.

Pages

Showing posts with label அழகிய கடன் அறக்கட்டளை. Show all posts
Showing posts with label அழகிய கடன் அறக்கட்டளை. Show all posts

Thursday, July 2, 2015

‘கர்ழன் ஹஸனா’ அழகிய கடன் அறக்கட்டளை நிர்வாகிகளின் கனிவான வேண்டுகோள் !

அதிரை பாரத ஸ்டேட் வங்கி அருகே ( என்.கே.எஸ் சவுண்ட் சர்வீஸ் எதிரே ) அமைந்துள்ள என்.எஸ்.ஏ கட்டிடத்தின் முதல் மாடியில் இயங்கி வரும் அதிரை கர்ழன் ஹஸனா’ அழகிய கடன் அறக்கட்டளையின் நிர்வாகிகள் நம்மிடம் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக அதிரை கர்ழன் ஹஸனா’ அழகிய கடன் அறக்கட்டளை சார்பில் வெளியிட்டுள்ள வேண்டுகோள் கடிதத்தில் கூறியிருப்பதாவது:
 

Sunday, January 18, 2015

கர்ழன் ஹஸனா அழகிய கடன் அறக்கட்டளையின் உள்ளூர் - வெளிநாடு உறுப்பினர்கள் சந்திப்பு மற்றும் கலந்தாலோசனை கூட்டம்!

நேற்று மாலை 4.30 மணியளவில் நமதூர் சிஎம்பி லேனில் அமைந்துள்ள ஏஎல் மெட்ரிக் பள்ளியில் கர்ழன் ஹஸனா அழகிய கடன் அறக்கட்டளையின் உள்ளூர் - வெளிநாடு உறுப்பினர்கள் சந்திப்பு மற்றும் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கர்ழன் ஹஸனா அழகிய கடன் அறக்கட்டளையின் ஆலோசகர் அதிரை அஹமது அவர்கள் தலைமை வகித்து ஆலோசனை கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.

கர்ழன் ஹஸனா அழகிய கடன் அறக்கட்டளையின் முன்னாள் நிர்வாகி ஜமால் முஹம்மது, கர்ழன் ஹஸனா அழகிய கடன் அறக்கட்டளையின் தலைவர் அப்துல் ரஹீம், செயலாளர் சேக் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மஹபூப் அலி, கர்ழன் ஹஸனா அழகிய கடன் அறக்கட்டளையின் கடந்த கால செயல்பாடுகள் குறித்து விளக்கி கூறினார்.

இதன் பிறகு உறுப்பினர்களின் கருத்துகள் பெறப்பட்டது. இதில் ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து விடுமுறையில் தாயகம் திரும்பியவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். இதில் அஹமது பைசல், காலித், இம்ரான், முஹம்மது யாசின் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார்கள். மேலும் இந்த கூட்டத்தில் கர்ழன் ஹஸனா அழகிய கடன் அறக்கட்டளையின் உள்ளூர் உறுப்பினர்கள் அப்துல் ரஹ்மான், ஜமால் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார்கள்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கர்ழன் ஹஸனா அழகிய கடன் அறக்கட்டளையின் எதிர்கால வளர்ச்சி திட்டம் மற்றும் அதிகப்படியான உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் காலத்தின் கட்டாயம் 'கர்ழன் ஹஸனா' என்ற பெயரை தாங்கியுள்ள கையேடு வழங்கப்பட்டன. அடுத்தக்கூட்டம் எதிர்வரும் [ 06-02-2015 ] அன்று நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் விநியோகிக்கப்பட்ட காலத்தின் கட்டாயம் 'கர்ழன் ஹஸனா' என்ற பெயரை தாங்கியுள்ள கையேடு

Wednesday, July 30, 2014

கர்ழன் ஹஸனா அழகிய கடன் அறக்கட்டளை நடத்திய பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சியில் பிரபல எழுத்தாளர் இப்ராஹிம் அன்சாரி சிறப்புரை !

இன்று மாலை 4.30 மணியளவில் நமதூர் சிஎம்பி  லேனில் அமைந்துள்ள ஏ எல் மெட்ரிக் பள்ளியில் கர்ழன் ஹஸனா அழகிய கடன் அறக்கட்டளையின் சார்பில் பெருநாள் சந்திப்பு மற்றும் 4 ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கர்ழன் ஹஸனா அழகிய கடன் அறக்கட்டளையின் ஆலோசகர்களுள் ஒருவரான A.S. அப்துல் காதர் M.A. அவர்கள் தலைமையேற்று, நிகழ்சிகள் அனைத்தையும் சிறப்பாக வழிநடத்தி சென்றார். அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் தலைவர் அதிரை அஹமது, அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னிலை வகித்த அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் வாழ்த்துரை வழங்கினார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அதிரையின் பிரபல எழுத்தாளர் இப்ராஹிம் அன்சாரி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். இதில் 'இஸ்லாமியப் பொருளாதாரம்' மற்றும் வட்டியின் கொடுமை குறித்து அழகாக விளக்கி கூறினார்.

