அதிரை நியூஸ்: ஜன-07
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் 'பொற்காலம் திரும்பட்டும்' என்ற தலைப்பில் வாழ்வியல் வழிகாட்டி கருத்தரங்கம் நிகழ்ச்சி ஏ.ஜே ஜும்மா மஸ்ஜீத் அரங்கில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.
பேராசிரியர் முஹம்மது இத்ரீஸ் இறை வசனத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக 'சமூகநீதி முரசு' ஆசிரியர் CMN சலீம் கலந்துகொண்டு பவர் பாயிண்ட் ஒளித்திரை மூலம் விளக்கி பேசுகையில்; 'சமூகத்தில் வளர்ந்து வரும் இளம் தலைமுறையை உலக மக்களுக்கு பயன் தரும் ஆளுமைகளாக உருவாக்க வேண்டியது அவசியம் எனவும், சட்டம், பொருளாதாரம், அரசியல், உளவியல், சர்வதேச உறவு, உலகளாவிய வர்த்தகம், சமூகவியல், மானுடவியல், சமூகவியல், தத்துவம், வெளியுறவு கொள்கை, புள்ளியியல், வரலாறு உள்ளிட்ட துறைகளை தேர்ந்தெடுத்து கல்வி பயின்றால் சமூகம் முன்னேற்றம் அடைய முடியும் எனவும், 'பைத்துல் ஹிக்மா' அறக்கட்டளை சார்பில் சட்டக்கல்லூரி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்கள் உருவாக்கும் முயற்சி நடந்து வருவதாகவும், இதில் தங்களது பிள்ளைகளை சேர்த்து சட்டம், தொழில்முனைவோர் மற்றும் இந்திய ஆட்சிப் பணி கல்வி கற்பதற்கு அனுப்பி வைக்க வேண்டும்' என்றார்.
தொடக்கத்தில் பேராசிரியர் பர்கத் வரவேற்று, நிகழ்ச்சி முடிவில் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் கல்வியாளர்கள், சமுக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை ஏ.ஜே ஜும்மா மஸ்ஜீத் நிர்வாகக் கமிட்டியினர் செய்தனர். நிகழ்ச்சியில் CMN சலீம் எழுதிய சமூக விழிப்புணர்வு நூல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.