Showing posts with label அமமுக. Show all posts

Thursday, June 18, 2020
Saturday, December 28, 2019
அதிரை அமீனுக்கு அமமுக ஆதரவு!
அதிராம்பட்டினம், டிச.28
பட்டுக்கோட்டை ஒன்றியம், ஏரிப்புறக்கரை கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு சுயேட்சை வேட்பாளராக 'கை உருளை' சின்னத்தில் போட்டியிடும், அதிரை அமீன் என்கிற முகமது அமீனை, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆதரிப்பது, அவரது வெற்றிக்காக பாடுபடுவது என அக்கட்சியின் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் எஸ்.டி.எஸ் செல்வம் தலைமையில், அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் ஏ. ஜமால் முகமது, இணைச் செயலாளர் அய்யாவு, விவசாயப் பிரிவு செயலாளர் சரவணன், ஏரிபுறக்கரை ஊராட்சி பொறுப்பாளர் ராகவன் உள்ளிட்ட அக்கட்சியினர் வேட்பாளர் அதிரை அமீனிடம் தங்களது ஆதரவைத் தெரிவித்துக்கொண்டனர்.
மேலும், பட்டுக்கோட்டை ஒன்றிய 18-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அறிக்கன் விளக்கு சின்னத்தில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் ஆர். லட்சுமணனை ஆதரிக்க கோரிக்கை விடுத்தனர்.

Thursday, April 26, 2018
அதிராம்பட்டினத்தில் தினகரனுக்கு வரவேற்பு (படங்கள்)
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாநில துணைப் பொதுச் செயலாளரும், ஆர்.கே நகர் சட்டமன்ற உறுப்பினருமாகிய டி.டி.வி தினகரனுக்கு அக்கட்சியினர் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் வரவேற்பு அளித்தனர்.
அமமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் எம்.எல்.ஏ இன்று வியாழக்கிழமை காலை அதிராம்பட்டினம் ஈஸ்ட் கோஸ்ட் சாலை வழியாக இராமநாதபுரம் பயணம் மேற்கொண்டார். அமமுக அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் ஏ. ஜமால் முகமது தலைமையில், அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்து, சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர், அதே சாலையில் மீண்டும் மாலை திரும்பி வந்த போது, அதிராம்பட்டினத்தில் ஐக்கிய தேசிய மக்கள் கட்சியின் நிறுவனர் அதிரை எம்.முகமது இப்ராஹீம் தலைமையில், அக்கட்சியை சேர்ந்த சம்சுதீன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில், அமமுக மாநில அமைப்புச் செயலாளர் பண்ணைவயல் சு.பாஸ்கர், பட்டுக்கோட்டை நகர் மன்ற முன்னாள் தலைவர் எஸ்.ஆர் ஜவஹர் பாபு, அமமுக பாட்டுக்கோட்டை ஒன்றியச் செயலர் ரமேஷ், அமமுக அதிராம்பட்டினம் பேரூர் ஒருங்கிணைப்பாளர் எம்.பி அபுபக்கர், அதிராம்பட்டினம் பேரூர் பொருளாளர் எம்.ரபீக் அகமது, அமமுக கட்சியை சேர்ந்த அய்யாவு, சிராஜுதீன், இஸ்மாயில், அ.மு அப்துல் ஜப்பார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
Sunday, April 22, 2018
அதிராம்பட்டினத்தில் அமமுக சார்பில் 4 இடங்களில் நீர் மோர் பந்தல் திறப்பு (படங்கள்)
அதிராம்பட்டினம், ஏப்.22
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூர் அ.ம.மு.க., சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் ஏ. ஜமால் முகமது தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை நகர் மன்ற முன்னாள் தலைவர் எஸ்.ஆர் ஜவஹர் பாபு, அமமுக பாட்டுக்கோட்டை ஒன்றியச் செயலர் ரமேஷ், அமமுக அதிராம்பட்டினம் பேரூர் ஒருங்கிணைப்பாளர் எம்.பி அபுபக்கர், அதிராம்பட்டினம் பேரூர் பொருளாளர் எம்.ரபீக் அகமது ஆகியோர் முன்னிலை வகித்தார். அமமுக மாநில அமைப்புச் செயலாளர் பண்ணைவயல் சு.பாஸ்கர் பங்கேற்று பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் பழச்சாறுகளை வழங்கினார்.
அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டை, சேர்மன் வாடி அருகே, கரையூர் தெரு, இந்தியன் வங்கி அருகில் ஆகிய 4 இடங்களில் திறந்து வைக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், அமமுக கட்சியை சேர்ந்த அய்யாவு, இஸ்மாயில், அ.மு அப்துல் ஜப்பார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Subscribe to:
Posts (Atom)