.

Pages

Showing posts with label TMMK. Show all posts
Showing posts with label TMMK. Show all posts

Friday, October 2, 2020

அதிராம்பட்டினத்தில் தமுமுகவினர் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், அக்.02
பாபர் மசூதி இடிப்பு வழக்கு தொடர்பாக நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கண்டித்தும், உத்தரப்பிரதேசத்தில் ஹாத்ராஸ் வன்கொடுமையை கண்டித்தும் அதிராம்பட்டினத்தில் தமுமுகவினர் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அவ்வமைப்பின் மாநில துணைச்செயலாளர் அதிரை அகமது ஹாஜா தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக, மாநில துணைத்தலைவர் கோவை செய்யது கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். மேலும்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் என்.காளிதாஸ், மஜக தஞ்சை தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் அதிரை சேக், சாகுல் ஹமீது ஆகியோர் கண்டித்து பேசினர்.

இந்நிகழ்வில், எஸ்டிபிஐ கட்சி அதிரை பேரூர் தலைவர் எஸ்.அகமது அஸ்லம், மாவட்ட செயலாளர் பட்டுக்கோட்டை சேக், பொருளாளர் மதுக்கூர் ஜபருல்லா மற்றும் அவ்வமைப்பை சேர்ந்த சேக்காதியார், சேக்தாவூது, அப்துல் ஹலீம், சேக் நசுருதீன், சாதிக் பாட்சா உள்ளிட்ட பலர் திரளாகக் கலந்துகொண்டு, நீதிமன்ற தீர்ப்பை கண்டித்தும், பாபர் மசூதி இடிப்புக்கு காரணமானவர்களை சிறையிலடைக்க கோரியும், உத்தரப்பிரதேசத்தில் ஹாத்ராஸ் வன்கொடுமையை கண்டித்தும் கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு முழக்கமிட்டனர். 


Wednesday, September 9, 2020

10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு!

தஞ்சாவூர், செப்.09
10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி தஞ்சை தெற்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில், முதலமைச்சருக்கான மனுவை தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் நிர்வாகிகள் வழங்கினர்.

10 ஆண்டுகள் மேலாக சிறையில் வாடும் முஸ்லிம்கள் மற்றும் 7 தமிழர்களை விடுதலை செய்யக்கோரி தஞ்சை தெற்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை ரயில் நிலையத்தின் எதிரில் நடைபெற்றது.

நிகழ்வுக்கு, தஞ்சை தெற்கு மாவட்ட தமுமுக - மமக பொருப்பு குழு உறுப்பினர் அப்துல் ஜப்பார் அவர்கள் தலைமை வகித்தார். இந்நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் தஞ்சை ஐ.எம் பாதுஷா கண்டன உரை நிகழ்த்தினார். மாநில செயற்குழு உறுப்பினர் தஞ்சை ஐ. பாருக் மஹராஜ் கோஷங்கள் எழுப்பினார், மாநகரத் தலைவர் லுக்மான் ஹக்கீம் இறைவசனம் ஓதினார், மாநகர துணை செயலாளர் முகமது உசேன் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில், மாவட்ட பொருப்பு குழு உறுப்பினர் அப்துல் அஜீஸ், வல்லம் பேரூர்
பொருப்பாளர் வல்லம் மஜீத் மாநகர கிளை கழக நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிறைவில், மாவட்ட துணை செயலாளர் ரியாஸ் அகமது நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்திற்க்கு பிறகு தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் முதலமைச்சருக்கான மனுவை அளித்தனர்.
 

Tuesday, September 8, 2020

10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி அதிராம்பட்டினத்தில் மமகவினர் ஆர்ப்பாட்டம்!

அதிராம்பட்டினம், செப்.08
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைகளில் வாடும் முஸ்லீம்கள், தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து சிறைவாசிகளையும் விடுதலை செய்யக்கோரி, மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட அலுவலகம் முன்பாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு, அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் எஸ்.ஏ இத்ரீஸ் அகமது தலைமை வகித்தார். தமுமுக மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் எம். நஸ்ருத்தீன் ஸாலிகு முன்னிலை வகித்தார்.

