 400 நிறுவனங்கள் நடத்தும் தொழிலதிபருமான ரிச்சர்ட் ப்ரண்ட்ஸன் தாயார் அவருக்கு ஆரம்பத்தில் சொன்ன அறிவுரை என்னெவென்றால், 'நீ ஒரு தொழிலில் நஷ்டம் அடைந்தால் அதனை பற்றி கவலைப் படாது, உன்னுடைய முயற்சியில் மறு தொழில் தொடங்குவதில் ஈடுபட வேண்டும்' என்று சொல்வாராம். அவர் சொன்ன அந்த அறிவுரையினை வேத வாக்காக எண்ணி இன்று  400 தொழில்களுக்கு அதிபராக இருப்பதுடன், அந்த தொழிலில் கிடைக்கும் லாபத்தில் சிறந்த நன்கொடையாளர் என்றும் போற்றப் படுகிறாராம்.

12) அமெரிக்காவில் கறுப்பின கூடைப் பந்து தலை சிறந்த வீரராக கருதப் படும் மைகேல் ஜோர்டன் தற்போது பதினைந்தாயிரம் கோடி செல்வந்த தொழிலதிபராக விளங்குகிறார். அவர் எப்படி தன்னுடைய விளையாட்டில் கொடிகட்டி பறந்தார் என்பதினை வாழ்க்கையில் உள்ள படிப்பினையாக கூறும்போது, 'தன்னுடைய கூடைப் பந்து விளையாட்டில் கிட்டத்தட்ட 9000 இலக்குகளை தவறவிட்டு 300 விளையாட்டுப் போட்டிகளில் தோல்வி யடைந்து உள்ளேன். ஆனால் அதனைப் பற்றி வீணான கவலை கொள்ளாது தொடர்ந்து விளையாடியதால் பிற்காலத்தில் புகழுடன் விளங்க முடிந்தது' என்று கூறியிருப்பது ஒரு உலக கூடைப் பந்து ஜாம்பவானும் பல தோல்வியை தழுவிதான் வெற்றிவாகை சூடியுள்ளான் என்று எடுத்துக் கொண்டு திருவள்ளுவர் சொன்னதுபோல, செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்-அச்செல்வம் செல்வத்துளெல்லாம் தலை' யாக கருதி நல்ல அறிவுரைகளை புன்முறுவலுடன் ஏற்று நடந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்று கூறலாமா!

டாக்டர் ஏ.பீ. முகமது அலி, பிஎச்,டி, ஐ.பீ.எஸ் (ஓய்வு)
ஓய்வுபெற்ற மூத்த காவல்துறை அதிகாரி 
எழுத்தாளர்  
சமூக ஆர்வலர்

Monday, December 2, 2019

குடும்ப உறவை சிதைக்கும் தேர்தல் திருவிழா!

அதிரை நியூஸ், டிச.02
தமிழகத்தில் டிச.27 மற்றும் 30 தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையர் பழனிசாமி இன்று திங்கட்கிழமை காலை அறிவித்துள்ளார். இதில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.

ஒவ்வொரு வருடமும் வந்து போகும் பண்டிகை திருவிழாக்களில் ஆங்காங்கே சிதறி கிடக்கும் குடும்ப உறவுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து குதூகலிக்கும் சூழலை 5 வருடத்திற்கு ஒருமுறை வந்து போகும் தேர்தல் திருவிழா சிதைத்து விடுகிறது.

மாமன், மச்சான் உறவுகளை கூட வேட்பாளர் என்ற பெயர் தாங்கி ஆயுதம் கீறி கிழித்து விடுகிறது. ஒரே வீட்டில் அண்ணன், தம்பிகள் வெவ்வேறு கட்சிகளின் வேட்பாளர்களாக களம் காணும் பிரிவினை என்னும் அதிசயங்கள் நிகழும் களமே தேர்தல் திருவிழா.

எந்த முறையும் இல்லாமல் இந்த முறை உள்ளாட்சிகளில் 50% விழுக்காடு இட ஒதுக்கீடு பெண்களுக்கு வழங்கப்பட்டு விட்டதால்...வேட்பாளர் பஞ்சம் மேலோங்கும் என்ற கற்பனை கனவை நிர்மூலமாக்கி விட்டது இன்றைய தேர்தல் திருவிழா.

400 ஓட்டுகள் உள்ள வார்டுகளில் கூட 12 பேர் களம் காணும் அரசியல் திருவிழா இது. விலை மதிக்க முடியாத வாக்குரிமை என்னும் ஜனநாயகத்தை பணம் கொடுத்து விலை நிர்ணயம் செய்து விட்ட ஊழல் அரசியல் வியாதிகளின் பிடியில் சிக்கிவிட்ட சுயநலவாதிகளின் போர் முரசு கொட்டும் இடமாய் காட்சி தருகிறது தேர்தல் திருவிழா.

மக்களால் உள்ளாட்சி தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயகத்தை மாற்றி கவுன்சிலர்களால் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் முறையே தற்போது குதிரை பேரத்தை நோக்கிய பயணத்தை வாக்காளர்களிடமும் வேட்பாளர்களிடமும் உருவாக்கி விட்டது தேர்தல் திருவிழா.

ஓட்டுக்கு 300 ரூபாய் என்ற விலை கொடுத்து 45 ஆயிரம் செலவில் 150 ஓட்டுக்கள் பெற்றால் கூட வார்டில் வெற்றி பெற்று விடலாம் என்ற கணக்கின் படி களம் காணும் சில வேட்பாளர்கள், சேர்மன் தேர்வில் 5 லட்சம் வரை விலை பேசி, போட்ட காசை திருப்பி எடுத்து விடுவோம் என்ற கனவில் மிதக்கும் தேர்தல் திருவிழா இது.

காலமெல்லாம் மக்கள் பணி செய்து வரும் பொதுநல ஊழியர்கள் தங்களுக்கான அரசியல் அங்கீகாரம் கிடைத்து விடாதா? என்ற எதிர்பார்ப்பில் களம் காணும் இந்த தேர்தல் திருவிழா அவர்களுக்கு வெற்றியை கொடுக்குமாயின் அதுவே அர்த்தமுள்ள திருவிழாவாகும்.

லஞ்சம், ஊழல் என்னும் அரக்க குணம் கொண்ட சந்தர்ப்பவாதிகள் வெற்றி பெறும் திருவிழா என்றால்....இது ஜனநாயகத்தை கொல்லும் பணநாயக திருவிழாவாகும்.

- கீழை ஜஹாங்கீர் அரூஸி.

Tuesday, October 8, 2019

அதிரையில் பெண்கள் 5 வேளை தொழும் வசதியுள்ள பள்ளிகள்!

அதிரை நியூஸ்: அக்.08
பெண்கள் பள்ளிக்குச் சென்று தொழுவதை இஸ்லாம் தடுக்கவில்லை. அவர்கள் விரும்பினால் பள்ளிக்கு வந்து தொழலாம் என்றாலும் அவர்களின் வீடுகளில் தொழுவதே சிறந்தது என வழிகாட்டுகின்றது.

அதேவேளை, தற்காலத்தில் பெண்கள் தவிர்க்க முடியாத வேலைகள், மருத்துவமனைகள் போன்றவற்றிற்காக செல்லும்போது அருகில் பெண்கள் தொழும் வசதியுடன் ஒரு பள்ளியில் இருந்தால் நிச்சயமாக அவர்கள் குறித்த நேரத்தில் தங்களின் கடமையை நிறைவேற்ற மிகவும் பிரயோஜனமாக இருக்கும்.

அதிரையில் பெண்கள் ஐவேளை தொழும் வசதியுள்ள மஸ்ஜிதுகள்:
1. மஸ்ஜித் அபூபக்கர் சித்திக் (ரலி), சானா வயல், மேலத்தெரு.

இங்கு கடந்த சுமார் 1-1/2 ஆண்டுகளாகவே பெண்கள் ஐவேளையும் ஜமாத்துடன் சேர்ந்து தொழ தங்களின் வசதிக்கேற்ப வந்து செல்கின்றனர் என்பதுடன் அவர்களுக்கான  அனைத்து கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
 
 
2. ஷாதுலியா புதுப்பள்ளி, ஆஸ்பத்திரி தெரு.

மருத்துவமனை மற்றும் வழிப்போக்கர்களாக வரும் பெண்களுக்கு மிகவும் பயனுள்ள பள்ளி இது என்றால் அது மிகையல்ல.
 
 
 
பட்டுக்கோட்டையில் பெண்கள் தொழ வசதியுள்ள பள்ளி:
3. அதிரை ஹாஜி காதிர் முகையதீன் வக்ப் பள்ளிவாசல் (மணிக்கூண்டு பள்ளிவாசல்)

பட்டுக்கோட்டைக்கு வந்து செல்லும் சுற்றுவட்டார ஊரார்கள் அனைவருக்கும் பயனிருப்பதைப் போல் பெண்களுக்கும் மெயின் கேட் அருகிலுள்ள மாடியில் தனித்தொழுகைக் கூடம் வசதி செய்து தரப்பட்டுள்ள பள்ளி இது.
 
தஞ்சையில் பெண்கள் தொழ வசதியுள்ள மஸ்ஜித்:
4. ஆற்றங்கரை பள்ளிவாசல் தஞ்சை பழைய பேருந்து நிலையம் செல்லும் வழியில் அமைந்துள்ளது. இங்கும் பெண்கள் வந்து தொழுது செல்ல தனி தொழுகைக்கூட வசதி செய்து தரப்பட்டுள்ளது.

குறிப்பு: 
1. இது நாம் அறிந்தவரையிலான தகவல்கள் மட்டுமே, மேலும் விபரம் அறிந்தவர்கள் அது குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறோம்.

2. பெண்கள் பள்ளிக்கு வந்து செல்வது குறித்த முழுமையாக வழிகாட்டல்களை அறிந்து கொள்ள கீழ்காணும் சுட்டிக்குள் சென்று படித்து அறிந்து கொள்ளலாம்.

சுட்டியை கிளிக் செய்க:

அதிரை அமீன்

Saturday, May 18, 2019

3-வது அணி? ~ 'அரசியல் விமர்சகர்' அதிரை பாருக்

அதிரை பாருக்
அதிரை நியூஸ்: மே 18
17 வது நாடாளுமன்ற தேர்தலின் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு 19.05.2019 அன்று வட மாநிலங்களில் 59 தொகுதிகளுக்கு நடைபெறவுள்ளது. தமிழகத்தில் அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு தொகுதிகளின் இடைத் தேர்தல்களும் இதே தேதியில் நடைபெற உள்ளது.

3 வது அணியெல்லாம் நிலையான ஆட்சியை கடந்த காலங்களில் அமைக்க
முடியாமல் இடையிலேயே கவிழ்ந்து மறு தேர்தல் நடந்தடெல்லாம் மக்களுக்கு தெரியும். காங்கிரசுக்கு அண்மையில் பெருகி வரும் ஆதரவை மறைக்கும் நோக்கத்தோடும், காங்கிரஸ் ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை என்ற தவறான தகவல்கள் குறிப்பிட்ட சில மீடியாக்களில் ஓடிக் கொண்டிருக்கின்றன.

