மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னைக்கு நிவாரண பணம் அனுப்பினால் கமிஷன் வசூலிக்கப்படாது என ஐக்கிய அரபு குடியரசை சேர்ந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், பல்வேறு நாடுகளில் வசிப்பவர்கள், அரசுக்கும் தொண்டு நிறுவனங்களுக்கும் உதவித் தொகை அனுப்பி வருகின்றனர். இந்நிலையில், கமிஷன் தொகையை தள்ளுபடி செய்ய ஐக்கிய அரபு குடியரசை சேர்ந்த நிறுவனமான யூஏஇ எக்ஸ்சேஞ்ச் நிறுவனம் முன்வந்துள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரமோத் மங்கத் கூறுகையில்,
‘‘ஐக்கிய அரபு குடியரசு நாடுகளில் வசிப்பவர்கள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்காக, அம்மாநில முதல்வர் நிவாரண நிதி, பிரதமர் நிவாரண நிதிக்கு பணம் அனுப்புவோரிடம் இருந்து கமிஷன்தொகை வசூலிக்கப்படாது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதிக அளவில் நிவாரண நிதி கிடைக்க இது வழிவகுக்கும். நிவாரண நிதிக்காக பணம் அனுப்ப விரும்புவோர் யுஏஇ எக்ஸ்சேஞ்சின் எந்த கிளையின் மூலமாக வேண்டுமானாலும் நிவாரண நிதியை அனுப்பலாம்’’ என்றார்.
நன்றி: தினகரன்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.