.

Pages

Showing posts with label விபத்துச்செய்தி. Show all posts
Showing posts with label விபத்துச்செய்தி. Show all posts

Wednesday, March 25, 2020

அதிராம்பட்டினத்தில் திருமண வீட்டார் சென்ற வேன் ~ பைக் மோதல்; இருவர் பலி; 7 பேர் காயம்!

அதிராம்பட்டினம், மார்ச் 25
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு திருமண வீட்டார் சென்ற வேனும், இளைஞர் ஓட்டி  வந்த மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்ட  விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். வேனில் இருந்த 7 பேர் காயமடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், டி.பள்ளப்பட்டியைச் சேர்ந்த பெண்ணுக்கும், திருத்துறைப்பூண்டி அருகே பின்னத்தூர் கிராமத்திலுள்ள மணமகனுக்கும் மார்ச் 29 ம் தேதி இடும்பாவனம் என்ற ஊரில் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால், டி.பள்ளப்பட்டியிலுள்ள மணமகளுக்கு பரிசம் போட்டு முன்கூட்டியே பின்னத்தூருக்கு அழைத்து வந்து  திருமண நாளான மார்ச் 29 வரை தங்கள் உறவினர் வீட்டில் மணமகளை தங்க வைக்க மணமகன் வீட்டார் முடிவு செய்தனர்.

அதன்படி, மணமகன் வீட்டார் டி.பள்ளப்பட்டிக்குச் சென்று மணமகளுக்கு செவ்வாய்க்கிழமை பரிசம் போட்டு, பின்னத்தூருக்கு வேனில் அழைத்து வந்தனர். இந்த வேனில் மணமக்கள் மற்றும் உறவினர்கள் பயணித்தனர்.

செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இந்த வேன் அதிராம்பட்டினம் கிழக்குக் கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த அதிராம்பட்டினம் கரையூர் தெரு மீனவர் சமுத்திரம் மகன் முத்து (18) என்பவர் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது, வேன் பக்கவாட்டில் மோட்டார் சைக்கிள் பலமாக மோதியது. விபத்தைத் தடுக்க வேன் ஓட்டுநர் பிரேக் போட்டதால் வேன் சாலையில் கவிந்தது.

இந்த விபத்தில், மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற முத்து சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். வேனில் பயணித்த மணமகனின் உறவினர் முத்துப்பேட்டை ஒன்றியம், கீழநம்மங்குறிச்சி ஊராட்சி செயலர் சண்முகசுந்தரம் (39) என்பவர் பலத்த காயத்துடன் பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் இறந்தார். மேலும்,
வேனில் இருந்த மணமக்களின் உறவினர்கள் 7 பேர் பலத்த காயமடைந்தனர். இவர்களும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக மணமக்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

தகவலறிந்த அதிராம்பட்டினம் போலீஸார் இளைஞர் முத்துவின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
 

Sunday, December 8, 2019

மின் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவரும் சேகரை சந்தித்து நலம் விசாரிப்பு!

அதிராம்பட்டினம், டிச.08
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 52). மின்வாரிய ஊழியர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று பிள்ளைமார் தெருவில் அமைந்துள்ள மின் மாற்றியில் மின்சாரம் பழுது பார்க்கும் பணியை மேற்கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தார். இதையடுத்து, சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், சிகிச்சை மேற்கொண்டு வரும் சேகரை, அதிராம்பட்டினம் பேரூர் முன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம் இன்று ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று நலம் விசாரித்தார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர், சேகரின் குடும்பத்தாரிடம் ஆறுதல் கூறினார். சேகர் பூரணநலம் பெற்று விரைவில் வீடு திரும்ப இறைவனிடம் தாம் பிரார்திப்பதாக தெரிவித்தார். அப்போது ஒப்பந்ததாரர் எம்.வீரையன், சமூக ஆர்வலர் ஆர். தவமணி ஆகியோர் உடன் இருந்தனர். 

அதிரை அருகே காா் ~ வேன் மோதலில் தம்பதி உயிரிழப்பு!

அதிராம்பட்டினம் அருகே வேனும்- காரும் மோதிக் கொண்ட விபத்தில் இருவா் சனிக்கிழமை உயிரிழந்தனா்.

கேரளத்தைச் சோ்ந்தவா் சுதி (46). அவா் தனது மனைவி சைனி (35) உள்ளிட்ட 4 பேருடன், சனிக்கிழமை காரில் வேளாங்கண்ணி நோக்கி கிழக்கு கடற்கரைச் சாலையில் சென்று கொண்டிருந்தாா்.