2004 ல் மன்மோகன் சிங் அவர்களின் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமையும் என்றும், இடது சாரிகள் 62 இடங்களில் வெற்றி பெறுவார்கள் எனவும், காங்கிரஸ் 220 இடங்களுக்கு மேல் வெற்றி பெரும் எனவும், இடது சாரிகள் வெளியில் இருந்து காங்கிரசுக்கு ஆதரவு தருவார்கள் எனவும் முன்கூட்டியே காங்கிரஸ் மேலிடத்திற்கு தெரியப் படுத்தினேன். அதுதான் நடந்தது. அடுத்து 2009 ல் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி எனவும், மன்மோகன் சிங் அவர்களையே பிரதமராக தேர்ந்தெடுக்கலாம் எனவும் ஆலோசனை அனுப்பி இருந்தேன். இதை யாரும் அந்த நேரத்தில் எதிர்பார்க்கவில்லை. என்னுடைய
ஆலோசனைகளை அப்போதும் காங்கிரஸ் ஏற்றுக் கொண்டது. குடும்ப ஆட்சி, ஊழல் எனவும் உங்களுக்கெல்லாம் ஆட்சிக்கு வந்ததும் அதைத் தருகிறேன், இதைத் தருகிறேன் என்று கொஞ்சம் கூட பொருத்தம் இல்லாத, செயல் படுத்த முடியாத வாக்குறுதிகளை எல்லாம் அள்ளி வீசி விட்டு 2014 ல் மோடி அவர்கள் தலைமையில் ஆட்சி அமைந்தது. சொன்ன எதையுமே செயல்படுத்தவே இல்லை  என்பது உலகறிந்த விஷயமாகி விட்டது. செய்த சாதனைகளை சொல்லி மக்களை சந்திக்காமல் போரையும், போரில் உயிர் நீத்த ஜவான்களையும் (War and War Related issues) முன்னிலை படுத்தி ஒரு கட்சி
அரசியல் செய்கிறது. இதற்கெல்லாம் தேர்தல் ஆணையம் தடை விதித்தும்
எந்த பலனும் இல்லை. ஒரு மகன் தன தாய்க்கு செய்த உதவிகளை ஊர்
முழுவதும் பறை சாற்றலாமா? கூடாது. அது போல் தன் தாய் நாட்டை காக்க
ஆளும் மத்திய அரசு மேற்கொள்ளும் வழக்கமான நடவடிக்கைகளை
அரசியலுக்காக பயன்படுத்துவது யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.
தேசப்பற்று என்பது உங்களுக்கு மட்டும் தானா? எங்களுக்கெல்லாம் அது
இல்லையா என அவர்களது கூட்டணி கட்சியே (சிவசேனா) மோடி அவர்களிடம் வினா எழுப்பியது. இறந்த தலைவர்களை பற்றி தவறாக
விமர்சிப்பது மரியாதை இல்லை என்பது கூட தெரியாமல் மறைந்த பிரதமர்
ராஜீவ் காந்தி அவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை யாரும் ஏற்றுக்
கொள்ள மாட்டார்கள். (21.05.2019 அவரது நினைவு நாள்). நான் உயிரோடு
இருப்பதற்கு ராஜீவ் காந்தியே காரணம் என மறைந்த வாஜ்பாய் அவர்கள் அப்போது பேட்டி அளித்தது தெரியாமல் ராஜீவ் அவர்களைப்பற்றி மேடையில் விமர்சித்து விட்டார்கள். ராஜீவ் அவர்கள் வாஜ்பாய் அவர்களை சிகிச்சைக்காக வெளிநாடு அனுப்பியதை இப்போதாவது அவரைப்பற்றி விமர்சித்தவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதை நான் குறிப்பிடுகின்றேன்.

13.05.2019 அன்று தெலுங்கானா முதல்வர் சென்னை வந்து திரு. ஸ்டாலின்
அவர்களை சந்தித்தது மீடியாக்களில் விமர்சனங்களுக்கு உள்ளாகும் என்று அதே நாளில் பலரிடமும் கூறினேன். ஸ்டாலின் அவர்கள் தெலுங்கானா சென்று முதல்வர் திரு.கே.சந்திர சேகர ராவ் அவர்களை சந்தித்து காங்கிரஸ் தலைமைக்கு நீங்கள் ஆதரவு தர வேண்டும் என பேசியிருக்க வேண்டும். இது போன்ற விமர்சனம் தேவையற்றதாகியிருக்கும். தேர்தலுக்கு பிறகு பிரதமர் யார்?  துணைப் பிரதமர் யார்? நிதியமைச்சர் யார்? என்பதெல்லாம் மீண்டும் குழப்பமான சூழ்நிலையை உருவாக்கிவிடும். ஒரு வேலை மூன்றாவது
அணியில் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் தி.மு.க இணையும் பட்சத்தில்
எந்த வித பதவிகளையும் கேட்டுப் பெறாமல் 2004-ல் இடது சாரிகள்
காங்கிரசுக்கு ஆதரவு அளித்தது போல் வெளியிலிருந்து ஆதரவு அளிப்பது
தி.மு.க வின் தமிழக அரசியல் நகர்வுகளுக்கு பயனளிப்பதாக இருக்கும்.
காரணம்  மூன்றாவது அணியால் மூன்று ஆண்டுகள் கூட நிலையாக
செயல்பட முடியாது. திரு. வி.பி.சிங், திரு சந்திரசேகர் ஆகியோரது கடந்த கால ஆட்சியே இதற்கு உதாரணங்கள். தவிர மத்தியில் நிலையான ஆட்சி அமையாது போனால் நாட்டில் மீண்டும் ஒரு பொருளாதார பின்னடைவு (ECONOMIC SETBACK ) ஏற்படும்.  அந்நிய முதலீடுகள் தடைபடும் (FOREIGN INVESTMENT). விலைவாசி உயரும், பணவீக்கம் (INFLATION)  ஏற்படும் .

அகிலேஷ் அவர்கள் செல்வி. மாயாவதி  அவர்கள் பிரதமருக்கு தகுதியானவர் என கூறுகிறார். அப்படியென்றால் 2022-ல் உத்திர  பிரதேச சட்டமன்ற தேர்தலில் அகிலேஷ் தான் (சமாஜ்வாதி) முதல்வர் என மாயாவதி அவர்கள் கூறி விட்டாரா? அல்லது இனிமேல் தான் முடிவு செய்வாரா? உ.பி., தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, போன்ற பல மாநிலங்களிலும் இனிமேல் மற்ற கட்சிகள் காங்கிரசுடன் இணைந்து தான் ஆட்சி அமைக்க முடியும்.

இந்த மாநிலங்களில் எல்லாம் இனிமேல் தனிக் கட்சி ஆட்சி உருவாக
வாய்ப்பில்லை. இதற்கான காரணங்களையெல்லாம் சில தினங்களில்
என்னுடைய செய்திகளில் பதிவிடுவேன். காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்
பட்சத்தில் கூட்டணியில் உள்ள சிறுபான்மை (Muslim), வேட்பாளர் ஒருவருக்கு
துணை பிரதமர், பொறுப்பு வழங்கும் சூழ்நிலை ஏற்படும்.

மேற்குவங்கம், உ.பி., மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய
மாநிலங்களிலிருந்து தேர்வு செய்யப்படும் ஒருவருக்கு இந்த பொறுப்பு கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன. காங்கிரஸ் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளும் இதற்கு எந்த மறுப்பும் தெரிவிக்காது. வரும் 23.05.2019 அன்று டெல்லியில் கூட உள்ள அவசர கூட்டத்தில் இது முடிவுக்கு வரும். தவிர, வரும் 19.05.2019 க்கு முன்பே இது பற்றிய முடிவை காங்கிரஸ் உடனடியாக அறிவிக்க வேண்டும். துணை முதல்வர், துணை பிரதமர் பதவிகளுக்கு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. இது அந்தந்த கட்சிகளே முடிவு செய்து கொள்ளலாம். மூன்றாவது அணியை அமைக்க முட்டி மோதிக் கொண்டிருக்கும் கட்சிகளிடம் இதற்கெல்லாம் என்ன பதில் உள்ளது? இடது சாரிகளுக்கு 25 அல்லது 30 இடங்கள் கிடைத்தாலும் அதிமுக வுக்கு 4 அல்லது 5 இடங்கள் கிடைத்தாலும் (த.மா.கா, தே.மு.தி.க இதில் இல்லை). இவர்களும் காங்கிரஸ் கூட்டணிக்கே வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கும் சூழ்நிலை உருவாகும்.

மொத்தம் 10 எனும் தலைப்பில் அரசியல் தொடர்பான மேலும் பல
தகவல்களை இன்ஷா அல்லாஹ் சில தினங்களில் வெளியிட உள்ளேன். நன்றி!

ஏ. பாருக்,
'அரசியல் விமர்சகர்'
68 காலியார் தெரு,
அதிராம்பட்டினம் - 614 701.
பட்டுக்கோட்டை தாலுகா,
தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு.

Sunday, May 12, 2019

அன்னையர் அன்புக்கு ஈடிணையுண்டோ?

அதிரை நியூஸ்: மே 12
சில ஆண்டுகளுக்கு முன் 'ஆனந்த விகடன்' வார இதழில் நான் படித்து ரசித்த ஒரு கவிதை என் நினைவில் நிற்கிறது.

"அன்பு எனும் தலைப்பில் சின்னதாய்
ஒரு கவிதை கேட்டார்கள்.
'அம்மா' என்றேன் உடனே
கேட்டது அம்மாவாக
இருந்திருந்தால் இன்னும்
சின்னதாய் சொல்லியிருப்பேன்
'நீ' என்று."

அன்பு என்பதற்குச் சரியான விளக்கத்தை அழகாகச் சுட்டிக் காட்டுகிறது மேற்கண்ட கவிதை. ஒரு குழந்தை மீது அதன் அன்னை கொண்டுள்ள அன்பை வெளிக்காட்டும் ஒரு நிகழ்வைப் பார்ப்போம்.

தன் குழந்தைக்குப் பாலுட்டித் தூங்கச் செய்து விட்டுத் தன் சமையல் பணியில் ஈடுபட்டிருக்கிறாள் ஓர் அன்னை. குழந்தையின் அழுகைக் குரல் கேட்கிறது. அவன் திடுக்கிடுகிறான். ஏதேதோ எண்ணத் தொடங்குகிறாள். 'குழந்தை தொட்டியிலிருந்து கீழே விழுந்து விட்டதோ/ பூச்சி ஏதேனும் கடித்து விட்டிருக்குமோ?'

ஓடிச் சென்று குழந்தையை வாரியணைத்து முத்தமிடுகிறாள். தொட்டிலைச் சோதனை செய்கிறாள். பூச்சி ஏதும் இல்லை. குழந்தை தொட்டியிலிருந்து விழவும் இல்லை. பின் ஏன் குழந்தை அழுகிறது? யாரவது அடித்திருப்பாரோ? என எண்ணுகிறாள். அதன் வெளிப்பாடாக எழுகிறது ஒரு தாலாட்டுப் பாடல்.

"யாரடிச்சா நீயழுக! அடிச்சாளா சொல்லியழு
பாட்டியடிச்சாரோ பால் வார்க்கும் கையாலே
மாமன் அடிச்சாரோ மல்லிகைப் பூச்செண்டாலே
அத்தை அடிச்சாரோ அரளிப் பூச்செண்டாலே
அண்ணன் அடிச்சாரோ அணைத்தெடுக்கும் கையாலே
அடிச்சாரை சொல்லியழு ஆக்கினைகள் செய்திடுவோம்
தொட்டாரை சொல்லியழு தோள்விலங்குப் போட்டிடுவோம்."

குழந்தை அழுதால் மேற்கண்டவாறு தாய் தவித்துப் போகிறாள்.

குழந்தையின் அழுகுரல் கேட்கவில்லையென்றால் கூட அவளது மனம் நிலை கொள்வதில்லை. 'குழந்தை அழவில்லையே ஏன்? குழந்தைக்கு எதாவது ஆகியிருக்குமோ?' தாயின் மனம் தடுமாறுகிறது.

நாம் குழந்தையாக இருந்தபோது எப்படியெல்லாம் நம் அன்னை நம்மீது அன்பு காட்டி நம்மை வளர்த்து ஆளாக்கியிருக்கிறாள் என்பதற்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டுதான் மேற்கண்ட சம்பவம். மேலும், தன் இரத்தத்தைப் பாலாகி நமக்குத் தந்தாள்; நாம் தூங்குவதற்காகத் தன் தூக்கத்தைத் தியாகம் செய்தாள்; நாம் வயிறாற உண்ண வேண்டும் என்பதற்காகப் பல நேரங்களில் பட்டினி கிடந்தாள்; நம் நோய் தீர்வதற்காகப் பத்தியம் காத்தாள். எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு தாய் தன் குழந்தையைப் பிரசவிக்கும் போது மரண வாசல் வரை சென்று மீண்டு வருகிறாள் என்று சொல்லப்படுகிறது.

வளர்ந்து வாலிப வயதை எட்டிய போது இவற்றையெல்லாம் நம்மில் பலர் மறந்துவிடுகிறோம். அன்னையை மதிக்க மறுத்துவிடுகிறோம். நாம் நம் பெற்றோர்களிடம் எவ்வளவு நடந்து கொள்ளவேண்டும் என்பதை இறைமறை குர் ஆன் அழகுற எடுத்துக் கூறுகிறது.

"அவர்களைக் கடிந்து பேசாதீர். மாறாக அவர்களிடம் கண்ணியமாகப் பேசுவீராக! மேலும், பணிவுடனும், கருணையுடனும் அவர்களிடம் நடந்து கொள்வீராக! (குர்ஆன்-17:24). பெற்றோருக்காகத் தன்னிடம் பிரார்த்தனை செய்யுமாறு கூறி ஓர் அழகிய பிரார்த்தனையை அல்லாஹ் சொல்லித் தருகிறான். " என் இறைவனே! எனது சிறு வயதில் என்னை இவர்கள் கருணையுடனும், பாசத்துடனும் எவ்வாறு வளர்த்தார்களோ, அவ்வாறு இவர்கள் மீது நீ கருணை புரிவாயாக! ( குர்ஆன்-17:24)

தாயின் தனிச்சிறப்பை இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு கணித்தார்கள் எனபதை ஒரு நிகழ்வு நமக்கு எடுத்துக்காட்டுகிறது. ஒரு முறை நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, "நான் நன்றியுள்ளவனாகவும், உபகாரியாகவும் நடந்து கொள்வதற்கு யார் மீது அதிகக் கடமைபட்டுள்ளேன்?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "உமது தாய் மீது" என்று பதில் தந்தார்கள். "அடுத்து யார் மீது?" என்று வந்தவர் கேட்டார். அப்போதும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள், "உமது தாய் மீது' என்றே பதிலுரைத்தார்கள். வந்தவர் மீண்டும் அதே வினாவைக் கேட்க, அதே பதிலை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். வந்த மனிதரிடமிருந்து நான்காம் முறை அதே வினா வந்தபோது, "உமது தந்தை மீது" என்ற பதில் நபி (ஸல்) அவர்களிடமிருந்து வந்தது.

