தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ரெங்கராஜன் எம்.எல்.ஏ. வரவேற்றார். கூட்டத்தில் தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கி, த.மா.கா. எழுச்சி பாடல்கள் அடங்கிய சி.டி.யை வெளியிட்டார். மேலும் அவர், காமராஜரின் பொற்கால ஆட்சி என்ற தலைப்பில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும் வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:
தனக்காக வாழாமல் தேசத்திற்காகவே வாழ்ந்தவர் காமராஜர். தன் நலம் கருதாமல் பொதுநலத்திற்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்தவர். தனக்கு கிடைக்காத கல்வி ஏழை, எளியோர் எல்லோருக்கும் இலவசமாக கிடைக்க வழி வகுத்தார். தனக்கு கிடைக்காத வசதியும், வாய்ப்பும், வளமான வாழ்வும் தமிழகத்தில் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை தீட்டியவர் காமராஜர்.
9½ ஆண்டுகாலம் தமிழகத்தில் காமராஜர் ஆட்சி நடைபெற்றது. அக்கால கட்டத்தை தான் நாம் பொற்கால ஆட்சி என்று போற்றுகிறோம். அத்தகைய பொற்கால ஆட்சி தமிழகத்தில் மீண்டும் மலர வேண்டும். அத்தகைய உயர்ந்த லட்சியத்தோடு தான் த.மா.கா. மீண்டும் தொடங்கப்பட்டிருக்கிறது. பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி காலத்தில் 3 புரட்சிகள் தமிழகத்தில் அமைதியாக நிகழ்ந்தன. அவைகள் கல்விப்புரட்சி, வேளாண்மை புரட்சி, தொழில் புரட்சியாகும். அவரின் ஆட்சியில் தமிழகம் இந்தியாவில் முதன்மை மாநிலமாக திகழ்ந்தது.
பெருந்தலைவர் பொற்கால ஆட்சியில் கிராமங்கள் தோறும் பள்ளிகள், ஏழை மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம். எல்லோருக்கும் கல்வி எளிதாக கிடைக்க உறுதி செய்வோம். இது தான் காமராஜருக்கு நாம் செலுத்தும் முதல் மரியாதை.
காமராஜர் ஆட்சியில் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்ந்தது. வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆட்சியாக நடைபெற்றது. மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக நிலம் கையகப்படுத்தும் சட்டதிருத்த மசோதாவை கொண்டு வர முயற்சிக்கிறது. இந்த மசோதாவை தமிழக அரசு எந்த சூழ்நிலையிலும் ஆதரிக்கக்கூடாது. அப்படி ஆதரித்தால் போராட்டம் நடத்துவோம். ஆர்ப்பாட்டம் செய்வோம்.
உலகம் முழுவதும் சுற்றிவரும் பிரதமர் மோடி சில மணிநேரம் தமிழகத்திற்காக ஒதுக்க வேண்டும். காவிரி பிரச்சனையில் கவனம் செலுத்துங்கள். முல்லைப்பெரியாறு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். தென்னக நதிகளை இணைப்பதற்கான சிறப்பு திட்டத்திற்கு தனி நிதி ஒதுக்கீடு செய்யுங்கள். வறட்சியால் வாடும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யுங்கள்.
தலீத் பழங்குடியின மக்களுக்கு மத்திய அரசு கொடுக்கும் நிதி போதுமானதல்ல அந்த நிதியை அதிகப்படுத்தும்படி மத்திய, மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறேன்.
இன்று தமிழகத்தில் இளைஞர்கள், மாணவர்கள், மகளிர் மதுப்பழக்கத்தில் மூழ்கி தத்தளிக்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. மக்களை காப்பாற்ற தமிழக அரசு மதுவை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேர்தலுக்கு இன்னும் 8 மாதகாலம் இருக்கிறது. இன்றைக்கு மக்கள் விரும்பும் கட்சியாக தமிழகத்தில் த.மா.கா. செயல்பட்டு கொண்டிருக்கிறது. இளைஞர்கள் அதிகம் உள்ள கட்சியாக திகழ்கிறது. அதேபோல் மாணவர், மகளிர் அதிக அளவிலே விரும்பி சேரக்கூடிய இயக்கமாக த.மா.கா செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இத்தகைய நல்ல சூழலில் நமக்கு கிடைத்திருக்கின்ற வசந்த காலத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சியை மீண்டும் ஏற்படுத்துவதற்கு பட்டிதொட்டி எங்கும் புறப்படுவோம். அடுத்த (ஆகஸ்டு) மாதம் 3–ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் தொடங்குகிறேன். அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள குக்கிராமம் நகரங்கள் வட்டாரங்களுக்கு சென்று மக்களை சந்திக்க இருக்கிறேன். மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் கட்சியாக நம் கட்சி மாற வேண்டும். மக்களின் கோரிக்கைகளுக்காக போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். வரும் சட்டமன்ற தேர்தலில் நமது வெற்றியை உறுதி செய்ய வேண்டும். காமராஜரின் கடின உழைப்பை மேற்கொண்டு, அவரது நேர்மை, எளிமை, தூய்மையை பின்பற்றுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் துணை தலைவர்கள் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஞானதேசிகன், பீட்டர்அல்போன்ஸ், ஞானசேகரன், கோவை தங்கம், திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் சாருபாலாதொண்டைமான், மாநில மகளிரணி தலைவி மகேஸ்வரி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ராமசுப்பு, சித்தன், வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர் ஜான்சேக்கப், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ராணி, விடியல் சேகர், தண்டாயுதபாணி ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் என்.ஆர்.நடராஜன், அந்தோணிசாமி, பி.எல்.ஏ.சிதம்பரம், கோவை சண்முகசுந்தரம், மாநில செயலாளர் செந்தில் பாண்டியன், மாவட்ட தலைவர்கள் பி.வி.கே பிரபு, (நாகை தெற்கு), பூம்புகார் சங்கர் (நாகை வடக்கு), குடவாசல் தினகரன்(திருவாரூர்), தஞ்சை மாநகர் தலைவர் குணசேகரன், பூக்கடை குணா, வக்கீல் தர்மலிங்கம், கோவி,மோகன், செல்வம் உள்பட மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் ராம்குமார் நன்றி கூறினார்.













காமராஜர் மறைந்த போது அவரிடம் ......சட்டை பையில் ரூபாய் 100, வங்கி கணக்கில் ரூபாய் 125 ; கதர் வேட்டி4; துண்டு 4; சட்டை 4;காலனி 2 ஜோடி ; மூக்கு கண்ணாடி 1; பேனா 1; சமையலுக்கு தேவையான பாத்திரம் 6; இவைகள் தான் 10 ஆண்டு தமிழக முதல்வர் , பல ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ; இரண்டு பிரதமர்களை உருவாக்கிய பெருந்தலைவர் காமராஜரின் சொத்து மதிப்பு. இன்றைய அரசியல் வாதிகள் கோடியில் புரளுகிறார்கள் அதுமட்டுமல்லாமல் இவரின் பெயரை சொல்ல பிடிக்க வில்லை.
ReplyDelete