.

Pages

Showing posts with label தமாகா. Show all posts
Showing posts with label தமாகா. Show all posts

Saturday, August 15, 2020

அதிரையில் தமாகா சார்பில் சுதந்திர தின விழாக் கொண்டாட்டம்!

அதிராம்பட்டினம், ஆக. 15
இந்தியா 74-வது சுதந்திர தினவிழா நாடெங்கிலும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில், சுதந்திர தின கொடி ஏற்றும் நிகழ்வு சனிக்கிழமை காலை நடைபெற்றது.

நிகழ்வுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் ஏ.கண்ணன் தலைமை வகித்து இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிங்கார வேலு, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பொன்னம்பலம், அதிரை பேரூர் நிர்வாகிகள் வீரப்பன், உசேன், சகாதேவன், வைத்திலிங்கம் உள்ளிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் பலர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
 
 

Saturday, November 9, 2019

தமாகா அதிராம்பட்டினம் பேரூர் தலைவராக அதிரை ஏ.கண்ணன் நியமனம்!

அதிராம்பட்டினம், நவ.09
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கரையூர் தெருவை சேர்ந்த மீனவர் ஏ. கண்ணன் (60). இவர், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட மீனவர் அணித் தலைவராக பொறுப்பில் இருந்து வருகிறார்.

இந்நிலையில், அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் என்.ஆர் ரெங்கராஜன் பரிந்துரையின் பேரில், ஏ.கண்ணனை அதிராம்பட்டினம் பேரூர் தலைவராக நியமனம் செய்து, அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே வாசன் அறிவித்துள்ளார். இதையடுத்து, அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகிகள் சிங்காரவேலு, பொன்னம்பலம் வீரப்பன், உசேன், சகாதேவன் மற்றும் நிர்வாகிகள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

Thursday, August 15, 2019

அதிரையில் தமாகா சார்பில் சுதந்திர தின விழாக் கொண்டாட்டம்!

அதிராம்பட்டினம், ஆக.15
இந்தியாவின் 73 வது சுதந்திர தினம் நாடெங்கிலும் இன்று வியாழக்கிழமை காலை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் ஏ.கண்ணன் தலைமை வகித்து இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிங்கார வேலு, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பொன்னம்பலம், அதிரை பேரூர் நிர்வாகிகள் வீரப்பன், உசேன், வைத்திலிங்கம் உள்ளிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் பலர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
 
 
 
 
 

Sunday, March 24, 2019

என்.ஆர் நடராஜனுக்கு ஆதரவு: தமாகா அதிரை பேரூர் நிர்வாகிகள் அறிவிப்பு!

அதிராம்பட்டினம், மார்ச் 24
தஞ்சை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் என்.ஆர் நடராஜனுக்கு ஆதரவு தெரிவித்து அவரின் வெற்றிக்கு தீவிர பிரச்சாரப் பணிகளில் ஈடுபடப் போவதாக அக்கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் பொன்னம்பலம் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியது;
தஞ்சை நாடாளுமன்ற தேர்தலில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் ஜி.கே வாசன் அறிவித்துள்ள எங்கள் கட்சி வேட்பாளரும், தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் என்.ஆர் ரெங்கராஜன் அவர்களின் சகோதரருமாகிய என்.ஆர் நடராஜனுக்கு ஆதரவு தெரிவித்து அவரின் வெற்றிக்கு தொகுதியில் தீவிர பிரச்சாரப் பணிகளில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்' என்றார்.

அப்போது, அக்கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.சிங்காரவேலு, தஞ்சை தெற்கு மாவட்ட மீனவரணித் தலைவர் ஏ.கண்ணன், அதிரை பேரூர் பொதுச்செயலாளர் வி.வீரப்பன், செயலாளர்கள் சி.கிருஷ்ணன், வி. சகாதேவன், எம்.சண்முகம், 2-வது வார்டு தலைவர் எம்.முருகன், 5-வது வார்டு துணைச் செயலாளர் ஜி.கணேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Saturday, January 26, 2019

அதிரையில் தமிழ் மாநில காங்கிரஸார் கொண்டாடிய குடியரசு தின விழா (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜன.26
இந்தியாவின் 70-வது குடியரசு தின் விழா நாடெங்கிலும் இன்று சனிக்கிழமை காலை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.

