.

Pages

Showing posts with label உதவி. Show all posts
Showing posts with label உதவி. Show all posts

Thursday, October 22, 2020

2-1/2 வயது சிறுவனின் மருத்துவ அறுவை சிகிச்சைக்கு உதவ தள்ளுவண்டி வியாபாரி கோரிக்கை!

அதிரை நியூஸ்: அக்.22
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர், இராமம்மாள்புறம், யூனியன் ரோடு பகுதியை சேர்ந்தவர் அஜ்மல்கான் (வயது 43). இவருக்கு வயது வந்த 1 பெண் குழந்தை உட்பட 3 குழந்தைகள் உள்ளன. மதுக்கூரில் தள்ளுவண்டியில் சூப், சுண்டல் விற்று அன்றாட பிழைப்பு நடத்தி வருகிறார். 

இவரது மகன் முகமது ஷக்கில் (வயது 2-1/2). கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக சிறுவனின் அடிவயிற்று பகுதியில் வீக்கம் ஏற்பட்டு, வலி ஏற்பட்டதாம். இதையடுத்து, பட்டுக்கோட்டை தனியார் மருத்துவமனை மருத்துவரிடம் முதற்கட்ட பரிசோதனை செய்து, பின்னர் அவரது பரிந்துரையின் பேரில், தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் மேற்கொண்ட ஸ்கேன் பரிசோதனையில், சிறுநீரகம் அருகில் கட்டி ஏற்பட்டு, வளர்ந்து வருவதாகவும், உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் கட்டியை அகற்ற வேண்டுமென மருத்துவர் அறிவுறுத்தினாராம். இதற்கான செலவு ரூ.1 லட்சத்திற்குள் மிகாமல் ஆகுமென மருத்துவமனை வட்டாரம் கூறியிருக்கிறதாம்.

இதைத்தொடர்ந்து, சிறுவனின் தந்தை அஜ்மல்கான், தான் செய்துவந்த தள்ளு வண்டி வியாபாரத்தை விட்டுவிட்டு, மகனின் மருத்துவ செலவீனங்களுக்கு, அதிராம்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிதி திரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். எனினும், மருத்துவ அறுவை சிகிச்சைக்கு போதுமான நிதியை திரட்ட முடியவில்லை எனக் கூறி நம்மின் உதவியை நாடி வந்துள்ளார்.

இவரது மகனின் மருத்துவ சிகிச்சைக்கு உதவ எண்ணுவோர், நேரடியாக அஜ்மல்கான் அவர்களிடமோ அல்லது இணைப்பில் குறிப்பிட்டுள்ள அஜ்மல்கான் அவர்களின் மனைவியின் வங்கி கணக்கின் வழியாகவோ அல்லது அதிராம்பட்டினத்தில் செயல்படும் சமுதாய அமைப்புகள் மூலமாகவோ அல்லது இவர் வசிக்கும் மதுக்கூர் ஜமாத் மூலமாகவோ தொடர்பு கொண்டு உதவலாம்.

அஜ்மல்கான் அவர்களின் மனைவியின் வங்கி கணக்கின் விவரம்:
A/c Name : Barsana Barvin A
Bank Name : INDIAN BANK
Branch : MADUKKUR BRANCH
A/C No. 6339769503

மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு: 
7305196893

பரிந்துரை: வழக்குரைஞர் ஏ.முனாப், 
அதிராம்பட்டினம்

Sunday, August 2, 2020

இருதய நோயால் அவதிப்படும் 'டீ' மாஸ்டருக்கு உதவ கோரிக்கை!

அதிரை நியூஸ்: ஆக.02
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், தரகர் தெருவை சேர்ந்தவர் ஹாமீம்  (42). இவருக்கு 4 குழந்தைகள் உள்ளன. அதிரையில் உள்ள உணவகமொன்றில் 'டீ' மாஸ்டராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், கடந்த 3 மாதத்திற்கு முன்பாக திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டு பட்டுக்கோட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவரின் அறிவுரையின் பேரில், ஆஞ்சியோகிராம் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். இதில், இருதயத்தில் 3 இடங்களில் அடைப்பு உள்ளதாகவும், உடனடியாக, பை~பாஸ் அறுவை சிகிச்சை மூலம் இவற்றை சரிசெய்துவிடலாம் என மருத்துவர் கூறியதாகத் தெரிவித்தார். தற்போதைய கரோனா ஊரடங்கில் வேலை வாய்ப்பின்றி ஏழ்மை நிலையில் வீட்டில் முடங்கி கிடக்கும் தம்மால், மருத்துவ சிகிச்சைக்கு போதுமான நிதியை திரட்ட முடியவில்லை எனக் கூறி நம்மின் உதவியை நாடி வந்துள்ளார்.

இவரது மருத்துவ சிகிச்சைக்கு உதவ எண்ணுவோர், நேரடியாக ஹாமீம் அவர்களிடமோ அல்லது இணைப்பில் குறிப்பிட்டுள்ள ஹாமீம் அவர்களின் மனைவியின் வங்கி கணக்கின் வழியாகவோ அல்லது அதிராம்பட்டினத்தில் செயல்படும் சமூதாய அமைப்புகள் மூலமாகவோ அல்லது இவர் வசிக்கும் மஹல்லா சங்கம் மூலமாகவோ தொடர்பு கொண்டு உதவலாம்.

ஹாமீம் அவர்களின் மனைவியின் வங்கி கணக்கின் விவரம்:
A/c Name : RASOOL BEEVI
Bank Name : INDIAN BANK
Branch : ADIRAMPATTINAM BRANCH
A/C No. 6526852886
IFSC Code: IDIB0000A110

மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு: 
 8098615994 / 7339412485

Wednesday, May 20, 2020

அதிராம்பட்டினம் பிரமுகரின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவிடுவீர்!

அதிராம்பட்டினம், மே. 20
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவைச் சேர்ந்தவர் ஜெ.ஜெ சாகுல் ஹமீது (வயது 52) சமூக ஆர்வலரான இவர் திமுக அதிராம்பட்டினம் பேரூர் அவைத்தலைவராக பொறுப்பில் இருந்து வருகிறார்.

இந்நிலையில், இவர் கடந்த 3 மாதத்திற்கு முன்பாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்தார். இதையடுத்து, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டதில் கல்லீரல் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு ஒரு மாதத்திற்கும் மேலாக தங்கிருந்து சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில், மீண்டும் இவரை பரிசோதித்த மருத்துவர்கள், கல்லீரல் செயலிழந்து இருப்பதாகவும், உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர். அதன் பேரில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக சென்னை குரோம்பேட்டை டாக்டர் ரேலா இன்ஸ்டிடியூட் மற்றும் மருத்துவ மையத்தின் ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு இவரது உறவினர் ஒருவர் கல்லீரல் உறுப்பை தானமாக அளிக்க முன்வந்துள்ளார். இதையடுத்து, மருத்துவக்குழுவினர் இவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் நிதியை திரட்ட இயலாததால் நம்மின் உதவியை நாடி உள்ளனர்.

