பட்டுக்கோட்டை அருகே உள்ள கொண்டிக்குளம் கடைத்தெருவில் குடியிருந்து வருபவர் குணசேகரன் (வயது83) ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி. இவரது மனைவி கடந்த 2007ம் ஆண்டு காலமானார். இவருக்கு ஸ்டாலின் பாலசிங்கம் என்ற மகனும், ஜெயகுமாரி என்ற மகளும் உள்ளனர். மகன் திருப்பூரில் பணியாற்றி வருகிறார். மகள் பட்டுக்கோட்டை அருகே உள்ள அணைக்காடு கிராமத்தில் வசித்து வருகிறார். கொலைசெய்யப்பட்ட குணசேகரன் கொண்டிக்குளத்தில் தனியாக வசித்து வருகிறார். நேற்று மாலை தனது வீட்டருகே உள்ளவர்களிடம் நன்றாக பேசிவிட்டு தூங்க சென்றுள்ளார். இன்று காலை அவரது வீட்டில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவரது கையில் அணிந்திருந்த கைச்செயின் மற்றும் மோதிரம் திருட்டு போய் இருந்தது. அதன் மொத்த மதிப்பு இரண்டு பவுனுக்குள் தான் இருக்கும் என கூறப்படுகிறது. எனவே இந்த கொலை நகைக்காக நடத்தப்பட்டதா அல்ல வேறுஏதும் காரணமா என பட்டுக்கோட்டை தாலுக்கா காவல்நிலையம் போலீசார் விசாரித்து வருகின்றனர். கொலை சம்பவம் கேள்விபட்டவுடன் தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகணம் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரனையை முடுக்கிவிட்டுள்ளார். தடயவியல் நிபுனர்களும் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
நன்றி: 'நிருபர்' ஐ.எம் ராஜா, பட்டுக்கோட்டை
நன்றி: 'நிருபர்' ஐ.எம் ராஜா, பட்டுக்கோட்டை

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.