.

Pages

Showing posts with label CONGRESS. Show all posts
Showing posts with label CONGRESS. Show all posts

Friday, October 2, 2020

அதிராம்பட்டினத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், அக்.02
உத்திரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் ராகுல்காந்தி, பிரியங்காகாந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

ஆர்பாட்டத்திற்கு, அதிராம்பட்டினம் பேரூர் காங்கிரஸ் கட்சி தலைவர் காசிம் தமீம் அன்சாரி தலைமை வகித்தார். அக்கட்சியின்  மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், துணைத்தலைவர் நாராயண சாமி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

அதிரை பேரூர் நிர்வாகிகள் பி.திலகராஜ் கட்டபொம்மன், ராஜேந்திரன் உள்பட ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் ராகுல்காந்தி, பிரியங்கா கைது செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். 


Saturday, August 15, 2020

அதிரையில் காங்கிரஸ் கட்சி சார்பில் சுதந்திர தின விழாக் கொண்டாட்டம்!

அதிராம்பட்டினம், ஆக.15
இந்தியா 74-வது சுதந்திர தினவிழா நாடெங்கிலும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, காங்கிரஸ் கட்சி சார்பில் சுதந்திர தின கொடி ஏற்றும் நிகழ்வு அதிராம்பட்டினத்தில் சனிக்கிழமை காலை நடைபெற்றது.

நிகழ்வுக்கு, அதிராம்பட்டினம் பேரூர் காங்கிரஸ் கட்சி தலைவர் காசிம் தமீம் அன்சாரி தலைமை வகித்து அதிராம்பட்டினம் கடைத்தெரு முக்கம் அருகே உள்ள கொடிக்கம்பத்தில் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்தார். மேலும், பேருந்து நிலையம், சேர்மன் வாடி, ஜாவியா சாலை ஆகிய இடங்களில் இந்திய தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டன. இதில், அக்கட்சியின் அதிரை பேரூர் துணைத்தலைவர் நாராயண சாமி, செயலாளர் அதிரை பாருக், சமூக ஆர்வலர் இ.வாப்பு மரைக்காயர் ஆகியோர் கொடியை ஏற்றி வைத்தனர்.

நிகழ்வில், காங்கிரஸ் கட்சி அதிரை பேரூர் நிர்வாகிகள் பி.திலகராஜ் கட்டபொம்மன், ராஜேந்திரன், தெளலத பாட்சா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
 
 
 
 
 






Tuesday, May 26, 2020

இலவச மின்சாரம் ரத்தைக் கண்டித்து அதிராம்பட்டினத்தில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் (வீடியோ, படங்கள்)

அதிராம்பட்டினம், மே 26
விவசாயிகள், குடிசைகளுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் வகையிலான புதிய சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்தும், அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும், தமிழகமெங்கும் அரசு அலுவலகங்கள் முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை காலை ஆர்ப்பாட்டத்தை நடத்த தமிழக காங்கிரஸ் கட்சி அறிவுறுத்திருந்தது.

அதன் படி, அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் கே. தமீம் அன்சாரி தலைமையில், அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் முன்னாள் தலைவர் எஸ்.எம் முகமது முகைதீன், துணைத்தலைவர் நாராயண சாமி, பொருளாளர் ஜி.திலகராஜ் கட்டபொம்பன் உள்ளிட்ட 4 பேர் அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகம் மற்றும் மின்சார வாரிய அலுவலகம் ஆகியவற்றின் முன்பாக, கையில் கருப்பு கொடி ஏந்தி, சமூக இடைவெளியுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், மின்சார சட்டத் திருத்தத்தை கைவிட வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினர். சுமார் 2 நிமிடத்திலேயே இந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் நிறைவுக்கு வந்தன.

Thursday, May 7, 2020

மதுக்கடை திறப்பைக் கண்டித்து அதிராம்பட்டினத்தில் காங்கிரசார் கருப்பு சின்னம் அணிந்து எதிர்ப்பு முழக்கம்!