கடந்த அன்று [ 08-06-2014 ] அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்களின் இல்லத்தில்  நடைபெற்ற ‘கர்ழன் ஹஸனா’ அழகிய கடன் அறக்கட்டளையின் நிர்வாகிகள் கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் தலைவர் A. அப்துல் ரஹீம், துணைத் தலைவர் S. அஹமது அஸ்லம், செயலாளர் A. சேக் அலி, துணைச் செயலாளர் M.U. கமாலுதீன், பொருளாளர் S.H. அப்துல் காதர் ஆகியோர் இந்த கூட்டத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

நிகழ்ச்சியின் இறுதியில் அழகிய கடன் அறக்கட்டளையின் தலைவர் A. அப்துல் ரஹீம் நன்றியுரை கூறினார்

கர்ழன் ஹஸனா அழகிய கடன் அறக்கட்டளையின் முன்னாள் நிர்வாகிகள் அலி அக்பர், ஜமால் முஹம்மது, தலைமை ஆசிரியர் மஹபூப் அலி ஆகியோர் ஒத்துழைப்புடன் நிகழ்சிகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கர்ழன் ஹஸனா அழகிய கடன் அறக்கட்டளையின் ஆர்வலர்கள் மற்றும் உறுப்பினர்கள், அதிரையின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.









Sunday, June 8, 2014

அதிரை கர்ழன் ஹஸ்னா அழகிய கடன் அறக்கட்டளை பொறுப்பிற்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு !

அதிரை : ஜூன் 8, 2014

இன்று காலை 6.30 மணியளவில் அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்களின் இல்லத்தில் ‘கர்ழன் ஹஸனா’ அழகிய கடன் அறக்கட்டளையின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு அதிரை பேரூராட்சித் தலைவர் அஸ்லம் தலைமை வகிக்க, ‘கர்ழன் ஹஸனா’ அழகிய கடன் அறக்கட்டளையின் கெளரவ ஆலோசகர் அதிரை அஹமது அவர்கள் முன்னிலை வகித்தார்.

இந்தக் கூட்டத்தில், அறக்கட்டளையின் தற்போதைய நிர்வாகிகளான M.C. அலி அக்பர், M.I. ஜமால் முஹம்மது, தலைமை ஆசிரியர் A. மஹபூப் அலி ஆகியோர் தாங்கள் வைத்திருந்த பொறுப்புகளிலிருந்து விடுபடுவதாகக் கூறி ராஜினாமாக் கடிதங்களை பேரூராட்சித் தலைவரிடம் வழங்கினார்கள்.

கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட பலர் பல்வேறு கருத்துகளை வலியுறுத்திக் கூறினார்கள். இறுதியில் புதிதாகக் கீழ்க்கண்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் :

தலைவர் : A. அப்துல் ரஹீம்  
துணைத் தலைவர் : S. அஹமது அஸ்லம்
செயலாளர் : A. சேக் அலி 
துணைச் செயலாளர் : M.U. கமாலுதீன்
பொருளாளர் : S.H. அப்துல் காதர் 

இவர்கள் அனைவரும் அடுத்த இரண்டு வருடங்களுக்குப் பொறுப்பு வகிப்பார்கள் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

‘கர்ழன் ஹஸனா’ அறக்கட்டளையின் கெளரவ ஆலோசகர் அதிரை அஹமது அவர்கள், தற்போது பொறுப்பில் உள்ள மூன்று பேரின் அனுபவங்களும், ஆலோசனைகளும் தேவை என வலியுறுத்திக் கூறினார். இதை அடுத்து, இந்த மூன்று பேரும் ‘கர்ழன் ஹஸனா’ அறக்கட்டளையின் அறங்காவலர்களாகத் தொடர்ந்து செயல்படுவார்கள் என்று முடிவு செய்யப்பட்டது.

அதன்படி,

M.C. அலி அக்பர், 
M.I. ஜமால் முஹம்மது, 
தலைமை ஆசிரியர் A. மஹபூப் அலி

ஆகியோர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.