எனவே, இவரது சிகிச்சைக்கு உதவ எண்ணுவோர் நேரடியாக அவரது சகோதரரிடமோ அல்லது இணைப்பில் குறிப்பிட்டுள்ள அவரது சகோதரருக்கு சொந்தமான வங்கி கணக்கின் வழியாகவோ அல்லது அதிராம்பட்டினத்தில் செயல்படும் அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் மூலமாகவோ அல்லது இஸ்லாமிய அமைப்புகள் மூலமாகவோ அல்லது இவர் வசிக்கும் மஹல்லா சங்கம் மூலமாகவோ தொடர்பு கொண்டு உதவலாம்.

வங்கி கணக்கின் விவரம்:
Account Name: NOORUL HILMI
Bank Name: HDFC BANCK
A/C  : 50100287076563
IFSC : HDFC 0002820

மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு:
91 9585967599

இவரது சகோதரரின் வேண்டுகோள் (ஆங்கிலத்தில்)...

Dear family's and friends and people helpers

My self Noorul Hilmi

JJ. Shahul Hameed
Admited in
Rela institute and medical center
Crompet, Chennai

Home address
52/B, beach Street
Beach Street ,
Adirampattinam- 614791
Tamilnadu
India
Patient Son / Jasim Ahamed , Noorul Abideen

Noorul Hilmi
Patient own brother
Contact : 9585967599

My own brother had liver disease and he had very sick last 3 month finally doctors adviced to us my brother need liver transplant immediately with 1 week for this covid 19 situation we cant arrange amounts for surgery

We suffering collecting donations funds for my brother liver transplant

I hope our family's and friends and people helpers to help us donations for my brother liver transplant next week please donate as much you can you can save one person with his family
I wish your support very soon

Thanking your
You best regards
Noorul Hilmi

Saturday, January 11, 2020

புற்று நோய் பாதிப்பில் உயிருக்கு போராடும் இளம் பெண்ணுக்கு உதவ கோரிக்கை!

அதிராம்பட்டினம், ஜன.11
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் பர்ஷானா (வயது 27). தாய், தந்தையை இழந்தவர். இவரது உடன் பிறந்த சகோதரிகளின் அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு வயிற்றில் கட்டி உண்டாகி அதில் வலி ஏற்பட்டதாம், பின்னர், பட்டுக்கோட்டையில் மருத்துவரிடம் மருத்துவப் பரிசோதனை செய்ததில் புற்று நோய்க்கான அறிகுறி இருப்பதும், உடலில் ஆங்காங்கே கட்டிகள் பரவி வருவதும் தெரியவந்தது. ஏற்கனவே, இவருக்கு வயிற்றுப் பகுதியில் பரவி இருந்த 2 கட்டிகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

இதையடுத்து கேரளா, பெங்களூர் போன்ற இடங்களில் மருத்துவ சிகிச்சை எடுத்துவந்த நிலையில், தற்போது உடலின் பல பகுதிகளில் கட்டிகள் வேகமாக பரவி வருவதால், மருத்துவர் அறிவுரையின் பேரில், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு தீவிர  சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

இதுவரையில் ஆனா மருத்துவ செலவுக்கு பெண்ணின் குடும்பத்தார் பலரிடம் கடன்பட்டும், உதவிகள் பெற்றும் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டனர். எனினும் நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதால்,
'ஹீமோதெரபி' எனும் தொடர் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டுமென மருத்துவர் அறிவுறுத்தி இருக்கிறார். இதற்கு, சுமார் ரூ.5 லட்சத்துக்கும் அதிகமாக செலவாகும் என மருத்துவமனை வட்டாரம் கூறிவிட்டதால், இந்த ஏழைப் பெண்மணியின் குடும்பத்தாரால் போதிய நிதியை திரட்ட முடியாமல் திணறி வருகின்றனர். இக்குடும்பத்தார் நம்மின் உதவியை நாடி வந்துள்ளனர்.

எனவே, இவருக்கு உதவ எண்ணுவோர், நேரடியாக பர்ஷானா குடும்பத்தாரிடமோ அல்லது இணைப்பில் குறிப்பிட்டுள்ள இவருக்கு சொந்தமான வங்கி கணக்கின் வழியாகவோ அல்லது அதிராம்பட்டினத்தில் செயல்படும் அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் மூலமாகவோ அல்லது இஸ்லாமிய அமைப்புகள் மூலமாகவோ அல்லது இவர் வசிக்கும் மஹல்லா சங்கம் மூலமாகவோ தொடர்பு கொண்டு உதவலாம்.

பர்ஷானா குடும்பத்தார் வழங்கிய வங்கி கணக்கின் விவரம்:
A/c Name : BARSHANA
Bank Name :  INDIAN BANK
Branch : ADIRAMPATTINAM BRANCH
A/C No. 6839212147
IFSC Code: IDIB000A110

மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு:
0091 9629235935  / 0091 9500696471 

Wednesday, August 14, 2019

புற்று நோய் பாதிப்பில் உயிருக்கு போராடும் ஏழைப் பெண்ணுக்கு உதவ கோரிக்கை!

அதிராம்பட்டினம், ஆக. 14
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் பர்ஷானா (வயது 27). தாய், தந்தையை இழந்தவர். இவரது உடன் பிறந்த சகோதரிகளின் அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு வயிற்றில் கட்டி உண்டாகி அதில் வலி ஏற்பட்டதாம், பின்னர், பட்டுக்கோட்டையில் மருத்துவரிடம் மருத்துவப் பரிசோதனை செய்ததில் புற்று நோய்க்கான அறிகுறி இருப்பதும், உடலில் ஆங்காங்கே கட்டிகள் வேகமாக பரவி வருவதும் தெரியவந்தது. ஏற்கனவே, இவருக்கு வயிற்றுப் பகுதியில் பரவி இருந்த 2 கட்டிகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது. இந்த செலவீனங்களுக்காக பர்ஷானா குடும்பத்தார் பலரிடம் கடன்பட்டு மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டது கவனிக்கத்தக்கது.

தற்போது மருத்துவமனையில் தங்கியிருந்து  'ஹீமோதெரபி' எனும் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள சுமார் ரூ.2 லட்சத்துக்கும் அதிகமாக செலவாகும் என மருத்துவ வட்டாரம் கூறிவிட்டதால், இந்த ஏழைப் பெண்மணியின் குடும்பத்தினரால் போதிய பணத்தை திரட்ட முடியாமல் நம்மின் உதவியை நாடி வந்துள்ளனர்.

எனவே, இவருக்கு உதவ எண்ணுகின்றவர்கள், நேரடியாக பர்ஷானா குடும்பத்தாரிடமோ அல்லது இணைப்பில் குறிப்பிட்டுள்ள இவரது சகோதரியின் கணவருக்கு சொந்தமான வங்கி கணக்கின் வழியாகவோ அல்லது அதிராம்பட்டினத்தில் செயல்படும் அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பு அல்லது இஸ்லாமிய அமைப்புகள் மூலமாகவோ அல்லது இவர் வசிக்கும் மஹல்லா சங்கம் மூலமாகவோ தொடர்பு கொண்டு உதவலாம்.

பர்ஷானா குடும்பத்தார் வழங்கிய வங்கி கணக்கின் விவரம்:
A/c Name : MEERA MOHAIDEEN
Bank Name :  INDIAN BANK
Branch : ADIRAMPATTINAM BRANCH
A/C No. 908289149
IFSC Code: IDIB000A110

மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு:
0091 9500696471 (மீரா முகைதீன், அதிராம்பட்டினம்)

Wednesday, May 15, 2019

நடுத்தெரு அரசுப் பள்ளிக்கு ஆழ்துளைக் கிணறு அமைக்க நிதி உதவி!

அதிராம்பட்டினம், மே 15
அதிராம்பட்டினம், நடுத்தெரு (வாய்க்கால் தெரு) ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளிக்கு 'தொழில் அதிபர்' பழஞ்சூர் கே.செல்வம் சார்பில், ரூ.2 லட்சம் செலவில், ஆழ்துளைக் கிணறு, குடிநீர் தேக்கத் தொட்டி  அமைப்பதற்கு முதல்கட்ட நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி இன்று புதன்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியில், சுமார் 160-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அங்கு, குடிநீர் பிரச்னை நிலவி வந்ததை அடுத்து, 'தொழில் அதிபர்,' திமுக தஞ்சை தெற்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை அமைப்பாளர் பழஞ்சூர் கே.செல்வம் சார்பில் ரூ.2 லட்சம் செலவில் ஆழ்துளைக் கிணறு அமைப்பதற்கு முதல்கட்ட நிதி உதவி ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை பள்ளித் தலைமை ஆசிரியை மாலதியிடம் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், பள்ளி கல்விக்குழு முன்னாள் தலைவர் என்.கே.எஸ் முகமது சரீப், பெற்றோர் ஆசிரியர் கழகப் பொறுப்பாளர் ஏ.சாகுல்ஹமீது,  தில்லைநாதன், ஜாகிர், சைஃபுதீன் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Wednesday, March 6, 2019

புற்று நோய் பாதிப்படைந்த ஏழைப் பெண்ணுக்கு உதவ கோரிக்கை!

அதிராம்பட்டினம், மார்ச் 06
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்து மளவேனிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன் (வயது 53). இவர், கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக அதிராம்பட்டினத்தில் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாட்ச்மேனாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வளர்மதி (வயது 45). வீட்டுப் பணிப்பெண். இத்தம்பதிக்கு 1 பெண், 2 ஆண் குழந்தைகள் உள்ளது.

இந்நிலையில் வளர்மதிக்கு கடந்த 6 மாதத்துக்கு முன்பாக மார்பில் கட்டி உண்டாகி அதில் வலி ஏற்பட்டதாம், பின்னர், பட்டுக்கோட்டையில் மகப்பேறு மருத்துவரிடம் மருத்துவப் பரிசோதனை செய்ததில் புற்று நோய்க்கான அறிகுறி இருப்பது தெரியவந்தது. மருத்துவர் அறிவுரையின் பேரில், தஞ்சாவூர் கேன்சர் சென்டரில் அனுமதிக்கப்பட்டு அங்கு புற்றுநோய்க்கான சிகிச்சை எடுத்து வருகிறார்.

சுமார் ரூ.2 லட்சத்துக்கும் மேல் செலவாகும் என மருத்துவ வட்டாரம் கூறிவிட்டதால், இவரால் போதிய பணத்தை திரட்ட முடியாததால் நம்மின் உதவியை நாடி வந்துள்ளார்.

எனவே, இவருக்கு உதவ எண்ணுகின்றவர்கள், நேரடியாக மதியழகன் அவர்களிடமோ அல்லது இணைப்பில் குறிப்பிட்டுள்ள மதியழகன் மனைவி வளர்மதி அவர்களுக்கு சொந்தமான வங்கி கணக்கின் வழியாகவோ அல்லது அதிராம்பட்டினத்தில் செயல்படும் தன்னார்வத் தொண்டு அமைப்புகள் மூலமாகவோ அல்லது இவர் வசிக்கும் கிராம பஞ்சயாத் பிரமுகர்கள் மூலமாகவோ தொடர்பு கொண்டு உதவலாம்.

மதியழகன் வழங்கிய வங்கி கணக்கின் விவரம்:
A/c Name : VALARMATHY. M
Bank Name : INDIAN BANK
Branch : ADIRANPATTINAM BRANCH
A/C No. 560625117

மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு: 0091 9629079299 (மதியழகன்)

Wednesday, October 31, 2018

வாகன விபத்தில் கால் முறிந்த பெண்ணின் மருத்துவத்திற்கு ரூ.55 ஆயிரம் நிதி உதவி!

அதிராம்பட்டினம், அக்.31
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பெரிய தைக்கால் சாலையில் வாடகை வீட்டில் வசிப்பவர் ரஹ்மான். ஆட்டோ ஓட்டுனர். இவர் கடந்த அக்.24 ந் தேதி மனைவி ஆய்ஷா (வயது 23), தனது 8 வயது பெண் குழந்தை ஆகியோருடன் ஆட்டோ வாகனத்தில் அதிரையிலிருந்து ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, மணமேல்குடி அருகே நிகழ்ந்த வாகன விபத்தில் ஆயிஷாவின் கால் முறிந்து ஆபத்தான நிலையில் தஞ்சை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார்.

ஏழ்மை நிலையில் இருக்கும் ஆட்டோ ஓட்டுனரால், தனது மனைவியின் கால் ஆப்ரேஷன் ~ தொடர் சிகிச்சை மற்றும் இதர செலவீனங்களுக்காக போதிய நிதியை திரட்ட முடியாத நிலையில் பெண்ணின் குடும்பத்தார் நம்மிடையே உதவியை கோரி இருந்தனர்.

இந்நிலையில், அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை ஏற்பாட்டின் பேரில், ரியாத் வாழ் அதிரை சகோதரர்கள் மூலம் திரட்டப்பட்ட ரூ.50 ஆயிரம் மற்றும் அதிரை பைத்துல்மால் அமைப்பின் சார்பில் ரூ.5 ஆயிரம், ஆகக் கூடுதல் ரூ. 55 ஆயிரம் மருத்துவ நிதி உதவியை, பெண்ணின் குடும்பத்தாரிடம் இன்று புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது. அருகில், அதிரை பேரூர் முன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம், அதிரை பைத்துல்மால் செயலாளர் ஹாஜி எஸ்.ஏ அப்துல் ஹமீது, துணைச்செயலாளர் ஏ.எஸ் அகமது ஜலீல் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். மருத்துவ நிதி உதவியைப் பெற்றுக்கொண்ட பெண்ணின் குடும்பத்தார் கொடையளித்த நல்லுள்ளங்களுக்கு நன்றி கூறினார்.

