உ.பி, ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மீது தாக்குதல் நடத்திய உத்தரபிரதேச அரசை கண்டித்து தஞ்சை தெற்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தஞ்சை ரயில் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது.
ஆர்பாட்டத்திற்கு, அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம் ஜெய்னுல் ஆபிதீன் தலைமை வகித்தார். அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளர் ஏ.எம் அப்துல் காதர், வல்லம் ஜெ.பசீர் அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ (திமுக), டி.கே.ஜி நீலமேகம் எம்.எல்.ஏ (திமுக), து. கிருஷ்ணசாமி வாண்டையார் (காங்கிரஸ்), பி.ஜி இராஜேந்திரன் (காங்கிரஸ்), ஒய்.அலாவுதீன் (காங்கிரஸ்) மற்றும் மதிமுக, சிபிஎம், சிபிஐ, திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, தமிழ்நாடு சிறுபான்மை நலக்குழு ஆகிய கட்சிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டித்துப் பேசினர்.
முன்னதாக, அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் வழக்குரைஞர் ஏ.முனாப் வரவேற்றுப் பேசினார். நிறைவில், தஞ்சை மாநகரப் பொருளாளர் ஏ.கே முகமது முஸ்தபா நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் உத்தரபிரதேச அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இந்த ஆர்பாட்டத்தில், அக்கட்சியின் மாவட்ட ஊடகப்பிரிவு பொறுப்பாளர் ஏ.சாகுல் ஹமீது, மாவட்ட பிரதிநிதி எம்.ஆர் ஜமால் முகமது, எம்.கே.எம் முகமது அபூபக்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




















































