.

Pages

Thursday, July 3, 2014

தெரியலையா !? நேரமில்லையா !? அலையமுடியலையா !? உதவ ஆளில்லையா !?

கல்வி உதவித் தொகை:-
பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை
சிறுபான்மை சமூகத்தின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்ட பாரதப் பிரதமரின் புதிய 15 அம்சத் திட்டத்தின் கீழ் இந்த பள்ளிப் படிப்புக் கல்வி உதவித்தொகை 2008-2009 ஆம் நிதியாண்டில் துவங்கப்பட்டது. சிறுபான்மை சமூகத்தினரின் குழந்தைகளை அவர் தம் கல்வியில் மேம்பாடு அடையச் செய்வதன் மூலம் இச்சமுதாயத்தினரின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு வித்திட்டல் இத்திட்டத்தின் யுக்தியாகும்.

அன்பார்ந்த பெற்றோர்களே, அரசால் வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை நீங்கள் உங்கள் குழந்தைளுக்கு பெற்று விட்டீர்களா?

மின்சாரவாரியம்:-
புதியதாக இணைப்பு எடுத்தல், பெயர் மாற்றுதல், ஒரு முனை மின்சார இணைப்பை மும்முனையாக மாற்றித்தருதல், வீடு குடி அமர்ந்தவுடன் மின் இணைப்பை டாரிப் ஒன்றுக்கு மாற்றி அமைத்தல், மேலும் மின் வாரிய தொடர்பான அனைத்தும் வேலைகளும் செய்து தரப்படும்.

ரேசன்கார்டு / வோட்டு அடையாள அட்டை:-
புதியதாக எடுத்தல், பெயர் நீக்குதல், பெயர் சேர்த்தல், முகவரி மாற்றித் தருதல், மேலும் ரேசன்கார்டு / வோட்டு அடையாள அட்டை தொடர்பான அனைத்து வேலைகளும் செய்து தரப்படும்.

எப்படி பெறவேண்டும் என்ற வழி வகைகள் தெரிய வில்லையா ? நேரம் இல்லையா? அலைய முடிய வில்லையா ? உதவி செய்ய ஆள் இல்லையா ? கவலை வேண்டாம், உங்களுக்காக இப்பணியைச் செய்து முடித்துத்தர நான் இருக்கின்றேன். என்னை தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை தெரிந்துகொண்டு பயன்பெறுங்கள்.

தொடர்புக்கு :  75 02 87 07 67

இப்படிக்கு,
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com

11 comments:

  1. ஜமாலாக்கா முதல் ஆர்டர் என்னுடையதுதான் :)

    என் பிள்ளைகளுக்கு தேவைப்படும் சான்றிதழை பெற்றுத்தாருங்கள்.

    என்னாலே VAO ஆபீஸ், RI ஆபீஸ், தாலுக்கா ஆபீசுன்னு அலைய முடியாது. பிளீஸ்

    ReplyDelete
  2. இனி அரசு சம்பத்தப்பட வேலைகள் என்றாலே நம் நினைவுக்க வரவேண்டியது

    மனித உரிமை ஆர்வலர் கோ.மு.அ. ஜமால் முஹம்மது அவர்கள்தான்

    தட்டுவோம் கதவை
    திறக்கட்டும் கோப்புகளை
    முடிக்கட்டும் தேவைகளை.

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அழைக்கும்.

    அதிரையின் சமூக நலனில் முழு அக்கறை கொண்ட சமூக நல ஆர்வலர் உண்மை சகோதரர். ஜனாப். ஜமால் முகமது அவர்களுக்கு
    என்னுடைய மனமார்ந்த சலாத்தை தெரிவித்து கொள்வதுடன் அவர்கள் மீண்டும் மீண்டும் சமூக பணியில் வெற்றி பெற
    கண்ணியம் நிறைந்த வல்ல இறைவன் அவர்களுக்கு துணை இருப்பான்என்ற துவா பரக்கத்தையும் மனம்உவர்ந்து
    தெரிவித்துகொள்கிறேன் .
    வஸ்ஸலாம்

    ReplyDelete
  4. ஜமாலாக்கா நமக்கும் ஒரு அலுவலக வேலை உங்க மூலியமா ஆக வேண்டி இருக்கு. பிறகு சொல்கிறேன். மறக்காம செஞ்சி தந்துடுங்கோ. ரொம்ப புண்ணியமா இருக்கும்.

