.

Pages

Showing posts with label நாம் தமிழர் கட்சி. Show all posts
Showing posts with label நாம் தமிழர் கட்சி. Show all posts

Saturday, October 10, 2020

அதிராம்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம்!

அதிராம்பட்டினம், அக்.10
நாம் தமிழர் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் சார்பில், தெருமுனைப் பிரச்சாரம் பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பிரச்சாரத்திற்கு, அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் ஏ.தேவராஜ் தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை தொகுதி செயலாளர் வெற்றிச்செல்வன் முன்னிலை வகித்தார். அதிராம்பட்டிணன் பேரூர் செயலாளர் மீ.ஜஹபர் சாதிக், கட்சியின் கொள்கை குறித்து எடுத்துரைத்தார். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநில கொள்கைப் பரப்பு செயலாளர் புதுக்கோட்டை ஜெயசீலன் கலந்துகொண்டு, உரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில், அக்கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக, அக்கட்சியினர் வண்டிப்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே கொடி ஏற்றி வைத்து கொள்கை முழக்கமிட்டனர். 

Friday, October 2, 2020

மதுக்கூரில் மத்திய அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

மதுக்கூர், அக்.02
மதுக்கூரில் நாம் தமிழர் கட்சியினர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடத்தினர். 

அக்கட்சியின், தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் ஏ.தேவராஜ் தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை தொகுதி செயலாளர் வெற்றிச்செல்வன் முன்னிலை வகித்தார். மாநிலப் பேச்சாளர் கரிகாலன் கண்டன உரை நிகழ்த்தினார். 

இதில், விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களை பாதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நாம் தமிழர் கட்சியினர் திரளாக கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.


Wednesday, September 16, 2020

நீட் தேர்வை திரும்ப பெறக்கோரி அதிராம்பட்டினத்தில் இணைய வழிப் போராட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.16
மத்திய அரசின் நீட் தேர்வை திரும்பப்பெற வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சி சார்பில், அதிராம்பட்டினத்தில் இணைய வழிப் போராட்டம் இன்று புதன்கிழமை காலை நடைபெற்றது.

இதில், அக்கட்சியை சேர்ந்த பலர் தங்களது குழந்தைகளுடன் அவரவர் வீடுகளுக்கு முன்பாக நின்றுகொண்டு, 'நீட் தேர்வை திரும்பப்பெறு,' 'நீட் தேர்வை திணிக்காதே', கல்வி என்பது மாநில உரிமை, அதைப் பறிப்பது பாசிசக்கொடுமை' என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகையை கையில் எந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Friday, September 4, 2020

அதிராம்பட்டினத்தில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ~ பரிசளிப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.04
நாம் தமிழர் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் இளைஞர்கள் பாசறை சார்பில், 22 அணிகள் பங்கேற்ற ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அதிராம்பட்டினம் கிராணி விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் பொருளாளர் ராஜிக் அகமது தலைமையில், செயலாளர் ஜஹபர் சாதிக் முன்னிலையில், துணைத்தலைவர் ஜெஹபர் சாதிக் போட்டியை தொடங்கி வைத்தார்.

போட்டி நிறைவில், அதிரை ஏ.ஆர்.சி.சி அணி முதலிடமும், அதிரை ஏ.எஸ்.சி அணி இரண்டாமிடம் பிடித்தன. இதைத்தொடர்ந்து நடந்த பரிசளிப்பு நிகழ்வில், சிறப்பு அழைப்பாளர்களாக அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஹுமாயூன் கபீர், மாவட்டச் செயலாளர் ஏ.தேவராஜ் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி செயலாளர் நெல்சன் பிரபாகர், மாநிலப் பேச்சாளர் கரிகாலன், தஞ்சை மாவட்டச் செயலாளர் கந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு ரூ.5 ஆயிரம், ரூ. 4 ஆயிரம் ரொக்கப்பரிசுகளை வழங்கி பாராட்டுத் தெரிவித்தனர். மேலும், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களுக்கு நம்மாழ்வார், பிரபாகரன், காய்தே மில்லத், பழனிபாபா ஆகியோர் பெயர்களில் சிறப்பு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டன. இந்நிகழ்வில், அக்கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.