.

Pages

Monday, July 7, 2014

குடிநீர் கேட்டு முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தமுமுகவினர் !

முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் சீராக வழங்க கோரி இன்று 07-07-2014 காலை 10.30 மணியளவில் பேரூராட்சி அலுவலகத்தை தமுமுகவினர் முற்றுகையிட்டனர்.

இதில் தமுமுக நகர தலைவர் எம்.நெய்னா முகம்மது தலைமையில், ம.ம.க நகர செயலாளர் வழக்கறிஞர் தீன் முகம்மது, மாவட்ட துணை செயலாளர் முகம்மது அலீம், நகர பொருளாளர் தாவுதுஷா, நகர துணை தலைவர் முஹம்மது யாசீன், கத்தார் பொருப்பாளர் முஹம்மது ஹாமீம், மாணவரணி மாவட்ட செயலாளர் பைசல் உள்ளிட்ட நிர்வாகிகள் பேரூராட்சி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் குடிநீர் சீராக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறியதை அடுத்து அனைவரும் களைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

முத்துபேட்டை பைசல் 


3 comments:

  1. அந்த ஊர் செய்தியை ஏன் அதிரை newsயில் போடுறீங்க? இது அதிரை மக்கள் அறியக்கூடிய முக்கியமான ஒன்றும் அல்ல.

    ReplyDelete
    Replies
    1. you are against to muthupet news? or tmmk news?

      Delete
  2. தம்பி ..நிஜாம் அவர்களின்
    ஊடக துறை சேவை சுற்று வட்டாரத்திலும் பரவி உள்ளதற்கான சான்று ..முத்துபேட்டை ,மதுக்கூர் ,பேராவூரணி ,பட்டுக்கோட்டை போன்ற ஊர்களில் உள்ள செய்தியாளர்களிடம் நட்பு
    வைத்துள்ளார் என்பதற்கான சான்று ..சில சமயங்களில்
    மிகவும் உதவிகரமாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.