தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் மத்திய வங்கிகள் கனரா வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் வங்கி ஆகியன உள்ளன. இங்கு அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளின் வர்த்தகர்கள், தொழில் நிறுவனங்கள், பொதுமக்கள், மாணவர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
இந்நிலையில் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என நேற்று முன்தினம் பிரதமர் மோடி அறிவித்தார். பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து பணத்தை பறிமாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று காலை முதல் அதிரையின் அனைத்து வங்கிகளிலும் கூட்டம் அலைமோதுகிறது. அதிக வாடிக்கையாளர்களை பெற்றுள்ள கனரா வங்கியில் இன்று கூட்டம் அதிகமாகக் காணப்பட்டன. கூட்டத்தைக் கட்டுப்படுத்த இன்று இரவு 9 மணி வரை வாடிக்கையாளர்கள் சேவை நீடித்தது. இதில் காசோலை வழங்கிய வங்கி வாடிக்கையாளர்களுக்கு புதிய ரூ 2000 நோட்டுக்கள் விநியோகிக்கப்பட்டன. வாடிக்கையாளர்கள் வரிசையில் நின்று புதிய ரூ 2000 நோட்டுக்களை பெற்றுச்சென்றனர். ரூ 10,000 வரை வழங்கப்பட்டது.
அதிரையில் நாளை சனிக்கிழமை மற்றும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை ஆகிய விடுமுறை தினங்களில் வங்கிகள் இயங்கும் என கூறப்படுகிறது.




நாடு முழுவதும் வங்கி வாயில்களிலும், ATM வாயில்களிலும் கால்கடுக்க நிற்க்கும் பொது ஜனங்கள் செய்த குற்றம் என்ன? இவர்கள் வரி ஏய்ப்பாளர்களா? கொள்ளைகாரர்களா? ஹவாலா தொழில் நடத்துபவர்களா? போதை பொருள் விற்பவர்களா? இல்லை தீவிரவாதிகளா? இவர்கள் இழைத்த ஒரே குற்றம் மோடியை பிரதமர் நாற்காலியில் அமரவைத்தது. அதற்க்கு மோடி கொடுத்த பரிசு தான் இன்று பணமிருந்தும் பிச்சைகாரர்கள் போல் உணவிற்க்கும், அத்தியாவசிய தேவைகளுக்கும் லோ லோவென்று நாயை போல் அலைகிறார்கள் அரசியல் வியாதிகளையும், கருப்பு பண முதலைகள் எவனையும் வங்கி வாயில்களில் பார்க்க முடியவில்லையே சாதாரண நடுத்தர மக்களும், அன்றாடம் காய்ச்சிகளும் தான் வேலைக்கு கூட போகமுடியாமல் நின்றுகொண்டிருக்கிறது; பாவப்பட்ட ஜென்மங்கள்.
ReplyDelete