.

Pages

Showing posts with label KMHSS. Show all posts
Showing posts with label KMHSS. Show all posts

Monday, September 28, 2020

'கல்விமாமணி' விருது பெற்ற காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்!

அதிரை நியூஸ், செப்.28
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் எஸ்.நாகராஜனுக்கு அரிமா சங்க ஆசிரியர் தினவிழாவில் 'கல்விமாமணி' விருது வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

அதிராம்பட்டினம் அரிமா சங்கம் சார்பில், ஆசிரியர் தின விழா 27.09.2020 அன்று ஞாயிற்றுக்கிழமை சாரா திருமண மஹாலில் நடைபெற்றது.

விழாவிற்கு, சங்கத் தலைவர் எம். அப்துல் ஜலீல் தலைமை வகித்து வரவேற்றார். செயலாளர் எம்.நிஜாமுதீன், பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன், நிர்வாக அலுவலர் எம்.நெய்னா முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  

சிறப்பு விருந்தினராக, அரிமா சங்க மாவட்டத் தலைவர் எஸ்.விஜயலட்சுமி சண்முகவேல் கலந்துகொண்டு, காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் எஸ்.நாகராசன் அவர்களுக்கு 'தமிழ்மாமணி' விருது வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், சிறப்பு அழைப்பாளராக காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் அஸ்ரப் அலி, சுராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

முதுகலை ஆசிரியர் எஸ்.நாகராசன் அவர்களைப் பற்றிய சிறு குறிப்பு:
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியராக கடந்த 31 ஆண்டுகளாக கல்விச் சேவை ஆற்றி வருகிறார்.
தாவரவியல் பாடப்பிரிவில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து 100 சதவித தேர்ச்சி.  கடந்த 25 ஆண்டுகளாக பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட அலுவலராக பொறுப்பில் உள்ளார். சுமார் 20 க்கும் மேற்பட்ட சிறப்பு முகாம்களை நடத்தி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் பாராட்டைப்பெற்றவர். 

கடந்த 15 ஆண்டுகளாக பள்ளியின் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளராக பொறுப்பில் இருந்து வருகிறார். பள்ளி வளாகத்தை பசுமை வளாகமாக மாற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். மாநில அளவில் நடத்தப்பட்ட தாவரவியல் ஆசிரியர்களுக்கான பயிற்சியில் மாவட்ட அளவில் தேர்வுபெற்று கருத்தாளராக பணியாற்றியவர் ஆவார்.

மாணவர்கள் நல மேம்பாட்டிற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து ஆசிரியர் பணியில் சிறப்பாக செயல்பட்டு வருவதை பாராட்டும் விதத்தில் அதிராம்பட்டினம் அரிமா சங்கம் சார்பில், கல்விமாமணி விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 





Thursday, July 16, 2020

+2 தேர்வில் அதிராம்பட்டினம் கல்வி நிறுவனங்களின் தேர்ச்சி நிலவரம்!

கோப்புபடம்
அதிராம்பட்டினம், ஜூலை 16
தமிழகமெங்கும் பிளஸ் 2 தேர்வின் முடிவு இன்று வியாழக்கிழமை காலை வெளியானது. இதில், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மொத்தம் 82 பேர் தேர்வு எழுதினர். இதில், 81 பேர் தேர்ச்சி பெற்று, பள்ளி 99 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மொத்தம் 81 பேர் தேர்வு எழுதினர். இதில் 80பேர் தேர்ச்சி பெற்று, பள்ளி 99 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

அதேபோல் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மொத்தம் 148 பேர் தேர்வு எழுதினார்கள். இதில்,141 பேர் தேர்ச்சி பெற்று, பள்ளி 95  சதவீத தேர்ச்சி பெற்று பள்ளி சாதனை படைத்துள்ளது.

Thursday, June 4, 2020

காதிர் முகைதீன் பள்ளி மாணவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கல் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூன் 04
கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரசின் ஊரடங்கு உத்தரவை அடுத்து, நமது பள்ளி!, நமது குழந்தை!!, நமது குடும்பம்!!! என்கிற திட்டத்தின் கீழ், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயிலும் ஏழை மாணவர்களின் குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப்பொருட்கள் அடங்கிய தொகுப்பு இன்று வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

நிகழ்வுக்கு, பள்ளித் தாளாளர் எஸ்.ஜெ அபுல் ஹசன் தலைமை வகித்து திட்டத்தை தொடங்கி வைத்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் ஏ.எல் அஸ்ரப் அலி முன்னிலை வகித்தார். பட்டுக்கோட்டை மாவட்ட கல்வி ஆய்வாளர் மாதவன் மாணவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். இதில், பள்ளி நிர்வாகமும், ஆசிரியர்களும் சேர்ந்து ரூ.36 ஆயிரம் மதிப்பில்,  70 ஏழை மாணவர்களின் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, சீனி, காய்கறி, பிஸ்கட் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. மாணவர்களின் பெற்றோர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து நிவாரணப் பொருட்களை பெற்றுச் சென்றனர்.