இதில், அக்கட்சியினர் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு முழக்கமிட்டனர். இதில், தமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் அ.சாதிக் பாட்சா, தமுமுக அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் எச்.செய்யது புஹாரி, ஆலோசனைக்குழு உறுப்பினர் நஜ்முதீன், துணைச்செயலாளர்கள் அகமது அஸ்லம், அஸ்ரப் அலி, பொருளார் முகமது யூசுப், மமக அதிராம்பட்டினம் பேரூர் துணைச்செயலாளர் அஸ்லம், வர்த்தக அணி செயலாளர் முகைதீன் மற்றும் மமக அதிராம்பட்டினம் பேரூர், கிளை நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
 
 
 

Sunday, September 6, 2020

தமுமுக 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா: அதிராம்பட்டினத்தில் கொடி ஏற்றம் ~ நிவாரண உதவி வழங்கல் (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.06
தமுமுக அமைப்பின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு, கொடி ஏற்றும் மற்றும் நிவாரண உதவி வழங்கும் நிகழ்வு அதிராம்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு, அவ்வமைப்பின் அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் எச்.செய்யது புஹாரி தலைமை வகித்தார். மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் எம். நஸ்ருத்தீன் ஸாலிகு, தமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் அ.சாதிக் பாட்சா, எம்.தமீம் அன்சாரி, அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் முகமது நியாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக, மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச்செயலாளர் வழக்குரைஞர் தஞ்சை ஐ.எம் பாதுஷா கலந்துகொண்டு, அமைப்பின் கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

இதில், அவ்வமைப்பினர் கலந்துகொண்டு, கடைத்தெரு தமுமுக, மமக தஞ்சை தெற்கு மாவட்ட அலுவலகம், கல்லூரி முக்கம், ஈஸ்ட் கோஸ்ட் சாலை, வண்டிப்பேட்டை, செக்கடி மேடு ஆகிய இடங்களில் அமைப்பின் கொடி ஏற்றி வைத்து கொள்கை முழக்கமிட்டனர். மேலும், தமுமுக 25 ஆம் ஆண்டு விழாவை குறிப்பிடும் வகையில் சிறப்பு கல்வெட்டு பிலால் நகர் பேருந்து நிறுத்தம் அருகில் திறக்கப்பட்டன.

முன்னதாக, பொருளாதாரத்தில் நலிவடைந்த ஏழை குடும்பங்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், அவ்வமைப்பின் ஆலோசனைக்குழு உறுப்பினர் நஜ்முதீன்,  மமக அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் எஸ்.ஏ இத்ரீஸ் அகமது, தமுமுக துணைத்தலைவர் எம்.நெய்னா முகமது, துணைச்செயலாளர்கள் அகமது அஸ்லம், அஸ்ரப் அலி, பொருளார் முகமது யூசுப், மமக அதிராம்பட்டினம் பேரூர் துணைச்செயலாளர் அஸ்லம், பீர் முகமது, வர்த்தக அணி செயலாளர் முகைதீன், தமுமுக மருத்துவ அணி செயலாளர் சகாபுதீன் மற்றும் தமுமுக, மமக அதிராம்பட்டினம் பேரூர், கிளை நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
 
 


 
 
 
 
               

Wednesday, August 5, 2020

தமுமுக சார்பில் அதிராம்பட்டினத்தில் நல்லொழுக்கப் பயிற்சி (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக.05
தமுமுக சார்பில், அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகளுக்கான நல்லொழுக்கப் பயிற்சி (தர்பியா) அதிராம்பட்டினத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு, அவ்வமைப்பின் அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் எச்.செய்யது புஹாரி தலைமை வகித்தார். தமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் அ.சாதிக் பாட்சா, முகமது தமீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அவ்வமைப்பின், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் எம். நஸ்ருத்தீன் ஸாலிகு. 'நிர்வாகிகளின் கவனத்துக்கு' என்ற தலைப்பிலும், ஆலோசனைக்குழு உறுப்பினர் நஜ்முதீன் 'ஒற்றுமை' என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினர்.

தொடக்கத்தில், அவ்வமைப்பின் அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் நியாஸ் முகமது அறிமுக உரை நிகழ்த்தினார். மமக அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் எஸ்.ஏ இத்ரீஸ் அகமது வரவேற்றுப் பேசினார்.நிறைவில், துணைத்தலைவர் எம்.நெய்னா முகமது நன்றி கூறினார்.

இதில், சகோதரத்துவம், நல்லொழுக்கம் குறித்து பயிற்சி வழங்கப்பட்டன. இதில், அவ்வமைப்பினர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.