இதையொட்டி, தமிழ் மாநில காங்கிரஸ் அதிராம்பட்டினம் பேரூர் சார்பில், அதிரை பேரூந்து நிலையம் எம்.எம்.எஸ் வணிக வளாகத்தின் கார்னரில் அமைந்துள்ள கொடிக்கம்பத்தில் குடியரசு தின கொடியேற்றும் விழா உற்சாகமாக கொண்டாட்டது.

விழாவிற்கு தலைமை வகித்த தமாகா அதிரை பேரூர் தலைவர் எம்.எம்.எஸ் அப்துல் கரீம் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்தார். எம்.எம்.எஸ் சேக் நசுருதீன் முன்னிலை வகித்தார்.

விழாவில், தமாகா தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் அதிரை மைதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிங்கார வேலு, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பொன்னம்பலம் உள்ளிட்ட தமாகாவினர் பலர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
 
 
 
 
 
 

Tuesday, December 25, 2018

அதிராம்பட்டினத்தில் தமாகா பேரூர் செயல்வீரர்கள் கூட்டம்!

அதிராம்பட்டினம், டிச.25
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி அதிரை பேரூர் செயல்வீரர்கள் கூட்டம் செவ்வாய்கிழமை அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு அக்கட்சியின் அதிரை பேரூர் தலைவர் எம்.எம்.எஸ் அப்துல் கரீம் தலைமை வகித்தார். அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் அதிரை மைதீன், தஞ்சை தெற்கு மாவட்ட மீனவரணித் தலைவர் ஏ.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், கஜா புயலால் வாழ்வாதாரங்களை இழந்து நிற்கும் தென்னை விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் மற்றும் புயலில் பாதிப்படைந்த அனைவருக்கும் பாரபட்சமின்றி நிவாரணம் வழங்கவும், குடிசை வீடுகளை இழந்தவருக்கு கான்கிரிட் வீடு கட்டித்தரவும் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. மேலும், புயலில் பாதிப்படைந்த மின்கம்பங்கள், மின்கம்பிகளை  சீரமைக்க துரிதமாக களப்பணியாற்றிய மின்வாரிய ஊழியர்களுக்கும், புயலில் பாதிப்படைந்த பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கிய இஸ்லாமிய அமைப்புகளுக்கும், தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டன.

முன்னதாக, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிங்காரவேலு வரவேற்றுப் பேசினார். கூட்ட முடிவில் அதிரை பேரூர் செயலாளர் ரெத்தினம் நன்றி கூறினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பொன்னம்பலம், அதிரை பேரூர் நிர்வாகிகள் வீரப்பன், சகாதேவன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tuesday, December 18, 2018

பட்டுக்கோட்டையில் மண் சட்டி ஏந்தி தமிழ் மாநில காங்கிரசார் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

பட்டுக்கோட்டை, டிச.18
கஜா புயலில் பாதிப்படைந்த விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவருக்கும் முழு நிவாரணம் வழங்கக் கோரி பட்டுக்கோட்டை சட்டமன்ற தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மண் சட்டி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் பட்டுக்கோட்டை (அறந்தாங்கி முக்கம்) காந்தி சிலை அருகில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டத்தலைவரும், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினர் என்.ஆர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் பி.எல்.ஏ சிதம்பரம், என்.ஆர் நடராஜன், தஞ்சை மாநகரத் தலைவர் டி.ராஜவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பட்டுக்கோட்டை நகராட்சித் தலைவர் ஏ.கே குமார் வரவேற்றுப் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசு வழங்கும் நிவாரணப் பொருட்கள் பாரபட்சமின்றி அனைவருக்கும் வழங்க வேண்டும், கஜா புயலில் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு அண்டை மாநிலங்களிலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும் தென்னை கன்றுகள் இறக்குமதி செய்து வழங்க வேண்டும், பாதிப்படைந்த மீனவர்களுக்கு முழு நிவாரணம் வழங்க வேண்டும், சேதமடைந்த படகுகளுக்கு மாற்றாக புதிய படகுகள் வழங்க வேண்டும். மீனவர்களுக்கு மானியக் கடன் வழங்க வேண்டும், காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கியும், கஜா புயலில் பாதிப்படைந்த குடிசை, ஓட்டு வீடுகளை மத்திய, மாநில அரசுகள் இணைந்து கான்கிரட் வீடுகளாக கட்டித் தரவேண்டும், தென்னை விவசாயக் குடும்பங்களை காப்பாற்ற அவர்களின் விவசாயக் கடன், கல்விக் கடன், வீட்டுக்கடன் ஆகியவற்றை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

