.

Pages

Showing posts with label குடியரசு தின நிகழ்சிகள். Show all posts
Showing posts with label குடியரசு தின நிகழ்சிகள். Show all posts

Sunday, January 26, 2020

நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி குடியரசு தின விழா (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜன.26
அதிராம்பட்டினம், நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இந்தியாவின் 71-வது குடியரசு தின கொடியேற்றும் விழா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளரும், முன்னாள் உதவித் தலைமை ஆசிரியருமாகிய ஹாஜி என்.எம் முகமது ஹனீபா இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர் இசட். அப்துல் மாலிக் குடியரசு தின விழா உரை நிகழ்த்தினார்.

முன்னதாக, பள்ளி தலைமை ஆசிரியை மாலதி வரவேற்றார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை பள்ளி ஆசிரியர் டேவிட் ஆரோக்கியராஜ் செய்திருந்தார். விழா முடிவில் பள்ளி ஆசிரியர் கலா தேவி நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில், பள்ளி கல்விக்குழு முன்னாள் தலைவர் முகமது சரீப், பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் எச்.முகமது இப்ராஹீம், ஏ. சாகுல் ஹமீது, மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆசிரிய கழக பொறுப்பாளர்கள், பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
 
 
 
 

Saturday, January 26, 2019

அதிரையில் காங்கிரஸார் கொண்டாடிய குடியரசு தின விழா (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜன.26
இந்தியாவின் 70-வது குடியரசு தின் விழா நாடெங்கிலும் இன்று சனிக்கிழமை காலை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.

இதையொட்டி தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் குடியரசு தின விழா வெள்ளிக்கிழமை காலை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு, அதிராம்பட்டினம் பேரூர் காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ்.கே கார்த்திகேயன் தலைமை வகித்தார். அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் மற்றும் சேர்மன் வாடி ஆகிய இடங்களில் செயலாளர் அதிரை பாருக்,  துணைத் தலைவர் முகமது காசிம் ஆகியோர் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்தனர். 

விழாவில், காங்கிரஸ் கட்சி அதிரை பேரூர் நிர்வாகிகள் நாராயணசாமி, பி.திலகராஜ் கட்டபொம்மன், சேக்தாவூது, எஸ். சம்பத், எம்.ராஜேந்திரன், எஸ்.சேக்தாவூது, கே.எம் முகமது நெய்னாமலை, கே.ராஜா உட்பட காங்கிரஸ் கட்சியினர் பலர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

அதிரையில் தமிழ் மாநில காங்கிரஸார் கொண்டாடிய குடியரசு தின விழா (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜன.26
இந்தியாவின் 70-வது குடியரசு தின் விழா நாடெங்கிலும் இன்று சனிக்கிழமை காலை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.

இதையொட்டி, தமிழ் மாநில காங்கிரஸ் அதிராம்பட்டினம் பேரூர் சார்பில், அதிரை பேரூந்து நிலையம் எம்.எம்.எஸ் வணிக வளாகத்தின் கார்னரில் அமைந்துள்ள கொடிக்கம்பத்தில் குடியரசு தின கொடியேற்றும் விழா உற்சாகமாக கொண்டாட்டது.

விழாவிற்கு தலைமை வகித்த தமாகா அதிரை பேரூர் தலைவர் எம்.எம்.எஸ் அப்துல் கரீம் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்தார். எம்.எம்.எஸ் சேக் நசுருதீன் முன்னிலை வகித்தார்.

விழாவில், தமாகா தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் அதிரை மைதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிங்கார வேலு, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பொன்னம்பலம் உள்ளிட்ட தமாகாவினர் பலர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
 
 
 
 
 
 

ஆக்ஸ்போர்ட் மெட்ரிக். பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜன.26
இந்தியாவின் 70-வது குடியரசு தின் விழா நாடெங்கிலும் இன்று சனிக்கிழமை காலை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.

இதையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், லயன்ஸ் சங்கம் சார்பில், ஆக்ஸ்போர்ட் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தின கொடியேற்றும் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு பள்ளித் தாளாளர் என். உதயகுமார் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத் தலைவர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர் இந்திய தேசியக் கொடியை ஏற்றிவைத்து குடியரசு தின உரை நிகழ்த்தினார். மேலும், சாதனை நிகழ்த்திய பள்ளி மாணவிகளுக்கு ரூ.1 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கினார். விழாவையொட்டி பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இவ்விழாவில், லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க பொருளாளர் எம்.ஏ அப்துல் ஜலீல், லயன்ஸ் சங்க நிர்வாகிகள் கே.செல்வராஜ், நெய்னா முகமது, அபூபக்கர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

காதிர் முகைதீன் கல்லூரியில் 70-வது குடியரசு தினவிழா (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜன.26
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் இந்தியத் திருநாட்டின் 70-வது குடியரசு தினவிழா இன்று (26.01.2019) சனிக்கிழமை காலை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு தலைமை வகித்த கல்லூரிச் செயலர் எஸ்.ஜெ அபுல் ஹசன் தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார். கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் வரவேற்றுப் பேசினார்.

விழாவில், சிறப்பிடம் பெற்ற தேசிய மாணவர் படை (என்.சி.சி) மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட (என்.எஸ்.எஸ்) மாணவர்களுக்கு கல்லூரிச் செயலர் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். கல்லூரி துணை முதல்வர் பேராசிரியர் எம்.நாசர் குடியரசு தின விழா உரை நிகழ்த்தினார். விழா முடிவில், பொருளாதாரத் துறை தலைவர் பேராசிரியர் பி.கணபதி நன்றி கூறினார். நிகழ்ச்சியினை பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர் தொகுத்து வழங்கினார்.
 

அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம்!

அதிராம்பட்டினம், ஜன.26
இந்தியாவின் 70-வது குடியரசு தின் விழா நாடெங்கிலும் இன்று சனிக்கிழமை காலை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.

இதையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகத்தில் குடியரசு தின விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

விழாவில் அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் எல்.ரமேஷ் இந்திய தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். விழாவில் அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலர்கள் துப்புரவுப் பணியாளர்கள், பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)

நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குடியரசு தின விழா(படங்கள்)

அதிராம்பட்டினம், ஜன.26
இந்தியாவின் 70-வது குடியரசு தின் விழா நாடெங்கிலும் இன்று சனிக்கிழமை காலை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.

இதையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குடியரசு தின கொடியேற்றும் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர் இசட். அப்துல் மாலிக் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்தார். காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் குடியரசு தின விழா உரை நிகழ்த்தினார்.

முன்னதாக, பள்ளி தலைமை ஆசிரியை மாலதி வரவேற்றார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை பள்ளி ஆசிரியர் டேவிட் ஆரோக்கியராஜ் செய்தார். விழா முடிவில் பள்ளி ஆசிரியர் கலா தேவி நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் உதவித் தலைமை ஆசிரியர் முஹம்மது ஹனீபா, பள்ளி கல்விக்குழு முன்னாள் தலைவர் முகமது ஷெரிப், பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் முகமது இப்ராஹீம், ஏ. சாகுல் ஹமீது, எம்.ஆர் ஜமால் முகமது, ஜாஹிர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆசிரிய கழக பொறுப்பாளர்கள், பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
 

கடற்கரைத்தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜன.26
இந்தியாவின் 70-வது குடியரசு தின விழா நாடெங்கிலும் இன்று சனிக்கிழமை காலை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த குடியரசு தின விழாவில் கடற்கரைத்தெரு ஜமாத் மூத்த தலைவர் ஹாஜி எஸ்.எம். அக்பர் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

இவ்விழாவில், கடற்கரைத்தெரு ஜமாஅத் நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.