
முத்துப்பேட்டை பகுதியில் திருவாரூர்- காரைக்குடி மார்கமாக ரயில் போக்குவரத்து வெள்ளையர் அட்சி காலத்தில் துவக்கப்பட்டது. மிகவும் பழமை வாய்ந்த இந்த வழி தடத்தை சென்ற காங்கிரஸ் அரசு அகல ரயில் பாதை பணிக்காக நிதி ஒதுக்கீடு செய்து இரண்டு அ10ண்டுக்கு முன்பு பணியை துவங்க ரயில் போக்கு வரத்தை துண்டித்து, பணிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை திடீர் என்று வேறு பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டதால் திருத்துறைப்பூண்டி முதல் முத்துப்பேட்டை வழியாக பட்டுக்கோட்டை வரை ரயில்வே பணியை பாதியில் நிறுத்தப்பட்டது. இது குறித்து முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை உட்பட இதில் பயனுள்ள ஊரை சேர்ந்த பொது மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர். இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் வந்ததால் வரும் ஆட்சி நிச்சயம் செய்து தரும் என நம்பிக்கையோடு காத்து இருந்தனர். இந்த நிலையில் புதியதாக பொறுப்பேற்ற பா.ஜ.க ஆட்சியின் முதல் ரயில்வே பட்ஜெட் நேற்று அறிவிக்கபட்டது. இதில் திருவாரூர் - காரைக்குடி மார்கத்துக்கு உட்பட்ட இந்த பகுதிக்கு நிதி ஒதுக்கீடு செய்ய அறிவிக்கப்பட வில்லை. இதனால் முத்துப்பேட்டை பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை முத்துப்பேட்டை சமூக ஆர்வலர் முகம்மது மாலிக் தலைமையில் அனைத்து கட்சியினர் பழைய பஸ்டான்ட் அருகே கூட்டமாக கூடினார்கள். அங்கிருந்து அவர்கள் மாலையுடன் ரயில்வே பட்ஜெட்டையும், பா.ஜ.க அரசையும் கண்டித்து கோஷம் போட்டு கொண்டு ஊர்வலமாக சென்று முத்துப்பேட்டை ரயில்வே ஸ்டேசன் அலுவலத்துக்கு மாலை அணிவித்து பத்தி கொழுத்தி இறுதி அஞ்சலி செலுத்தி நூதன போராட்டதில் ஈடுப்பட்டனர். இதில் இ.கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் முருகைய்யன், துணைச் செயலாளர் ராமநாதன், நகர செயலாளர் மார்க்ஸ், முன்னால் செயலாளர் தேனாசீனா சாகுல் ஹமீது, மா.கம்யூனிஸ்ட் நகர செயலாளர் காளிமுத்து, அ.தி.மு.க சார்பில் காலீது, அயூப்கான், முன்னால் கவுன்சிலர் கனேசன், தி.மு.க பேரூராட்சி கவுன்சிலர் ஜெகபருல்லா, இலக்கிய மன்ற செயலாளர் ராஜ்மோகன், சமூக ஆர்வலர்கள் நிஜாமுதீன் சதீஸ்குமார், நபீக், சின்னப்பா, காங்கிரஸ் நகர தலைவர் ராஜேந்திரன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஹாஜா, விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி மீனாட்சி சுந்தரம், ஆலங்காடு முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் மோகன், விவசாயி சங்க நிர்வாகி முருகைய்யன், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி செந்தில் குமார் உட்பட நூற்றுக்கணக்கான அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
படம் செய்தி:
1. முத்துப்பேட்டையில்; திருவாரூர் - காரைக்குடி ரயில்வே பாதைக்கு நிதி ஒதுக்காத ரயில்வே பட்ஜெட்டை கண்டித்து சமூக ஆர்வலர் முகம்மது மாலிக் தலைமையில் ரயில்வே ஸ்டேசன் அலுவலகத்துக்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தி நூதன போராட்டத்தில் ஈடுப்பட்ட அனைத்து கட்சியினர். இதில் இ.கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் முருகைய்யன், துணைச் செயலாளர் ராமநாதன் ஆகியோர்.
2. முன்னதாக ஊர்வலமாக வந்த காட்சி.
'நிருபர்' மொய்தீன் பிச்சை
வீரம் உள்ளவர்கள் எழுச்சியுடன் கட்சி பேதமின்றி போராட்டம் செய்துள்ளனர்
ReplyDeleteஆனால் நம்மவர்கள் என்றைக்குமே ஒற்றுமையுடன் செயல்பட போவதில்லை
ஆனால் ஒன்று பெருமைக்காக நாங்களும் செய்தோம் என்று கிளம்புவார்கள்