எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ரிச்வே கார்டனில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு கட்சி வளர்ச்சிப் பணிகள், செயல்பாடுகள், தற்போதைய அரசியல் நிலவரங்கள், எதிர்காலத் திட்டங்கள் குறித்து விவாதித்தனர்.
கூட்டத்தின் இடையே எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் தெஹ்லான் பாகவி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் சுருக்கம்,
1. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய பாஜக அரசைக் கண்டித்து எஸ்டிபிஐ கட்சி சார்பில் தமிழக முழுவதும் வரும் அக்-13,14 ஆகிய தேதிகளில் மத்திய அரசு அலுவலகங்களில் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு...
2. இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தில் வரும் அக்,17,18 ஆகிய தேதிகளில் விவசாய சங்கங்கள் இணைந்து நடத்தும் போராட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சி முழு ஆதரவு...
3. மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூர்ண நலம் பெற்று நிர்வாகப்பணிகளில் ஈடுபட வாழ்த்து...
4. தமிழகத்தின் அரசு நிர்வாகம் தொய்வில்லாமல் நடந்திட பொறுப்பு முதல்வர் அல்லது துணை முதல்வர் நியமிக்க கோரிக்கை...
5. இந்துமுன்னணி பிரமுகர் சசிகுமார் படுகொலையைத் தொடர்ந்து கோவையில் நடந்த வன்முறையில் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வலியுறுத்தல்....
உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
பேட்டியின் போது அக்கட்சியின் பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் மற்றும் அக்கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் தெஹ்லான் பாகவி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் காணொளியைக் காண:













மாஷா அல்லாஹ். கோரிக்கைகள் நிறைவேர வாழ்த்துகள்
ReplyDeleteமாஷா அல்லாஹ். கோரிக்கைகள் நிறைவேர வாழ்த்துகள்
ReplyDelete