.

Pages

Showing posts with label மதுக்கூர் செய்திகள். Show all posts
Showing posts with label மதுக்கூர் செய்திகள். Show all posts

Thursday, October 22, 2020

2-1/2 வயது சிறுவனின் மருத்துவ அறுவை சிகிச்சைக்கு உதவ தள்ளுவண்டி வியாபாரி கோரிக்கை!

அதிரை நியூஸ்: அக்.22
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர், இராமம்மாள்புறம், யூனியன் ரோடு பகுதியை சேர்ந்தவர் அஜ்மல்கான் (வயது 43). இவருக்கு வயது வந்த 1 பெண் குழந்தை உட்பட 3 குழந்தைகள் உள்ளன. மதுக்கூரில் தள்ளுவண்டியில் சூப், சுண்டல் விற்று அன்றாட பிழைப்பு நடத்தி வருகிறார். 

இவரது மகன் முகமது ஷக்கில் (வயது 2-1/2). கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக சிறுவனின் அடிவயிற்று பகுதியில் வீக்கம் ஏற்பட்டு, வலி ஏற்பட்டதாம். இதையடுத்து, பட்டுக்கோட்டை தனியார் மருத்துவமனை மருத்துவரிடம் முதற்கட்ட பரிசோதனை செய்து, பின்னர் அவரது பரிந்துரையின் பேரில், தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் மேற்கொண்ட ஸ்கேன் பரிசோதனையில், சிறுநீரகம் அருகில் கட்டி ஏற்பட்டு, வளர்ந்து வருவதாகவும், உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் கட்டியை அகற்ற வேண்டுமென மருத்துவர் அறிவுறுத்தினாராம். இதற்கான செலவு ரூ.1 லட்சத்திற்குள் மிகாமல் ஆகுமென மருத்துவமனை வட்டாரம் கூறியிருக்கிறதாம்.

இதைத்தொடர்ந்து, சிறுவனின் தந்தை அஜ்மல்கான், தான் செய்துவந்த தள்ளு வண்டி வியாபாரத்தை விட்டுவிட்டு, மகனின் மருத்துவ செலவீனங்களுக்கு, அதிராம்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிதி திரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். எனினும், மருத்துவ அறுவை சிகிச்சைக்கு போதுமான நிதியை திரட்ட முடியவில்லை எனக் கூறி நம்மின் உதவியை நாடி வந்துள்ளார்.

இவரது மகனின் மருத்துவ சிகிச்சைக்கு உதவ எண்ணுவோர், நேரடியாக அஜ்மல்கான் அவர்களிடமோ அல்லது இணைப்பில் குறிப்பிட்டுள்ள அஜ்மல்கான் அவர்களின் மனைவியின் வங்கி கணக்கின் வழியாகவோ அல்லது அதிராம்பட்டினத்தில் செயல்படும் சமுதாய அமைப்புகள் மூலமாகவோ அல்லது இவர் வசிக்கும் மதுக்கூர் ஜமாத் மூலமாகவோ தொடர்பு கொண்டு உதவலாம்.

அஜ்மல்கான் அவர்களின் மனைவியின் வங்கி கணக்கின் விவரம்:
A/c Name : Barsana Barvin A
Bank Name : INDIAN BANK
Branch : MADUKKUR BRANCH
A/C No. 6339769503

மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு: 
7305196893

பரிந்துரை: வழக்குரைஞர் ஏ.முனாப், 
அதிராம்பட்டினம்

Friday, October 2, 2020

மதுக்கூரில் மத்திய அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

மதுக்கூர், அக்.02
மதுக்கூரில் நாம் தமிழர் கட்சியினர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடத்தினர். 

அக்கட்சியின், தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் ஏ.தேவராஜ் தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை தொகுதி செயலாளர் வெற்றிச்செல்வன் முன்னிலை வகித்தார். மாநிலப் பேச்சாளர் கரிகாலன் கண்டன உரை நிகழ்த்தினார். 