    காசுபணம் செலவு செய்தும் சில கயவர்களிடம் ஏமாந்து காரியம் ஆகாமல் போய்விடுகிறது. அப்படி ஏமாறாமல் நம்ம ஜமாலாக்காவிடம் கொடுத்து நம்பிக்கையுடன் அரசு சம்பந்தமான வேலைகளை முடித்துக் கொள்ளலாம்.

    நல்லுள்ளம் கொண்ட ஜமாலாக்காவை வாழ்த்தி வரவேற்ப்போம்.

    ReplyDelete
  5. பதிவுக்கு நன்றி
    தகவலுக்கும் நன்றி

    நல்லுள்ளம் கொண்ட ஜமாலாக்காவை வாழ்த்தி வரவேற்ப்போம்.


    இப்படிக்கு.
    ஜம் ஜம் அஸ்ரப்
    கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
    செக்கடிமோடு
    Adirampattinam.- 614701
    Thanjavur district.
     -0091 9976438566

    ReplyDelete
  6. பதிவுக்கு நன்றி
    தகவலுக்கும் நன்றி

    நல்லுள்ளம் கொண்ட ஜமாலாக்காவை வாழ்த்தி வரவேற்ப்போம்.


    இப்படிக்கு.
    ஜம் ஜம் அஸ்ரப்
    கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
    செக்கடிமோடு
    Adirampattinam.- 614701
    Thanjavur district.
     -0091 9976438566

    ReplyDelete
  7. //நபி தாஸ்3 July 2014 23:35
    இனி அரசு சம்பத்தப்பட வேலைகள் என்றாலே நம் நினைவுக்க வரவேண்டியது

    மனித உரிமை ஆர்வலர் கோ.மு.அ. ஜமால் முஹம்மது அவர்கள்தான்

    தட்டுவோம் கதவை
    திறக்கட்டும் கோப்புகளை
    முடிக்கட்டும் தேவைகளை.//

    அப்படிஎன்றால் ஏற்கனவே வேலை செய்யாமல் இருக்கும் நமதூரின் சில கவுன்சிலர்களுக்கு மேலும் கொண்டாட்டம் தான் அவர்களை பதவியை விட்டும் விலகசொல்ல வேண்டியதுதான் .

    ReplyDelete
  8. நல்லுள்ளம் கொண்ட ஜமாலாக்காவை வாழ்த்தி வரவேற்ப்போம்.

    ReplyDelete
  9. ஜமால் காக்கா அவர்களின் பணி தொடர அமைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. பதிவுக்கு நன்றி
    தகவலுக்கும் நன்றி

    ReplyDelete
  11. அரசு சம்பந்தப்பட்ட காரியங்களுக்கு நம் மக்கள் குறுநில மன்னர்களை (கௌன்சிலர்) நாடும் போது அவர்கள் ஆதாயம் எதிர்பார்கிறார்கள், அவர்கள் போடும் ஸ்கெட்ச் ரொம்ப நீளம்,

    படித்தவரிடம் விபரம் கேட்கபோனால் ஏளன பேட்சு, அனுபவசாளிடம் அணுகினால் முகசுளிப்பு இப்படி இருக்கும் காரணத்தால் முதியவர்கள், பயனாளிகள் அணுகுவதில்லை.

    சந்தோஷத்தில் பெரிய சந்தோஷம் மற்றவர்களை சந்தோஷப்படுத்திப்பார்ப்பதே என்ற உயரிய நோக்கம் எத்தனை பேருக்கு உள்ளது? அப்படிப்பட்டவர்களை பார்ப்பது அரிது என்ற காலத்தில் மேற்சொன்ன காரியத்திற்க்காக தன்னை அணுகலாம் என்ற சொன்ன சகோ. ஜமால் முஹம்மது அவர்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.