Monday, October 29, 2018

வாகன விபத்தில் பெண்ணின் கால் முறிவு ~ ஆப்ரேஷனுக்கு உதவ கோரிக்கை!

அதிராம்பட்டினம், அக்.29
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பெரிய தைக்கால் சாலையில் வாடகை வீட்டில் வசிப்பவர் ரஹ்மான். ஆட்டோ ஓட்டுனர். இவர் கடந்த அக்.24 ந் தேதி மனைவி ஆய்ஷா (வயது 23), தனது 8 வயது பெண் குழந்தை ஆகியோருடன் ஆட்டோ வாகனத்தில் அதிரையிலிருந்து ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, மணமேல்குடி அருகே நிகழ்ந்த வாகன விபத்தில் ஆயிஷாவின் கால் முறிந்து ஆபத்தான நிலையில் தஞ்சை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். முறிந்து போன கா(ல்)லை ஆப்ரேஷன் மற்றும் தொடர் சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம் என மருத்துவர் அறிவுறுத்தி உள்ளார். இச்சிகிச்சைக்கு, ரூ.1.50 லட்சம் வரை செலவாகும் என மருத்துவமனை கூறியுள்ளது. 

ஏழ்மை நிலையில் இருக்கும் ஆட்டோ ஓட்டுனரால், தனது மனைவியின் கால் ஆப்ரேஷன் ~ தொடர் சிகிச்சை மற்றும் இதர செலவீனங்களுக்காக போதிய நிதியை திரட்ட முடியாத ஏழ்மை நிலையில் நம்மின் உதவியை நாடி வந்துள்ளார்.

இவருக்கு உதவ எண்ணுகின்றவர்கள், நேரடியாக அப்பெண்ணின் குடும்பத்தாரிடமோ அல்லது இணைப்பில் குறிப்பிட்டுள்ள இவரது குடும்பத்துக்கு சொந்தமான வங்கி கணக்கின் வழியாகவோ அல்லது அதிராம்பட்டினம் நிதி சார்ந்த சேவை அமைப்பாகிய அதிரை பைத்துல்மால் மூலமாகவோ அல்லது அதிராம்பட்டினத்தில் செயல்படும் சமூதாய அமைப்புகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலமாகவோ அல்லது ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் மூலமாகவோ அல்லது இவர் வசிக்கும் மஹல்லா சங்கத்தின் மூலமாகவோ தொடர்பு கொண்டு உதவலாம்.

நிதி உதவி கோரி ரஹ்மான் நம்மிடம் வழங்கிய வங்கி கணக்கின் விவரம்:
A/c Name : N. SUMAIYA
Bank Name : INDIAN BANK
Branch : ADIRAMPATTINAM BRANCH
A/C No. 6051129205
IFSC Code: IDIB000A110
மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு: 
0091 9994607085 / 9688768285

Thursday, August 16, 2018

அப்துல் ரஹீம் (58) ஆயுட்கால மருத்துவ சிகிச்சைக்கு உதவ கோரிக்கை!

அதிராம்பட்டினம், ஆக. 16
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் சங்கத்து கொல்லை பகுதியில் வசிப்பவர் அப்துல் ரஹீம் (58). கடந்த மாதம் இவரது மூளையில் திடீரென பாதிப்பு ஏற்பட்டு, வாய் செயல் இழந்து முழுமையாக பேச இயலாத நிலை ஏற்பட்டதை அடுத்து, பட்டுக்கோட்டை நரம்பியல் மருத்துவர் டாக்டர் ஏ. மகாலிங்கம் அவர்களிடம் சிகிச்சை பெற்று வருகிறார். ஆயுட்கால தொடர் சிகிச்சை எடுக்க வேண்டும் என மருத்துவர் அறிவுறுத்தி உள்ளாராம்.

இவரது மனைவி இருதய நோயாளி. பிள்ளைகள் இல்லை. கூலி வேலை செய்து வந்தார். உடல் நலக்குறைவால் தற்போது எங்கும் செல்வதில்லை. ஏழ்மை நிலையில் இருக்கும் இவரால், மருத்துவ சிகிச்சை ~ மருத்துவ பரிசோதனை மற்றும் இதர செலவீனங்களுக்காக போதிய நிதியை திரட்ட முடியாத சூழ்நிலையில் உள்ளார். நம்மின் உதவியை நாடி வந்துள்ளார்.

இவருக்கு உதவ எண்ணுகின்றவர்கள், நேரடியாக அப்துல் ரஹீம் அவர்களிடமோ அல்லது இணைப்பில் குறிப்பிட்டுள்ள இவரது மனைவிக்கு சொந்தமான வங்கி கணக்கின் வழியாகவோ அல்லது அதிராம்பட்டினம் நிதி சார்ந்த சேவை அமைப்பாகிய அதிரை பைத்துல்மால் மூலமாகவோ அல்லது அதிராம்பட்டினத்தில் செயல்படும் சமூதாய அமைப்புகள் மூலமாகவோ அல்லது இவர் வசிக்கும் மஹல்லா சங்கத்தின் மூலமாகவோ தொடர்பு கொண்டு உதவலாம்.

நிதி உதவி கோரி அப்துல் ரஹீம் நம்மிடம் வழங்கிய வங்கி கணக்கின் விவரம்:
A/c Name : SALMA A
Bank Name : STATE BANK OF INDIA
Branch : ADIRAMPATTINAM BRANCH
A/C No. 34583890518
மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு: 
0091 6385293200

Sunday, March 4, 2018

கிட்னி செயல் இழந்த பட்டதாரி மகனின் உயிர் காக்க உதவ தாய் கோரிக்கை!

மதுக்கூர், மார்ச் 04
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூரை சேர்ந்த கணேசன், செல்வி தம்பதியின் மகன். கார்த்திக் (வயது 29). எம்.எஸ்.சி பட்டதாரி இளைஞர். இவர், கடந்த 4 ஆண்டுகளாக சிறுநீரகக் கோளாறால் மிகவும் அவதிபட்டு வருகிறார்.

இவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் சுருங்கிவிட்டது. டாக்டர்கள் உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தால்தான் உயிர் பிழைக்க முடியும் என சொல்லிவிட்டனர். ஆனால், இதுவரை எல்லா தரப்பிலிருந்தும் இவருக்கு சிறுநீரகம் கிடைக்கவில்லை. இவருடைய ரத்த வகையானது O negative  வேறு ஆகும். இதற்கிடையில், இவருக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை செய்யும் வரை வாரம் இரண்டு முறை டயாலிஸிஸ் செய்தால்தான் உயிர் வாழ்வார் எனவும் டாக்டர்கள் கூறிவிட்டனர்.