இதில், விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களை பாதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நாம் தமிழர் கட்சியினர் திரளாக கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.


Monday, September 28, 2020

மதுக்கூரில் முதலுதவி பயிற்சி (படங்கள்)

மதுக்கூர், செப்.28
கிரசண்ட் பிளட் டோனர்ஸ் (CBD ), தமிழ்நாடு தீயணைப்பு துறை சார்பில் முதலுதவி பயிற்சி முகாம் மதுக்கூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  

நிகழ்வுக்கு, மதுக்கூர் பேரூர் தலைவர் எஸ். நூர் முகமது தலைமை வகித்தார்.துணை தலைவர் எச். இம்தியாஸ் அகமது, செயலாளர் பி. முகமது இம்ரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  

கிரசண்ட் பிளட் டோனர்ஸ் அமைப்பின் தஞ்சை மாவட்ட தலைவரும், அதிராம்பட்டினம் காதர் முகைதீன் கல்லூரி கலைப்புல முதன்மையர் பேராசிரியர் கே செய்யது அகமது கபீர் அமைப்பு ஆற்றிவரும் பணிகள் குறித்து விளக்கிப்பேசினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக, மதுக்கூர் காவல்துறை ஆய்வாளர் எஸ்.கார்த்திகேயன், பட்டுகோட்டை தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை நிலைய அலுவலர் ஆர். செல்வராஜ் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். என்.கலையரசன், கே.ஹரிஹரசுதன் ஆகியோர் பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு அளிக்கும் முதலுதவி குறித்து செயல் விளக்கப் பயிற்சி அளித்தனர்.

முன்னதாக. துணைச் செயலாளர் ஏ. முகமது பாசித் வரவேற்றார். துணைச்செயலாளர் ஏ. அப்துல் மாலிக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிறைவில், பொருளாளர் ஜெ. முகமது சஹிம் நன்றி கூறினார்.


Saturday, August 15, 2020

சுதந்திர தினத்தில் TNTJ அமைப்பினர் இரத்த தானம் (படங்கள்)

மதுக்கூர், ஆக. 15
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில், இன்று தமிழகம் முழுவதும் 100 க்கும் மேற்பட்ட இடங்களில் இரத்த தான முகாம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் இரத்ததான முகாம் மதுக்கூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு, அவ்வமைப்பின் மாவட்ட தலைவர் கே ராஜிக் முகமது தலைமை வகித்தார். மாவட்ட மருத்துவரணி செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் முன்னிலை வகித்தார். இதில், தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவக்குழுவினர் கலந்துகொண்டு 60 யூனிட் இரத்தததை டி.என்.டி.ஜே கொடையாளர்களிடமிருந்து தானமாகப் பெற்றனர்.

இந்நிகழ்வில், மாவட்ட துணைச்செயலாளர் பாவா, மாவட்ட மாணவரணி இத்ரீஸ், மதுக்கூர் கிளைத தலைவர் அபுபக்கர், செயலாளர் ரஹ்மத்துல்லாஹ், துணைத் தலைவர் ஆசிப், துணை செயலாளர் ஆசிக்  அன்சர் மிஸ்க் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முகாம் ஏற்பாட்டினை, கிளை மாணவரணி மற்றும் மருத்துவரணி பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.
 
 
 
 
 
 

Thursday, July 2, 2020

தலைமைக் காவலருக்கு கரோனா: மதுக்கூர் காவல் நிலையம் மூடல்!

மதுக்கூர், ஜூலை 02:
தலைமைக் காவலர் ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் காவல் நிலையம் புதன்கிழமை மூடப்பட்டது.

