தமிழகமெங்கும் பிளஸ் 2 தேர்வின் முடிவு இன்று காலை வெளியானது. இந்த தேர்வில் தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மொத்தம் 191 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். இதில், இணையதள எழுத்தாளர் அதிரை மெய்சா மகன் இமாமுதீன் பள்ளியளவிலும், அதிராம்பட்டினம் அளவிலும் 1148 /1200 மதிப்பெண்கள் பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளார். தமிழில் 193, ஆங்கிலத்தில் 167, கம்ப்யூட்டர் சயின்ஸ் 197, எகனாமிக்ஸ் 194, காமர்ஸ் 199, அக்கவுண்டன்ஸி 198 ஆகிய மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் தமிழக அளவில் 'சி' கிரேடு பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளார்.
இவர் கடந்த 21-05-2015 அன்று SSLC தேர்வில் 477 / 500 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதல் இடம் பிடித்து சாதனை நிகழ்த்தினார். இவருக்கு அதிரை நியூஸ் கல்வி- சாதனையாளர்கள் விருது வழங்கும் விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் கோ. ராஜசேகரன் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் சிறப்பு பரிசு வழங்கி கெளரவித்தார். மேலும் அதிரை லயன்ஸ் சங்கம் சார்பில் சிறப்பு பரிசு வழங்கி பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

சாதனை நாயகன்
ReplyDeleteஅவர்களுக்கு வாழ்த்துக்கள்
எனது மகன் மேல் படிப்பிலும் இன்னும் பல சாதனைகள் புரிந்திட. துவா செய்யுங்கள்.
ReplyDeleteமாஷா அல்லாஹ், வாழ்த்துக்கள்.
ReplyDeleteVaalthukkal
ReplyDeleteabdul kader ccbc jed மாஷா அல்லாஹ், வாழ்த்துக்கள்.
DeleteMABROOK,Masha Allah
ReplyDelete