அதிராம்பட்டினத்தில் புதியதோர் உதயமாக 'அல் ஹலால் பீஃப் ஸ்டால்' என்ற பெயரில் மாட்டு இறைச்சிக் கடை கீழத்தெரு செய்னாங் குளம் ஏதிரே அமைந்துள்ள முஹம்மது சாலிகு காம்ப்ளக்ஸ்ல் வெள்ளிக்கிழமை காலை முதல் உதயமாகியது. திறப்பு நாளான நேற்று கூட்ட நெருக்கடி அதிகமாக காணப்பட்டது. குறைந்த விலை என்பதால் பொதுமக்கள் ஆர்வமாக வாங்கிச்சென்றனர். விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களில் இறைச்சி அனைத்தும் விற்று தீர்ந்தது. இதில் சிலர் இறைச்சி கிடைக்காமல் வெறுங்கையுடன் திரும்பிச்சென்றனர்.
இதுகுறித்து நிறுவன உரிமையாளர் வழக்கறிஞர் நிஜாம் கூறியது:
ஆரோக்கியமான மாடுகளை நேரடியாக கொள்முதல் செய்து அவற்றை மக்கள் பார்வையில் படும்படி காற்றோட்டமான பகுதியில் மேய விட்டு, ஹலாலான முறையில் சுத்தப்படுத்தி விற்பனை செய்கிறோம். இங்கு மொத்த விற்பனை, சில்லறை விற்பனை உண்டு. ஒரு கிலோ மாட்டு இறைச்சி ரூ.200 விற்பனை செய்கிறோம். டெலிபோனில் ஆர்டர் செய்தால் இலவச டோர் டெலிவரி வசதி உண்டு' என்றார்.


அருமையான, ஹலலான வியாபாரம் தாங்களின் வியாபாரம் நல்லபடியாக வளர வாழ்த்துக்கள்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete