துபாயைச் சார்ந்த ‘ஹீடிம் ஆர்ட்ஸ்’ என்ற நிறுவனம், இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை முழுக்க முழுக்க இயற்கைப் பொருட்களைக் கொண்டே தயாரித்திருக்கிறது. இதனை வடிவமைத்துள்ளவர், யுனானி மருத்துவரான ஹம்டி தாஹெர்.
606 பக்கங்களைக் கொண்ட இந்த நூல் 7.5 கிலோ எடை கொண்டது. யுனானி மருத்துவத்தில் பின்பற்றப்படும் மருத்துவ முறைகளைக் கொண்டே, புத்தக உருவாக்கத்துக்கான மூலிகைப் பொருட்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. இயற்கையாகக் கிடைக்கும் பழம், இலை, மரப்பட்டை, வேர் போன்றவற்றை அரைத்துக் கலவையாக்கி எழுத்து, தலைப்பு, பார்டர், பக்க எண், கோடு என்று அந்த நூலின் ஆரம்பம் முதல் முடிவு வரை ஒவ்வொரு அச்சும் மனிதர்களால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இதில் எந்த பிரின்டிங் டெக்னாலஜியும் பயன்படுத்தப்படவில்லை என்பதுதான் சிறப்பு. குரானை வாசிப்பவர்கள் விரலை புத்தகத்தில் வைத்து வாசிக்கும் போது, அந்த மூலிகைகளின் பலன், வாசிப்பவரை சென்றடையும்.
இந்நூல் துபாயில் உள்ள ரெட் அவென்யூ பில்டிங்கில் டிசம்பர் 11-ம் தேதி வரை காட்சிக்கு வைக்கப்பட்டது.
- ந.ஆஷிகா
விகடன்.காம்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.