அதிரை நியூஸ்: பிப்.04
அமீரகம், ஷார்ஜாவில் 17 வது மாடியிலிருந்து தவறி விழுந்த பூனை பிழைத்த அதிசயம்.
ஆமா! இது ரொம்ப முக்கியம் என பலரும் அர்ச்சிப்பீர்கள் எனத் தெரிந்தே எழுதுகிறோம். எழுதும் எங்களை அர்ச்சிக்குமுன் இப்பூனையை காப்பாற்ற வந்த ஷார்ஜா போலீஸையும் கல்ஃப் நியூஸ் பத்திரிக்கைகாரனையும் என்ன சொல்லப் போகிறீர்களோ ... (அதே வடிவேல் டயலாக் தான்... அடி குடுத்த கைப்புள்ளைக்கே சட்டை கிழிஞ்சிருக்குன்னா...)
அமீரகம், ஷார்ஜா, அல் புஹைரா பகுதியிலுள்ள ஒரு அப்பார்ட்மெண்ட் குடியிருப்பில் இருந்து ஜன்னல் வழியாக தவறிவிழந்த பூனை ஒன்று சிறு கீறல்கள், எலும்பு முறிவுகள் என எதுவும் இல்லாத நிலையில் உயிர் பிழைத்துள்ளது.
தென்றல் காற்று உள்ளே வரட்டும் என வீட்டுக்கார அம்மணி ஜன்னல் கதவை திறந்து வைக்க, அவர் வளர்ப்பு பூனையொன்று அதே ஜன்னல் வழியாக பாய சுமார் 200 அடி உயரத்திலிருந்து முதலாவது மாடியில் மாட்டப்பட்டிருந்த சைன்போர்டு மீது தவறி விழுந்தது.
போலீஸாரின் ஆலோசணைப்படி 3வது மாடியிலிருந்து கூடையை கட்டி இறக்கினால் வர மறுத்த பூனையை அதன் வீட்டுக்கார அம்மா கொஞ்சம் உணவுடன் சேர்த்து அனுப்பியவுடன் ஜம்மென்று கூடைக்குள் அமர்ந்து கொண்டது. இவ்வாறாக பூனையை காப்பாற்றி அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளனர் ஷார்ஜா போலீஸ்.
சிறிதும் சேதாரமின்றி காப்பாற்றப்பட்ட இந்த பூனையின் தற்போதைய செல்லப் பெயர் "Miracle Cat"
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.