இவா்கள் வந்த காா் காரங்குடா அருகே சென்று கொண்டிருந்தபோது காரின் முன்பக்க டயா் வெடித்தது. இதனால் நிலைத்தடுமாறிய காா், எதிரே பட்டுக்கோட்டையிலிருந்து மீமிசல் நோக்கிச் சென்ற வேன் மீது மோதியது. இதில் காா் மற்றும் வேனிலிருந்த 11 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியிலிருந்தவா்கள் காரிலிருந்த 4 பேரையும் மீட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சுதி, அவரது மனைவி சைனி ஆகிய இருவரும் உயிரிழந்தனா். மற்ற இருவரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மேலும், வேன் ஓட்டுநா் மணி உள்ளிட்ட 7 பேருக்கும் காயம் ஏற்பட்டது. அவா்கள் பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். விபத்து குறித்து பேராவூரணி போலீஸாா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

Wednesday, September 18, 2019

அதிராம்பட்டினம் அருகே நிகழ்ந்த வாகன விபத்தில் ஆசிரியர்கள் இருவர் பலி!

அதிராம்பட்டினம், செப்.18
அதிராம்பட்டினம் அருகே செவ்வாய்க்கிழமை மாலை நிகழ்ந்த வாகன விபத்தில் அரசுப் பள்ளிஆசிரியர்கள் இருவர் உயிரிழந்தனர்.

அதிராம்பட்டினம் அடுத்துள்ள ராஜாமேடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றி வந்தவர்கள் பிரபாகரன், செந்தில் நாதன். இவர்கள் இருவரும் பட்டுக்கோட்டை நோக்கி செவ்வாய்க்கிழமை மாலை மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

மகிழங்கோட்டை அருகே வந்தபோது, எதிரில் வந்த கனரக வாகனம் மோட்டார் சைக்கிளில் மோதியதில் நிகழ்விடத்திலேயே செந்தில் நாதன் உயிரிழந்தார். கால் துண்டிக்கப்பட்ட நிலையில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரபாகரன் ஆம்புலன்சில கொண்டு செல்லப்பட்டார். ஒரத்தநாடு தென்னமாடு - வல்லம் பிரிவு சாலையில் சென்றபோது, எதிரே மாடு வந்ததால் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்தார். இதையடுத்து, ஆம்புலன்ஸ் மரத்தில் மோதியது. தொடர்ந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பிரபாகரன் ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்தபோது ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.
 
 

Monday, April 22, 2019

அதிராம்பட்டினத்தில் சவுக்கு மரங்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து (படங்கள்)

அதிராம்பட்டினம், ஏப்.22
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலையில் சவுக்கு மரங்கள் ஏற்றி வந்த லாரி கவிந்து விபத்துக்குள்ளானது.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் இருந்து சவுக்கு மரங்களை ஏற்றிக்கொண்டு மதுரை மாவட்டம், கப்பலூர் சென்று கொண்டிருந்த லாரி வாகனம் இன்று திங்கட்கிழமை அதிகாலை அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலை கல்லூரி முக்கம் வேக தடுப்பு அரண் அமைந்துள்ள பகுதி அருகே வந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், லாரியில் இருந்து கொட்டிய சவுக்கு மரங்கள் சாலையை அடைத்துக் கொண்டதால், சாலையின் இருபுறமும் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது பின்னர், மாற்று வாகனத்தில் அனைத்து மரங்களும் ஏற்றிச் செல்லப்பட்டன.
 
 
 
 
 
 
 
 
 
 

Friday, October 19, 2018

ஒரத்தநாடு அருகே 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 40 பேர் படுகாயம் (படங்கள்)

ஒரத்தநாடு அருகே அரசுப் பேருந்தை முந்திச் செல்ல முயன்ற தனியார் பேருந்து மற்றொரு தனியார் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 40 பேர் படுகாயம் அடைந்தனர்.

பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் நோக்கிச் சென்ற PLA என்ற பேருந்தும், தஞ்சாவூரில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கிச் சென்ற மீரா என்ற பேருந்தும் மேல உளூர் என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் PLA பேருந்து ஓட்டுநர் உட்பட இரு பேருந்துகளிலும் பயணித்த 40 பயணிகள் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில், PLA பேருந்து முன்னால் சென்ற அரசு பேருந்தை முந்திச் செல்ல முயன்றபோது, எதிரே வந்த பேருந்துடன் மோதியது தெரியவந்தது. சாலைகளின் நடுவே தானியங்களைப் பரப்பி உலரவைப்பதும் விபத்துகளுக்குக் காரணம் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
 
 
 
 
 
 
 