அதிராம்பட்டினம், மே 07
ஊரடங்கு விதிமுறைகளை தளர்த்தி தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில், தமிழக மக்கள் கருப்பு சின்னம் அணிந்து இன்று வியாழக்கிழமை காலை 10 மணிக்கு அவரவர் வீட்டு வாசலில் நின்று 15 நிமிடம் முழக்கமிடுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, காங்கிரஸ் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் சார்பில், அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் கே. தமீம் அன்சாரி தலைமையில், அக்கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி எதிர்ப்பு முழக்கமிட்டனர்.

Saturday, February 8, 2020

புதிதாக தேர்வான காங்கிரஸ் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் மாவட்டத் தலைவரிடம் வாழ்த்து!

அதிராம்பட்டினம், பிப்.08
காங்கிரஸ் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் தலைவராக அண்மையில் தேர்வு செய்யப்பட்ட கே.தமீம் அன்சாரி, அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் து.கிருஷ்ணசாமி வாண்டையாரை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இதில், துணைத்தலைவர் நாராயண சாமி, பொருளார் ஜி.திலகராஜ் கட்டபொம்பன், இளைஞர் அணித் தலைவர் கே.எம் முகமது நெய்னாமலை, சிறுபான்மை நலப்பிரிவு தலைவர் எம். சேக்தாவூத் (தவுலத்) அப்துல் ஹக்கீம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
 

Saturday, February 1, 2020

காங்கிரஸ் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் தலைவராக கே.தமீம் அன்சாரி தேர்வு!

அதிராம்பட்டினம், பிப்.01
காங்கிரஸ் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்திற்கு, அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் முன்னாள் தலைவர் ஹாஜி எஸ்.எம் முகமது முகைதீன் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் எஸ். கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில், தலைவராக கே.தமீம் அன்சாரி, துணைத்தலைவராக நாராயண சாமி, செயலாளராக அதிரை ஏ.பாருக், இணைச் செயலாளராக எம்.ஆர் ராஜேந்திரன், பொருளாளராக பி.திலகராஜ் கட்டபொம்பன், இளைஞர் அணித் தலைவராக கே.எம் முகமது நெய்னாமலை, சிறுபான்மை நலப்பிரிவு தலைவராக எம். சேக்தாவூத் (தவுலத்) ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இக்கூட்டத்தில், நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
 


Thursday, August 15, 2019

அதிரையில் காங்கிரஸ் கட்சி சார்பில் சுதந்திர தின விழாக் கொண்டாட்டம்!

அதிராம்பட்டினம், ஆக. 15
இந்தியாவின் 73-வது சுதந்திர தினம் நாடெங்கிலும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் சுதந்திர தின விழா வியாழக்கிழமை காலை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு அதிராம்பட்டினம் பேரூர் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் எஸ்.எம் முகமது முகைதீன் தலைமை வகித்து அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே உள்ள கொடிக்கம்பத்தில் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அதிராம்பட்டினம் பேரூர்  காங்கிரஸ் கட்சி தலைவர் எஸ்.கார்த்திகேயன் சேர்மன்வாடி அருகே உள்ள கொடிக்கம்பத்தில் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

விழாவில், காங்கிரஸ் கட்சி அதிரை பேரூர் செயலாளர் அதிரை பாருக், நாராயண சாமி, பி.திலகராஜ் கட்டபொம்மன், ராஜேந்திரன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
 

Saturday, January 26, 2019

அதிரையில் காங்கிரஸார் கொண்டாடிய குடியரசு தின விழா (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜன.26
இந்தியாவின் 70-வது குடியரசு தின் விழா நாடெங்கிலும் இன்று சனிக்கிழமை காலை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.

இதையொட்டி தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் குடியரசு தின விழா வெள்ளிக்கிழமை காலை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு, அதிராம்பட்டினம் பேரூர் காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ்.கே கார்த்திகேயன் தலைமை வகித்தார். அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் மற்றும் சேர்மன் வாடி ஆகிய இடங்களில் செயலாளர் அதிரை பாருக்,  துணைத் தலைவர் முகமது காசிம் ஆகியோர் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்தனர். 

