அதிரை நியூஸ்:
அஜ்மான், அக்-10
பொதுவாக அமீரகத்தில் சைக்கிள் ஒட்டிகள் பெரியளவில் சாலை விதிமுறைகளை மதிப்பவர்கள் அல்ல மேலும் போக்குவரத்து காவலர்களும் அவர்களிடம் அதிக கெடுபிடி செய்யாததால் அவர்கள் தனிக்காட்டு ராஜாவாக வலம் வருகின்றனர். அதுபோல் சைக்கிளில் செல்லும் போது வாகனத்தில் அடிபட்டால் இன்ஸ்ஷூரன்ஸ் ஏதும் கிடைக்காது என்பதும் சைக்கிள் ஓட்டுவதன் ஆபத்தை விளக்க போதுமானது.
தாறுமாறாக செல்லும் சைக்கிள் ஓட்டிகளால் விபத்துக்கள் அதிகமானதை தொடர்ந்து அஜ்மான் போக்குவரத்து காவல்துறை பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவுறுத்தி வருகின்றனர், மீறுவோரின் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.
சைக்கிள் ஓட்டிகள் முறையான போக்குவரத்து சட்டங்களை கடைபிடிக்க வேண்டும், வாகனங்கள் வரும் அதேவழியில் எதிர்த்து செல்லக்கூடாது.
சைக்கிள் ஓட்டிகளுக்கான ஹெல்மேட் அணிந்திருக்க வேண்டும்.
இரவு வேளைகளில் சைக்கிள் ஓட்டுவோர், போக்குவரத்து போலீஸார் இலவசமாக தரும் மின்னும் மேலாடையை அணிந்திருக்க வேண்டும்.
அதேவேளை வாகன ஒட்டிகளும் சைக்கிள் ஓட்டிகள் குறித்தும், சைக்கிளில் விளையாடும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் அதிக கவனமெடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த 1 வார தொடர் நடவடிக்கைகளின் விளைவாக. மேற்படி போக்குவரத்து ஒழுங்குகளை மதிக்காத சைக்கிள் ஓட்டிகளின் 222 சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன, அதிரடி தொடரும்...
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.