உலக நீரிழிவு நோய் தினத்தையொட்டி அதிராம்பட்டினம் அரிமா சங்கம் மற்றும் அதிராம்பட்டினம் ஷிஃபா மருத்துவமனை இணைந்து நீரிழிவு நோய் விழிப்புணர்வுக் கருத்தரங்கம் மற்றும் இலவச நீரிழிவு நோய் கண்டறியும் முகாம் ஷிஃபா மருத்துவமனை வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
முகாமுக்கு, அதிராம்பட்டினம் அரிமா சங்கத் தலைவர் எம்.அப்துல் ஜலீல் தலைமை வகித்தார். செயலாளர் எம்.நிஜாமுதீன், பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமை, அதிராம்பட்டினம் ஷிஃபா மருத்துவமனை நிர்வாக இயக்குநர் முகமது இம்தியாஸ் தொடங்கி வைத்தார். முகாமில், சென்னை பிரபல நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் முபாரக் பங்கேற்று, நீரிழிவு நோய் குறித்தும், நோய் வராமல் தடுத்துக் கொள்வது, நோய் வந்த பின்னர் பின்பற்ற வேண்டிய உணவு மற்றும் பழக்க வழக்க முறைகள் ஆகியவை குறித்து கருத்துரை வழங்கினார்.
முகாமில் 50-க்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக நீரிழிவு நோய் கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இதில், அதிராம்பட்டினம் அரிமா சங்க நிர்வாகிகள் பேராசிரியர் மேஜர் எஸ்.பி.கணபதி, எஸ்.ஏ அப்துல் ஹமீது, ஆர். செல்வராஜ், எம்.முகமது அபூபக்கர், எம்.கே.எம் முகமது அபூபக்கர், பி.உமா சங்கர், ஏ.வி.எம் வரிசை முகமது, ஏ.முகமது ஆரிப், எச்.அப்துல் ரெஜாக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


































































