.

Pages

Showing posts with label ரமலான் 2014. Show all posts
Showing posts with label ரமலான் 2014. Show all posts

Thursday, July 31, 2014

அமெரிக்கா கலிபோர்னியாவில் வசிக்கும் அதிரையரின் பெருநாள் சந்திப்பு [ படங்கள் இணைப்பு ] !

உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் அமெரிக்கா கலிபோர்னியாவிலும் வசித்து வருகின்றனர்.  அமெரிக்கா கலிபோர்னியாவில் வாழும் முஸ்லீம்கள் பெருநாளை இன்று சிறப்பாக கொண்டாடினர்.

இன்று காலையில் அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள மஸ்ஜீத்தில் நடைபெற்ற பெருநாள் தொழுகையில் அதிரையர்கள் ஒன்றாக கலந்து கொண்ட ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்களின் வாழ்த்துகளை அன்புடன் பரிமாறிக்கொண்டனர்.

Wednesday, July 30, 2014

கர்ழன் ஹஸனா அழகிய கடன் அறக்கட்டளை நடத்திய பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சியில் பிரபல எழுத்தாளர் இப்ராஹிம் அன்சாரி சிறப்புரை !

இன்று மாலை 4.30 மணியளவில் நமதூர் சிஎம்பி  லேனில் அமைந்துள்ள ஏ எல் மெட்ரிக் பள்ளியில் கர்ழன் ஹஸனா அழகிய கடன் அறக்கட்டளையின் சார்பில் பெருநாள் சந்திப்பு மற்றும் 4 ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கர்ழன் ஹஸனா அழகிய கடன் அறக்கட்டளையின் ஆலோசகர்களுள் ஒருவரான A.S. அப்துல் காதர் M.A. அவர்கள் தலைமையேற்று, நிகழ்சிகள் அனைத்தையும் சிறப்பாக வழிநடத்தி சென்றார். அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் தலைவர் அதிரை அஹமது, அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னிலை வகித்த அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் வாழ்த்துரை வழங்கினார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அதிரையின் பிரபல எழுத்தாளர் இப்ராஹிம் அன்சாரி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். இதில் 'இஸ்லாமியப் பொருளாதாரம்' மற்றும் வட்டியின் கொடுமை குறித்து அழகாக விளக்கி கூறினார்.

கடந்த அன்று [ 08-06-2014 ] அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்களின் இல்லத்தில்  நடைபெற்ற ‘கர்ழன் ஹஸனா’ அழகிய கடன் அறக்கட்டளையின் நிர்வாகிகள் கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் தலைவர் A. அப்துல் ரஹீம், துணைத் தலைவர் S. அஹமது அஸ்லம், செயலாளர் A. சேக் அலி, துணைச் செயலாளர் M.U. கமாலுதீன், பொருளாளர் S.H. அப்துல் காதர் ஆகியோர் இந்த கூட்டத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

நிகழ்ச்சியின் இறுதியில் அழகிய கடன் அறக்கட்டளையின் தலைவர் A. அப்துல் ரஹீம் நன்றியுரை கூறினார்

கர்ழன் ஹஸனா அழகிய கடன் அறக்கட்டளையின் முன்னாள் நிர்வாகிகள் அலி அக்பர், ஜமால் முஹம்மது, தலைமை ஆசிரியர் மஹபூப் அலி ஆகியோர் ஒத்துழைப்புடன் நிகழ்சிகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கர்ழன் ஹஸனா அழகிய கடன் அறக்கட்டளையின் ஆர்வலர்கள் மற்றும் உறுப்பினர்கள், அதிரையின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அதிரை சுட்டிகளின் பெருநாள் குதுகலம் தொடர்கிறது... [ படங்கள் இணைப்பு ]

