நாள் ஒன்றுக்கு 25 கிலோ அரிசியில் தயாரிக்கப்படும் நோன்பு கஞ்சியை இப்பகுதியை சுற்றியுள்ள மேலத்தெரு, வெற்றிலைக்காரத்தெரு, புதுமனைத்தெருவின் ஒரு பகுதியினர் உட்பட நெசவுத்தெரு பகுதியில் வசிக்கும் பெரும்பாலான பொதுமக்கள், சிறுவர் சிறுமிகள் ஆர்வமாக வந்து வாங்கிச் செல்கின்றனர்.
இதற்காக நிர்வாகம் சார்பாக குழுவினர் நியமித்து தினமும் அஸர் தொழுகைக்குப்பின் நோன்பு கஞ்சி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் பெண்களுக்காக தினமும் காலையில் மார்க்க பயானும், இரவில் தராவிஹ் தொழுகையும் இச்சங்கத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வீட்டில் சிறியவர்கள் சின்ன சின்ன வேலை செய்யாவிட்டாலும் கஞ்சிவாங்கி வர மறுக்க மாட்டார்கள் அவ்வளவு ஆர்வம், கஞ்சி காட்சுபவர்களுக்கும் உதவியாக இருப்பதை காணலாம்.
ReplyDeleteஅமீரகத்தில் வாழும் இம்முஹள்ளவாசிகளின் இப்தார் நிகழ்ச்சி வருடந்தோறும் சிறப்பாக வழங்கிவருகிறார்கள் என்பது குறுபிடதக்கது.
தொடரட்டும் அவர்களது சமூக பணி