டயாலிஸிஸ் மற்றும் மருத்துவச் செலவு மாதந்தோறும் ரூ. 32 ஆயிரத்திற்கு மேல் ஆகிறது. இவருடைய தந்தை மிதிவண்டியில் சென்று புடவை வியாபரம் செய்பவர். எனவே பொருளாதார வழியிலும் இவர் பின் தங்கி உள்ளார். இன்னும் திருமணம் ஆகவில்லை. இவரின் இந்த நிலமையால் குடும்பமே மிகவும் துயரத்தில் ஆழ்ந்துள்ளது. நல்உள்ளங்கள் சிறுநீரக மாற்று சிகிச்சைக்கோ அல்லது பொருளாதார வகையிலோ தங்களால் முயன்ற உதவியினை செய்ய வேண்டும் என்பதே இவரது குடும்பத்தின் கனிவான வேண்டுகோள்.

இவருக்கு உதவ எண்ணுகின்றவர்கள், நேரடியாக கார்த்திக் அவர்களிடமோ அல்லது இணைப்பில் குறிப்பிட்டுள்ள கார்த்திக் அவர்களுக்கு சொந்தமான வங்கி கணக்கின் வழியாகவோ அல்லது அதிராம்பட்டினம் - மதுக்கூர் - பட்டுக்கோட்டை பகுதிகளில் செயல்படும் தன்னார்வத் தொண்டு அமைப்புகள் மூலமாகவோ அல்லது இவர் வசிக்கும்  பகுதியின் பிரமுகர்கள் மூலமாகவோ தொடர்பு கொண்டு உதவலாம்.

கார்த்திக் அவர்களுக்கு சொந்தமான வங்கி கணக்கின் விவரம்:
A/c Name : KARTHIK G
Bank Name : STATE BANK OF INDIA
Branch : MADUKKUR BRANCH
A/C No. 33657115670
IFSC: SBIN0016831

மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு: 0091 8012261402 (தாய் செல்வி கணேசன்)

Sunday, October 29, 2017

இருதய நோயாளி சிகிச்சைக்கு உதவ கோரிக்கை !

அதிராம்பட்டினம், அக். 29
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், திலகர் தெருவை சேர்ந்தவர் எஸ்.எம் உஸ்மான் (49). சென்னையில் தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், கடந்த 1 மாதத்திற்கு முன்பாக திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டு தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவரின் அறிவுரையின் பேரில், ஆஞ்சியோகிராம் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். இதில், இருதயத்தில் ஒரு இடத்தில் 90 சதவீத அடைப்பு உள்ளதாகவும், ஆஞ்சியோபிளாஸ்ட் சிகிச்சை மற்றும் ஸ்டென்ட் வைத்து இவற்றை சரிசெய்துவிடலாம் என மருத்துவர் கூறியதாக தெரிவித்தார். இதற்கான செலவுத் தொகை ரூ.1.85 லட்சம் ஆகும் எனவும், காப்பீட்டுத் திட்டம் மூலம் ரூ. 60 ஆயிரம் வரை பெறலாம் என தெரிவித்தார். ஏழ்மை நிலையில் இருக்கும் தன்னால் மீதமுள்ள ரூ.1.25 லட்சம் பணத்தை திரட்ட முடியவில்லை எனக் கூறி  நம்மின் உதவியை நாடி வந்துள்ளார்.

இவருக்கு உதவ எண்ணுகின்றவர்கள், நேரடியாக உஸ்மான் அவர்களிடமோ அல்லது இணைப்பில் குறிப்பிட்டுள்ள உஸ்மான் அவர்களுக்கு சொந்தமான வங்கி கணக்கின் வழியாகவோ அல்லது அதிராம்பட்டினம் நிதி சார்ந்த சேவை அமைப்பாகிய அதிரை பைத்துல்மால் மூலமாகவோ அல்லது அதிராம்பட்டினத்தில் செயல்படும் சமூதாய அமைப்புகள் மூலமாகவோ அல்லது இவர் வசிக்கும் மஹல்லா சங்கத்தின் மூலமாகவோ தொடர்பு கொண்டு உதவலாம்.

எஸ்.எம் உஸ்மான் அவர்களுக்கு சொந்தமான வங்கி கணக்கின் விவரம்:
A/c Name : S M USMAN
Bank Name : STATE BANK OF INDIA
Branch : ADIRAMPATTINAM BRANCH
A/C No. 31389479680
IFSC: SBIN0014370



மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு: 0091 9789535498

Wednesday, October 11, 2017

புற்று நோய் பாதிப்பில் உயிருக்கு போராடும் தொழிலாளிக்கு PFI, ரூ.21,370/- மருத்துவ நிதி உதவி !

அதிராம்பட்டினம், அக்.11
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் செட்டித்தெருவை சேர்ந்தவர் மீராஷா (43). உணவகத் தொழிலாளி. அதிரையர் பெரும்பாலானோருக்கு நன்கு பரிச்சையமாணவர். இவருக்கு ஜெஹபர் நாச்சியா என்ற மனைவியும், 5 ம் வகுப்பில் கல்வி பயிலும் 9 வயது மகன் மற்றும் 2 ம் வகுப்பில் கல்வி பயிலும் 6 வயது மகள் என 2 பேர் உள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இவருக்கு தொடர் வயிற்று வலி ஏற்பட்டு, தூத்துக்குடி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில், வயிற்றில் புற்றுநோய் கட்டி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, கடந்த மார்ச் மாதம் முதல் கேரளா மாநிலம், திருவனந்தபுரம் ரிஜினல் கேன்சர் சென்டர் மருத்துவமனையில் 'ஹீமோதெரபி' மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார்.

மருத்துவர்கள் 8 முறை கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரைத்ததின் பேரில், இதுவரையில் உறவினர்கள், நண்பர்கள் மூலம் திரட்டிய நிதி உதவியைக்கொண்டு 6 முறை கீமோதெரபி சிகிச்சை மேற்கொண்டுள்ளார். ஒரு முறை கீமோதெரபி சிகிச்சைக்கு ரூ. 30 ஆயிரம் வரை செலவு ஆவதாகவும், மருத்துவர்கள் அறிவுரையின் படி மீதமுள்ள 2 முறை கீமோதெரபி சிகிச்சை தொடர மொத்தம் ரூ 60 ஆயிரம் வரை செலவு ஆகும் என தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், பாப்புலர் ப்ராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பில்,  பட்டுக்கோட்டை டிவிசன் முன்னாள் பிரசிடெண்ட் வழக்குரைஞர் நிஜாமுதீன் ரூ. 21,370/- மருத்துவ நிதி உதிவியை பயனாளியிடம் இன்று புதன்கிழமை வழங்கினார். அருகில், எஸ்.டி.பி.ஐ கட்சி அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் முகமது அஜார் உடனிருந்தார். நிதி உதவியை பெற்றுக்கொண்ட மீராஷா, பாப்புலர் ப்ராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

Sunday, September 17, 2017

புற்று நோய் பாதிப்பில் உயிருக்கு போராடும் தொழிலாளிக்கு உதவ கோரிக்கை !

