உலகில் உள்ள சுற்றுலா பார்வையாளர்களை கவரும் வகையில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்தோர் தங்களது நாட்டின் கலை மற்றும் கலாச்சாரத்தை நினைவு கூறும் வகையில் அரங்குகளை அமைத்துள்ளனர் அங்கு கடைகளை அமைத்து புராதான மற்றும் வரலாற்று பொருட்களை விற்பனை செய்வர். மேலும் குழந்தைகளுக்கான பல்வேறு விளையாட்டு அரங்குகளோடு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.அங்கு அமைக்கப்பட்டிருக்கும் நீர் கால்வாயில் படகு போக்குவரத்தும் நடைபெறுகிறது. உலக அதிசயமான இந்தியாவின் தாஜ்மஹால் உள்ளிட்ட பல்வேறு புகழ்பெற்ற சின்னங்களின் மாதிரி வடிவங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது
உலக நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள், இந்நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். இங்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பன்முகக் கலாச்சாரத்தை இந்த 6 மாத காலத்தில் காண முடியும். துபாயின் வர்த்தகம் மற்றும் சுற்றுலா வருவாய், இந்த 6 மாத காலத்தில் உச்சத்தை அடையும். சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் அரசு ஆண்டு தோறும் இந்த கண்காட்சியை நடத்தி வருகின்றது. நுழைவு கட்டணமாக திர்ஹம்ஸ் 15 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.






இப்படிஅதிரைநகரில்தொடங்கினால்ஊரிவியாபாரம்பெருகுமே!
ReplyDelete