இதற்காக அதிரை பேரூராட்சி பொது நிதி ₹ 43.50 லட்சம் மதிப்பீட்டில் சில மாதங்களாக இதன் பணிகள் தீவிரமாக நடந்து வந்தது.
இந்த நிலையில் பெரும்பாலான பணிகள் நிறைவுற்றதை அடுத்து கடந்த சில நாட்களாக நசுவினி ஆற்றின் ஓடையிலிருந்து பம்பிங் மூலம் நீர் இறைக்கும் பணி நடந்து வருகிறது. பம்பிங் மூலம் இறைக்கும் நீர் முதலில் ஆலடிக்குளத்திற்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டதை அடுத்து ஆலடிக்குளத்திற்கு பம்பிங் நீர் கடந்த சில நாட்களாக வந்துகொண்டு இருக்கிறது. இதனால் ஆலடிக்குளம் நிரம்பும் தருவாயில் உள்ளன. இன்னும் சில தினங்களில் குளத்தின் நீர்மட்டம் உயர்ந்துவிடும் என கூறப்படுகிறது.






This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசும்மா சொல்லக்கூடாது தமிழகத்தில் இதுவரை யாரும் செய்யாத ஒரு செயலை, அதிரை பேரூராட்சி தலைவர் செய்து சாதித்துக்கொண்டிருக்கிறார். கடைமடிப்பகுதியான நமதூர் கடலில் நசூவேணி ஆறு வழியாக வீணாகும் நீரை, நமதூர் குளங்களுக்கு திருப்பும் பணியை மேற்கொண்டு வெற்றியும் கண்டுள்ளார். படங்களில் காண்பதுபோல், ஆலடிக்குளம் நிறையும் தருவாய்க்கு வந்து, அடுத்து செக்கடி குளம் நிறப்பப்பட உள்ளது.
ReplyDeleteஇன்று முஹைதீன் ஜும்மா பள்ளியில் சேர்மன் அவர்கள் பொதுமக்களுக்கு வைத்த வேண்டுகோள்: // ஊருக்குள் வரும் தண்ணீர் தடங்களில் சாக்கடை மற்றும் குப்பைகளை நிரப்பி தெளிவாக வரும் நீரை மாசுபடுத்தாமல் பாது காக்க வேண்டியது ஒவ்வொருவரது கடமை. இதை பொது தொண்டு செய்பவர்களும், முஹல்லா வாசிகளும் கண்காணித்து வருவது நல்லது.//