.

Pages

Showing posts with label உள்ளாட்சி தேர்தல் 2019. Show all posts
Showing posts with label உள்ளாட்சி தேர்தல் 2019. Show all posts

Monday, January 20, 2020

பிலால் நகர், M.S.M நகர் வாக்காளர்களுக்கு திமுகவினர் நன்றி தெரிவிப்பு!

அதிராம்பட்டினம், ஜன.20
உள்ளாட்சி தேர்தலில் பட்டுக்கோட்டை ஒன்றியம் 18-வது வாா்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட நா.சுரேஷ்க்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்த வாக்காளர்களுக்கு திமுகவினர் இன்று  திங்கட்கிழமை மாலை வீடு வீடாகச் சென்று நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

திமுக மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு துணை அமைப்பாளர் எஸ்.எச் அஸ்லம் தலைமையில், திமுக ஏரிப்புறக்கரை ஊராட்சி செயலாளர் நாகூரான், பட்டுக்கோட்டை ஒன்றியம் 18 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நா.சுரேஷ் உள்ளிட்டோர் பிலால் நகர், எம்.எஸ்.எம் நகர் பகுதியில் வீடு வீடாக வாக்காளர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

இதில், அப்துல் ஜப்பார், எம்.எஸ் கமால், அப்துல் கரீம், அபுசாலிகு, திமுக ஏரிபுறக்கரை ஊராட்சி இளைஞர் அணியினர் பசுபதி, சபரி நாதன், மனோஜ், ஐயப்பன், நாகூரான், என்.குணசேகரன், சுப்பிரமணியன், ரமேஷ் கண்ணன், மணிமாறன், ஆசைத்தம்பி உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

அப்போது, இப்பகுதியில் தார்சாலை, வடிகால் வசதி, சுகாதாரமான குடிநீர் விநியோகம், குப்பைகளை அகற்றுதல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Saturday, January 11, 2020

பட்டுக்கோட்டை ஒன்றியத் தலைவர், துணைத்தலைவர் தேர்வில் திமுக வெற்றி: முன்னாள் சேர்மன் வாழ்த்து!

பட்டுக்கோட்டை, ஜன.11
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பட்டுக்கோட்டை ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் 19 பேர், பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த (ஜன.06) திங்கட்கிழமை பதவி ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து, தலைவர் மற்றும் துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், பட்டுக்கோட்டை ஒன்றியம் 4-வது வார்டில் வென்ற, தி. பழனிவேல் (தி.மு.க) தலைவராகவும், 3-வது வார்டில் வென்ற, லெ. முருகானந்தம் (தி.மு.க) துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

இதையடுத்து, அதிராம்பட்டினம் பேரூர் முன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம், திமுக ஒன்றிய பிரதிநிதி ஏ.எம் அப்துல் ஹலீம், என்.ஏ முகமது யூசுப், ஜாஹிர் உசேன் உள்ளிட்ட பலர் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
 

Monday, January 6, 2020

பட்டுக்கோட்டை ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்பு (படங்கள்)

பட்டுக்கோட்டை, ஜன.06
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பட்டுக்கோட்டை ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் 19 பேர், பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை காலை பதவி ஏற்றுக்கொண்டனர்.

பதவி ஏற்றுக்கொண்டவர்கள் விவரங்கள் பின்வருமாறு;

வார்டு 1 க. ரமாதேவி (தி.மு.க)
வார்டு 2 ப. மாரியாயி (தி.மு.க)
வார்டு 3       லெ. முருகானந்தம் (தி.மு.க)
வார்டு 4 தி. பழனிவேல் (தி.மு.க)
வார்டு 5 மு. ரவிச்சந்திரன் (தி.மு.க)
வார்டு 6 மு. ராஜாத்தி (தி.மு.க)
வார்டு 7 அ. ஜெயராதா (தி.மு.க)
வார்டு 8 ஆ. ராஜேந்திரன் (தி.மு.க)
வார்டு 9 நா. பாலகிருஷ்ணன் (தி.மு.க)
வார்டு 10 கா. முனியப்பன் (அ.இ.அ.தி.மு.க)
வார்டு 11 கு விஜி (மற்றவை)
வார்டு 12 வெ சுபத்ரா (தி.மு.க)
வார்டு 13 அ. ஜெயசுதா (பி.ஜே.பி)
வார்டு 14 அ.இ.அ.தி.மு.க ஜெ. தேவி (அ.இ.அ.தி.மு.க)
வார்டு 15 க. அர்ச்சனா (தி.மு.க)
வார்டு 16 ம. ராஜேஸ்வரி (தி.மு.க)
வார்டு 17 மு. சிவக்குமார் (அ.இ.அ.தி.மு.க)
வார்டு 18 நா. சுரேஸ் (தி.மு.க)
வார்டு 19 ம. ஜெயபிரகாஷ் நாராயணன் (அ.இ.அ.தி.மு.க)
 
 
 

ஏரிப்புறக்கரை ஊராட்சி தலைவர், உறுப்பினர்கள் பதவி ஏற்பு: பிலால் நகர், எம்.எஸ்.எம் நகர் ஜமாத்தார்கள் வாழ்த்து!

அதிராம்பட்டினம், ஜன.06
அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை ஊராட்சி தலைவர், உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா ஊராட்சி அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்றது.

இதில், ஏரிப்புறக்கரை ஊராட்சி தலைவராக எஸ்.சக்திவேல் புதிதாக பதவி ஏற்றுக்கொண்டார். அதேபோல், பிலால் நகர் 1-வது வார்டு கவுன்சிலராக ஜாஸ்மின் பானு (எம்.ஆர் கமாலுதீன்), எம்.எஸ்.எம் நகர் 2-வது வார்டு கவுன்சிலராக ரஹ்மத் (எஸ். முகமது தமீம்) ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டனர்.

இதையடுத்து, புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட இவர்கள் அனைவருக்கும் பிலால் நகர் ஜமாத் மற்றும் எம்.எஸ்.எம் நகர் ஜமாத் சார்பில், சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மேலும், சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு மூன்றாமிடம் பிடித்த அதிரை அமீன் என்கிற ஏ.முகமது அமீன் இந்நிகழ்வில் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்வில்,

பிலால் நகர் ஜமாத் சார்பில்...
ஹாஜி எஸ்.எம்.ஏ அகமது கபீர், எஸ்.முகமது முகைதீன், அஸ்ரப் அலி, எம்.நிஜாமுதீன், அதிரை அமீன், முகமது, இஜாஸ் அகமது, சேக்தாவூது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

எம்.எஸ்.எம் நகர் ஜமாத் சார்பில்...
இ.வாப்பு மரைக்காயர், முகமது வலீத், பிஸ்மில்லாக்கான், அல் அமீன்,  அப்துல் வஹாப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 


Sunday, January 5, 2020

பட்டுக்கோட்டை ஒன்றியத்தில் வெற்றி பெற்ற ஊராட்சித் தலைவா்கள் (முழு விவரம்)

பட்டுக்கோட்டை, ஜன.05
பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 42 ஊராட்சிகளுக்குத் தலைவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். த. மறவக்காடு ஊராட்சிக்கு யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. அவா்கள் விவரம் வருமாறு:

வ.எண் ஊராட்சிப் பெயா் வெற்றி பெற்றவா்
1. அணைக்காடு சி. ரெத்தினம்
2. ஆத்திக்கோட்டை நி.அமராவதி
3. ஆலடிக்குமுளை பு. சூா்யா
4. இராஜாமடம் த. மோகன்தாஸ்
5. ஏரிப்புறக்கரை செ. சக்திவேல்
6. ஏனாதி சு. தீபிகா
7. ஒதியடிக்காடு ரா. ராஜேஸ்வரி
8. கரம்பயம் ஆ. மேனகா
9. கழுகப்புலிக்காடு சு. பாஸ்கா்
10. காா்காவயல் வி.கே. பாா்த்தசாரதி
11 . கொண்டிக்குளம் ப. மலா்
12. சாந்தாங்காடு ரெ.பச்சமுத்து
13. சுந்தரநாயகிபுரம் சி. செல்வகுமாா்
14. சூரப்பள்ளம் கே. தமிழ்ச்செல்வன்
15. செண்டாங்காடு லெ. கோவிந்தராசு
16. செம்பாளுா் ரா. ராஜலெட்சுமி
17. சேண்டாக்கோட்டை பா. ராஜேந்திரன்
18. த. மறவக்காடு - வேட்பு மனு தாக்கல் இல்லை.
19. த. மேலக்காடு சோ. தங்கம்
20. த. வடகாடு பா. கலாநேசன்
21. தாமரங்கோட்டை வ. தமிழ்ச்செல்வி
(தெற்கு)
22. தாமரங்கோட்டை கா. கனகசபை
(வடக்கு)
23. திட்டக்குடி ச. காத்தவராயன்
24. துவரங்குறிச்சி சீ. மல்லிகா
25. தொக்காலிக்காடு த. பாண்டியன்
26. நடுவிக்கோட்டை மு. அன்புரோஜா
27. நம்பிவயல் க. கல்யாணசுந்தரம்
28. நரசிங்கபுரம் கு. பாரதி
29. நாட்டுச்சாலை செ. ஜெயந்தி
30. பண்ணவயல் ரா. வசந்தா
31. பரக்கலக்கோட்டை ஜெ. விநாயகம்
32. பழஞ்சூா் கௌ. கௌசல்யா
33. பள்ளிகொண்டான் ரெ. மகாலிங்கம்
34. பாளமுத்தி சே. பொன்மணி
35. புதுக்கோட்டை உள்ளூா் வெ. ஜெயசுந்தரி
36. பொன்னவராயன்கோட்டை இ. கீதாஞ்சலி
37. மகிழங்கோட்டை க. இராசரெத்தினம்
38. மழவேனிற்காடு சு. ராமச்சந்திரன்
39. மாளியக்காடு ப. ரமேஷ்
40. முதல்சேரி மா. ரோசம்மாள்
41. வீரக்குறிச்சி ஜெ. லதா ஜெனிட்டா
42. வெண்டாக்கோட்டை பு. விஜயலெட்சுமி
43. வேப்பங்காடு ம. சிவராஜன்

Friday, January 3, 2020

ஏரிப்புறக்கரை ஊராட்சி உள்ளாட்சி தேர்தல் வெற்றி நிலவரம் (முழு விவரம்)

அதிராம்பட்டினம், ஜன.03
உள்ளாட்சி தேர்தலில் பட்டுக்கோட்டை ஒன்றியம், ஏரிப்புறக்கரை கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு சுயேட்சை வேட்பாளர்களாக அதிரை அமீன் என்கிற ஏ.முகமது அமீன், எஸ்.சக்திவேல், பி.கண்ணன், தேவி யுவராஜா, 'அவிசோ' ஏ.சேக் அப்துல்லா, ஏ.முகமது ராசிக் ஆகியோர் போட்டியிட்டனர்.

இரண்டாம் கட்டமாக ஏரிப்புறக்கரை ஊராட்சியில் கடந்த டிச.30 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், மொத்தம் 9 வார்டுகளை கொண்ட 5 வாக்குச்சாவடிகளில் 2215 வாக்குகள் பதிவாகின. இவை, அனைத்தும் நேற்று வியாழக்கிழமை இரவு எண்ணப்பட்டு, வெற்றி நிலவரங்கள் வெளியாகியது.

இதில், எஸ்.சக்திவேல் 972 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பி.கண்ணன் (613 வாக்குகள்), அதிரை அமீன் என்கிற ஏ.முகமது அமீன் (271 வாக்குகள்), ஏ.முகமது ராசிக் (166 வாக்குகள்), தேவி யுவராஜா (56 வாக்குகள்), 'அவிசோ' ஏ.சேக் அப்துல்லா (11 வாக்குகள்) பெற்றனர். இதில், 126 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன.

பிலால் நகர் 1-வது வார்டில் போட்டியிட்ட ஜாஸ்மின் பானு (எம்.ஆர் கமாலுதீன்) 186 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எம்.எஸ்.எம் நகர் 2-வது வார்டில் போட்டியிட்ட ரஹ்மத் (எஸ். முகமது தமீம்) 161 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 

Wednesday, January 1, 2020

ஏரிப்புறக்கரை ஊராட்சி தலைவர் வேட்பாளர் அதிரை அமீன் நன்றி அறிவிப்பு!

இறைவனின் திருப்பெயரால்...

அல்ஹம்துலில்லாஹ். திருப்தியான முறையில் ஏரிப்புறக்கரை ஊராட்சி மன்றத்திற்கான தேர்தல் நேற்றைய முந்தினம் நிறைவடைந்துவிட்டது, இதன் முடிவுகள் எதிர்வரும் 02.01.2020 அன்று வெளியாக உள்ளன இன்ஷா அல்லாஹ்.

இந்த தேர்தலின் முடிவுகள் எவ்வாறு அமைந்தாலும் "ஒரு முஃமீனுக்கு வெற்றியிலும் நன்மை இருக்கின்றது, தோல்வியிலும் நன்மை இருக்கின்றது" என இஸ்லாமிய நன்னம்பிக்கையோடு பொருந்திக் கொள்வேன் இன்ஷா அல்லாஹ்.

இத்தேர்தலில் எனக்கு வாக்களித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும்....  எனக்கு தார்மீக நல்லாதரவு வழங்கிய பிலால் நகர், எம்.எஸ்.எம். நகர் ஜமாத் பிரமுகர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், சமூக ஆர்வலர்கள், பெரியவர்கள், இளைஞர்கள், சிறார்கள் என அனைத்து தரப்பிற்கும்...

பகிரங்க ஆதரவு நல்கி களம்கண்ட மனிதநேய ஜனநாயக கட்சி. நாம் தமிழர் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகியோருக்கும்...

கை உருளை சின்னத்தையும் என்னையும் ஏரிப்புறக்கரை முழுவதுமுள்ள வீடுகளுக்குள் கொண்டு சேர்த்த பெண்கள் அணியினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், சமூக தளங்களில் வாழ்த்திய, பரப்பிய நெஞ்சங்களுக்கும்...

வெளியூர், வெளிநாடுகளில் இருந்தாலும் தங்களின் வீட்டினருக்கும் எடுத்துக்கூறி எனக்கு ஆதரவாக வாக்களிக்க நல்ல ஆலோசனைகளை வழங்கிய சகோதரர்கள், விளம்பரதாரர்கள். அச்சகத்தினர், ஒலி ஒளி அமைப்பாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், போஸ்டர் நோட்டீஸ் வினியோகித்தவர்கள், ஒட்டியவர்கள்...

நேரடியாக எனக்கு எத்தகைய சம்பந்தமில்லாத நிலையிலும் என்னை குறித்து விசாரித்து அறிந்ததன் மூலம் தங்களுடைய உறவினருக்கு பாடுபடுவது போல் தனிப்பட்ட பிரதிபலன்கள் எதையும் எதிர்பாராது உழைத்த பிலால் நகர், எம்.எஸ்.எம் நகர் மற்றும் ஏரிப்புறக்கரை உட்கிராம பெண்களுக்கும்...

சராசரி அரசியல்வாதிகளின் தேர்தல் நடைமுறைகளான உள்குத்து அரசியல், கள்ள ஓட்டு, ஓட்டுக்கு காசு, பொய்யான வாக்குறுதிகள், பகுதியில் முக்கிய ஆட்களை விலைக்கு வாங்குதல் போன்ற எத்தகைய முறைகேட்டிலும் ஈடுபடாமல் சுத்தமான, வித்தியாசமான வேட்பாளராக என்னை மக்களுக்கு அடையாளம் காட்ட உதவிய போட்டி வேட்பாளர்களுக்கும்...