குழந்தைகள் நமக்கு இறைவனால் வழங்கப்பட்டுள்ள மதிப்பிட முடியாத அருட்கொடைகள். இவர்களின் மழலைப் பேச்சு முதல் அவர்கள் செய்யும் குசும்பு வரை அருகில் இருந்து மனமகிழலாம். அதுவும் பண்டிகை காலமென்றால் அவர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சி அளவில்லாதது. பெருநாள் மற்றும் விஷேச தினங்களில் குழந்தைகள் புதுப்புது டிசைன்களில் புத்தாடை உடுத்தி நகர்ப்புறங்களில் கலர்கலராக வலம் வருவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

அதிலும் சில துடிப்பான குழந்தைகளின் மழழைப்பேச்சும் அவரவர்களின் உடையைப்பற்றியும், பெற்றோர்களிடத்திலிருந்தும் உறவினர்களிடத்திலிருந்தும் பெறப்பட்ட காசுபணத்தைப் பற்றியும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது ரசிக்கும்படி இருக்கும்.

எங்கள் கண்களில் தென்படாத அதிரை நியூஸ் வாசகர்களாகிய உங்கள் வீட்டுச்சுட்டிக் குழந்தைகளின் புகைப்படங்களை எங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பித்தந்தால் தளத்தில் பதியப்படும்.   

பெருநாளன்று நம் அதிரை நியூஸ் குழுமத்தினரின் பார்வையில் பட்ட ஸ்வீட் பேபிகளின் கலர்  ஃபுல்  புகைப்படங்கள் இதோ...

Tuesday, July 29, 2014

அதிரை சுட்டிக்குழந்தைகளின் குதூகல பெருநாள் கொண்டாட்டம் ! [ படங்கள் இணைப்பு ]

குழந்தைகள் நமக்கு இறைவனால் வழங்கப்பட்டுள்ள மதிப்பிட முடியாத அருட்கொடைகள். இவர்களின் மழலைப் பேச்சு முதல் அவர்கள் செய்யும் குசும்பு வரை அருகில் இருந்து மனமகிழலாம். அதுவும் பண்டிகை காலமென்றால் அவர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சி அளவில்லாதது. பெருநாள் மற்றும் விஷேச தினங்களில் குழந்தைகள் புதுப்புது டிசைன்களில் புத்தாடை உடுத்தி நகர்ப்புறங்களில் கலர்கலராக வலம் வருவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

அதிலும் சில துடிப்பான குழந்தைகளின் மழழைப்பேச்சும் அவரவர்களின் உடையைப்பற்றியும், பெற்றோர்களிடத்திலிருந்தும் உறவினர்களிடத்திலிருந்தும் பெறப்பட்ட காசுபணத்தைப் பற்றியும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது ரசிக்கும்படி இருக்கும்.

எங்கள் கண்களில் தென்படாத அதிரை நியூஸ் வாசகர்களாகிய உங்கள் வீட்டுச்சுட்டிக் குழந்தைகளின் புகைப்படங்களை எங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பித்தந்தால் தளத்தில் பதியப்படும்.   

பெருநாளன்று நம் அதிரை நியூஸ் குழுமத்தினரின் பார்வையில் பட்ட ஸ்வீட் பேபிகளின் கலர்  ஃபுல்  புகைப்படங்கள் இதோ...

அதிரையில் வாழும் பேச இயலாத - காது கேளாதோரின் பெருநாள் சந்திப்பு [ படங்கள் இணைப்பு ]

அதிரையில் வாழும் மாற்றுத்திறனாளிகள் பேச இயலாத - காது கேளாதோர் நல சங்க அலுவலகத்தில் பெருநாள் கொண்டாட்டமாக இன்று மாலை சந்தித்து ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்களின் வாழ்த்துகளை அன்புடன் பரிமாறிக்கொண்டனர்.

வந்திருந்த அனைவரையும் நல சங்கத்தின் தலைவர் சாகுல் ஹமீது, துணைத்தலைவர் ஹாஜா ஷரீப், பொதுச்செயலாளர் சிராஜுதீன், இணைச்செயலாளர் உமர் தம்பி, பொருளாளர் ஜெஹபர் சாதிக் ஆகிய நிர்வாகிகள் அன்புடன் வரவேற்று உபசரித்தனர். இதில் நல சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.