வந்த மனிதர் கேட்ட கேள்விக்கு முதல் மூன்று முறை "உமது தாய் மீது" என்று நபி (ஸல்) கூறியதற்கு மார்க்க அறிஞர்கள் தரும் விளக்கம் நமது சிந்தனைக்குரியது. ஒரு தாய் கருவுற்றிருக்கும் காலத்தில் குழந்தையின் பொருட்டு அவள் அடையும் வேதனைக்காகவும், குழந்தையைப் பிரசவிக்கும் தருணத்தில் அவள் அடையும் சிரமத்திற்காகவும், குறைந்தது இரண்டாண்டு காலம் குழந்தைக்குப் பாலுட்டி வளர்த்தக் கடமைக்காகவும் என்ற மூன்று காரணங்களுக்காக ஒருவர் தன் தாய்க்கு நன்றியுள்ளவராகவும், உபகாரியாகவும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் பொருட்டுதான் முதல் மூன்று முறை "உம் தாய் மீது" என்று பெருமானார் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அத்தகைய அன்னைக்கு எவ்வாறெல்லாம் நாம் நன்றி செலுத்தக் கடமை பட்டுள்ளோம் என்பதை நாம் சிந்தித்து உணர வேண்டுமல்லவா.

அன்னையின் உயர்வுபற்றி இஸ்லாமிய வரலாற்றிலுள்ள நிகழ்வு ஒன்றை இங்கு நினைவு கூர்வது பொருத்தமாயிருக்கும் எனக் கருதுகிறேன் இஸ்லாமிய ஆட்சியின் மூன்றாம் கலீஃபா உதுமான் (ரலி) அவர்கள் 'கஅபா' முற்றத்தில் அமர்ந்திருக்கிறார்கள். எப்போதும் போல் மக்கள் கஅபாவை வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். அந்தக்கூட்டத்தில் தலையில் ஒரு கூடையைச் சுமந்தவராக ஒருவர் தவாஃப் செய்வதை கலீஃபா அவர்கள் பார்க்கிறார்கள். அந்தக் காட்சி கலீஃபா அவர்களுக்கு வினோதமாகப்படவே, அதுபற்றி அவரிடம் விசாரித்தார்கள்.

"கலீஃபா அவர்களே! எனது வயது முதிர்ந்த அன்னை அந்தக் கூடையில் அமர்ந்திருக்கிறார். மூப்பின் காரணமாக அவரால் சுயமாக நடந்து தவாஃப் செய்ய இயலவில்லை. எனவே அவரை என் தலையில் சுமந்தபடி நான் தவாஃப் சுற்றுகிறேன்" என்றார். இதனைக் கேட்ட கலீஃபா அவர்கள் நெகிழ்ந்து போனார்கள். அந்த மனிதர் கலீஃபாவிடம் கேட்டார். "கலீஃபா அவர்களே! என் தாயைப் புனித கஅபாவுக்கு அழைத்து வந்ததோடு மட்டுமின்றி அவரை என் தலையிலே சுமந்து தவாஃப் செய்யவைக்கிறேன். இப்படியெல்லாம் என் தாய்க்குப் பணிவிடை செய்யும் காரணத்தால் என் தாய்க்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்தவனாக நான் ஆவேனா?"

கலீஃபா உதுமான் (ரலி) அவர்கள் அந்த மனிதருக்கு பதில் சொன்னார்கள். அந்த பதில் அவருக்கு மட்டுமல்லாமல் நம் எல்லாருக்கும் தான். "என் அருமையான தோழரே! உன் அன்னையின் வயிற்றில் நீ இருந்த போது அல்லாஹ் உன்னில் 'ரூஹ்' (உயிர்) ஊதியதற்குப் பின்னர் நீ அப்படியும் இப்படியுமாக லேசாகப் புரண்டிருப்பாயே, அப்போது உன் அன்னைக்கு ஏற்பட்ட வேதனை இருக்கிறதே, அந்தச் சிறு வேதனைக்குக் கூட ஈடாகாது உன் செயல்" என்றார்கள்.

எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் எம்.ஏ., பி.எஸ்சி., பி.டி
தலைமை ஆசிரியர் (பணி நிறைவு)
அதிராம்பட்டினம்
தஞ்சாவூர் மாவட்டம்.       

Sunday, April 14, 2019

முஸ்லிம்களின் அரசியல் உரிமை பறிபோகிறதா?

அதிரை நியூஸ்: ஏப்.14
1984 ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் 543 உறுப்பினர் கொண்ட பாராளுமன்றத்தில் முஸ்லிம்கள் 46 உறுப்பினர்கள் இருந்தார்கள். ஆனால் 2014 ம் ஆண்டு நடந்த நடந்த மக்களவைத் தேர்தலில் வெறும் 22 உறுப்பினர்களே இருந்தனர். மக்கள் தொகையில் 15 விழுக்காடு கொண்ட முஸ்லிம்கள் வெறும் 4 .2 சதவீத உறுப்பினர்களே இருந்தனர் என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இல்லையா? ஆனால்  பி.ஜெ.பி.யின் எண்ணிக்கை  282 உயர்ந்தது. அது எதனால் என்று பார்ப்போமேயானால் இந்திய மண்ணில் ஆட்சி செய்த காங்கிரஸ் முஸ்லிம்களுக்கு ஆதரவான கட்சி என்ற அவப்பெயரை இந்துக்களிடம் பரப்பியதினால் அந்த கட்சி மல, மல என்று வளரத் தொடங்கியது.  முஸ்லிம்கள் ஆதரவினை எப்போதுமே பெற்ற சமாஜ்வாடி, பகுஜன் கட்சிகள் கூட முஸ்லிம் உறுப்பினர்களை இந்தியாவிலேயே அதிகமாக உள்ள உ.பி. மாநில 80 உறுப்பினர்களில் ஒருவர் கூட வெற்றி பெற உதவவில்லை. மொத்தமுள்ள 29 மாநிலங்களில் 22 மாநிலங்களில் ஒரு முஸ்லிம் உறுப்பினர் கூட மக்களவையில் செயலாற்ற முடியவில்லை. 1991 பதவியேற்ற நரசிம்மராவ் காங்கிரஸ் ஆட்சியில் தான் 1992 ம் ஆண்டு பழமை மிகு தொல்லியல் துறை முக்கியம் வாய்ந்த பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டபோது கை கட்டி, வாய் பொத்தி காரிய மௌன சாமியாரானார் அன்றைய பிரதமர் என்பது உங்களுக்குத் தெரியும்.

16 மக்களவையில் முக்கிய முத்தலாக்கு, பசுவை பாது காப்போம் என்றும், பசுவைக் கொல்லும் முஸ்லிம்கள் என்று பல முஸ்லிம்கள் கொல்லப்படும்  உட்பட  பிரச்சனைகளில் கூட கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேசிய அளவிற்கு மற்ற கட்சி உறுப்பினர்கள் குரல் எழுப்பவில்லையே அது ஏன் என்று உங்களுக்கு புரிந்து இருக்கும். வருகின்ற மக்களவை தேர்தலில் இந்துக்களின் ஓட்டுக்களை இழக்க நேரிடும் என்ற அச்ச உணர்வுதான்.

தமிழ் நாட்டில் ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் மைனாரிட்டி சமூகத்தினவருக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரசில் முக்கிய தலைவருமான பீட்டர் அல்போன்சும் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருப்பது உண்மைபோல தேனி மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கேட்ட முன்னாள் மக்களவை உறுப்பினர் ஜெ.எம்.ஹாரூனுக்கு வழங்கப்படவில்லை, அத்துடன் தி.மு.காவில் ஒரு முஸ்லிம் வேட்பாளருக்கும் வாய்ப்பு வழங்கப் படவில்லை என்ற ஆதங்கம் இருக்கத்தானே செய்யும்.

முஸ்லிம்கள், கிருத்துவர்கள் அதிகமாக கொண்ட கேரள மாநிலத்தில் ஒரு முஸ்லிம் அல்லது கிருத்துவர் போட்டியிட வாய்ப்புக் கொடுக்காமல் காங்கிரஸ் தலைவரே நிற்பதிலிருந்து பீட்டர் அல்போன்ஸ் சொல்லுவது உண்மையாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றவில்லையா உங்களுக்கு. தமிழகத்தில் முஸ்லிம் லீக்கு கட்சிக்கு ஒரு சீட் வழங்கி அதில் எத்தனையோ ஆரம்பகால ராமநாதபுரம் ஷாஜஹான் போன்ற உறுப்பினர் இருந்தாலும், அறிமுகமில்லா ஒருவருக்கு சீட்டு வழங்கியதால் தேவர் பெரும்பானமையினைக் கொண்ட இராமநாதபுர மக்களவை தேர்தலில் வெற்றி வாய்ப்பினை இழந்து விடுவோமோ என்று உங்களுக்கு ஓர் அச்சமிருக்கத் தானே செய்யும்.

இந்தியா சுதந்திரம் அடைந்தபின்பு கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களுக்குப் பிறகு தமிழகத்தில் முஸ்லிம்களின் அரசியல் வாழ்வு மங்கி வருகின்றது வெள்ளிடைமலை தானே. காயிதே மில்லத் அவர்கள் குரோம்பேட்டை வீட்டிற்கு அருகில் குடியிருக்கும் 90 வயதான சுப்ரமணிய அய்யர் முஸ்லிம்  மக்கள் விரோத ஹிந்துக்களுக்கு ஒரு செய்தி சொல்லியுள்ளார். அவர் போன்று ஒரு பரந்த அண்ணன்-தம்பி உறவு கொண்ட ஒரு தலைவரை நான் பார்க்கவில்லை. அவர் வீட்டுக்குள் நான் சென்று வர ஒரு சகோதரனைப் போன்ற அனுமதி வழங்கியிருந்தார் என்றும், அவர் மரணம் அடைந்த செய்தி கேட்டு தான் மயங்கி விழுந்து விட்டதாகவும் சொல்லியுள்ளார்.

அவ்வாறு முஸ்லிம்களும் ஹிந்துக்களும் அண்ணன் தம்பியாக வாழ்ந்த தமிழகத்தில் முஸ்லிம்களிடையே உத்தரபிரதேசம் போன்று ஒருவித பய உணர்வினை ஏற்படுத்த பி.ஜெ.பி. முயலுவதாக அதனுடைய தலைவர்கள் பேச்சிலிருந்து தெரியவில்லையா? ஆனால் முஸ்லிம் அமைப்புகளிடையே கிட்டத்தட்ட 19  பிரிவுகளாக நிர்கதியாக உள்ளனர். காயிதே மில்லத் வானில் மின்னும் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தார். போர்ப்படை தளபதியாக இருந்தார். ரசூலுல்லாஹ் போருக்கு செல்லும்போது முன்னின்று நடத்துவார்கள். ரசூலுல்லாஹ் போருக்கு செல்லாத நேரத்தில் தன் குடும்பத்திலிருந்து ஒருவரை அனுப்புவார்கள்.

ஒரு தடவை அப்துல் இபின் ரவாதா அவர்களை போருக்கு முன்னின்று நடத்துமாறு கூறினார்கள். போர் படை வீரர்கள் எல்லாம் புறப்பட்டு சென்று விட்டார்கள். ஆனால் அப்துல் இபின் ராவதா போருக்கு செல்லு முன்பு ரசூலுல்லாஹ் முன்னின்று நடத்தும் ஜும்மாவினில் கலந்துவிட்டு செல்லலாம் என்று ஜும்மாவில் கடைசி ஸப்பில் நின்றார்கள். ரசூலுல்லாஹ் தொழுகை முடிந்ததும் அப்துல் இபின் அவர்களை பார்த்து விட்டு, ஏன் நீங்கள் இன்னும் புறப்படவில்லையா என்று கேட்டபோது அவர் சொன்ன விளக்கத்தினை ஏற்க மறுத்து, ஒரு தலைவர் முன்னின்று போர் வீரர்களை வழி நடத்துவது ஜும்மா தொழுவதினை விட மேலானது என்று கூறினார்களாம். ஆனால் தமிழ்நாட்டில் முஸ்லிம் லீகிற்கு ஒரு உறுப்பினர் தேர்வாக வாய்ப்பு இருக்கும்போது அதன் தலைவர் அதனை நழுவி விடுவாரோ என்று அவர் தேர்தெடுத்த வேட்பாளர் இருக்கின்றார் என்று பலரும் ஆதங்கப் படுகின்றனர்.

ரசூலுல்லாஹ் கட்டளையினை ஏற்று காலித் பின் வாலித் அவர்கள் போருக்கு சென்று விட்டு வெற்றியுடன் திரும்பும் பொது அவரை வரவேற்க ரசூலுல்லாஹ் எதிர்நோக்கி இருக்கும்போது முதலில் படை வீரர்கள் வந்தனர். அதனை பார்த்த ரசூலுல்லாஹ் காலித் அவர்கள் எங்கே என்று கேட்கும்போது, அவர் பின்னால் நிற்பதினை பார்த்து, 'காலித் அவர்களே, பெரிய வெற்றியுடன் வரும்போது கம்பீரமாக முன்னாள் வரவில்லையே' என்று கேட்டதிற்கு, காலித் அவர்கள், 'ரஸூலல்லாஹ்வே, போர் வீரர்கள் பல வகையினைச் சார்ந்தவர்கள். போருக்கு செல்லும்போது அவர்களுக்கு முன்னோடியாக நான் வழி நடத்தி சென்றேன். வெற்றி பெற்று திரும்பும்போது எதிரிகள் பல திசைகளிருந்து தாக்கினால் நமது வீரர்கள் சிதறி விடக்கூடாது என்று நான் அவர்களுக்கு பின்னல்' வந்தேன் என்கிறார்களாம். அவ்வாறு ஒருங்கிணைக்கும் முஸ்லிம் தலைவர்கள் நம்மிடையே இல்லாதது ஒரு இழப்புதானே!

ஒரு தடவை சஹாபி ஒருவர் ரசூலுல்லாஹ் அவர்களிடம் வந்து, 'தனக்கு மன அமைதி இல்லாமல் இருக்கின்றது என்றாராம்' அதற்கு ரசூலுல்லாஹ் அவர்கள், 'இன்று இரவு உணவு உண்ணும்போது உன் குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட்டு விட்டு தூங்கி எழுந்து வந்து' காலையில் சொல்லும் என்கிறார்களாம். சகாபியும் ரசூலுல்லாஹ் வார்த்தையினைக் கேட்டு பல நாட்கள் இல்லாத வகையில் குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட்டு பின்பு நிம்மதியாக தூங்கி எழுந்து வந்து, ' ரசூலுல்லாஹ் அவர்களே இன்று நான் மன அமைதி பெற்றேன்' என்றாராம்.

ஆகவே முஸ்லிம் சகோதர அமைப்புகள் பல பிரிவுகளாக பிரிந்து சிறுசிறு கருத்து வேற்றுமைக்காவாகவும், யார் பெரியவர், எந்த அமைப்பு அதிக உறுப்பினர் கொண்டுள்ளது, யார் பணத்தினை அள்ளி இறைக்கின்றாரே அவரிடம் சோரம் போய், ஒரு சமுதாயத்தினையே அடகு வைப்பது போன்ற செயல்களால், நம்முடைய அரசியல் உரிமை, வேலை வாய்ப்பில் முன்னுரிமை, தொழில் தொடங்குவதிலிருந்து பின்னடைவு, சில வளைகுடா நாடுகளின் பணத்திற்காக இளைஞர்கள் உயர்  படிப்பினை தொடராது மிகவும் சிரமப் படும் பரிதாப நிலை, ஏழை முஸ்லிம்கள் வாழ்வாதாரம் இன்றி மூலையில் முடங்கி விடுதல், முதியோர் புறக்கணிப்பு போன்றவை நடந்து கொண்டுள்ளன.

பல சமுதாய அமைப்புகள் கொண்ட எந்த சமூகமும் இனி முன்னேற முடியாது. ஆகவே தான், பி.ஜெ.பி. அமைப்பினர் இந்துக்களின் ஓட்டுக்களை அறுவடை செய்ய நினைக்கின்றனர். முஸ்லிம்களும் வேற்றுமையினை வேரறுத்து இனியாவது ஒற்றுமையுடன் செயலாற்ற வேண்டும் என்போமா!

டாக்டர் ஏ.பீ. முகமது அலி, பிஎச்,டி, ஐ.பீ.எஸ் (ஓய்வு)
ஓய்வுபெற்ற மூத்த காவல்துறை அதிகாரி 
எழுத்தாளர்  
சமூக ஆர்வலர்

Friday, March 22, 2019

தண்ணீர்! தண்ணீர்!! தண்ணீர்!!!

அதிரை நியூஸ்: மார்ச் 22
'மூன்றாம் உலகப் போர் ஒன்று வருமானால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும்' என்று பலமுறை பல அறிஞர்கள் கூறி வந்திருக்கிறார்கள். ஆனாலும் கூட நாம் இன்றும் தண்ணீர் குறித்து தெளிவான பார்வையைக் கொண்டிருக்கவில்லை.

தண்ணீர்ப் பற்றாக்குறையும், மாசுபட்ட தண்ணீரும் மனிதகுலத்துக்கு மிகப்பெரிய கேடாக மாறும் நிலை ஏற்கனவே உருவாகிவிட்டது. உலக அளவில் 84.4 கோடி பேருக்கு சுகாதாரமான தண்ணீர் கிடைக்கவில்லை. மாசுபட்ட தண்ணீரால் ஒவ்வோராண்டும் உயிரிழப்போர் எண்ணிக்கையானது போர், விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகம் என்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தண்ணீரின் மகத்துவத்தையும், மக்கள் வாழ்வாதாரத்திற்குத் தண்ணீரின் முக்கியப் பங்கை உணர்த்தும் வகையிலும் ஐக்கிய நாட்டு சபையில் எடுக்கப்பட்ட முடிவின்படி 1993 ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் மார்ச் 22 ம் தேதியன்று உலகத் தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறதே தவிர, தண்ணீரின் முக்கியத்துவம் பற்றியோ, அதன் சேமிப்புப்பற்றியோ, அதன் சிக்கனப் பயன்பாடு பற்றியோ நாம் முழுமையாக உணர்வதாக இல்லை. ஐ.நா சபை மற்றும் உலக சுகாதார அமைப்பு தரும் தகவலின் படி, இன்று உலகின் 2.1 பில்லியன் மக்கள் வீட்டில் பாதுகாப்பான குடிநீர் இல்லாமல் வாழ்கின்றனர். இந்நிலை அவர்களின் ஆரோக்கியம் மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதிக்கிறது. இதனால் மக்களின் அடிப்படை உரிமை மறுக்கப்படுகிறது.

'எந்த நாட்டில் ஓர் ஆண்டில் தனி நபருக்குக் கிடைக்கின்ற தண்ணீரின் அளவு 1,700 கன மீட்டருக்குக் குறைவாக உள்ளதோ, அங்குத் தண்ணீர்ப் பஞ்சம் உள்ளதாகக் கூறலாம்' என நீர்ப் பஞ்சம்பற்றிய அளவீடுகள் கூறுகின்றன. அந்த அளவீடுகளின் படிப் பார்த்தால், இந்தியாவில் ஏறத்தாழ 70 சதவீத மக்கள் கடுமையான தண்ணீர்ப் பஞ்சத்தில் வாழ்கின்றனர் என்பது அதிர்ச்சி தரும் உண்மை.

தண்ணீர்ப் பஞ்சத்துக்கான காரணங்கள்தாம் என்ன? நாட்டின் உயிர் நாடியாக இருக்கின்ற சிறிய நீராதாரங்களான குளங்கள், ஏரிகள், குட்டைகளைச் சரிவரப் பராமரிக்காத காரணத்தால் இவற்றின் மூலம் கிடைக்கும் நீர் தொடர்ந்துக் குறைந்து வருகிறது. அதுமட்டுமின்றி, நீர் வரத்துப் பகுதிகளில் ஏற்படும் மண் அரிப்பால் அணைகளில் வண்டல் மண் சேர்ந்து அதன் கொள்ளளவு தொடந்துக் குறைந்து வருகிறது.

நீர்ப் பஞ்சத்துக்கான முக்கியமான காரணம் பருவகால மழைப் பொழிவு குறைவு. இந்தியாவின் பல மாநிலங்களில் பருவ நிலை மாற்றத்தால் மழை பொழியும் நாட்கள் குறைந்துள்ளன என்பதை இந்திய வானிலை மையத்தால் வெளியிடப்படும் மொத்த மழை பெய்யும் நாட்களின் புள்ளி விவரங்கள் உறுதி செய்கின்றன.

மழைப் பொழிவு குறைந்துள்ளதற்கான காரணம் பருவ நிலை மாற்றம் மட்டுமல்ல. காடுகள் அழிப்பும் ஒரு காரணம். சுயநலமிக்க சில மனிதக்கும்பல் தங்களின் சுய இலாபத்துக்காக மரங்களை வெட்டிக் காடுகளை அழிக்கின்றன. அதுமட்டுமின்றி, அவ்வப்போது ஏற்படும் காட்டுத்தீ காரணமாக மரங்கள் எரிந்து நாசமாகின்றன. அவ்வப்போது தோன்றும் புயலின் போதும் மரங்கள் வேரோடு சாய்ந்து நாசமாகின்றன.

தொழிற்சாலைகள் மற்றும் வாகனப் போக்குவரத்துகள் மூலம் அதிகமாக வெளியிடப்படும் மாசு கலந்த கார்பன்டை ஆக்ஸைடால் வளி மண்டலம் பாதிக்கப்படுகிறது. மழையளவு குறைவதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணமாகும்.

இதனைச் சரி செய்வதற்குப் புதிய மரங்களை நட்டுக் காடுகளை உருவாக்க வேண்டியது அவசியமாகும். வேகமாகக் குறைந்து வரும் நிலத்தடி நீரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

நீராதாரங்களான குளங்களையும், ஏரிகளையும் ஆக்கிரமிப்புகளிலிருந்து விடுவித்துத் தூர்வாரி நீரைச் சேமிக்க வழி செய்ய வேண்டும். நீரின் சிக்கனப்பயன்பாடு பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் உருவாக்க வேண்டும். இவைத் தொடர்பாக அரசு நிர்வாகம் தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

நம்முடைய பண்டைய தமிழ் இலக்கியங்களிலும் கூட நீரின் முக்கியத்துவம் பற்றிய குறிப்புகளைக் காண முடிகிறது. சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றில் ' குடபுலவியனார்' என்ற புலவர் பாடிய 'முழங்கு முந்நீர்' எனத் தொடங்கும் பாடல் இங்கு எண்ணற்குரியது. அப்பாடலில் புலவர் பாண்டிய நெடுஞ்செழியன் என்ற மன்னனுக்குக் கூறும் அறிவுரைகள் இன்றைய ஆட்சியாளர்களுக்கும் ஏற்புடையதாக அமைந்துள்ளன. புகழை நிலை நிறுத்த விரும்பும் மன்னருக்கு அதற்கான தகுதிப்பாடு யாது என்பதை எடுத்துரைக்கிறார் புலவர் பெருந்தகை. புகழை நிலை நிறுத்துவதற்கான ஒரே வழி நீர் வளம் பெருக்குதலே ஆகும் என்கிறார்.

ஒரு நாட்டில் பருவம் தவறாத மழைப் பொழிவு இருக்குமானால், அங்குத் தண்ணீர் பஞ்சத்துக்கு இடமேயில்லை. மழையின் அவசியத்தைக் கருதித்தான் வான்புகழ் கொண்ட வள்ளுவன் கடவுள் வாழ்த்துக்கு அடுத்த இரண்டாவதாக 'வான் சிறப்பு' என்ற அதிகாரத்தை வைத்தார்.

'வான் சிறப்பு' அதிகாரத்தின் முதல் குறளில் மழையை 'அமிர்தம்' எனச் சிறப்பிக்கிறார்.

'வான்நின்று உலகம் வழங்கி வருதலால் 
தான் அமிர்தம் என்றுணரற் பாற்று'

பெய்யாமல் மக்களைக் கெடுக்க வல்லதும் மழை; அவ்வாறு கெட்டவர்க்குத் துணையாக அமைந்து வாழ வைக்க வல்லதும் மழையே என்பதை

'கெடுப்பாதூஉங் கெட்டார்க்கு சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை'

என்ற குறள்வாயிலாக விளக்குகிறார். மழை இல்லையேல் நீரில்லை; நீர் இல்லையேல் இவ்வுலகில்லை என்ற தனது அழுத்தமான கருத்தை

'நீர் இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான் இன்று அமையாது ஒழுக்கு'

என்ற வான் சிறப்பின் கடைசிக் குறள் வழியே வள்ளுவப் பெருந்தகை தெளிவுப்படுத்துகிறார்.

