.

Pages

Saturday, February 7, 2015

துபாயில் நடைபெற்ற மன்சூர் மதனி அவர்களின் மார்க்க விளக்க நிகழ்ச்சிகளில் பலர் பங்கேற்பு !

துபை அல்மனார் சென்டர் தமிழ் தஃவா பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட மார்க்க விளக்க நிகழ்ச்சிகளில் இலங்கையிலிருந்து வருகை தந்துள்ள மவ்லவி மன்சூர் மதனி அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மார்க்க விளக்கவுரையாற்றினார்கள்,

நேற்று 06.02.2015 வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகைக்குப் பின் துபை, அல்கோஸ் பகுதியில் அமைந்துள்ள அல்மனார் குர்ஆன் ஸ்டடி சென்டர் அரங்கில், 'நபி (ஸல்) அவர்களின் 3 இரவுகள்' என்ற தலைப்பில் படிப்பினைமிக்க 3 இரவுகளில் நடந்த சம்பவங்களை கூறி உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

முன்னதாக, 05.02.2015 வியாழக்கிழமை இஷாவுக்குப்பின் துபை, அல் பராஹா பகுதியில்  அமைந்துள்ள அல் மனார் சென்டரில் 'ஆயத்தல் குர்ஸி' குறித்து பயன்மிக்கதோர் தர்பியா நிகழ்ச்சியை வழங்கினார்கள்.

மேலும் அடுத்த நாள் வெள்ளிக்கிழமை காலையில் மீண்டும் அல் பராஹா அல் மனார் சென்டரில் 'முஸ்லீம் என்றால் யார்?' என்ற பொருளில் தர்பியா வகுப்பை வழங்கினார்கள்.

மதினாப்பா பேரன்
அபூ அப்துல் ரஹ்மான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.