அதிராம்பட்டினம், செப்.17
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் செட்டித்தெருவை சேர்ந்தவர் மீராஷா (43). உணவகத் தொழிலாளி. அதிரையர் பெரும்பாலானோருக்கு நன்கு பரிச்சையமாணவர். இவருக்கு ஜெஹபர் நாச்சியா என்ற மனைவியும், 5 ம் வகுப்பில் கல்வி பயிலும் 9 வயது மகன் மற்றும் 2 ம் வகுப்பில் கல்வி பயிலும் 6 வயது மகள் என 2 பேர் உள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இவருக்கு தொடர் வயிற்று வலி ஏற்பட்டு, தூத்துக்குடி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில், வயிற்றில் புற்றுநோய் கட்டி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, கடந்த மார்ச் மாதம் முதல் கேரளா மாநிலம், திருவனந்தபுரம் ரிஜினல் கேன்சர் சென்டர் மருத்துவமனையில் 'ஹீமோதெரபி' மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார்.

மருத்துவர்கள் 8 முறை கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரைத்ததின் பேரில், இதுவரையில் உறவினர்கள், நண்பர்கள் மூலம் திரட்டிய நிதி உதவியைக்கொண்டு 6 முறை கீமோதெரபி சிகிச்சை மேற்கொண்டுள்ளார். ஒரு முறை கீமோதெரபி சிகிச்சைக்கு ரூ. 30 ஆயிரம் வரை செலவு ஆவதாகவும், மருத்துவர்கள் அறிவுரையின் படி மீதமுள்ள 2 முறை கீமோதெரபி சிகிச்சை தொடர மொத்தம் ரூ 60 ஆயிரம் வரை செலவு ஆகும் என தெரிவித்தார்.

மருத்துவ சிகிச்சை எடுத்து வருவதால் கடந்த சில மாதங்களாக இவர் வேலைக்கு செல்வது இல்லை. தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மிகவும் ஏழ்மை நிலையில் நாட்களை கடத்தி வருகிறார். போதிய நிதி வசதி இல்லாததால் இவரது அன்றாட வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

புற்றுநோய் பாதிப்பில் உயிருக்கு போராடி வரும் மீராஷா அவர்களின் மருத்துவ தொடர் சிகிச்சை உதவிக்காக நம்மிடம் மீண்டும் நிதி உதவி கோரி உள்ளார்.

இவருக்கு உதவ எண்ணுகின்றவர்கள், நேரடியாக மீராஷா அவர்களின் குடும்பத்தினரிடமோ அல்லது இணைப்பில் குறிப்பிட்டுள்ள மீராஷா அவர்களுக்கு சொந்தமான வங்கி கணக்கின் வழியாகவோ அல்லது அதிராம்பட்டினம் நிதி சார்ந்த சேவை அமைப்பாகிய அதிரை பைத்துல்மால் மூலமாகவோ அல்லது அதிராம்பட்டினத்தில் செயல்படும் சமூதாய அமைப்புகள் மூலமாகவோ அல்லது இவர் வசிக்கும் மஹல்லா சங்கத்தின் மூலமாகவோ தொடர்பு கொண்டு உதவலாம்.

மீராஷா அவர்களுக்கு சொந்தமான வங்கி கணக்கின் விவரம்:
A/c Name : MEERASHA
Bank Name : STATE BANK OF INDIA
Branch : ADIRAMPATTINAM BRANCH
A/C No. 20295534560
IFSC: SBIN0014370

மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு: 0091 9566554054


Friday, June 23, 2017

திருமண உதவி வேண்டுகோள் !

அதிராம்பட்டினம், ஜூன் 23
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா காட்டுபாவா பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த எச். சேட் ராவூத்தர் மனைவி செய்யது பீவி தனது பேத்தியின் திருமணம் எதிர்வரும் ஆகஸ்ட் 6 ந் தேதி ( 06-08-2019 ) நடத்த திட்டமிட்டுள்ளார்.

ஏழ்மை நிலையில் இருக்கும் இவரால் திருமணத்திற்கு ஆகக்கூடிய செலவினங்களை ஏற்று நடத்த முடியாமல் நலிவுற்ற நிலையில் உள்ளதால், மஹல்லா நிர்வாகிகளின் பரிந்துரை கடிதத்துடன் நம்மின் உதவியை நாடி வந்துள்ளார்.

இந்த ஏழை சகோதரிக்கு உதவ எண்ணுகின்ற தயாள மனம் படைத்தோர் கீழ் கண்ட அவருக்கு சொந்தமான வங்கி கணக்கின் வழியாகவோ அல்லது நமதூர் நிதி சார்ந்த சேவை அமைப்பாகிய அதிரை பைத்துல்மால் மூலமாகவோ அல்லது நமதூர் சமுதாய அமைப்புகள் மூலமாகவோ அல்லது இச்சகோதரி வசிக்கும் மஹல்லா சங்கம் மூலமாகவோ தொடர்பு கொண்டு உதவலாம்.
தொடர்புக்கு: 9865113125

வங்கி கணக்கின் விவரம் :
A/c Name : SYED BEEVI. S
A/c No. 3264951556
Bank Name : Central Bank of India
Branch Name : Kattubava Pallivasal Branch 
IFSC Code: CBN0284111

Friday, June 2, 2017

கரையூர் தெரு தீ விபத்தில் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு தனியார் திருமண மண்டபங்கள் சார்பில் நிவாரண உதவி !

அதிராம்பட்டினம், ஜூன் 02
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கரையூர் தெருவில் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் அடுத்தடுத்து உள்ள 50 க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாகியது. இதன் சேத மதிப்பு ரூ.1 கோடி என கூறப்படுகிறது.

இந்நிலையில், அதிரை சாரா மற்றும் லாவண்யா திருமண மஹால்களின்
சார்பில் அதன் உரிமையாளர் சாரா அகமது, காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர், சமூக ஆர்வலர்கள் எஸ்.ஏ அப்துல் ஹமீது, எஸ்.எம் முஹம்மது முகைதீன், ஆறுமுகச்சாமி, கவுன்சிலர் பசூல்கான் உள்ளிட்டோர்  தீ விபத்து பகுதிகளை பார்வையிட்டு, தீ விபத்தில் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு ரூ. 20 ஆயிரம் மதிப்பீல், மளிகைப் பொருட்களை நிவாரண உதவியாக வழங்கி ஆறுதல் கூறினார்கள்.
 

Saturday, May 27, 2017

புற்று நோய் பாதிப்பில் உயிருக்கு போராடும் உணவகத் தொழிலாளிக்கு உதவ கோரிக்கை !