'உலக தண்ணீர் தினம்' கொண்டாடப்படும் இந்நாளில் தமிழ்  மூதாட்டி அவ்வையார் தொடர்பான ஒரு செய்தியை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகிறேன். மன்னன் ஒருவனை வாழ்த்த விரும்பிய அவ்வையார் 'வரப்புயர' என்றார்.

"வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயர குடி உயரும்
குடி உயர கோல் உயரும்"

என்பதாக அமைகிறது அந்த வாழ்த்துப்பாடல் ஒரு ஆட்சியானது நல்லாட்சியாக அமைய வேண்டுமெனில் அந்த ஆட்சியில் நீர் மேலாண்மை சிறப்புற்று இருக்க வேண்டும்.என்ற கருத்தையே அவ்வையாரின் 'வரப்புயர' என்ற வாழ்த்துச் சொல் நமக்கு உணர்த்துகிறது.

கோடை நெருங்கி வரும் இந்நேரத்தில் இப்போதே காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். நீர் சேமிப்பு, சிக்கனப்பயன்பாடு என்ற இரு விஷயங்களில் எல்லா தரப்பினரும் கவனம் செலுத்த வேண்டும்.  "ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடினாலும் நீரை வீண் விரயம் செய்யாதீர்கள்" என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழி இங்கு நினைவுக் கூறத்தக்கது. ஆஸ்திரேலியாவில் குடிநீர் விநியோகம் செய்யும் நிறுவனம் ஒன்று குடிநீர் பாட்டில்களிலும், கேன்களிலும் நபி பெருமானாரின் மேற்கண்ட பொன்மொழியைப் பொறித்து விநியோகம் செய்கிறது என்ற தகவல் நாம் கவனத்தில் கொள்ளத்தக்கது.

எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் எம்.ஏ., பி.எஸ்சி., பி.டி
தலைமை ஆசிரியர் (பணி நிறைவு)
அதிராம்பட்டினம்
தஞ்சாவூர் மாவட்டம்.          

Monday, February 4, 2019

திருச்சி இனாம்குளத்தூர் இஜ்திமா: உம்மத்தின் மகிழ்ச்சியும், திருஷ்டியும்!

அதிரை நியூஸ்: பிப்.04
2019 ம் ஆண்டு ஜனவரி 26 ந் தேதியிலிருந்து 28 ந் தேதி வரை தமிழக முஸ்லிம்கள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் எழுத வேண்டிய நிகழ்வு திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகில் உள்ள இனாம் குளத்தூரில் நடந்துள்ளது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

பொட்டல் காடுகளாகவும், முட்கள் நிறைந்த தரிசு நிலங்களாகவும் உள்ள இடங்களில் வெள்ளையுடையும், தலையில் தொப்பியும், தாடியும் வைத்த முஸ்லிம் மக்கள் உழவர் நஞ்சை நிலத்தை பண்படுத்த செய்யும் வேலைகளை செய்து கொண்டிருந்தார்கள்.   அந்த நிலங்கள் யாருடையது என்று நீங்கள் கேட்கலாம். அவைகள் அங்குள்ள அனைத்து சமுதாய மக்களுக்கும் சொந்தமாம். அவைகளை விலை பேசி வாங்கவோ அல்லது வாடகைக்கு, அல்லது குத்தகைக்கு எடுக்கவோ இல்லையாம். அந்த ஊரில் உள்ள மக்களை அணுகி முஸ்லிம்கள் மார்க்க சம்பந்த சொற்பொழிவுகளை நிகழ்த்த வேண்டும் என்று கேட்டதும் அவர்கள் வேண்டுகோளை ஏற்று இரவலாக கொடுக்கப் பட்டதாம். அதுதான் தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சாரம். அது வட இந்திய கலாச்சாரத்தினை விட்டு வேறுபட்டது என்பதினை காட்டியதாம்.

நான்கு மாதத்திற்கு முன்பு எந்த முன் அறிவிப்புமில்லாமல் எறும்புபோல சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருந்த 'பாய்' மார்களைக் கண்ட மணப்பாறை நுண்ணறிவுப் பிரிவு ஏடு அங்கு என்னதான் நடக்கின்றது என்று பார்த்தபோது நிலங்களை பண்படுத்தியும், முட்புதர்களை களையெடுத்தும், நீர்நிலைகளை ஆழப்படுத்தியும், செயற்கை தண்ணீர் சேகரிப்பு தொட்டிகள் அமைத்தும், பிரமாண்டமான பந்தல் எழுப்பியும், தற்காலிக கழிப்பறைகள் அமைத்தும், உணவிற்காக சிறு, சிறு கூடாரங்கள் எழுப்பியும், வாகனங்கள் நிறுத்துவதிற்காக வசதி வாய்ப்புகள், சாலைகள் அமைத்தும், பூமியினை சமப்படுத்தியதோடு மணலும் பரப்பப்பட்டதாம். அங்கு வேலைகள் செய்து கொண்டிருந்தவர்களை அணுகி அங்கே என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டபோது அல்லாஹ்வின் கட்டளைகளை விளக்கப் போகிறோமென்றும், மக்கள் தீய செயல்களிருந்து விடுபட்டு, நலமுடன் வாழ துவா செய்யப் போகின்றோம் என்றும் கூறியதை தன்னுடைய ஆய்வாளரிடம் தெரிவித்தாராம்.

1997 ம் ஆண்டு மே மாதம் 28 ,29 ந் தேதிகளில் வேலூர் மாவட்டம் மேல்விசாரம் மாநாட்டிற்கு பின்பு  நடக்கும் முஸ்லிம்கள் மாநாடு இதுதான். தமிழ் நாட்டில் மட்டுமல்ல தென்னாட்டின் பல பகுதிகளிருந்து வந்த இஸ்லாமிய பெருமக்கள் கூடியதினை அங்கு கண்டார்கள். இந்த மாநாட்டிற்கு வீடுதோறும், நோட்டீஸ் கொடுக்கவில்லை, வீதிதோறும் ஒலி பெருக்கி வைத்து காது கிழிய கத்தவில்லை, தெரு முனைகளில் விளம்பர பேனர்களில்லை, டிராபிக் ராமசாமி போன்ற அனுமதியில்லா பேனர்கள் எடுங்கள் என்று போராட்டம் நடத்த வேலையில்லை, வீட்டுச்சுவர்களிலோ அல்லது அரசு அலுவலக கட்டிடங்களின் சுவர்களிலோ விளம்பரங்கள் இல்லை. மாறாக ஒவ்வொரு மஹல்லாவிலும் ஜும்மா தொழுகைக்குப் பின்பு அறிவிப்பு மட்டும் செய்யப்பட்டது. ஆனால், அங்கு கூடியதோ மனிதக் கடல் போன்று இருந்ததாம். முஸ்லிம்கள் சாரை, சாரையாக ஒன்று கூட ஆரம்பித்தார்களாம். அங்கே ரயிலில் வருபவர்கள் இறங்குவதற்காக ரயில்வே அமைச்சகமும் ஒவ்வொரு ரயிலும் நின்று செல்ல வசதி செய்யப் பட்டதாம், வாகனங்களில் வருபவர்கள் நெடுஞ்சாலை டோல் கேட்களில் கட்டணம் செலுத்தாமல் விரைவாக செல்ல வழிகள் மத்திய நெடுஞ்சாலை அமைச்சகம் மூலம் செய்யப்பட்டதாம், மாநில அரசும் தேவையான தண்ணீர் வசதிகள், மருத்துவ வசதிகள் செய்து கொடுத்ததாம். சமுதாய அமைப்புகளான த.மு.மு.க. எஸ்.டி.பி.ஐ., எம்.ஜே.கே போன்ற அமைப்புகளும் ஆம்புலன்ஸ் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி உதவிகள் செய்தார்களாம். அங்கு கூடிய அனைவரும் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக அமர்ந்து, 'லாயிலாஹ இல்லல்லாஹ் ஹாஸ்பி ரப்பி ஸல்லல்லாஹ், மாபி கல்பி ஹைருல்லாஹ், நூரு முகமது ஸல்லல்லாஹ்' என்ற கோசம் வானைப் பிளந்ததாம்.

இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலர் ஒருவர் இரவு பணி முடித்து மணப்பாறை திரும்பும்போது திண்டுக்கல் செல்லும் முஸ்லிம்கள் காரில் பயணம் செய்யும்போது தன்னுடைய அனுபவம் குறித்து கீழ்கண்டவாறு கூறிக்கொண்டு வந்தாராம். 'நான் எத்தனையோ முக்கிய பிரமுகர்கள், பொதுக் கூட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளேன், அங்கெல்லாம் ஒலிபெருக்கிகள் மூலம் காதுகள் செவிடாகும், கழிப்பிட வசதி இருக்காது, உணவுக்கு அலைய வேண்டும், கூட்டத்தினருடையே தள்ளுமுள்ளு, நெரிசல்  ஏற்படும், ஒருங்கிணைப்பாளர்களிடையே சண்டை சச்சரவுகள் வரும் ஆனால் உங்கள் பாய் மார்கள் நடத்திய மாநாடு அவைகள் எதுவுமே இல்லை. அது மட்டுமல்லாமல் எங்களுக்கு ஒரு வேலையும் அங்குள்ள தொண்டர்கள் கொடுக்கவில்லை. என்னைப் போன்று பணியில் ஈடுபட்ட மற்ற காவலர்களுக்கும் வயிறார உணவு, தாகம் தீர்க்க தண்ணீர், களைப்பாற தேநீர் கொடுத்து விழுந்து விழுந்து உபசரித்தார்கள். அதனைப் பார்த்து பிரமித்துப் போய் விட்டேன் என்று வாயார புகழாரம். அதுவும் முக நூலில் வந்தது.

எந்த ஒரு நல்ல விழாவிற்கும் திருஷ்டி போன்று ஒரு பாதகமான செயல் நடக்குமாம். அதேபோன்று இஸ்திமா நடக்கும் நாட்களில், வட தமிழக முஸ்லிம்கள் செல்லும் வழியான உளுந்தூர்பேட்டையில் ஒரு முஸ்லிம் அமைப்பினர் அதே நாளன்று குரான் மாநாடு என்று ஒன்று நடத்தியதாம்.
முஸ்லிம்கள் அமைப்பின் சிதைப்பினை எதிர்நோக்கும் அமைப்புகளுக்கு இதுபோன்ற போட்டி மாநாடு சக்கரைப் பொங்கல் போன்று ஆகாதா?

உலக முஸ்லிம்கள் பிரிந்து வாழ்வதினால் படும் இன்னல்களை நாள் தோறும் செய்திகளாக வந்த வண்ணம் உள்ளதல்லவா? இந்த சூழ்நிலையில் மறைந்த கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்கள் 5.5.1970 நடந்த அலிகார் கூட்டத்தில் கொட்டும் மழையும் பொருட்படுத்தாது முஸ்லிம்கள் மத்தியில் பேசும்போது, 'நாம் சிறுபான்மையினர், நாம் ஒற்றுமையாக வாழ்ந்து வருவது  கட்டாயம். பெரும்பான்மை சமூகத்தினர் எந்த கட்சியிலானாலும் பிரிந்திருக்கலாம், ஆனால் சிறுபான்மையினர் பிரிந்து வாழவே கூடாது. அவர்கள் சேர்ந்து வாழ்வது திருக்குரானில் கட்டளையாகும்'. காயிதே மில்லத் அவர்கள் சொல்லி சென்ற வார்த்தைகளை உளுந்தூர்பேட்டையில் மாநாடு நடத்திய அமைப்பினரும், தப்லீக் இரு பிரிவு குழுவினரும் மற்ற முஸ்லிம் அமைப்பினரும் உணர்ந்து செயல்பட்டால் தமிழக முஸ்லிம்கள் வளம் பெரும் அல்லது அவர்களுடைய எதிர்காலம் கானல் நீராகும்தானே!

டாக்டர் ஏ.பீ. முகமது அலி, பிஎச்,டி, ஐ.பீ.எஸ் (ஓய்வு)
ஓய்வுபெற்ற மூத்த காவல்துறை அதிகாரி 
எழுத்தாளர்  
சமூக ஆர்வலர்

Saturday, January 26, 2019

குடியரசைக் கொண்டாடுவோம்!

அதிரை நியூஸ்: ஜன.26
புரிதலில்லாத அரசின் பொருளாதாரக் கொள்கையினால் பொலிவிழந்து  கிடக்கும் இந்தியப் பொருளாதார நிலையை எண்ணி வருந்தும் நிலைதான் இன்றுள்ளது. ஏழை எழ்மையிலிருந்து மீள வழி தெரியாது விழி பிதுங்கி நிற்கிறான். பணக்காரன் மேலும் மேலும் பணம் குவித்துப் படாடோபமாக வாழ்கிறான்.