தமிழகமெங்கும் கரோனா நோய்த் தொற்று பரவி வருவதைத் தொடர்ந்து, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களைப்போல தொடர்ந்து களப்பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம்,  மதுக்கூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீஸாருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அக்காவல் நிலையத்தில் பணிபுரியும் 48 வயதுடைய தலைமைக்காவலர் ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதியானது. இதைத் தொடர்ந்து, உடனடியாக அவர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

தலைமைக் காவலருக்கு நோய்த் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, மதுக்கூர் பேரூராட்சி நிர்வாகத்தினர் காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளித்தனர். பின்னர் காவல் நிலையம் மூடப்பட்டது. இதையடுத்து அதனருகில் அமைந்துள்ளதிருமண மண்டபத்துக்கு காவல் நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது.

மதுக்கூர் காவல் நிலையத்தில் மொத்தப் பணியிடங்கள் 22. இதில் 6 பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளதால், தற்போது 16 பேர் மட்டுமே  பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், அங்கு பணிபுரியும் தலைமைக் காவலருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து மற்ற போலீஸார் அனைவரும் அச்சத்துடன்  பணியாற்றி வருகின்றனர்.

Sunday, March 8, 2020

மதுக்கூர் 21-வது நாள் தொடர் காத்திருப்பு போராட்டம் (படங்கள்)

மதுக்கூர், மார்ச் 08
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், தமிழக அரசு சட்டமன்றத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கோரியும் தொடர்ந்து 21-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம், மதுக்கூர் பள்ளிவாசல் தெருவில் நடைபெற்றது.

இதில், சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்துப் பேசி வருகின்றனர்.

21வது நாள் போராட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ நிஜாமுதீன், தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு மாநிலச் செயலாளர் அபூசுஹைல் பாகவி, இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் பாக்கர் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினர். இதில், பெண்கள், குழந்தைகள் உட்பட திரளானோர் பங்கேற்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முழக்கமிட்டனர்.

Friday, March 6, 2020

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மதுக்கூரில் நீதிக்கான பேரணி (படங்கள்)

மதுக்கூர், மார்ச் 06
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், தமிழக அரசு சட்டமன்றத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கோரியும் தொடர்ந்து 20-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம், மதுக்கூர் பள்ளிவாசல் தெருவில் நடைபெற்றது.

இதில், சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்துப் பேசி வருகின்றனர்.

20-வது நாள் போராட்டத்தில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாநில செயலாளர் நாகூர் மீரான், ஜமாஅத்தே இஸ்லாமிய ஹிந்த் அமைப்பின் முகமது அமீன், தமுமுக மாநிலச்செயலாளர் சிவகாசி முஸ்தபா ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.

முன்னதாக, போராட்டத்திற்கு ஆதரவாக, பெண்கள், குழந்தைகள் உட்பட  ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற நீதிக்கான பேரணி நடைபெற்றது. மதுக்கூர் சூரிய தோட்டத்தில் தொடங்கிய பேரணி மதுக்கூர் பள்ளிவாசல் தெருவில் நடைபெறும் தொடர் போராட்டக் களத்தில் நிறைவடைந்தது.

இதில், பெண்கள், குழந்தைகள் உட்பட திரளானோர் பங்கேற்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முழக்கமிட்டனர்.
 

Thursday, March 5, 2020

மதுக்கூர் 19-வது நாள் தொடர் காத்திருப்பு போராட்டம் (படங்கள்)

மதுக்கூர், மார்ச் 05
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், தமிழக அரசு சட்டமன்றத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கோரியும் தொடர்ந்து 19-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம், மதுக்கூர் பள்ளிவாசல் தெருவில் நடைபெற்றது.

இதில், சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்துப் பேசி வருகின்றனர்.

19-வது நாள் போராட்டத்தில், எஸ்டிபிஐ கட்சி மாநிலப் பொதுச்செயலாளர் ஆஷா உமர் பாருக், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.தமிழ்செல்வி, ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநிலச்செயலாளர் ஆபிருதீன் மன்பஈ ஆகியோர் கலந்துகொண்டு  கண்டன உரை நிகழ்த்தினர்.

இதில், பெண்கள், குழந்தைகள் உட்பட திரளானோர் பங்கேற்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முழக்கமிட்டனர்.