முடிவில், அக்கட்சியின் பட்டுக்கோட்டை வட்டாரத் தலைவர் பி.வைத்திலிங்கம் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் எம்.எம்.எஸ் அப்துல் கரீம், பட்டுக்கோட்டை வட்டாரத் தலைவர் ஜெ.ஏ பழனிவேல், மதுக்கூர் வட்டாரத் தலைவர் எஸ்.வி ரவிச்சந்திரன், மதுக்கூர் பேரூர் தலைவர் ஆர். புஷ்பநாதன் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்ட தமாகாவினர் கலந்துகொண்டனர்.
 

Saturday, August 25, 2018

அதிரை அருகே வறண்டு காணப்படும் செல்லிக்குறிச்சி ஏரியை ஜி.கே வாசன் இருசக்கர வாகனத்தில் சென்று ஆய்வு (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக. 25
அதிராம்பட்டினம் அடுத்து வறண்டு காணப்படும் செல்லிக்குறிச்சி ஏரியை இருசக்கர வாகனத்தில் சென்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் ஜி.கே வாசன் சனிக்கிழமை காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் கூறியது; 
'டெல்டா பகுதியின் கடைமடைப் பகுதிகளில் காணப்படும் ஏரி, குளங்கள், விவசாய நிலங்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகின்றன. இப்பகுதி விவசாயிகள் இந்த ஆண்டை இருண்ட ஆண்டாகக் கருதுகின்றனர்.

தமிழக அரசு விவசாயிகள் மீது அக்கறை காட்டவில்லை. பொறுப்பில்லாமல் செயல்படுகின்றன. ஒருபுறம் 120 டி.எம்.சி தண்ணீர் வீணாக கடலில் கலந்துவிட்டது. மறுபுறம் தண்ணீர் திறந்துவிட்டு 30 நாட்களுக்கு மேலாகியும், கடைமடைப்பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. இதனால், விவசாயிகள் போராடி வருகின்றனர். முதல்வர் மற்றும் அத்துறையைச் சார்ந்தவர்கள் விவசாயிகளுக்கு பதில் கூறவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

இதன் காரணமாக, டெல்டாவில் 25 லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடி இன்றைக்கு கேள்விக்குறியாக இருக்கிறது. டெல்டா விவசாயிகள் மிகுந்த வேதனையோடு இருக்கின்றனர். 100 டி.எம்.சி தண்ணீர் வீணாகாமல் தடுக்க பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்ட ராசிமணல் அணையை  உடனே கட்டவேண்டும் என்ற முடிவை தமிழக அரசு எடுக்கவேண்டும். விதை நெல் முழுமையாக இலவசமாக தரவேண்டும், ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் சாகுபடி செலவுக்கு மானியமாக விவசாயிகளுக்கு தரவேண்டும், தூர் வாரும் பணியை முறையாக செயல்படுத்த வேண்டும், கடைமடைப் பாசனத்திற்கு உடனே தண்ணீர் திறந்து விட வேண்டும்.

320 ஏக்கர் பரப்பளவு கொண்ட செல்லிக்குறிச்சி ஏரி, வடுவூர் ஏரி போன்றவை தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுவது, தமிழக அரசின் நீர் மேலாண்மையின் மோசமான செயல்பாடுதான் காரணம். உடனடியாக கடைமடைப்பகுதி மக்களின் பாசனத்திற்கும், குடிக்கவும் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

முன்னதாக, வறண்டு காணப்படும் செல்லிக்குறிச்சியில், ஜி.கே வாசன், தமாகா தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமாகிய என்.ஆர் ரெங்கராஜன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்று பார்வையிட்டனர். மேலும், விவசாயிகள், பெண்கள் வைத்த கோரிக்கைகளை ஜி.கே வாசன் கேட்டறிந்தார். இதன்பின்னர், வறண்டு காணப்படும் அதிராம்பட்டினம் ஆலடிக்குளம், ஏரிப்புறக்கரை ஏரி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது, தமாகா பட்டுக்கோட்டை நகரத் தலைவர் ஏ.கே.குமார், அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் எம்.எம்.எஸ் அப்துல் கரீம், எம்.எம்.எஸ் குடும்பத்தார் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர், விவசாயிகள், பெண்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.