'கிரெடிட் குய்ஸ்' என்ற அமைப்பானது புள்ளி விவரத்தோடு சுட்டிக்காட்டியுள்ளது நம் கவனத்தை ஈர்க்கிறது. நாட்டின் 10 சதவீதப் பணக்காரர்கள் வசம் நாட்டின் மொத்த சொத்தில் 77.4 சதவீதம் இருக்கிறது. 60 சதவீதம் ஏழைகளின் வசம் நாட்டின் மொத்த சொத்தில் 4.7 சதவீதம் மட்டுமே உள்ளது.

அசிம் பிரேம்ஜி பல்கலைக் கழகத்தின் அறிக்கையின்படி, நாட்டின் 82 சதவீத ஆண் தொழிலாளர்களும், 92 சதவீதப் பெண் தொழிலாளர்களும் மாதம் ரூ.10,000 க்கும் குறைவாகவே சம்பாதிக்கிறார்கள். நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வைத் தாங்கிக்கொள்ள இயலாத நிலையில் ஏழைகள் உள்ளனர். 1960 லிருந்து 2014 வரை 54 ஆண்டுகளில் விலைவாசி உயர்வுடன் ஒப்பிடும்போது, கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் மட்டும் 24 சதவீதம்  விலைவாசி உயர்வு ஏற்பட்டிருகிறது. 2014 க்கு முன்னர் 5,569 என இருந்த நுகர்வோர் விலைவாசி குறியீட்டு எண் தற்போது 6,893 என உயர்ந்திருக்கிறது.

இந்தியாவின் இத்தகைய பொருளாதார நிலை ஒருபுறம் இருக்க, இந்திய அரசு வெளியிட்டுள்ள ஒரு புள்ளி விவரம் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கிறது.
கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் மரணமடைந்த பாதசாரிகளின் எண்ணிக்கை மட்டும் 20,467. அதாவது சராசரியாக ஒவ்வொரு நாளும் 54 பாதசாரிகள் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள். இதன் மாநிலவாரியான கணக்கெடுப்பில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது.

தமிழகத்தில் 2017 ம் ஆண்டில் சாலை விபத்துகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,507. அடுத்த இரு இடங்களில் மகாராஷ்டிரமும், ஆந்திரமும் முறையே 1831, 1379 என்ற எண்ணிக்கைகளோடு உள்ளன. இப்புள்ளி விவரத்தில் சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகளின் உயிரிழப்புகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய உயிரிழப்புகளுக்கான காரணம் என்ன? சாலைகளைக் கடக்கின்ற பாதசாரிகளுக்குப் போதிய விழிப்புணர்வு இல்லாமை, அகலமான, நேர்த்தியான, பாதுகாப்பான,  மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்துகின்ற வகையில் நடைபாதைகள் அமையப்பெறாமை, நடைபாதை ஆக்கிரமிப்புகள் போன்றவற்றைக் கூறலாம். இது தொடர்பாக அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் கவனம் செலுத்த வேண்டாமா?

கவிஞர் ஷன்முக சுப்பையா என்பவர் எழுதிய கவிதை ஒன்று அண்மையில் படிக்க நேர்ந்தது.
"அணைக்க ஒரு அன்பில்லா மனைவி
வளர்க்க இரு நோயுற்ற சேய்கள்
வசிக்க சற்றும் வசதியில்லாத வீடு
உண்ண என்றும் உருசியில்லா உணவு
பிழைக்க ஒரு பிடிப்பில்லாத் தொழில்
எல்லாமாகியும் ஏனோ உலகம் கசக்கவில்லை"

தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட நாட்டில் நிலவும் அவல நிலைகள் ஒருபுறம் இருந்தாலும், நம் குடியரசு நமக்கு கசந்துவிடக் கூடாது. அது அவசியம் கொண்டாடப்பட வேண்டும். அதற்கான காரணங்கள் பல கூறலாம். 300 ஆண்டு கால அடிமை வாழ்விலிருந்து நாட்டை மீட்க மேற்கொண்ட விடுதலைப் போரின்போது உயிர் துறந்த, சிறைபட்ட  நம் முன்னோர்களின் தியாகத்தை நினைவு கூர்வதற்காக நாம் நம் குடியரசைக் கொண்டாட வேண்டும். நமக்கான அரசை நாமே தேர்ந்தெடுக்க நமக்களிக்கப்பட்டுள்ள வாக்களிக்கும் உரிமை, நிர்வாகம் மற்றும் சட்டமன்றம், நாடாளுமன்றங்கள் மக்களுக்கு எதிரான நிலைபாட்டை மேற்கொள்ளும்போது, நீதிமன்றங்கள் மூலம் தீர்வு காண்பதற்கான உரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை, வாழ்வுரிமை போன்ற எத்தனையோ உரிமைகள் நம் அரசியலமைப்புச் சட்டத்தின் வழியே நமக்குத் தரப்பட்டுள்ளதே அதற்காக நாம் நம் குடியரசைக் கொண்டாடத்தான் வேண்டும்.

ஒவ்வோராண்டும் ஜனவரி 26 அன்று குடியரசைக் கொண்டாடுவோம். அனைவருக்கும் குடியரசு நாள் வாழ்த்துகள்.

எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் எம்.ஏ., பி.எஸ்சி., பி.டி
தலைமை ஆசிரியர் (பணி நிறைவு)
அதிராம்பட்டினம்
தஞ்சாவூர் மாவட்டம்.          

Saturday, January 12, 2019

இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்?

அதிரை பாருக்
ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!                   
2019 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிகள் வேகமெடுத்துள்ள நிலையில் தமிழகத்தில் யார்? யாருடன் கூட்டணி? என்ற கேள்விகளுக்கு 16-12-2018 அன்று சென்னையில் நடந்த விழாவில் தி.மு.க. தலைவர் திரு. ஸ்டாலின் அவர்கள் காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் திருமதி. சோனியா மற்றும் பல கட்சிகளின் தலைவர்களின் முன்னிலையில் 2019 இல் ராகுல் அவர்களை பிரதமர் வேட்பாளராக முன் மொழிந்தது. அந்த மேடையில் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாது. அங்கே விழாவில் கலந்து கொண்ட  சில மாநில அரசியல் கட்சி தலைவர்களிடமும் சிறிய அதிர்வலையை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து இன்று வரை அந்த செய்தி பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும் முக்கியத்துவம் பெற்றதாக ஆகிவிட்டது.

மூன்றாவது அணியைப் பற்றி அடிக்கடி கூடி பேசிக் கொண்டிருக்கும்  கட்சிகளுக்கு தி.மு.க.வின் முடிவு இன்று வரை கடும் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது. மூன்றாவது அணி என்பது எப்போதுமே குழப்பமானது தான். அது ஏற்கனவே மூன்றாவது இடத்தில் உள்ளது. முதலிடத்திற்கு வரப்போவது இல்லை. எனவே அதைப் பற்றி காங்கிரசோ அல்லது அதன் கூட்டணி கட்சிகளோ கொஞ்சம் கூட பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. மூன்றாவது அணி என்பதே பிரதமர் பதவியை குறி வைத்து உண்டாக்கப் படுவதுதான். ஏற்கனவே இந்த அணிகள் எல்லாம் மத்தியில் நிலையான ஆட்சியை தரவில்லை என்பது இந்த நாட்டு மக்களுக்கு தெளிவாக தெரியும். மீண்டும் அது போன்ற ஸ்திரமற்ற குழப்பமான ஆட்சியை மக்கள் ஒரு போதும் விரும்ப மாட்டார்கள். ஐந்து மாநில தேர்தல் முடிவுகளால் காங்கிரஸ் 2019 ல் மற்ற கட்சிகளிடம் கூடுதல் இடங்களை கேட்கும் என்ற காரணத்தாலும் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியே பிரதமர் பதவியில் இருந்து விடுமோ என்ற அச்சத்திலும் மூன்றாவது அணி என்ற ஒரு குழப்பமான அணி உருவாகிக்  கொண்டிருக்கிறது.

அதில்  யார் பிரதமர் வேட்பாளர்? இசை நாற்காலி (Musical Chair) கதை தான்.
கலைஞர் அவர்கள் இப்போது இருந்தால் பிரதமர் என்று யாரை அறிவிப்பாரோ அதைத் தான் ஸ்டாலின் அவர்களும் அறிவித்துள்ளார். தி.மு.க தனியாகவே போட்டியிடலாம் என்று தெலுங்கானா முதல்வர் திரு. K. சந்திர சேகர ராவ். அண்மையில் பேட்டி கொடுத்தார். 2014 ல் தமிழ் நாட்டில் தனியாக நின்ற தி.மு.க வுக்கும் காங்கிரசுக்கும் எத்தனை இடங்கள் கிடைத்தன என்ற விவரம் தெலுங்கான முதல்வருக்கு தெரியாதா? அது தெரிகிறதோ இல்லையோ தமிழக அரசியல் நிலவரம் அவருக்கு புரியவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

ஆந்திர அரசியலும், தெலுங்கான அரசியலும் தமிழ் நாட்டுக்கு ஒத்து வராது. இங்குள்ள சூழ்நிலையை வைத்து தான் தி.மு.க, காங்கிரஸ் மற்றும் இடது சாரிகள் கூட்டணி பற்றி முடிவெடுப்பார்கள். இடது சாரிகள் 2019 ல் காங்கிரசுடன் எல்லா மாநிலங்களிலும் கூட்டணி சேர்வதன் மூலம் அவர்களுக்கு நாடாளுமன்றத்தில் கணிசமான அளவிற்கு பிரதிநிதிகள் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பதை அவர்களது கூட்டணி முடிவுக்கு பிறகு சொல்கிறேன். ஒரு வேளை டெல்லியில் உள்ள இடது சாரி தலைவர்கள் வேறு முடிவை எடுத்தால் (காங்கிரஸ்  அல்லாத அணி) தமிழ்நாட்டில் உள்ள அந்த கட்சிகள் அதே முடிவை எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று நான் கருதுகிறேன். ஏற்கனவே 2004 மற்றும் 2009 நாடாளுமன்ற தேர்தல் முடிவு வருவதற்கு முன்பே இடது சாரிகளுக்கு எத்தனை இடங்கள் கிடக்கும் என்பதை சரியாக கணித்து காங்கிரஸ் தலைமைக்கு (டெல்லி) தெரியப்படுத்தியிருக்கிறேன் . இந்த தகவல் ஏற்கனவே நான் செய்திகளில் கூறி இருக்கிறேன். மூன்றாவது அணி என்பதை காரணம் காட்டி காங்கிரசுக்கு குறைவான தொகுதி ஒதுக்குவதை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளாது. ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. மத்திய பிரதேசம், ராஜஸ்தான்,சத்தீஸ்கர் மாநிலங்களில் அண்மையில் வலுவான கூட்டணி இல்லாமலேயே காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

2019 ல் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியை நிர்வகிக்க போகும் காரணிகள் எவை? இதில் காங்கிரசும் கூட்டணி கட்சிகளும் மிக கவனமாகவும் மனோதத்துவ ரீதியாகவும் செயல்பட வேண்டும்.

1. பிரச்சார வியூகம் (ELECTION CAMPAIGN)
2. வேட்பாளர் தேர்வு (SELECTION OF CANDIDATES)
3. வாக்காளர்களை ஏமாற்றாத தேர்தல் அறிக்கை (ELECTION MANIFESTO)

கூட்டணி என்பது நாலாவது இடத்தில் உள்ளது. பணம் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்படும். வரும் பொதுத் தேர்தலில் என்னுடைய கணிப்பின் படி இன்ஷா அல்லாஹ் முடிவு இப்படித்தான் இருக்கும். கடந்த பல ஆண்டுகளாக பல தேர்தல் முடிவுகளை முன் கூட்டியே கணித்து காங்கிரஸ் தலைமைக்கு தெரியப்படுத்தியிருக்கின்றேன். அந்த வகையில் ஒரு கட்சியின் வளர்ச்சிக்கு ஆலோசகர்களே முக்கியமானவர்கள்  என்பதை பல முறை நிரூபித்து உள்ளேன். 1990  முதல் காங்கிரஸ் கட்சிக்கு நான் வழங்கியுள்ள ஏராளமான ஆலோசனைகளே இதற்கு சான்று. முக்கிய காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் (தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் உள்பட) இது தெரிந்த விஷயம்.
2016 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியிலிருந்து என்னிடம் செல்போனில் தொடர்பு கொண்டதும், அதே நாளில் மாண்புமிகு காங்கிரஸ் தலைவர் ராகுல் அவர்கள் (அப்போது அவர் காங்கிரஸ் துணைத்தலைவராக இருந்தார்) என்னிடம் தொடர்பு கொண்டு பேசியதும். கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்காக நான் அவரிடம் கூறிய ஆலோசனைகளும் முக்கியத்துவம் வாய்ந்தது.