பத்திரிக்கையாளரும் பிலால் நகர் ஜமாத் பொருளாளருமான தம்பி சேக்கனா நிஜாமுதீன், போர்முனை தளபதிகள் போல் சுழன்ற தம்பிகள் முஹமது, நிஜாஸ் அகமது ஆகியோருக்கும் இன்னும் எனது கவனக்குறைவால் விடுபட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகின்றேன்.

இவண்,
அதிரை அமீன் (எ) முஹமது அமீன்
ஏரிப்புறக்கரை ஊராட்சி மன்ற தலைவர் வேட்பாளர்

Saturday, December 28, 2019

அதிரை அமீனுக்கு அமமுக ஆதரவு!

அதிராம்பட்டினம், டிச.28
பட்டுக்கோட்டை ஒன்றியம், ஏரிப்புறக்கரை கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு சுயேட்சை வேட்பாளராக 'கை உருளை' சின்னத்தில் போட்டியிடும், அதிரை அமீன் என்கிற முகமது அமீனை, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆதரிப்பது, அவரது வெற்றிக்காக பாடுபடுவது என அக்கட்சியின் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் எஸ்.டி.எஸ் செல்வம் தலைமையில், அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் ஏ. ஜமால் முகமது, இணைச் செயலாளர் அய்யாவு, விவசாயப் பிரிவு செயலாளர் சரவணன், ஏரிபுறக்கரை ஊராட்சி பொறுப்பாளர் ராகவன் உள்ளிட்ட அக்கட்சியினர் வேட்பாளர் அதிரை அமீனிடம் தங்களது ஆதரவைத் தெரிவித்துக்கொண்டனர்.

மேலும், பட்டுக்கோட்டை ஒன்றிய 18-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அறிக்கன் விளக்கு சின்னத்தில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் ஆர். லட்சுமணனை ஆதரிக்க கோரிக்கை விடுத்தனர்.
 

Friday, December 27, 2019

அதிரை அமீனுக்கு தமுமுக ~ மமக ஆதரவு!

அதிராம்பட்டினம், டிச.27
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் (தமுமுக), மனிதநேய மக்கள் கட்சி (மமக) அதிராம்பட்டினம் பேரூர் பொறுப்பாளர்கள் ஆலோசனைக்கூட்டம் அக்கட்சியின் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்தில், பட்டுக்கோட்டை ஒன்றியம், ஏரிப்புறக்கரை கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு சுயேட்சை வேட்பாளராக 'கை உருளை' சின்னத்தில் போட்டியிடும், அதிரை அமீன் என்கிற முகமது அமீன், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் (தமுமுக), மனிதநேய மக்கள் கட்சி (மமக) அதிராம்பட்டினம் பேரூர் பொறுப்பாளர்களை சந்தித்து ஆதரவு கோரியதன் அடிப்படையில், அவரை ஆதரிப்பது, அவரது வெற்றிக்காக பாடுபடுவது என
முடிவு எடுக்கப்பட்டது.

பின்னர், வேட்பாளர் அதிரை அமீனை அலுவலகத்திற்கு அழைத்து ஆதரவை  அவரிடம் நேரில் தெரிவித்துக்கொண்டனர். தேர்தலில் வெற்றி பெற்றால், ஏரிப்புறக்கரை ஊராட்சியின் பின்தங்கிய பகுதிகளில் முறையான சாலை வசதி, வடிகால் வசதி, மின் விளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செயல்படுத்த வேண்டும் என்ற நிபந்தனைகளை கோரிக்கையாக முன் வைத்தனர்.

தமுமுக ~ மமக அதிராம்பட்டினம் பேரூர் பொறுப்பாளர்கள் நெய்னா முகமது, எச்.செய்யது புஹாரி, எஸ்.ஏ இத்ரீஸ் அகமது, பீர் முகமது, முகமது யூசுப் மற்றும் அக்கட்சியை சேர்ந்த முகமது தமீம், சேக் நசுருதீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.