அதிராம்பட்டினம், மே-27
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் செட்டித்தெருவை சேர்ந்தவர் மீராஷா ( 43 ). உணவகத் தொழிலாளி. அதிரையர் பெரும்பாலானோருக்கு நன்கு பரிச்சையமாணவர். இவருக்கு ஜெஹபர் நாச்சியா என்ற மனைவியும், 5 ம் வகுப்பில் கல்வி பயிலும் 9 வயது மகன் மற்றும் 2 ம் வகுப்பில் கல்வி பயிலும் 6 வயது மகள் என 2 பேர் உள்ளனர்.

இவருக்கு கடந்த சில மாதங்களாக தொடர் வயிற்று வலி இருந்து வந்தது. இதையடுத்து தூத்துக்குடி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்துள்ளார். இதில் வயிற்றில் புற்றுநோய் கட்டி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, கடந்த மார்ச் மாதம் முதல் கேரளா மாநிலம், திருவனந்தபுரம் ரிஜினல் கேன்சர் சென்டர் மருத்துவமனையில் 'ஹீமோதெரபி' மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார்.

மருத்துவர்கள் 8 முறை கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரைத்தாகவும், இதுவரையில் 3 முறை மட்டும் கீமோதெரபி சிகிச்சை மேற்கொண்டு உள்ளதாகவும், ஒரு முறை கீமோதெரபி சிகிச்சைக்கு ரூ. 30 ஆயிரம் வரை செலவு ஆவதாகக் கூறினார். மருத்துவர்கள் அறிவுரையின் படி மேற்கொண்டு மீதமுள்ள 5 முறை கீமோதெரபி சிகிச்சை தொடர மொத்தம் ரூ 1.50 லட்சம் வரை செலவு ஆகும் என தெரிவித்துள்ளார்.

மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருவதால் கடந்த  சில மாதங்களாக வேலைக்கு செல்வது இல்லை. தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மிகவும் ஏழ்மை நிலையில் நாட்களை கடத்தி வருகிறார். போதிய நிதி வசதி இல்லாததால் இவரது அன்றாட வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

புற்றுநோய் பாதிப்பில் உயிருக்கு போராடி வரும் மீராஷா அவர்களின் மருத்துவ தொடர் சிகிச்சை உதவிக்காக நம்மிடம் நிதி உதவி கோரி உள்ளார்.

இவருக்கு உதவ எண்ணுகின்றவர்கள், நேரடியாக மீராஷா அவர்களின் குடும்பத்தினரிடமோ அல்லது இணைப்பில் குறிப்பிட்டுள்ள மீராஷா அவர்களுக்கு சொந்தமான வங்கி கணக்கின் வழியாகவோ அல்லது அதிராம்பட்டினம் நிதி சார்ந்த சேவை அமைப்பாகிய அதிரை பைத்துல்மால் மூலமாகவோ அல்லது அதிராம்பட்டினத்தில் செயல்படும் சமூதாய அமைப்புகள் மூலமாகவோ அல்லது இவர் வசிக்கும் மஹல்லா சங்கத்தின் மூலமாகவோ தொடர்பு கொண்டு உதவலாம்.

மீராஷா அவர்களுக்கு சொந்தமான வங்கி கணக்கின் விவரம்:
A/c Name : MEERASHA
Bank Name : STATE BANK OF INDIA
Branch : ADIRAMPATTINAM BRANCH
A/C No. 20295534560
IFSC: SBIN0014370

மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு: 0091 9566554054

Saturday, April 1, 2017

அதிரையில் மூளை செயல்திறன் குன்றிய குழந்தைக்கு ரூ.13 ஆயிரம் மருத்துவ நிதி உதவி !

அதிராம்பட்டினம், ஏப்-01
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் சேர்மன் வாடி அருகே வசிப்பவர் தாஹிரா ( 27 ). வீட்டு வேலை செய்து வருகிறார். இவரது கணவர் சாகுல்ஹமீது. இத்தம்பதியின் ஷாஹிதா (5) என்ற பெண் குழந்தை பிறந்த 40 வது நாளில் இருந்து குழந்தையின் தலை வழக்கத்திற்கு மாறாக சிறிதாக இருந்ததால் மருத்துவரிடம் மருத்தவப் பரிசோதனை செய்தனர். இதில் குழந்தையின் மூளை செயல் திறன் குறைபாடு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, குழந்தையின் நிலையை அறிந்துகொண்ட சாகுல்ஹமீது தனது மனைவியை விட்டு பிரிந்துவிட்டார். கடந்த 5 ஆண்டுகளாக தனது மனைவியோடு எவ்வித தொடர்புமின்றி இருந்து வருகிறார். தற்போது தாஹிரா தனது குழந்தையோடு தனது தாய் ஜெஹபர் நாச்சியாவின் பராமரிப்பில் இருந்து வருகிறார்.

கடந்த 5 ஆண்டுகளில் குழந்தையின் மருத்துவ சிகிச்சையை சென்னை, மதுரை , தஞ்சை, பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் எடுத்துவந்த போதிலும் குழந்தை பூர்ண நலம் பெறவில்லை. குழந்தைக்கு திடீர் வெட்டு, கை, கால் சோர்வு அடைதல், தொடர் அழுகை உள்ளிட்டவை இருந்து வருகின்றன. ஏழ்மை நிலையில் இருக்கும் இக்குடும்பத்தால் குழந்தைக்கு தொடர் மருத்துவ சிகிச்சை அளிக்க முடியவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்த அதிராம்பட்டினத்தை சேர்ந்த லண்டன் வாழ் சமூக ஆர்வலரும், தொடர்ந்து வாழ்வாதார மற்றும் மருத்துவ உதவிகளை தானாக முன்வந்து உதவி வரும் எஸ்.ஏ இம்தியாஸ் அஹமது வழங்கிய ரூ. 10,500/-ம் மற்றும் அதிராம்பட்டினத்தை சேர்ந்த அமெரிக்கா வாழ் சமூக ஆர்வலரும், தொடர்ந்து வாழ்வாதார மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கி வரும் மரைக்கான் என்கிற அப்துல் கபூர் மாதந்தோறும் வழங்கி வரும் ரூ.2500/- ம், ஆகக் கூடுதல் தொகை ரூ. 13 ஆயிரத்தை, காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஏ. மகபூப் அலி சிறுமியின் தாய் தாஹிராவிடம் (01-04-2017 ) சனிக்கிழமை காலை வழங்கினார். அருகில் சமூக ஆர்வலரும், மணிச்சுடர் நாளிதழ் மாவட்ட நிருபர் ஏ. சாகுல் ஹமீது, அதிரை நியூஸ் ஆசிரியர் எம். நிஜாமுதீன் ( சேக்கனா நிஜாம் ) மற்றும் சமூக ஆர்வலர் எஸ்.ஏ இத்ரீஸ் அகமது ஆகியோர் உடன் இருந்தனர். மருத்துவ நிதி உதவியைப் பெற்றுக்கொண்ட சிறுமியின் தாய் கொடையளித்த நல்லுள்ளங்களுக்கு நன்றி கூறினார்.

