தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் மமக 10 வது ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சியில் தமுமுக/மமக மாநிலத் தலைவர் பேராசிரியர் எம்.எச் ஜவாஹிருல்லாஹ் பங்கேற்கிறார்.
மனிதநேய மக்கள் கட்சியின் 10 ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, தமிழகத்தில் எதிர்வரும் பிப்.11 ந் தேதி சென்னை கோட்டை முதல் கன்னியாகுமரி வரையிலான சுற்றுப் பயணத்தில் பல்வேறு பகுதிகளில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதையொட்டி, தமுமுக, மமக அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகிகள், உறுப்பினர்களின் ஆலோசனைக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு தமுமுக / மமக அதிரை பேரூர் தலைவர் எம்.சாகுல் ஹமீது தலைமை வகித்தார். தமுமுக/மமக தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அதிரை அகமது ஹாஜா, தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஓ செய்யது முகமது புஹாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், மமக 10 வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, எதிர்வரும் பிப்.11, அதிராம்பட்டினம் தக்வா பள்ளிவாசல் அருகில் இருந்து பேரணியாக புறப்பட்டு சென்று 5 க்கும் மேற்பட்ட இடங்களில் கட்சி கொடியை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும் எனவும், இதைதொடர்ந்து, அதிரை பேருந்து நிலையத்தில் மாநிலத் தலைவர் பேராசிரியர் எம்.எச் ஜவாஹிருல்லாஹ் ஆற்ற இருக்கும் சிறப்புரையில் திரளாக பங்கேற்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.
முன்னதாக மமக அதிரை பேரூர் செயலாளர் எஸ்.ஏ இத்ரீஸ் அகமது வரவேற்றுப் பேசினார். முடிவில் தமுமுக அதிரை பேரூர் துணைச் செயலாளர் எம்.ஆர் கமாலுத்தீன் நன்றி கூறினார். இக்கூட்டத்தில், மாவட்ட துணைச்செயலர் எஸ்.எஸ் சேக்காதியார், தமுமுக/மமக அதிரை பேரூர் பொருளாளர் முகமது யூசுப் உட்பட தமுமுக / மமகவினர் பலர் கலந்துகொண்டனர்.










No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.