தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் மத்திய வங்கிகள் கனரா வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் வங்கி ஆகியன உள்ளன. இங்கு அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளின் வர்த்தகர்கள், தொழில் நிறுவனங்கள், பொதுமக்கள், மாணவர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
இந்நிலையில் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமர் மோடி அறிவித்தார். பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து பணத்தை பறிமாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று முன்தினம் முதல் அதிரையின் அனைத்து வங்கிகளிலும் கூட்டம் அலைமோதுகிறது. தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் வங்கிகளில் செலுத்தி வருகின்றனர். இதற்காக தினமும் காலை 8 மணியிலிருந்தே வரிசையில் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக மூடப்பட்டிருந்த அதிராம்பட்டினம் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் ஏடிஎம் மையம் இன்று மாலை 4 மணிமுதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதில் நபர் ஒருவருக்கு ரூ 2 ஆயிரம் வரை சில்லறை நோட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மையத்தில் பொதுமக்கள் வரிசையில் நின்று பணத்தை எடுத்து வருகின்றனர்.
ஏடிஎம் மையத்திலிருந்து....
அஃப்ரீத் ( மாணவ செய்தியாளர் )






பணம் எடுக்கலாம் என்று பேங்க் போனேன் ATM : Out Of Service என்று சொன்னது; சரி உள்ளே சென்று சில்லறை கேட்டால் Bank : Out Of Cash என்று சொன்னார்கள் ; வெளியே வந்துப்பார்த்தால் அவ்வளவு கூட்டம் அவனவன் வாய்க்கு வந்த வார்த்தை ஒரே முணுமுணுப்பு Public : Out Of Control : மக்கள் வரிசையில் வியர்க்க விறுவிறுக்க மணிக்கணக்கில் காத்துக் கொண்டிருக்க ஜப்பானில் புல்லட் ரயிலில் பிரதமர் பயணம் Modi : Out Of Country . எல்லாம் அவுட் !
ReplyDelete