அதையெல்லாம் முழுவதுமாக என்னால் இங்கு விவரிக்க முடியாது. அது எனக்கும் கட்சி மேலிடத்துக்கும் இடையே நடந்த முக்கியத்துவம் வாய்ந்த கருத்துப் பரிமாற்றங்கள். இனிவரும் தேர்தல்களில் பணத்தை மையமாக வைத்து சீட் வழங்கும் பழைய முறைக்கு ராகுல் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். காங்கிரஸ் தொண்டர்களில் திறமையானவர்கள் யார் வேண்டுமானாலும் சீட் கேட்டு விண்ணப்பிக்கலாம். உங்களிடம்  பண வசதி இல்லை என்று நீங்கள் ஒதுங்கி விட வேண்டாம். யாரை எங்கே போட்டியிட செய்வது என்பதை நான் முடிவு செய்து கொள்கிறேன் என்பதாக ராகுல் அவர்கள் அண்மையில் அறிவித்தது. இன்னமும் ஏராளமானவர்களுக்கு தெரியவில்லை என்பதால் அதை நான்  இங்கே குறிப்பிடுகின்றேன். சோனியா மற்றும் ராகுல் அவர்களின் அறிவுறுத்தலின் படி, காங்கிரஸ் காரர்கள் கோஷ்டிகளை மறந்து செயல்பட வேண்டும்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரை மாற்றப் போகிறார்களா?
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக யாரை நியமித்தாலும் அவருக்கு எதிர்ப்பு வருவது வழக்கமானதுதான். இது டெல்லி தலைமைக்கும் தெளிவாக தெரியும்.

புத்தாண்டில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரை (திரு. திருநாவுக்கரசர்) மாற்றப் போகிறார்கள். தை பிறந்ததும் அவரை மாற்றப் போகிறார்கள். ராகுல் அமெரிக்காவிலிருந்து வந்ததும் புதிய தலைவரை நியமிக்கப் போகிறார்கள். இந்த மாதம் 9 ம் தேதி ராகுல் துபை செல்கிறார் , அங்கிருந்து வந்ததும் காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவரை அவர் நியமிக்கப் போகிறார். இப்படியாக கடந்த பல மாதங்களாக பலரும் பல விதமாக பேட்டிகளைக் கொடுத்து அவை தினசரி மற்றும் வார பத்திரிக்கைகளில்  செய்திகளாக வருகின்றன. இப்போதைக்கு புதிய தலைவரை நியமிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இது காங்கிரஸ் மேலிடத்திற்கும் தெரியும். திருநாவுக்கரசர் அவர்கள் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டன. இந்த இரண்டு ஆண்டுகளில் எந்த தேர்தலிலும் காங்கிரஸ் போட்டியிடவில்லை. தமிழ் நாட்டிற்கு 2019 நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமே வரும் எனவும். இடைத்தேர்தல்களோ உள்ளாட்சி தேர்தல்களோ வராது எனவும். தமிழ் நாடு காங்கிரஸ்  தலைவருக்கு ஏற்கனவே நான் எழுதி விட்டேன். என்னுடைய கணிப்பில் வந்ததை நான் முன்கூட்டியே தெரியப்படுத்தினேன். அது தான் இப்போதைய அரசியல். கூட்டணி  விஷயமாக ஒருவர் வேறு ரூட்டில் காய் நகர்த்துகிறார் என்பதற்கெல்லாம், ஒரு தலைவரை மாற்றும் சூழ்நிலை ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. ராகுல் அவர்கள் கூட சில நேரம் மாற்று யோசனைகளை ( கூட்டணி விஷயமாக) பரிசிலித்திருக்கிறார். அதற்காக அவரை மாற்ற வேண்டும் என்பதா?. நான் கூட இரண்டு விதமான கூட்டணியை வழக்கம் போல் காங்கிரஸ் மேலிடத்திற்கு தெரியப்படுத்துவேன். அதை அவர்கள் பரிசீலித்து. முடிவெடுப்பார்கள்.

திருநாவுக்கரசர் அவர்கள் கலிஃபோர்னியாவிலிருந்து நியூயார்க் சென்று திரு. ரஜினி அவர்களை ரகசியமாக சந்தித்துள்ளார் என்றும் அவரது கட்சியில் சேரப் போகிறார் என்றும் செய்திகள் வருவதைப் படித்தேன். அவர் திடிரென வாஷிங்டன் சென்றால் ட்ரம்ப் கட்சியில் சேரப்போகிறார். தமிழ் நாட்டுக்கே வரமாட்டார் என்று கூட பேட்டி கொடுத்து விடுவார்கள். தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக (2019 தேர்தலுக்கு  பிறகு)  சிறுபான்மை இனத்தவர் ஒருவரை அதாவது இஸ்லாமிய சமூகத்தை சார்ந்த ஒருவரை நியமிக்க கோரி கூடிய  விரைவில் திரு. ராகுல் அவர்களுக்கும் , திருமதி சோனியா அவர்களுக்கும் ஆலோசனை அனுப்ப உள்ளேன். அதை காங்கிரஸ் மேலிடமும் 33 மாவட்ட காங்கிரஸ் தலைவர்களும்  தொண்டர்களும் ஏற்றுக் கொள்வார்கள்.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட நீங்கள் விரும்புகிறீர்களா என பலரும் என்னிடம் தொடர்ந்து கேட்கின்றனர். 2014 சூழ்நிலை இப்போது இல்லை. என் விஷயமாக நான் ஒருவன் மட்டும் முடிவு செய்ய இயலாது. அதே நேரம் யாரும் எனது விருப்பத்திற்கு தடையாக இருக்கப்போவதில்லை.நாடாளுமன்றத் தேர்தலில் பெண்கள், இளைஞர்கள், தலித்கள், சிறுபான்மையினர் ஆகியவர்களுக்கு காங்கிரஸ் மேலிடம் முக்கியத்துவம் அளிக்கும்.
2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் ராகுல், சோனியா அவர்களை நான் நேரில் சந்திக்க நாடியுள்ளேன். 2016ல் (ஜூன் 18). ராகுல் அவர்கள் எனக்காக பயண ஏற்பாடுகளை செய்து என்னை உடனடியாக டெல்லி வர அழைத்திருந்தார். அப்போது ரமலான் மாதமாக இருந்ததாலும்  உடல்நிலை சரி இல்லாததாலும் என்னால் அப்போது செல்ல இயலவில்லை அதற்கான காரணங்களை உடனடியாக நான் ராகுல் அவர்களுக்கு தெரியப்படுத்திவிட்டேன்.

2014 ல் மத்தியில் ஆட்சி மாற்றத்திற்கு ஒரு தனி நபரின் ஆக்ரோஷமான பிரச்சாரமும், அந்த கட்சியின் தேர்தல் அறிக்கையுமே  கை கொடுத்தன. அந்த தேர்தல் அறிக்கையில் உள்ள பல அம்சங்கள் பொய்யானவையாகவும், செயல்படுத்த முடியாததாகவும் ஆகிவிட்டன என்பது வாக்காளர்களுக்கு தெளிவாக புரிந்து விட்டன.

செயல்படுத்த முடியாத பொய்யான தேர்தல் அறிக்கைகளை ஒரு போதும் காங்கிரஸ் வெளியிடாது.

2019 ல் பி.ஜே.பி க்கு எத்தனை இடம்? காங்கிரசுக்கு எத்தனை இடம்? அந்த கட்சிக்கு எத்தனை இடம்? இந்தக் கட்சிக்கு எத்தனை இடம்? என்று புதிது புதிதாக வந்து கொண்டிருக்கும் திடீர் கணிப்புகளால் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. மக்கள் மனநிலை என்ன என்பதை புரிந்து கொள்ளாமலேயே அவ்வப்போது இது போன்ற கணிப்புகள் வெளியாகின்றன. இதெல்லாம் நாட்கள் செல்லச் செல்ல மாறிவிடும். காங்கிரசின் பிரச்சாரம் வேகமெடுக்கும் போது மக்களுக்கு அது புதிய சிந்தனையை கொடுக்கும். அந்த சமயம் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கான சூழ்நிலை பிரகாசமாக உள்ளது என ஊடகங்கள் புதிய கருத்து  கணிப்புகளை வெளியிடுவதை நாம் பார்க்கலாம்.

ராகுல் அவர்களை ஸ்டாலின்  அவர்கள் பிரதமர் வேட்பாளராக அறிவித்தது. நாளுமன்றத் தேர்தலுக்காக  மட்டும் அல்ல. அடுத்து வரக் கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் கூட்டணிக்கும் சேர்த்து சொல்லப்பட்டது தான். அதை மேலும் விவரிக்க நான் விரும்பவில்லை. அதைத் தான் நான் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என குறிப்பிட்டுள்ளேன்.

ஏ. பாருக்,
'அரசியல் விமர்சகர்'
68 காலியார் தெரு,
அதிராம்பட்டினம் - 614 701.
பட்டுக்கோட்டை தாலுகா,
தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு.

Monday, December 17, 2018

மரணமும் ~ கடமையும்!

அதிரை நியூஸ்: டிச.17
நோயாளிகளை அவர்கள் இருக்கும் இடம் சென்று பகைமையினை மறந்து நலம் விசாரிப்பதும், இறந்தவர்களுக்கு சிறந்தமுறையில் அடக்கம் செய்வதற்கும் இஸ்லாத்தில் பல ஹதீதுகள் இருக்கின்றன. அவர்களுக்கு இறைவன் பாவங்களை மன்னிக்கும் பரிசுகளை வழங்குகிறான் என்றும் கூறியிருப்பதினை நீங்கள் அறிவீர்கள். ஆனால் சிலர் அதற்கு மாறுபட்டு இருப்பதினை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என இருக்கின்றேன்.

மூன்று சம்பவங்களை எடுத்துக் கூறி சிலர் எப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்கள் என்பதினை விளக்கலாம் என எண்ணுகிறேன்.

1 ) சென்னை புதுத்தெருவில் வாழ்ந்த திண்டுக்கலைச் சார்ந்த நடைப் பயிற்சி  நண்பர் ஹசன் இறந்து விட்டார் என்று நானும் எனது நண்பர் கீழக்கரை அமீரும் அங்கு சென்று மவுத்து சம்பந்தமாக அவருடைய மகனிடம் விசாரித்து விட்டு வெளியே ஜனாஸா எடுப்பதற்கு அமர்ந்திருந்தோம். அந்த இடத்திற்கு நான்கு கட்டிடத்திற்கு அப்பால் இருக்கும் இன்னொரு நடைப் பயிற்சி நண்பரிடம் ஹசன் மவுத்து சம்பந்தமாக சொல்லி நாங்கள் அங்கே இருக்கின்றோம் என்றும் சொன்னோம். ஆனால் அவர் ஜனாஸா எடுத்து செம்புதாஸ் பள்ளியில் ஜனாஸா தொழுகின்றவரை வரவில்லை. மறுநாள் நடைப் பயிற்சிக்கு வந்தவரை ஏன் வரவில்லை என்று கேட்டோம், அதற்கு அவர், 'எனக்கு மவுத்தானவர் உடலைப் பார்த்தால் பயம்' என்றது எங்களை ஆச்சரிய பட வைத்தது.

2 ) நடைப்பயிற்சியில் ஈடுபடும் மற்றொரு நண்பரிடம் ஒரு நபர் வந்து 'நான் இன்னொரு நடைப் பயிற்சி நண்பரின் தாயார் இறந்ததிற்கு சென்று விட்டு வருகிறேன்' என்று அப்பாவித் தனமாக சொல்லி விட்டு  அவரிடம் கைகொடுத்தார். அவர் உடனே கையினை எடுத்து விட்டு வீட்டிற்கு சென்றதும் மனைவியிடம் ஒரு வாலி தண்ணீர் வாங்கி நடைப் பயிற்சி உடையுடன் தலையில் ஊற்றிவிட்டு வீட்டுக்குள் சென்றதாக அவர் சொன்னது இன்னொரு ஆச்சரியமாக இருந்தது.

3 ) மூன்று வருடத்திற்கு முன்பு ஒரு அதிரையினைச் சார்ந்த நடைப் பயிற்சி பெரியவர் மவுத்தாகி விட்டார் என்று பார்ப்பதிற்காக நாங்கள் அங்கப்ப நாயக்கன் தெருவில் உள்ள பள்ளிக்கு சென்றோம். அவருடைய ஜனாஸா வைக்கப் பட்டு இருந்தது. அதனை சுற்றி பிரமுகர்கள் நின்றார்கள். நாங்கள் அடக்கம் எங்கே என்று வினவியதிற்கு அதிரையில் என்று சொன்னார்கள். நாங்கள் அரை மணி நேரம் நின்றோம். ஆனால் குழுப்பாட்டுவதிற்கான எந்த முயற்சியும் இல்லை. வினவியதிற்கு குழுப்பாட்டுவதிற்கு ஒருவரை வரவழைத்துள்ளோம்  அவர் இன்னும் வரவில்லை என்றது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

இஸ்லாத்தில், 'ஒருவர் ஜனாஸாவினை குளிப்பாட்டி இறந்தவருடைய துர் வாடையை சுத்தம் செய்தால் அவருடைய பாவங்கள் அல்லாஹ்வால் மன்னிக்கப் படும்' என்ற ஹதீதுகள் உள்ளன.

