இதுகுறித்து துபாயிலிருந்து 'சேட்டு' என்கிற அலி அக்பர் நம்மிடம் அலைபேசியில் வாயிலாக கூறியதாவது...
'நமதூர் நோன்புக் கஞ்சி என்றாலே பிற ஊர்களில் மிகவும் பிரபலம். அந்த அளவுக்கு அதன் தனி சுவையும் மணமும் அமைந்திருக்கும். கடந்த வருடத்தை போல் இந்த வருடமும் துபாயில் நமதூர் நண்பர்களுக்காக ஆர்டரின் பேரில் நோன்பு கஞ்சியை பிரத்தியகமாக தயார்செய்து கொடுத்துவருகிறேன். இஃப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யும் நண்பர்கள், சமுதாய அமைப்புகள், வர்த்தக நிறுவனங்கள் தொடர்ந்து எங்களிடம் ஆர்டர் செய்து வருகின்றனர். சுத்தமான முறையில் தயாரிக்கப்பட்ட நோன்பு கஞ்சியை பாதுகாப்பான முறையில் பேக் செய்து சூடாவும் சுவையானதாகவும் குறித்த நேரத்தில் டெலிவரி செய்து வருகிறோம்' என்றார்.
குறிப்பு: அதிரையரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.





.jpg)
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
சஹர் ரமழான் முபாரக்.
தம்பி அலி அக்பர் அவர்களை நான் நன்கு அறிவேன், காட்டுக்குளத்திற்கு அருகாமையில் என் வீட்டுக்கு பக்கத்தில் அவரும் வீடு ஒன்றை கட்டிக்கொண்டு இருக்கின்றார்.
இந்த புனிதமான ரமழானில் இப்படி செய்வது ஒரு வகையில் சேவை மறுவகையில் வியாபாரம், ஆக மொத்தத்தில் எல்லோரும் பயன் பெரும் வகையில் எடுத்த முயற்சி வெற்றியைத் தரும்.
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com