Friday, March 24, 2017

அதிரை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினரின் கனிவான வேண்டுகோள் !

அதிராம்பட்டினம், மார்ச்-24
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் அதிராம்பட்டினம் கிளை துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கின்றன.எங்கள் சங்கத்தின் முக்கிய குறிக்கோள் அதிராம்பட்டினம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளையும் கட்டறிந்து அவர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டையை பெற்றுத்தரும் பணியில் எமது சங்கம் முழுவீச்சில் இறங்கியுள்ளது.

தற்பொழுது  மத்திய அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு இந்தியா முழுவதும் செல்லதக்க பல்நோக்கு சிறப்பு அடையாள அட்டையை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க மாற்றுத்திறனாளிகளின் விவரங்களை இணையத்தில் பதிவு செய்ய கோரியுள்ளது. ஆனால் அவ்விரங்களை இணையத்தில் பதிவு செய்வதுகான எந்த முன்னேற்பாடுகளையும் மத்திய மாநில அரசுகள் இதுவரை செய்யவில்லை.

ஆகவே, எமது சங்கத்தில் 23-03-2017 அன்று நடைபெற்ற சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் அதிரை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்நோக்கு அடையாள அட்டைக்கு இணையத்தில் பதிவேற்றம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எமது சங்கம் தொடங்கப்பட்டு பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையிலும் ஊர் பொதுமக்கள், ஜமாத்தார்கள் நன்கொடையாக வழங்கிய நிதியை கொண்டு சங்கத்தின் கட்டிட பராமரிப்பு பணிகளுக்காக ஒரு குறிப்பிட்ட தொகை செலவு செய்யப்பட்டுள்ளது.

ஆகவே, மாற்றுத்திறனாளிகளின் விவரங்ளை இணையத்தில் பதிவு செய்ய கணிப்பொறி (Computer), அச்சுப்பொறி (Printer) மற்றும் வருடி (Scanner) போன்ற பொருள்கள் வாங்குவதற்கு உரிய பொருளாதார நிதி தேவைப்படுகிறது. அந்த பொருள்களை வாங்குவதற்கான விலைப்பட்டியல் வாங்கப்பட்டுள்ளது.

ஆகவே, அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கும் பாதுகாவலர்கள், சமூக ஆர்வலர்கள், ஊர் நல விரும்பிகள், ஊர் பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் வெளிநாடு வாழ் நண்பர்கள் அதிரை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து அவர்களின் துயர் போக்கிட தாராளமாக நிதி உதவி செய்து மாற்றுத்திறனாளிகள் நிலை உயர எங்களுக்கு ஆலோசனை வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்புக்கு
தமிழநாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம்.
25/G, கடைத்தெரு, கிராணி மளிகை பின்புறம், அதிராம்பட்டினம்

சங்க நிர்வாகிகள்:
தலைவர்    :  M.பஹாத் முகமது   கைபேசி  எண்  :  9865939831
செயலாளர்  :  M.முகமது  ராவுத்தர்  கைபேசி  எண் :  9842585483
பொருலாளர் :  H.ஜலீல் முகைதீன்  கைபேசி  எண்  :  9500435245

மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் வங்கி கணக்கு விவரம்:
பெயர்   :   Bahath Mohamed.A & Jaleel Mohaideen. H
வங்கி கணக்கு எண்   :  36147018630
வங்கியின் பெயர்   :   State Bank of India
கிளை பெயர்   :   Adirampattinam Branch
IFSC Code   : SBIN0014370

Thursday, March 23, 2017

குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்கு உதவ கோரிக்கை !

அதிராம்பட்டினம், மார்ச்-23
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் புதுத்தெருவை சேர்ந்தவர் நெய்னா முகமது (45). வாகன ஓட்டுனர். இவருக்கு மனைவி, பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் மூன்றாம் வகுப்பு படிக்கும் 2 மகள்கள், 1 மகன் ஷாஹின் (2 ) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.

குழந்தை ஷாஹினுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு தஞ்சை தனியார் மருத்துவமனையில் மருத்துவரிடம் பரிசோதனை செய்ததில் உப்பு நீர் அதிகரித்து இருப்பது தெரியவந்தது. இதனால் குழந்தையின் உடல் பருமன் அதிகரித்து, அடிக்கடி சளி, இழப்பு ஏற்படுவதும், கிட்னி பாதிப்படைந்து வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து குழந்தையின் தொடர் மருத்துவ சிகிச்சைக்காக இதுவரையில் பலரிடம் கடன் வாங்கி ரூ. 1 லட்சம் வரை செலவு செய்து உள்ளதாகவும், குடும்ப வாழ்வாதத்திற்காக தான் ஓட்டி வந்த வாகனம் திடீர் பழுது ஏற்பட்டதால் ஒர்க்ஸ் ஷாப்பில் நிறுத்தப்பட்டு சிலவாரங்கள் ஆகியும் தன்னால் கட்டணம் செலுத்திவிட்டு மீட்க முடியாமல் தவித்து வருவதாகவும் தெரிவித்தார்.

மருத்துவரின் அறிவுரையின் பேரில் குழந்தைக்கு மாதம் ஒருமுறை ஊசி போடுவதற்கு ரூ. 4,500 வரை செலவு ஆகி வருவதாகவும், ஏழ்மை நிலையில் இருக்கும் தன்னால் மருத்துவ சிகிச்சை தொடர முடியாமல் தவித்து வருவதாக வருத்தத்துடன் தெரிவித்தார்.

இந்த குழந்தையின் தொடர் மருத்துவ சிகிச்சை செலவினங்களுக்காக குழந்தையின் தகப்பனார் நம்மிடம் உதவி கோரி உள்ளார்.

இக்குழந்தைக்கு உதவ எண்ணுகின்றவர்கள், நேரடியாக நெய்னா முகமது அவர்களிடமோ அல்லது இணைப்பில் குறிப்பிட்டுள்ள குழந்தையின் தகப்பனார் நெய்னா முகமது அவர்களுக்கு சொந்தமான வங்கி கணக்கின் வழியாகவோ அல்லது அதிராம்பட்டினம் நிதி சார்ந்த சேவை அமைப்பாகிய அதிரை பைத்துல்மால் மூலமாகவோ அல்லது அதிராம்பட்டினத்தில் செயல்படும் சமூதாய அமைப்புகள் மூலமாகவோ அல்லது இவர் வசிக்கும் மஹல்லா சங்கத்தின் மூலமாகவோ தொடர்பு கொண்டு உதவலாம்.

நிதி உதவி கோரி குழந்தையின் தகப்பனார் நம்மிடம் வழங்கிய வங்கி கணக்கின் விவரம்:
A/c Name : NAINA MOHAMED. A
Bank Name : STATE BANK OF INDIA
Branch : ADIRAMPATTINAM BRANCH
A/C No. 20295534117

மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு: 0091 9865753637