இந்நிகழ்வில், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எம்.நெய்னா முகமது, உறுப்பினர்கள் ஏ.கே சாகுல் ஹமீது, ஹாஜா பகுருதீன் மற்றும் பள்ளி உதவித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
 

Thursday, April 23, 2020

வாட்ஸ் அப் குழு உருவாக்கம்: காதிர் முகைதீன் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள்!

அதிராம்பட்டினம், ஏப்.23
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, பள்ளி ஆசிரியர்கள் வாட்ஸ் அப் குழு உருவாக்கி, அதன் மூலம் பாடங்கள் நடத்தப்படுவது பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரசின் ஊரடங்கு உத்தரவை அடுத்து, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 ஆம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி) அரசு பொதுத்தேர்வு நடத்தப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 15-ந் தேதிக்கு மேல் தேர்வு நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் வீட்டில் முடங்கியுள்ள மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும் வகையில், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஏப்.16 ந் தேதி முதல், வாட்ஸ் அப் மூலம் படிப்பதற்கு தேவையான ஆலோசனை வழங்கப்படுகிறது.

இப்பணிக்காக, மாணவர்கள், ஆசிரியர்கள் இணைந்து வாட்ஸ் அப் குழு உருவாக்கப்பட்டு, அதன் மூலம், பாடங்கள் நடத்தப்படுகிறது. பள்ளியின் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளின் ஆசிரியர்கள், தினமும் என்னென்ன பாடங்களை படிக்க வேண்டும் என்பதுடன் ஒவ்வொரு நாளும் அதற்குரிய வினாத்தாளை அனுப்பி தேர்வு எழுதும் படியும் ஆலோசனை வழங்குகிறார்கள். இது மாணவர்களுக்கு புதிதாக இருந்தாலும் தேர்வுக்கு தயாராகும் உத்வேகத்தை அளித்துள்ளது. இவை, பெறோர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
 

Tuesday, February 25, 2020

அதிராம்பட்டினத்தில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்!

அதிராம்பட்டினம், பிப்.25
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு, பள்ளித்தலைமை ஆசிரியர் ஏ.எல் அஸ்ரப் அலி தலைமை வகித்தார். விழாவில், பள்ளித்தாளாளர் எஸ்.ஜெ அபுல் ஹசன் கலந்துகொண்டு, பள்ளி மாணவர்கள் 188 பேருக்கு, தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கினார். விழாவில், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகப் பொறுப்பாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
 

Sunday, January 5, 2020

காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சி (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜன.05
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 70-வது ஆண்டு விழா நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

விழாவிற்கு, பள்ளித்தாளாளர் எஸ்.ஜெ அபுல் ஹசன் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார்.

சிறப்பு விருந்தினர்களாக பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் வி.குமார், தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் எம்.இராமகிருட்டிணன் ஆகியோர் கலந்துகொண்டு கல்வியில், விளையாட்டில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் மற்றும் பாடப்பிரிவுகளில் 100% தேர்ச்சி விகிதத்தை பெற்றுக்கொடுத்த ஆசிரியர்கள் ஆகியோருக்கு கேடயப்பரிசுகள் வழங்கிப் பாராட்டி பேசினர்.

மேலும், சிறப்பு விருந்தினர்களாக, பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் ஆர்.ஜெயபால், காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

முன்னதாக, பள்ளித் தலைமை ஆசிரியர் ஏ.எல் அஸ்ரப் அலி பள்ளி நிகழ்த்திய சாதனைகளை பட்டியலிட்டு ஆண்டறிக்கையாக வாசித்தார். பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் எஸ்.நாகராஜன் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சிகள் அனைத்தையும் பள்ளி ஆசிரியர் எம்.உமர் பாருக் தொகுத்தளித்தார். நிறைவில், பள்ளி ஆசிரியர் எஸ்.குணசேகரன் நன்றி கூறினார். இவ்விழாவில், விழாவில், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.