அது மட்டுமல்லாமல் எப்படி, யார் குளிப்பாட்ட வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

1 ) ஆண் மையத்திற்கு ஆண்களும், பெண் மையத்திற்கு பெண்களும் குளிப்பாட்டி சுத்தம் செய்ய வேண்டும்.

2 ) ஆனால் கணவனுக்கோ, மனைவிக்கோ அல்லது குழந்தைக்கோ யாரும் செய்யலாம், "இபின் மஸ்ஜித்'.

3 )  அபூபக்ர்(ரழி) அவர்கள் மவுத்தின் போது அவருடைய மனைவி அஸ்மாவும், அவருடைய மகன் அப்துர் ரஹ்மானும் குளிப்பாட்டியதாக வரலாறு.

4 ) குளிப்பாடுவர் முதலில் தொழுகையினை கடைப் பிடிப்பவராக இருக்க வேண்டும்

5 ) ஜனாஸா குளிப்பாட்டிய பிறகு கை, கால் சுத்தம் செய்து கொள்ளலாம். ஆனால் குளிக்க வேண்டிய அவசியமில்லை.

6 ) ஜனாஸாவினை முதுகு பக்கம் பலகையில் இருக்கும் படியும், முகம் கிபிலா நோக்கியும் இருக்குமாறு கிடைத்த வேண்டும்.

7 ) ஒரு துணியை தொப்புலிருந்து முன்னங்கால் வரை போர்த்த வேண்டும்.

8 ) ஜனாஸா உடுத்தியிருந்த ஆடையினை களைய வேண்டும்.

9 ) ஒரு குவளையில் தண்ணீரை எடுத்து தலையிலிருந்து கால் வரை மூன்று முறை ஊற்ற வேண்டும்.

10 ) வயிற்றில் கையினை வைத்து கழிவு வெளியேறும் வரை அழுத்தம் கொடுக்க வேண்டும்.

11 ) ஆண் உறுப்பிலிருந்தும், ஆசன வாயிலிருந்தும் வெளியேறும் கழிவுகளை சுத்தம் செய்ய வேண்டும்.

12 ) முடியின் முடிகிச்சுகளை அவிழ்த்து சுத்தம் செய்ய வேண்டும்.

13 ) உடலை மூன்று முறை சோப்புப் போட்டு சுத்தம் செய்ய வேண்டும்.

14 ) கடைசியில் பல மண பொருள்கள் கொண்ட தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும்.

15) உடலில் ஒரு துணி கொண்டு துடைத்து சுத்தம் செய்ய வேண்டும்.

16 ) அதன் பின்பு ஓலைப் பாயில் ஜனாஸாவினை எடுத்து அத்தர் கற்பூர பொடி தூவிய   கபன்  துணிமேல் வைத்து ஜனாஸாவினை மூடி கால், தலையினை துணிக் கயிறால் கட்டி சந்தூக்கில் வைத்து துவா ஓதி பள்ளிவாசலில் தொழுகை வைப்பதிற்காக தூக்கிச் செல்வார்கள்.

ஜனாஸா குழுப்பாட்டினை, கபன் இடுதல் போன்றவற்றினை    முன்பெல்லாம் அசரத் அவர்கள் செய்வார்கள்.ஆனால் அதனையே ௧௪.௧௨.2018 அன்று எனது மைத்துனர் முகமது ரபி அவர்களின் ஜனாஸாவிற்கு  இளையான்குடியில் மதினா ஸ்டார் கபடி குழுவினைச் சார்ந்த இளைஞர்கள் ஐந்து பேர்கள் சின்னத்தம்பி அம்பலம் பேரன் சித்திக் தலைமையில் ஒரு போர் படை போல நின்று குழுப்பாட்டி, கபனிட்டு, ஜனாஸா தொழுகைக்கு மேலப் பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக எடுத்துச் சென்றதோடு மட்டுமல்லாமல், ஐ.என்.பி. அடக்க ஸ்தலத்திற்கு தோழில் தூக்கிச் சென்று நல்லடக்கமும் செய்ததோடு தாவாவும் செய்தது நான் மேலே குறிப்பிட்ட மூன்று சம்பவங்களிடமிருந்து வேறு பட்டு இருந்தது என்று பார்க்கும் போது அவர்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

பல்வேறு இயக்கங்களின் சார்பாக ஜனாஸா எப்படி குளிப்பாட்டி, கபனிடுவது என்று  வகுப்புகள் எடுக்கப் படுகின்றன. அதனையே ஒவ்வொரு மதரஸாவிலும் வகுப்பு எடுத்தால் ஜனாஸாவிற்கு வேண்டிய கடமை செய்வதற்கு பிற்காலத்தில் பயப்பட மாட்டார்களல்லவா?

சென்னையில் இளையான்குடியினைச் சார்ந்தவர்கள் பல பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகை நடத்தி மையத்து அடக்கம் செய்கிறார்கள். ஆனால் இளையான்குடியில் ஐ.என்.பிக்கு வேறு பள்ளிவாசல் இருந்தாலும் ஒற்றுமையாக மேலப்பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகை வைத்துவிட்டு அடக்கம் செய்வதற்கு மட்டும் ஐ.என்.பி. பள்ளிவாசல், மேலப்பள்ளி அடக்கஸ்தலத்திற்கு எடுத்துச் செல்லுவது ஒற்றுமை என்ற கையினை பற்றிக் கொள்ளுங்கள் என்ற நபி வழி செயலாக இருக்குமல்லவா!

டாக்டர் ஏ.பீ. முகமது அலி, பிஎச்,டி, ஐ.பீ.எஸ் (ஓய்வு)
ஓய்வுபெற்ற மூத்த காவல்துறை அதிகாரி 
எழுத்தாளர்  
சமூக ஆர்வலர்

Wednesday, November 14, 2018

குழந்தைகளைக் கொண்டாடுவோம் ~ குழந்தைகள் தின சிறப்பு பதிவு!

அதிரை நியூஸ்: நவ.14
இன்று (நவ.14) புதன்கிழமை. இந்தியத் திருநாட்டின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாள். இந்நாள் ஒவ்வோராண்டும் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. நேரு அவர்களுக்கு குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம். அதனால் தனது பிறந்த நாளைக் குழந்தைகள் தினமாகக் கொண்டாடும்படிப் பணித்தார். இந்நாளில் குழந்தைகளின் குணாதிசயம் பற்றியும், அவர்களுக்கான உரிமைகள் பற்றியும், அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய சமூக அக்கறை பற்றியும் விரித்துரைக்க விரும்புகிறேன்.

"குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்துவிடும் மனத்தால் ஒன்று"

என்பது இளமையில் என்றோ கேட்ட திரை இசைப் பாடல். குற்றங்களை மறந்து மன்னிக்கும் குழந்தைகளின் குணத்தைத் தென்னெனத் தெரிவிக்கிறது. இப்பாடல். குழந்தைகள் அவ்வப்போது சண்டையிட்டுக் கொள்வதும், அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் கரம் கோர்த்து விளையாடுவதும் நாம் அன்றாடம் காணும் காட்சிகள் தானே. இத்தகைய உயர் குணம் பெரியவர்களிடமும் இருந்தால் உலகில் சண்டை ஏது? பகை ஏது?

குழந்தைகளுக்கென சில உரிமைகள் உண்டு. அவற்றை அவர்களுக்குத் தராமல் குழந்தை உரிமை மீறல்கள் ஆங்காங்கே நடைபெறுவது குறித்து வருந்த வேண்டியுள்ளது.

பொதுவாக குழந்தையும், சேட்டையும் கூடப்பிறந்த இரட்டைப் பிறவிகள் எனலாம். பள்ளி செல்லும் வயதில் சேட்டைகள் சற்று அதிகம் இருக்கும். பள்ளி விடுமுறை நாட்களில் அவர்களின் கொண்டாட்டமும், குதூகலமும் கேட்கத் தேவையில்லை. சில நேரங்களில் குழந்தைகளின் கொண்டாட்டம் பெற்றோர்களுக்குத் திண்டாட்டமாகத் தோன்றலாம். இதனால் அவர்களுக்கு உண்டாகும் கோபம் காரணமாகக் கொண்டாட்டத்தில் ஈடுபடும் குழந்தைகள் தண்டனைக்குள்ளாவதும் உண்டு.

அண்மையில் ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் நம்மை அதிர்ச்சியுறச் செய்தன. தனக்குப் பிறந்ததல்ல என்ற சந்தேகத்தால் தந்தையே தன் குழந்தையை கழுத்தை நெறித்துக் கொன்றுள்ளான். தாய்ப்பால் ஊட்ட விரும்பாத தாயே தன் குழந்தையைக் கொன்றிருக்கிறாள். இருண்ட காலம் எனக் கூறப்படும் அன்றைய நாளில் அரபகத்தில் பெண் குழந்தை பிறந்தால் அதைக் கொன்றழிக்கும் நிலை இருந்ததைக் நாம் அறிந்திருக்கிறோம். அத்தகைய கொடுஞ்செயல் இன்றைய நவீனக் காலத்தில் நிகழ்வது வியப்பையும், வேதனையையும் அளிக்கிறது.

இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகளின் உரிமை பல வழிகளில் மீறப்படுகிறது. மாறிவரும் வாழ்க்கை முறையில் பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்பவர்களாக உள்ளனர். அவர்கள் வீடு திரும்பும் போது குழந்தைகள் தூங்கிவிடுகின்றனர். காலையில் பெற்றோர் அவசர அவசரமாகப் பணிக்குப் புறப்படுவதிலும், குழந்தைகளை அவசரக் கோலத்தில் தயார்படுத்திப் பள்ளிக்கு அனுப்புவதிலும் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். இதனால், பெற்றோர் - குழந்தைகளுக்குமான இடைவெளி அதிகரித்து விடுகிறது. குழந்தைகளிடம் சிறிதுநேரம் பேசுவதற்குக்கூடப் பெற்றோர்களால் நேரம் ஒதுக்க முடிவதில்லை.

கிடைக்கிற விடுமுறை நாட்களிலாவது பெற்றோர்கள் குழந்தைகளிடம் மனம்விட்டுப் பேசலாம்; குழந்தைகளின் பள்ளிச் சூழல், அவர்களுடைய நண்பர்கள், வகுப்பில் நிகழ்ந்த சுவாரசியமான சம்பவங்கள் போன்றவற்றைக் கேட்டறியலாம். இது குழந்தைகளுக்கு உற்சாகத்தையும் மன மகிழ்ச்சியையும் தரலாம். இதற்கெல்லாம் இக்காலப் பெற்றோர்களுக்கு எங்கே நேரம் இருக்கிறது. தொலைக்காட்சித் தொடரிலும், கைப்பேசி அழைப்பிலும் பொழுது போய்விடுகிறதே.

விளையாட்டு என்பது குழந்தைகளுக்கு ஒரு குதுகலமான அனுபவம். அதற்கு நேரம் ஒத்துக்கித்தர முடியாத அளவுக்கு டியூசன் கிளாஸ், கம்ப்யூட்டர் கிளாஸ், மியூஸிக் கிளாஸ் என்றெல்லாம் குழந்தைகளின் வயதுக்கு மீறியவற்றையெல்லாம் திணித்து அவர்களைப் பெற்றோர்கள் பாடாய்படுத்துகிறார்கள்.

பெண் குழந்தைகள் பற்றி சமீப காலங்ககளில் ஊடகங்கள் மூலம் அறிய வரும் செய்திகள் நம்மை பதைப்பதைக்கச் செய்கின்றன. 6-வயது, 3-வயது குழந்தைகளெல்லாம் கூடப் பாலியல் வன்கொடுமைக்குள்ளாவதை அறிய நேரும் போது அதிர்ச்சிக்குள்ளாகிறோம்.

இக்கொடுமைகளுக்கெல்லாம் தீர்வுதான் என்ன? நாம் வாழும் சமூகமும் நம்மை ஆளும் அரசும் இதைப்பற்றிச் சிந்திக்க வேண்டும். பொறுப்பிலுள்ளவர்கள் தகுந்த வழிகாண வேண்டும். இக்கொடுமைகளுக்கெல்லாம் முடிவு கட்டவேண்டும்.

எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் எம்.ஏ., பி.எஸ்சி., பி.டி
தலைமை ஆசிரியர் (பணி நிறைவு)
அதிராம்பட்டினம்
தஞ்சாவூர் மாவட்டம்.