தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் துறைமுக பகுதியில் கலங்கரை விளக்கம் அமைக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவ தொழிற்சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏஐடியூசி மீனவ தொழிற்சங்கத்தின் தஞ்சை மாவட்ட செயலாளர் காளிதாஸ், மத்திய, மாநில அரசுக்கு அண்மையில் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் துறைமுகப் பகுதியிலிருந்து 1500 மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடித்துவிட்டு இரவு நேரத்தில் அதிராம்பட்டிணம் துறைமுகம் திரும்பும்போது திசை தெரியாமல் சில மீனவர்கள் வேறு துறைமுகப் பகுதிக்கு சென்று விடுகின்றனர். எனவே அதிராம்பட்டினம் துறைமுக பகுதியில் உயர் கோபுர கலங்கரை விளக்கம் அமைத்து கொடுத்தால் அந்த கலங்கரை விளக்கின் வெளிச்சத்தில் மீன் பிடித்துவிட்டு வரும் மீனவர்கள் திசை மாறாமல் குறிப்பிட்ட நேரத்தில் துறைமுகம் வந்து சேர்வார்கள். எனவே அதிராம்பட்டினம் துறைமுக பகுதியில் கலங்கரை விளக்கம் அமைக்க வேண்டும் என கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.


ஜமீல் எம். ஸாலிஹ் வழங்கிய கருத்துரை:
ReplyDeleteஅதிரை, துறைமுகமாக நீண்டகாலம் செயல்பட்டதையும் துறைமுகம் தூர்ந்த பிறகு வெகுகாலம் ரேவடியில் லைட் ஹவுஸ் இருந்ததையும் ஆசிரியர் குறிப்பாக வெளியிட்டிருக்கலாம்.
http://wikimapia.org/33908001/light-house