தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் சி.வி.சேகர் குடும்ப திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி வருகின்ற 26.10.2017 அன்று வருகை தரவுள்ளதையொட்டி செங்கிப்பட்டியிலிருந்து பட்டுக்கோட்டை வரையிலுள்ள சாலை மார்க்கத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், விழா நடைபெறும் இடத்தினை ஆய்வு மேற்கொண்டனர்.
இவ்வாய்வின் போது பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் சி.வி.சேகர், மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், கோட்டாட்சியர்கள் சுரேஷ், (தஞ்சாவூர்), கோவிந்தராசு (பட்டுக்கோட்டை), ஊராட்சிகள் உதவி இயக்குநர் முருகேசன், நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் சரவணன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.


No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.