அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கம் செயலாளராக பொறுப்பு வகிப்பவர் அக்ரி சேக்காதி ( வயது 60 ). மிலாரிக்காடு பஞ்சாத் நிர்வாகி முத்துசாமி ( வயது 56 ) , வள்ளியம்மை நகர் பஞ்சாயத் நிர்வாகி ராமலிங்கம் ( வயது 60 ) . வாகன ஓட்டுனர் இஸ்மாயில் ( வயது 42 ). இவர்கள் நான்கு பேரும் இன்று காலை நமதூர் பொதுநலன் சார்ந்த கோரிக்கை மனு அளிப்பதற்காக தஞ்சை மாவட்ட ஆட்சியரை சந்திக்க அதிரையிலிருந்து வாகனத்தில் புறப்பட்டு சென்றனர். வாகனம் சூரக்கோட்டை அய்யனார் கோயிலை தாண்டி சென்ற போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வாகனத்தில் பயணம் செய்த நான்கு பேரும் பலத்த காயமடைந்தனர். உடனே ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவலறிந்த தஞ்சை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் பலத்த காயமடைந்த ராமலிங்கம் மற்றும் அக்ரி சேக்காதி ஆகியோருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Monday, March 9, 2015
அதிரையிலிருந்து புறப்பட்டு சென்ற வாகனம் தஞ்சை அருகே தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 4 பேர் படுகாயம் !
Labels:
விபத்துச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.