Monday, October 8, 2018

அதிரை நசுவுனி ஆற்று பாலத்தில் டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து (படங்கள்)

அதிராம்பட்டினம், அக்.08
அதிராம்பட்டினம் ஈஸ்ட் கோஸ்ட் சாலை நசுவுனி ஆற்று பாலத்தில் டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

முத்துப்பேட்டையிலிருந்து, அதிராம்பட்டினம் ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் சென்னை பதிவு எண் கொண்ட டிப்பர் லாரி ஒன்று இன்று திங்கட்கிழமை மதியம் 3 மணியளவில் வந்துகொண்டிருந்தபோது, நசுவுனி ஆற்று பாலத்தின் இடதுபுற தடுப்புச் சுவரில் வேகமாக மோதியதில், பாலத்தின் கீழே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், அருகில் இருந்த மின்கம்பம் முறிந்து சேதமடைந்தன. மின்கம்பிகள் அறுந்து கீழே விழுந்தது. இப்பகுதியில் ஆள் நடமாட்டம் குறைவாக இருந்ததால், யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த அதிராம்பட்டினம் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் பிரகாஷ் மற்றும் ஊழியர்கள் சேதமடைந்த மின்கம்பதை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். விபத்து பற்றி அதிராம்பட்டினம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
 

Monday, May 21, 2018

அதிரையில் கிரேன் மோதி எலக்ட்ரிசியன் பலி !

அதிராம்பட்டினம், மே 21
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்துள்ள ஏரிப்புறக்கரை கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 50). அதிராம்பட்டினத்தில் சவுண்ட் சர்வீஸ் நிறுவனத்தில் எலக்ட்ரிசியன் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில், நேற்று (மே.20) ஞாயிற்றுக்கிழமை அதிராம்பட்டினம் ~ பட்டுக்கோட்டை சாலையோரத்தில் அமைந்துள்ள மதுபானக்கடை அருகே சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கிரேன் வாகனம் ஆறுமுகம் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அதிராம்பட்டினம் போலீசார், ஆறுமுகத்தின் உடலை மீட்டு அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த ஆறுமுகத்திற்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர்.

அதிராம்பட்டினம் ~ பட்டுக்கோட்டை சாலையில் உள்ள மதுபானக்கடை அருகே அடிக்கடி நிகழும் வாகன விபத்துகளால் பல உயிரிழப்புகளும், படுகாயங்களும் ஏற்படுகிறது. மதுபானங்கள் வாங்க வரும் குடிகாரர்கள் இச்சாலையில் கும்பலாக சூழ்ந்துகொள்வதால், இரவு நேரத்தில் வாகன நெருக்கடியும், இருசக்கர வாகனங்களில் செல்வோர் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்குவதும் அடிக்கடி நிகழ்கிறது. எனவே, அதிராம்பட்டினம் ~ பட்டுக்கோட்டை பிரதான சாலையோரத்தில் அமைந்துள்ள மதுபானக்கடையை உடனே அகற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Wednesday, March 14, 2018

அதிராம்பட்டினத்தில் பைக் மோதி மீனவர் பலி !

File photo
அதிராம்பட்டினம், மார்ச் 14
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் சைக்கிள் மீது பைக் மோதிய விபத்தில் மீனவர் பலியானார்.

அதிராம்பட்டினம், கரையூர் தெருவைச் சேர்ந்த மீனவர் வேதரத்தினம் (80). இவர் திங்கட்கிழமை அதிராம்பட்டினம் ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பைக், சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த வேதரத்தினத்தை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காலமானார். பைக் ஓட்டி வந்த சுந்தரநாயகிபுரத்தை சேர்ந்த  பிரவின் குமார் (19) என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Thursday, December 21, 2017

மதுக்கூர் அருகே தனியார் பேருந்து விபத்தில் ஒருவர் பலி ~ பலர் காயம் (படங்கள்)

மதுக்கூர், டிச.21
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் அருகே நடந்த தனியார் பேருந்து விபத்தில் ஒருவர் பலி, பலர் காயம்.

பட்டுக்கோட்டையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மன்னார்குடிக்கு தனியார் பேருந்து இன்று வியாழக்கிழமை சென்றது. பேருந்து மதுக்கூர் அருகே உள்ள ஆவிக்கோட்டை கிராமம் அருகே சென்ற போது, சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பெருமாள் கோவில் நத்தம் பகுதியை சேர்ந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பலர் காயம் அடைந்தனர். அவர்களை தமுமுக, 108 ஆம்புலன்ஸ் மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், அதிகமான பள்ளி மாணவிகள் இருந்ததாக கூறப்படுகிறது.