விழாவில், காங்கிரஸ் கட்சி அதிரை பேரூர் நிர்வாகிகள் நாராயணசாமி, பி.திலகராஜ் கட்டபொம்மன், சேக்தாவூது, எஸ். சம்பத், எம்.ராஜேந்திரன், எஸ்.சேக்தாவூது, கே.எம் முகமது நெய்னாமலை, கே.ராஜா உட்பட காங்கிரஸ் கட்சியினர் பலர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

Friday, September 14, 2018

அதிரையில் காங்கிரஸ் கட்சி ஆலோசனைக் கூட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.14
காங்கிரஸ் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, அக்கட்சியின் அதிரை பேரூர் தலைவர் எஸ்.கார்த்திகேயன் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் எஸ்.எம் முகமது முகைதீன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவுறுத்தலின் படி, பாரதீய ஜனதா அரசின் ரபேல் போர் விமான பேர ஊழலை கண்டித்து, தஞ்சை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில், தஞ்சையில் எதிர்வரும் (செப்.16) ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்ட பேரணியில், அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்துகொள்வது என முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சி அதிரை பேரூர் நிர்வாகிகள் அதிரை பாருக், நாராயண சாமி, பி.திலகராஜ் கட்டபொம்மன், முகமது காசிம், எம்.ஆர் ராஜேந்திரன், எஸ். சம்பத், கே.பி சேக்தாவூது உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.

Sunday, September 9, 2018

நாளை பந்த் போராட்டம் ~ அதிரையில் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம்!

அதிராம்பட்டினம், செப்.09
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி நடத்தும் நாடுதழுவிய 'பந்த்' போராட்டம் நாளை 10-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அதிராம்பட்டினம் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, காங்கிரஸ் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் எஸ்.கார்த்திகேயன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், இராம. குணசேகரன் (திமுக), எம்.எம்.எஸ் அப்துல் கரீம் (தமிழ் மாநில காங்கிரஸ்), கே.கே ஹாஜா நஜ்முதீன் (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்), என்.காளிதாஸ் (இந்திய கம்யூனிஸ்ட்), வடுகநாதன் (மதிமுக) உட்பட அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினர்.

மக்கள் பிரச்சனைக்காக அனைத்து கட்சிகளும் முன் எடுத்துள்ள இப்போராட்டத்துக்கு அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து பொதுமக்கள் பல்வேறு அமைப்புகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிலாளர்கள், ஆட்டோ, கார், வேன் வாகன ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
 

Monday, January 29, 2018

பேருந்து கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி அதிராம்பட்டினத்தில் சாலை மறியல் ~ 55 பேர் கைது (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜன.29
பேருந்து கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 55 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரசு பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்தும், முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தியும் இன்று (ஜன.29) தமிழகமெங்கும் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என திமுக தலைமைக் கழகம் அறிவித்து இருந்தது. அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூர் திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் சாலை மறியல் போராட்டத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஈடுபட்டனர்.

திமுக அதிரை பேரூர் செயலாளர் இராம. குணசேகரன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி மாநிலத் துணைத் தலைவர் எஸ்.எஸ்.பி நசுருதீன், திமுக கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை தஞ்சை தெற்கு மாவட்ட அமைப்பாளர் பழஞ்சூர் K.செல்வம், தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஓ செய்யது முகமது புஹாரி, மமக தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அதிரை அகமது ஹாஜா, காங்கிரஸ் கட்சி அதிரை பேரூர் தலைவர் எஸ்.கே கார்த்திகேயன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அதிரை பேரூர் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன், மனிதநேய மக்கள் கட்சி அதிரை பேரூர் தலைவர் எம். சாகுல் ஹமீது, மமக அதிரை பேரூர் செயலர் எஸ்.ஏ இத்ரீஸ் அகமது, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அதிரை பேரூர் செயலர் என்.காளிதாஸ் உட்பட அனைத்து கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் அரசு பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்தும், முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தியும் முழக்கமிட்டனர். இதில், 55 பேர் அதிராம்பட்டினம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, அருகில் உள்ள சமுதாயக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.